@Mahesh10816 You mocked him as a goat.
He took the herd with him.
Now all that's left behind is an echo chamber discussing the man who already moved on.
he won his poverty
he won as an engineer
he won as a IIM graduate
he won as a civil servant
he won as a clean and decipline ips officer
he won as a BJP party president .
he won people
he will win elections .
@annamalai_k
தமிழக பாஜக பழங்குடி அணியின் மாநில சமூக ஊடக பொறுப்பாளர் ஆகிய நான் அடிப்படை உறுப்பினர் மற்றும் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை விடுவித்துக்கொள்கிறேன். இதுவரை எனக்கு வாய்ப்பளித்த அணைத்து காவி சொந்தங்களுக்கும் நன்றி 🙏
"விஜய் போய் இன்னொரு விஜய்யை பார்த்தார்"- என்று உளறுபவர்கள்தான் உங்களுக்குத் தேவை என்றால் பாஜகவே அவர்களையே வைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு மாநிலங்களில் கவர்னர் பொறுப்பு - பிறகு அவற்றை ராஜிநாமா செய்து விட்டு - பாராளுமன்றத் தேர்தலில் போட்டி - பிறகு அதிலும் தோற்று சட்டமன்றத் தேர்தல் அதிலும் போட்டி - அதிலும் வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்னரே கூட்ட��ிக் கட்சித் தலைவரின் பிரசார வேனில் போய் தொற்றிக் கொள்வதுதான் கட்சிக்கு ஏற்றவர் என்றால் பாஜகவே அவரையே வைத்துக் கொள்ளுங்கள்.
"பிரதமரை வரவேற்க அண்ணாமலை ஏன் வரவில்லை?"- என்று நிருபர்கள் கேட்டால் - "ப்ரோடோகால் பட்டியலில் அவர் பெயர் இருந்தது - ஏனோ அவர் வரவில்லை!"- என்று உளற வேண்டியது!
அடுத்த சில நிமிடங்களிலேயே அண்ணாமலை பெயர் ப்ரோட்டோகால் பட்டியலில் இல்லை - என்றவுடன் அசடு வழிந்து சம���ளிப்பதுதான் அரசியல் - என்றால் அப்படி அரசியல் செய்பவரையே வைத்துக் கொள்ளுங்கள்.
மத்தியில் அமைச்சர் பதவி - ராஜ்யசபா MP பதவியோ முடிவடைய சில ஆண்டுகள் உள்ளது - என்றபோதும் விடாமல் மாநில சட்ட மன்றத்துக்குத் தேர்தல் வந்தால் ஓடி வந்து - மத்திய அமைச்சர் பதவியையும் ராஜிநாமா செய்யாமல் - மாநிலத்துக்கும் போட்டியிடுவதுதான் அரசியல் என்றால் அவரையே வைத்துக் கொள்ளுங்கள்.
மைக்கை நீட்டினாலே உளற���ம் வியாதிக்கு ஆளாகி - கூட்டணியில் வெறும் 27 சீட்டுக்கு ஈனக் கிரயத்துக்கு ஒப்புக் கொண்டு - "எண்ணிக்கை முக்கியம் இல்லை - எண்ணம்தான் முக்கியம்"- என்று அறி��ுக் குறைபாட்டுடன் அறிக்கை விடுவதுதான் ராஜதந்திரம் என்றால் - அந்த மகா ராஜதந்திரியையே தலைவராக வைத்துக் கொள்ளுங்கள்.
"அண்ணாமலை மிகவும் வேகமாகச் செயல்பட்டார் - அதனால் அவரை நீக்க வேண்டி வந்தது - படிப்படியாக முன்னேறுவோம் - நமது இலக்கு 2026 அல்ல!"- என்று கண்ணை உருட்டிக் கொண்டு - கட்சிக்கே சம்பந்தமில்லாமல் வெளியே இருந்து ஆலோசனை சொல்லும் சகுனிதான் உங்களுக்கு அரசியலில் "குரு" என்றால் அவர��யே மூர்த்தியாக வைத்துக் கொண்டு வழிபடுங்கள்.
பக்தவத்சலம் காலத்து காங்கிரஸ்காரன் போல - எப்படியும் ஜெயித்துவிடுவோம் என்ற மிதப்பில் சிலர் - எப்படியும் ஜெயிக்கப் போவதில்லை எதற்கு கட்சி கொடுத்த சக்தியை பயன்படுத்த வேண்டும் என்று சக்தியை மீதம் பண்ணி திடீர் பயில்வானாகும் சிலர் - வெள்ளை சட்டை பாக்கெட்டில் மோடி படத்தை வைத்தபடி - "ஜெய் ஸ்ரீராம்!" - என்று முழங்கியபடி அலைகிறார்களே - அவர்க���் போதும் அவர்களையே வைத்துக் கொள்ளுங்கள்!
உங்கள் பிரதமர் மோடியை - ஒரு திமுக வாரிசு - GET OUT MODI - என்றான்!
உடனே அதற்கு பதிலடியாக - "வாடா பார்க்கலாம்! என் தாத்தா 5 முறை முதல்வர்! என் அப்பா சிட்டிங் முதல்வர்! நான் துணை முதல்வர்... சொல்லிகிட்டு வாடா பார்க்கலாம்!"- என்று கர்ஜித்த அண்ணாமலை தேவை இல்லை!
டி.ஆர்.பாலு இவர் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க - தைரியமாக தானே நேரில் ஆஜராகி பாலுவை குறுக்கு விசாரணை செய்து திணறவைத்த அண்ணாமலை தேவையில்லை.
"உன்னை கைது செய்வோம்"- என்று R.S.பாரதி மிரட்ட - பதிலுக்கு - "தைரியமிருந்தால் உன் போலீஸ் படை எல்லாவற்றையும் அனுப்பு, நான் கமலாலயத்தில்தான் மாலை 7 மணி வரை இருப்பேன்"- என்று சூளுரைத்த அண்ணாமலை உங்களுக்குத் தேவையில்லை.
"என்னைக் கைது செய்தால் 7/8 திமுக மந்திரிகள் கைதாவார்கள் - தைரியம் இருந்தால் கை வையுங்கள்"- என்று சிங்கம் போல கர்ஜித்த அண்ணாமலை உங்களுக்குத் தேவையில்லை!
"ஆடு ஆடாக இருக்கணும் - இல்லாட்டி வெட்டி பிரியாணி போட்டுவிடுவோம்!"- என்று R.S.பாரதி மிரட்டியபோது...
சற்றும் தயங்காமல் - "இது காட்டில் கிளுவை மரம் வெட்ட கொடுவாள் பிடித்த கைங்ணா! கொடுவாள் கிளுவையும் வெட்டும் ஆளையும் வெட்டுங்ணா!"- என்று வீரத்துடன் பதிலளித்து திமுகவின் வாயடைத்த அண்ணாமலை உங்களுக்குத் தேவையில்லை!
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்முறை விவகாரத்தில் - அந்தக் கொடியவன் யார் யாருடன் எல்லாம் சம்பவம் நடந்த பிறகு மொபைலில் தொடர்பு கொண்டான்? எத்தனை நிமிடங்கள் பேசினான்?- என்பதை எல்லாம் ஆதாரபூர்வமாக வெளியிட்டு...
"யார் அந்த சார்?"- என்பதை பேசுபொர���ள் ஆக்கிய அண்ணாமலை உங்களுக்குத் தேவையில்லை!
கோவை குண்டுவெடிப்பை வெறும் சிலிண்டர் வெடிப்பு என்று திமுக அரசு மழுப்பிய போது - அது திட்டமிடப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் முயற்சிதான் என்பதையும்...
அந்த "சிலிண்டர் வெடிப்பில்" கொல்லப்பட்ட முபின் என்பவன் ஏற்கனவே NIA பட்டியலில் இருந்தவன் என்பதையும் ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டிய அண்ணாமலை தேவையில்லை.
கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பே��் பலியான சம்பவத்தில் - தனது இலங்கைப் பயணத்தை பாதியில் முடித்து தமிழகம் வந்து சில ஆதாரமான பிரச்னைகளை விளக்கினார் அண்ணாமலை!
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்��ட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்க��ன பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்��ொள்கிறேன்.
40 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறோம், கட்சியும் சித்தாந்தமும் தான் முக்கியம் என்பவர்கள் இதற்கு நேர்மையாக பதில் கூற வேண்டும்.
தமிழ்நாட்டில் உண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தம் இருக்கிறதா?
🔹 முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்த பிறகும் தொடர்ந்து தேர்தல் சீட் வழங்கப்பட்டது ஏன்?
🔹 ஆளுநர் பதவி வகித்த தமிழிசைக்கு மீண்டும் மீண்டும் தேர்தல் வாய்ப்பு வழங்கப்பட்டதன் காரணம் என்ன?
🔹 “பாராளுமன்றத் தேர்தலே எங்கள் இலக்கு” என்ற நயினார் நாகேந்திரனின் கருத்து கட்சியின் சித்தாந்த அரசியலுக்கு ஏற்பதா?
🔹 சட்டமன்றத் தேர்தலில் நயினார் பெற்ற தொகுதிகளும், வாய்ப்புகளும் உழைப்பின் அடிப்படையிலா அல்லது வேறு க���ரணங்களாலா?
🔹 டிசம்பர் மாதமே விலகப் போகிறேன் என்று கூறியவருக்கு ஹெலிகாப்டர் வசதியுடன் பிரச்சார வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன்?
🔹 நோட்டா நிலையைத் தாண்டி 11% வாக்குகளைப் பெற்றது கட்சி தொண்டர்களின் உழைப்பு இல்லையா?
இன்னும் சில கேள்விகள்…
❓ கட்சிக்காக இரவு பகலாக உழைத்த இளைஞர்கள் இல்லையா?
❓ அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், மக்கள் செல்வாக்கு குறைந்த மூத்த தலைவர்களுக்கு மட்டும் மீ���்டும் மீண்டும் சீட் வழங்கப்படுவது ஏன்?
❓ சித்தாந்தக் கட்சி என்று கூறிக்கொண்டு, சித்தாந்தத்தை விட லாபியும் செல்வாக்கும் முக்கியமானதாக மாறிவிட்டதா?
❓ திமுக தலைவரின் குடும்பத்துடன் நெருக்கம் காட்டுபவர்கள்தான் தலைமைக்கு தகுதியானவர்களா?
❓ பாரதப் பிரதமரை அவமதிக்கும் வகையில் பேசியவர்கள்தான் கட்சியின் முகமாக இருக்க வேண்டுமா?
நேர்மையான பதில் வேண்டும்.
கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு மரியாதையா?
அல்லது செல்வாக்கு கொண்ட சிலருக்கே முன்னுரிமையா?
சித்த��ந்தம் வெல்ல வேண்டுமா?
அல்லது லாபி வெல்ல வேண்டுமா?
தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலை தீர்மானிப்பது தலைவர்கள் அல்ல; விழிப்புணர்வுள்ள தொண்டர்களும் மக்களும்தான். 🇮🇳
நேர்மையான பதில் வேண்டும்!