@kadavansurya தம்பி
இப்படி கட்டு அமைத்தான் இவர்களை வாங்கி உள்ளனர்.. இந்த நாதாரிகள் பேசும் போது கவனியுங்கள் 95 சதவீத நாம் தமிழர் தம்பிகள் நல்லவர்கள்.. அப்புறம் என்ன ----- 5 %பேருக்கு பதில் சொல்லி கொண்டு.. இவர்கள் 💰 வேலை செய்பவர்கள்
சில விமர்சனங்களைப் பார்க்கும்போது, இன்று இத்தகைய விமர்சனங்களை முன்வைப்பவர்களே ஒரு காலத்தில் அண்ணன் சீமானின் அருகில் நின்று எத்தகைய பாராட்டு மொழிகளைப் பேசினார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போதே மனதிற்குள் குமட்டுகிறது.
உண்மையில், அண்ணன் சீமானைத் தமிழர்கள் அறிந்துகொண்டது ஒரு சிறந்த திரைப்பட இயக்குநராகவோ, நடிகராகவோ அல்ல. மாறாக, பெரியாரியத்தையும், அம்பேத்கரியத்தையும், மார்க்சியத்தையும் மேடைகளில் தனது அனல் தெறிக்கும் பேச்சால் மக்களிடம் கொண்டு சென்ற பேச்சாளராகவும், குறிப்பாக 2009 ஈழ இனப்படுகொலைக் காலகட்டத்தில் உணர்வற்று உறங்கிக் கிடந்த தமிழினத்தைத் தட்டி எழுப்புவதற்குத் தனது அனல் மொழியையே ஆயுதமாகப் பயன்படுத்தியவராகவுமே அவர் பெரிதும் அறிமுகமானார்.
அண்ணன் சீமானின் பின்னால் திரண்டவர்கள் திரைப்பட ரசிகர்கள் அல்ல. தமிழ்த் தேசியம் என்ற மாபெரும் அரசியல் தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு, மொழி, இனம், இனவுணர்வு ஆகியவற்றால் ஒன்றிணைந்தவர்கள். அவ்வாறு திரண்ட பெருந்திரளை வெகுசன அரசியல்மயப்படுத்தி, தேர்தல் அரசியல் களத்திற்குக் கொண்டு வந்ததில் அண்ணன் சீமானுக்குத் தனித்த பங்கு இருக்கிறது.
அவரது அரசியல் வருகைக்கு முன்னர், தமிழ்த் தேசியம் என்பது பெரும்பாலும் சில அரங்குகளுக்குள்ளும், சிறு குழுக்களின் தோள்பைகளுக்குள்ளும், புத்தகங்களுக்குள்ளும் பேசப்பட்டு வந்த ஒரு கருத்தியலாகவே இருந்தது. அவரது வருகைக்குப் பின்னர், அந்தத் தமிழ்த் தேசியத் தத்துவம் பரந்த மக்களிடம் கொண்டு செல்லப்பட்டு, வெகுசன அரசியல் வெளியில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றது. இது அண்ணன் சீமானின் தனிப்பட்ட அரசியல் சாதனை என்று நான் கருதுகிறேன்.
சமகால அரசியல் தலைவர்களில், அரசியல் காரணங்களுக்காகவும், இன உணர்வுக்காகவும், தமிழினத்தின் உரிமைகளுக்காகவும், தனது பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் அதிகமான வழக்குகளை எதிர்கொண்டதும், நீண்ட காலம் சிறைச்சாலைகளில் இருந்ததும் அண்ணன் சீமான் மட்டும்தான்.
இத்தனை வழக்குகளையும், அடக்குமுறைகளையும், துன்பங்களையும் தாங்கிக்கொண்டு, மக்கள் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் நிற்பது என்பது அவரது மிகப்பெரிய தகுதி.
அந்தக் கொள்கை உறுதிக்காகத்தான் நாங்கள் அவருக்குப் பின்னால் நிற்கிறோம். தனிப்பட்ட புகழுக்காக அல்ல; பதவிக்காக அல்ல; எந்தப் பலனையும் எதிர்பார்த்து அல்ல. அவர் உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கும் கொள்கையின் மீதுள்ள நம்பிக்கையால்தான் நாங்கள் அவருடன் நிற்கிறோம்.
எனவே, இன்று அவர் திரைப்படத்தில் நடிப்பதை அவரது அரசியல் நிலைப்பாட்டுடன் குழப்பிப் பார்க்க வேண்டியதில்லை. அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது; வாழ்க்கை இருக்கிறது; வாழ்வாதாரத் தேவைகள் இருக்கின்றன. திரைத்துறை அவரது தொழில். தனது வாழ்க்கைக்காகவும் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காகவும் அவர் திரைப்படத்தில் நடிப்பதற்கும், திரைப்படப் புகழையும் ரசிகர் மனப்பான்மையையும் அரசியல் மூலதனமாக மாற்றி அதிகாரத்தை நோக்கி வருவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
ஒருவர் திரைத் துறையை தனது வாழ்வதற்கான தொழிலாக மாற்றுவதும் , தனது தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டே அரசியலில் செயல்படுவது என்பது வேறு.
திரைப்பட ரசிகர்களின் கண்மூடித்தனமான ரசிக மனப்பான்மையை அரசியல் முதலீடாக மாற்றி, அந்தப் புகழின் வழியாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்வது என்பது வேறு.
அந்த இரண்டிற்குமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல் முன்வைக்கப்படும் விமர்சனங்கள், விமர்சனங்களே அல்ல.
இதுவெல்லாம் விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கும் நன்றாகவே தெரியும். அவர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் பொருளற்றவை என்று குறைவாக நாம் மதிப்பிட்டு விடக்கூடாது. மாறாக, அந்த விமர்சனங்களுக்குப் பின்னால், தங்கள் ஆழ்மனதில் அண்ணன் சீமான் மீதும், அவர் உறுதியாக நம்பிக்கை வைத்திருக்கும் தமிழ்த் தேசியத் தத்துவத்தின் மீதும் கொண்டிருக்கும் வன்மமே இருக்கிறது.
அந்த வன்மத்தை நேர்மையான விமர்சனமாகவோ, அரசியல் மதிப்பீடாகவோ, வரலாறாகவோ நாம் புரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதிவு.
வன்மம் என்பது சொல்லில் வெளிப்பட்டாலும், செயலில் வெளிப்பட்டாலும், எழுத்தில் வெளிப்பட்டாலும், அது வன்மம்தான்.
அந்த வன்மத்தைத்தான் இன்று நாம் வெவ்வேறு வடிவங்களில் எதிர்கொண்டு வருகிறோம். வடிவங்கள் மாறலாம்; வெளிப்பாடுகள் மாறலாம்; ஆனால் அதன் அடிப்படை உணர்வு வன்மம் மட்டுமே.
மணி செந்தில்.
@dhans4all இந்தியன் எண்ணெய் நிறுவனம் உங்களுக்கு கீழ் கண்டவாறு பதில் செய்யும் ஆச்சரியம் பாடவேண்டாம்.
உங்கள் புகாரை விசாரித்து விட்டோம் அப்படி ஒன்றும் இல்லை..
நன்றி
@Mdu_CityPolice@mdu_corp@RameshOffcl
Sir,Would like to bring to your notice about car parking charges 30 rs . Not sure how is amount derived and also any tender issued?
Location @ yoga narshimar temple y othakadai.Earlier they charge only 10rs now 30 rs. Please do the nedful
@sansbarrier இதில் கொடுமை என்னவென்றால் தன்னை தி மு க தலைவர்கள் போல நினைத்து கொள்வது..
இப்போ நாட்டில் மனப்பிறழ்வு நோயாளிகள் அதிகமாக உள்ளனர்.. அதுவும் இந்த U tube போன்ற ஒரு வழி ஒலிபெருக்கி....
ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை எதிர்த்தோம்..
பாஜக ஆள் என்றான்..
ஆளுங்கட்சியாக இருக்கும் தவெகவை எதிர்க்கிறோம்..
திமுக ஆள் என்கிறான்..
யாரை எதிர்ப்பது என்பதில் எங்களிடம் மாற்றமில்லை.. எங்களை ஆதரிப்பதில் மாற்றம் வந்தவர்களுக்கு தான் எதிர்ப்பில் மாற்றம் வந்திருக்கிறது..