I’m excited to launch a new Performance Engineering Community on X — a space for engineers, testers, SREs, and architects to share insights, tools, and real-world scaling experiences. Please join and support.
https://t.co/Zg30OYiKrE
இது உணர்வு பூர்வமாக இருந்தாலும்..
அறிவியல் இன்னும் சுலபம் ஆக இல்லை என்பது தான் உண்மை.
இந்த scanner உள்ள செல்லும் குழந்தைகள் அசைய கூடாது. 2 மணி நேரம் கூட ஆகும். அந்த குளிரில் எப்படி இருக்கும்?
அவர்கள் அசைய விடாமல் இருக்க தான் தாயோ தந்தையோ இப்படி சென்று பிடித்து கொள்ள வேண்டும்...
சிலருக்கு கல்யாணம் வேணாம்ன்னு தோணுறதுக்கு நிறைய காரணம் இருக்கு... 🤍
வீட்ல அப்பா அம்மா சண்டை போடுறத
பார்த்து வளர்ந்திருக்கலாம்... 💔
ஒரு காதல்ல ரொம்ப மோசமா
காயப்பட்டிருக்கலாம்...
தன்னோட கனவு முக்கியம்ன்னு
தோணியிருக்கலாம்... 🎯
குடும்ப பொறுப்பு தோள்ல இருக்கலாம்... இந்த முடிவை "பயம்" ன்னு சொல்லி
கேலி பண்ணாதீங்க... 😔
ஒரு கசப்பான உண்மை
என்னன்னா ? இந்த காலையில சீக்கிரமா எந்திரிக்கிறது, Gym போறது, புக் படிக்கிறது, டிசிப்பிலினோட இருக்கிறது இதெல்லாம் பண்ணா நாம உண்மையிலேயே டாப்புக்கு போயிடலாம். இது இந்த உலகத்துல எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்.
ஆனா அதெல்லாம் பண்ண விடாம தடுக்க அத்தனை விஷயங்கள் நம்மள சுத்தி இருக்குது. இதையெல்லாம் எவன் தவிர்த்து மேல உள்ளதை பண்றானோ அவன் மட்டும் தான் ஜெயிக்க முடியும்.
இந்த உலகத்துல இல்லாத புக்கா ? நல்ல நல்ல அறிவுரைகளா ? எல்லாம் இருக்கு. ஆனா அதை ஃபாலோ பண்ணாம தடுக்க அதை விட ஆயிரம் விஷயங்கள் இருக்கு என்பதே நிதர்சனமான உண்மை 😓
எந்த ஒரு விசயத்திலும் பொறுப்பெடுத்துக்கிட்டு தவறுன்னா ஒத்துக்கிட்டு அதை சரி பண்ண என்ன செய்யனுமோ அதை செய்வது தலைவனுக்கு அழகு.
இங்க பொறுப்பில்லாம, தன் மீது தப்பில்லை என்று கட்டமைக்க எவ்வளவு வேணாலும் செலவு பண்ணுவேன், யார் மேல வேணாலும் அபாண்டமாக பழி போடுவேன், அரசுபதவிய வச்சி என்ன செஞ்சாவது என் மேல தப்பில்லை என்று காட்ட முயலுவேன் என்பது எல்லாம் ரொம்ப கேவலமா இருக்கு. ஆனா இவர்கள் தான் வேண்டும் என தேர்ந்தெடுத்த மக்களுக்கு இவர்களே போதும்.
இனியும் பொதுமக்களுக்கு ஒன்னுன்னு அரசியல் பேசாம நம்மை தனிப்பட்ட முறையில் வளர்த்துக்க கவனம் செலுத்துவோம். நாடு நாசமா தான் போகும் அப்போது நாம மட்டும் தப்பிக்க ஆயத்தமாவோம்
அமேசான் உள்ளிட்ட விற்பனைத் தளங்களில் பொருள்கள் வாங்குவது சகஜமான பின் சில உயர்தர பிராண்ட் தயாரிப்புகளையும் வாங்கியிருக்கிறேன். அதில் ஒன்று Mont Blanc பேனா. தங்க முனை கொண்டது. ஜனவரி மாதம் அமேசானில் வாங்கினேன். அப்பொருள் வந்துசேர்ந்து ஆராய்ந்ததுமே அது போலி எனத் தெரிந்துவிட்டது. ஏற்கெனவே இதே மோன்பிளான் தயாரிப்பில் வேறொரு வகைப் பேனா கைவசம் இருப்பதால் இதன் நம்பகத்தன்மை மீது ஐயம் எழுந்தது. எழுதும்போது இலகுவான ஆற்றொழுக்கு இல்லை, அசல் தயாரிப்பில் இருக்கக்கூடிய கம்பீரமான எடையும் இல்லை.
இதுபோன்ற அதிக விலையுள்ள பொருள்களை அமேசானில் எளிதாகத் திருப்பிக் கொடுத்துவிட முடியாது. பத்து நாள்கள் ‘return window’ இருந்தாலுமே அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திலிருந்து நம்பகத்தன்மை சான்றிதழைப் (authenticity certificate) பெற்று சமர்ப்பிக்கச் சொல்வார்கள். பின்னர், அமேசான் தரப்பில் ஒரு விசாரணையை நடத்தி, அப்பொருளைத் தங்களது தளத்தில் விற்ற சில்லறை விற்பனையாளரைத் தொடர்புகொண்டு அவர்களை ஆய்வுசெய்யச் சொல்லி, பொருளைத் திருப்பி எடுக்க அவர் ஒப்புக்கொண்டு அல்லது மறுத்து, நம்மிடம் திரும்ப வந்து விளக்கி என எப்படியும் பதினைந்து நாள்கள் இழுத்தடித்துவிடுவார்கள்.
கோவையில் மோன்பிளான் நிறுவனத்தின் கடையோ சேவை மையமோ இல்லாததால் கடந்த முறை சென்னை போனபோது பேனாவையும் எடுத்துச் சென்றிருந்தேன். அங்காடியின் மேலாளர் பேனாவைப் பார்த்ததும் போலி எனச் சொல்லிவிட்டார். ‘சரி, இன்ன இன்ன காரணங்களால் இது போலி என்பதை விளக்கி ஒரு சான்றிதழைக் கொடுத்துவிடுங்கள்’ என்றேன். இங்குதான் அலைச்சல் தொடங்கியது.
‘அப்படியொரு சான்றிதழை வழங்குவதற்குத் தனக்கு அதிகாரமில்லை’ என்றார். ‘வேண்டுமானால் துபாயிலிருக்கும் வாடிக்கையாளர் சேவையை மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொண்டு விசாரித்துப் பாருங்கள்’ என ஆலோசனை வழங்கினார். மோன்பிளான் நிறுவனத்தின் அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு அமேசான் பேனாவின் படங்களையும் விலைச்சிட்டையும் இணைத்து, மேலாளர் கூறிய விபரங்களைத் தொகுத்து ஒரு கடிதம் எழுதினேன். குறைந்தபட்சம் இதனை சர்வீஸ் செய்ய இயலாது என்கிற jobsheet-ஐயேனும் இணைக்கும்படி கேட்டுக்கொண்டேன்.
‘ஏன் அமேசானில் வாங்கினீர்கள்?’ என்று அந்த மேலாளர் என்னைக் கடிந்துகொண்டார். ‘அமேசான், ஃபிளிப்கார்ட் என எதுவானாலும் அங்கு விற்பனையாகும் லக்சுரி பொருள்கள் அனைத்தும் போலியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்’ என்றார்.
மோன்பிளான் தரப்பிலிருந்து பதில் கடிதம் வந்திருந்தது. ‘அமேசானில் வாங்கப்பட்ட பொருளுக்கு எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஏனெனில், அமேசான் நிறுவனம் எங்களது அதிகாரபூர்வ பங்குதாரரோ விற்பனையாளரோ அல்ல. ஆகவே, அதன் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய இயலாது. மோன்பிளான் விற்பனையகங்களில் நேரடியாகப் பெறப்படும் பொருள்களுக்கு மட்டுமே நற்சான்றிதழை வழங்க முடியும்’ எனச் சாமர்த்தியமாகப் பதில் அனுப்பியிருந்தார்கள். அதாவது, அமேசானில் விற்பனையாகும் பேனா போலியானது என நேரடியாக ஒப்புக்கொள்ளாமல், அமேசானைக் குற்றஞ்சாட்டிக் காட்டியும் தராமல், தங்களது பொறுப்பிலிருந்து நழுவிக்கொண்டார்கள்.
இது எதோ கார்ப்பரேட் கூட்டுச்சதி மாதிரியே இருந்தது. ‘மோன்பிளான் பெயரில் அமேசானில் போலியான பொருள்கள் விற்பனையானால் அது உங்களது நற்பெயருக்குக் களங்கம் அல்லவா? வாடிக்கையாளர்கள் ஏமாறாமல் தடுப்பது உங்களது கடமை இல்லையா? நான் கேட்பது ‘இந்தப் பொருள் போலியானது’ எனப் பட்டவர்த்தனமாகக் குறிப்பிடும் ஓர் ஆவணம். அதைத் தருவதில் என்ன தயக்கம்?’ என விளக்கம் கேட்டு மீண்டும் மின்னஞ்சல் அனுப்பினேன்.
முன்பு சொன்ன பதிலையே மறுபடியும் குலுக்கிப் போட்டு பதில் மின்னஞ்சல் வந்தது. ‘அமேசானில் விற்பனையாகும் மோன்பிளான் பேனாவுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. எங்களது நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அங்காடிகளிலுள்ள பொருட்கள் மட்டுமே அசலானவை.’
இரண்டு மின்னஞ்சல்களையும் அமேசான் சேவை மையத்துக்கு அனுப்பிவிட்டு அவர்களைத் தொடர்புகொண்டேன். அதைப்போன்ற மோசமான தத்தி உரையாடலை என் வாழ்க்கையிலேயே மேற்கொண்டதில்லை. நான் எதிர்பார்த்தபடியே அமேசான்காரர்கள், ‘இதில் நாங்கள் அனுப்பிய பேனா போலி என எங்கும் குறிப்பிடப்படவில்லை. உத்தரவாதம் அளிக்க முடியாது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே இதற்குப் பணத்தைத் திருப்பித் தர முடியாது’ என்றனர்.
‘ஆனால் அடுத்த வரியில் மோன்பிளான் ஸ்டோரில் வாங்குவது மட்டுமே அசலானவை என்றிருக்கிறதே?’
‘அதனால் அமேசானில் விற்கப்பட்டது டூப்ளிகேட் என அர்த்தமாகாது.’
‘நீங்கள் அவர்களது அபீஷியல் செல்லிங் பார்ட்னரே இல்லையாமே? அப்புறம் எப்படி ஒரிஜினல் பேனாவை வாங்கியிருப்பீர்கள்?’
‘நாங்கள் விற்றது ஒரிஜினல் அல்ல என எங்காவது சொல்லியிருக்கிறார்களா?’
வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்களின் பிரச்சினை என்னவென்றால் புகார் தெரிவிக்கும் கஸ்டமரை ஏமாற்றுப் பேர்வழிகள் என்கிற முன்முடிவுடன் எப்போதும் அணுகுகிறார்கள் என்பதே. அதிலும் விலையுயர்ந்த பொருள்களைப் பற்றிய புகார் என்றால் வாடிக்கையாளர் ஸ்கேம் செய்கிறார் என்கிற முத்திரையுடன்தான் பேசவே ஆரம்பிக்கிறார்கள்.
நான் எரிச்சலடைந்து இவ்விசயத்தை மேலும் எஸ்கலேட் செய்தேன். முதல்கட்ட ஊழியரிடமிருந்து அது உயரதிகாரிக்குச் சென்றது. அவர் ‘டிக்கெட் ரெய்ஸ் செய்கிறேன்’ என்றார். பதினைந்து நாள்களுக்குப் பிறகும் பதில் வரவில்லை. ‘சோஷியல் மீடியாவில் போடுவேன்’ என்றேன். அதற்கும் அவர்கள் அசரவில்லை. ஆறு மாதங்களில் எட்டு முறை டிக்கெட் ரெய்ஸ் ஆன பிறகும் அந்தப் பக்கம் வேலை செய்ய வேண்டிய புண்ணியவான் யாரோ ஒழுங்காகப் பணியாற்றாததால் அது ஆட்டோமெட்டிக்காக கிளோஸ் ஆகிக்கொண்டே இருந்திருக்கிறது. இதற்குமேல் என்னைக் காக்க வைத்தால் சிக்கல் என நினைத்தார்களோ என்னவோ, போன வாரம்தான் பணத்தைத் திருப்பி அளித்தனர். அந்தச் சோம்பேறிப் புண்ணியவானுக்கு நன்றி. இல்லாவிட்டால் என் பணம் அதோ கதிதான்.
எனது நண்பர் அமேசானில் விலையுயர்ந்த Creed fragrance வாங்கியபோது இதேதான் நிகழ்ந்தது. கிரீட்-காரர்களும் அமேசான் பொருளில் அச்சிடப்பட்டிருந்த பேட்ச் எண் போலி எனச் சொல்லிவிட்டார்கள். ஆனால், நம்பகத்தன்மை சான்றிதழ் கேட்டபோது மறுத்துவிட்டனர். மோன்பிளான் நிறுவனத்தார் பயன்படுத்திய அதே வார்த்தைகள். ‘அமேசான் தளம் எங்களுடைய பார்ட்னர் அல்ல. நேரடியாகக் கிரீட் பொட்டிக்கில் வாங்கப்படுகிறவை மட்டுமே அசலானவை.’ இன்றுவரை ரீஃபண்டுக்காக அவன் அலைந்துகொண்டிருக்கிறான். ஒரு பெருநிறுவனம் இன்னொரு பெருநிறுவனத்தைக் காட்டித் தரக்கூடாது என நினைக்கிறார்களா அல்லது பின்னாளில் எதேனும் சட்டச்சிக்கல் வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் தந்திரமாகக் கையாள்கிறார்களா என்பதே புரியவில்லை.
பாதிப்படைவது என்னவோ வாடிக்கையாளர்தான். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஐயாயிரம் ரூபாய்க்கு மேலுள்ள பொருள்கள் எதையும் இணையத்தில் வாங்கக்கூடாது என முடிவெடுத்திருக்கிறேன். விற்பனையகங்களில் ஆயிரமோ இரண்டாயிரமோ அதிகமாக இருக்கலாம். அவர்களில் கணிசமானோர் தற்போது இணைய விலையுடன் ஒப்பிட்டுத் தங்களது விலையைக் குறைத்துக்கொள்ள முன்வரவும் தயாராக இருக்கிறார்கள். ஆகவே, சொற்ப விலை வித்தியாசத்துக்காக மனநிம்மதியைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது.
(மோன்பிளான் நிறுவனத்தின் மின்னஞ்சலைப் பின்னூட்டத்தில் இணைத்திருக்கிறேன்.)
From
https://t.co/PiHeSoJk8i
உகாண்டாவில் இருக்கும் பனை மரங்கள்💫
உகாண்டாவில் நான் பயணம் செய்த போது என்னை வியக்க வைத்தது நான் அங்கை கண்ட பனை மரங்கள். ஆனால் அந்த பனை மரங்களை தேவையற்ற மரங்களாக அந்த மக்கள் நினைக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
பனை மரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ளும் நாள் நிச்சியமாக வரும். அதை உருவாக்கியே தீருவேன் என்று உறுதியளித்து வந்திருக்கிறேன்.