மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தலைமையில் இன்று (26.11.2026) சென்னை, தரமணி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @jagadeshwarioff |
புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2026-ல், "வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்" என்ற கருப்பொருளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில் தமிழ்நாடு அரங்கிற்கு இந்தியப் பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் (ITPO) சார்பில் முதல் பரிசாக "தங்கப் பதக்கம் விருது" இன்று (26.11.2026) வழங்கப்பட்டது.
இவ்விருதினை இந்திய பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின் தலைவர் திரு.ஜாவேத் அஷ்ரப், இ.வெ.ப. மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் நீரஜ் கர்வால், இ.ஆ.ப., ஆகியோரிடமிருந்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |