#HealthMinistry says it is keeping a close watch over the spread of #HMPvirus in #China during the past few weeks.
@MoHFW_INDIA says the number of laboratories testing for HMPV will be enhanced by #ICMR and assured it will monitor trends of HMPV for the entire year.
மருத்துவர் அய்யா அவர்களின் மனதில் நிறைந்தவர் மாவீரன் ஜெ.குரு மறக்க முடியாத மனிதர்;
அவர் கண்ட கனவை நனவாக்க உழைப்போம்!
மருத்துவர் அய்யாவின் மனதில் நிறைந்தவரும், மறைந்த வன்னியர் சங்கத் தலைவருமான மாவீரன் ஜெ.குரு நம்மை பிரிந்து சென்று ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. அவரது மறைவும், பிரிவும் ஒவ்வொரு நாளும் நம்மை வாட்டுகின்றன. மருத்துவர் அய்யா அவர்களின் மனதையும், குறிப்பையும் அறிந்து களப்பணியாற்றியவர். பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்பதையே தமது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர் மாவீரன். அது தான் அவரது கனவு. மாவீரனின் அந்தக் கனவை நனவாக்க கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம்.
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் தமிழர் நலனுக்காக ஆற்றிய பணிகளை அவரது நினைவு நாளில் நினைவு கூர்வோம்!
தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் 43-ஆம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழர்களை முன்னேற்ற வேண்டும், அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் சி.பா. ஆதித்தனார் உறுதியாக இருந்தார். தமிழ் மொழி மீதும் அவர் தீராப்பற்று கொண்டிருந்தார். அதற்காக சி.பா. ஆதித்தனார் ஏராளமான பணிகளைச் செய்தார். அதனால் தான் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்டார். தமிழர் தந்தையின் நினைவு நாளில் தமிழுக்காகவும். தமிழர் நலனுக்காகவும் அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்வோம்.@dinathanthi@ThanthiTV
மாவீரன் ஜெ.குரு ஆற்றிய அரும்பணிகளை அவரது
நினைவு நாளில் நினைவு கூர்வோம்; போற்றுவோம்!
வன்னியர் சங்கத்தின் தலைவராகவும், எனது தீவிர விசுவாசியாகவும் வாழ்ந்த மாவீரன் ஜெ.குருவை இன்று தான் இயற்கை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது. அவன் இந்த மண்ணை விட்டு மறைந்திருக்கலாம். ஆனால், என் மனதை விட்டு மறையவில்லை. அவனை நான் நினைக்காத நாளில்லை. எனது கட்டளைப்படி கட்சிக்காகவும், சமூகத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள் மறக்க முடியாதவை. மாவீரன் ஆற்றிய பணிகளையும், செய்த தியாகத்தையும், காட்டிய வீரத்தையும் இந்நாளில் மட்டுமின்றி, எந்நாளும் நினைவு கூர்வோம்; போற்றுவோம்.
காடுவெட்டியில் உள்ள நினைவு மண்டபத்திலும், திண்டிவனம் கோனேரி குப்பத்தில் கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் உருவச்சிலைக்கும் அங்குள்ள பராமரிப்பாளர்கள் மூலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. கல்விக் கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு இன்று மாலை நான் மரியாதை செலுத்துகிறேன். இந்த நாளில் அனைவரும் மாவீரனுக்கு மரியாதை செலுத்துங்கள்.
இன்று தருமபுரி மக்களவை தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியில், பாமக சார்பில் போட்டியிட தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாமக மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளுடன் வேட்புமனு தாக்கல் செய்தேன்!
#DrSowmiya4Dharmapuri#NDA#PMK#Vote4Mango
🥭
வெற்றியோ தோல்வியோ ரேசில் ஓடும் குதிரைகள் மீது பந்தயம் கட்டிடுவது தான் சரியானது
( #NDAAlliance , #IndiaAlliance)
ஓரமா கட்டி வைத்த குதிரை மீது எதற்கு ( #ADMK )
“We need an ambitious outcome that demonstrates decisive #ClimateAction & a credible plan to keep the 1.5°C warming limit alive & to protect those on the frontlines of the climate crisis.”
— @antonioguterres as #COP28 Climate Conference is wrapping up. https://t.co/2HiLKTGWeA
"We believe that every industry has opportunities to become more climate-smart and sustainable."
At #COP28, hear from Thu-Ba Huynh on FHI 360's green labor market assessment tool, and the organization's approach to climate-smart development.
#Sponsored by @fhi360#greenjobs
The Constitution failing to guarantee the independence of the Speaker + no entrenched opposition rights + the anti-defection law = a parliament entirely at the mercy of the executive.
இனியாவது காலநிலை மாற்றத்தை பற்றி அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதேபோல் இயற்கை சீற்றங்கள் அதிகளவில் வரக்கூடும். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், சினிமா போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் நேரத்தைவிட அதிகளவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் விவாதிக்க வேண்டும். அடுத்த தலைமுறையினர் விழிப்புணர்வடைந்தால் தான் புவி வெப்பமயமாதல்/ காலநிலை மாற்றம் போன்றவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும்.
#ChennaiFloods #ChennaiRains2023
#Michaungcyclone #ClimateChange #ClimateCrisis #ClimateActionNow
சென்னையில் சமாளிக்க முடியாத வெள்ள பாதிப்புகள்; மழை தொடரும்
நிலையில் கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டும்!
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டிருப்பதிலிருந்தே மழையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் பல அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. அடுக்கு மாடி குடியிருப்புகளுக்குள்ளும் மழை நீர் நுழையத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பாதிப்புகளை தடுப்பதோ, குறைப்பதோ சாத்தியமல்ல. பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. போக்குவரத்து தடைபட்டிருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் மழை நீரை வடியச் செய்யும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டிருக்கும் போதிலும் நிலைமை அவர்களின் கைகளை மீறிச் சென்று கொண்டிருக்கிறது.
மிக்ஜம் புயல் இன்று பிற்பகலில் தீவிர புயலாக மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயல் நாளை கரையை கடக்கும் வரை சென்னையில் மழை மேலும் தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் பல பகுதிகள் இப்போதே அணுக முடியாத அளவுக்கு துண்டிக்கப்பட்டுள்ளன. கொட்டும் மழையிலும் மாநகராட்சிப் பணியாளர்கள் பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகள். ஆனால், மழை மற்றும் புயலின் வேகம் கடுமையாக இருப்பதால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. இதேநிலை தொடர்ந்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலையும், பாதிப்புகளும் மேலும் மோசமடையக்கூடும்.
அண்மைக்காலங்களில் கடந்த 2015-ஆம் ஆண்டில் பெய்த மழை தான் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. நாளை வரை மழை தொடர்ந்தால் அதை விட மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். பாதிப்புகளின் தாக்கத்தைக் குறைக்க பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வானிலை ஆய்வு மையமும், தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை மையமும் வழங்கும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலைமை மேலும் மோசமடைந்தால் அதை சமாளிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அதிக அளவில் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
@CMOTamilnadu@PMOIndia@ndmaindia@NDRFHQ
#Michaungcyclone #ChennaiRains #ChennaiFloods
மிரட்டும் புயல்: சென்னை மக்களை வெள்ளத்திலிருந்து
காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை!
வங்கக்கடலில் உருவாகி சென்னையிலிருந்து 500 கி.மீக்கும் அப்பால் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்திற்குள் மிக்ஜாம் என்ற புயலாக மாறி வரும் 5-ஆம் தேதி காலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கடந்த 29-ஆம் நாள் மாலை சில மணி நேரம் மட்டுமே பெய்த மழையால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அடுத்து தாக்கவிருக்கும் புயலால் எத்தகைய இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ? என்ற அச்சத்திலும், கவலையிலும் ஆழ்ந்திருக்கின்றனர். அவர்களின் அச்சங்களும், கவலைகளும் போக்கப்பட வேண்டும்.
சென்னை மாநகர மக்களுக்கு ஓரளவு நிம்மதியளிக்கும் செய்தி மிக்ஜாம் புயல் சென்னையை தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு என்பது தான். ஏற்கனவே கணிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சென்னையில் மிகக் கடுமையான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தான் கவலையளிக்கிறது.
சென்னையில் கடந்த 29-ஆம் நாள் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் பல இடங்களில் வடியவில்லை. அந்த மழையின் போது எந்தெந்த இடங்களில் எல்லாம் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நின்றது என்பதை கருத்தில் கொண்டு, அந்தப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதையும் மீறி மழை நீர் தேங்கினால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி, அடுத்த சில மணி நேரங்களில் இயல்பு நிலை திரும்பச் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசும், சென்னை மாநகராட்சியும் மேற்கொள்ள வேண்டும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மழை பாதிப்புகளைத் தடுக்க போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மழை - வெள்ளத்தால் சூழப்படும் வாய்ப்புள்ள பகுதிகளில் வாழும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
29-ஆம் தேதி பெய்த மழையில் சென்னையில் மட்டும் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்தது மிகவும் வருந்தத்தக்கது ஆகும். மிக்ஜாம் புயல் - மழை காலத்தில் மின்கசிவு, மின்கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்கவும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
#MigJam
சாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆணையிட்டால்
வி.பி.சிங் ஆன்மா வாழ்த்தும்... இல்லையேல் மன்னிக்காது!
மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 15-ஆம் நினைவுநாளான வரும் 27-ஆம் நாள் சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை தமிழக அரசின் சார்பில் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 20-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட போதே அதை நான் வரவேற்றேன். இப்போதும் வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தமது உருவச்சிலை அமைக்கப்படுவதை உணர முடிந்தால் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைவாரோ, அதை விட 100 மடங்கு கூடுதல் மகிழ்ச்சியை, தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டிருந்தால், வி.பி.சிங் அடைந்திருப்பார். ஒருபுறம் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் உருவச்சிலையை திறந்து கொண்டு, இன்னொருபுறம் மாநில அரசின் சார்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று தமிழக அரசு கூறுவது “படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்” என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகத் தான் அமையும்.
வி.பி.சிங் அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால், பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதையும், இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டதையும் பாராட்டியிருப்பார். அதேபோல், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பார். வி.பி.சிங் அவர்களின் குரலைத் தான் நான் ஒலித்துக் கொண்டிருக்கிறேன். சமூகநீதியின் அடிப்படைகளை தமிழக முதலமைச்சர் அவர்கள் இப்போதாவது புரிந்து கொண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தும் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளை விட சிறந்த தருணம் இருக்க முடியாது. எனவே, வி.பி.சிங் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் அவர்கள் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால், அதற்காக முதலமைச்சரை வி.பி.சிங் அவர்களின் ஆன்மா வாழ்த்தும்; இல்லாவிட்டால், தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு பெருந்துரோகம் செய்தவர்களை மன்னிக்காது!
@CMOTamilnadu@mkstalin
#SocialJustice #VPSingh
#CasteCensus
In the Annual General Body Meeting-2023 of the Tamil Nadu Badminton Association held at Ooty, I have been unanimously re-elected as the President of Tamil Nadu Badminton Association.
ஒருநாள் மட்டைப் பந்து போட்டிகளில் 50-ஆம் முறையாக சதமடித்து, எவராலும் முறியடிக்க முடியாது என்று கூறப்பட்ட சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, புதிய சாதனையை படைத்துள்ள இந்திய மட்டைப்பந்து வீரர் விராட் கோலிக்கு வாழ்த்துகள். உங்கள் சாதனை நினைத்துப் பார்க்க முடியாதது; எவராலும் முறியடிக்க முடியாதது. மேலும் பல புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகள்!
@imVkohli