A4 Paperயில் எழுதிக் கொடுத்தால்தான் பரப்புரைக் கூட்டம் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர்வரை எல்லாவற்றிலும் வாய்திறக்க முடியும் எனும் கையாலாகா நிலையிலிருக்கும் ஒருவரைத் தலைவராக வைத்துக் கொண்டு, அரசுப்பள்ளிக் குழந்தையைக் கேள்வி கேட்டு, கூனிக் குறுக வைக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் செயல்பாடு பச்சை அயோக்கியத்தனம்!
'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.
மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.
அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இ��ை அனுமதித்த #SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.
ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம்.
அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?
முந்த��ய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட ��ோது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.
ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவெக எம்எல்ஏவை தங்கள் பக்கம் இழுக்க முயன்றதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையி��், செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டடுள்ளனர்...
வெளிப்படையாக திமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யச் சொன்னதாக வைகோ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்... அதில் தமிழக முதல்வருக்கும் பங்கிருப்பது குறித்து குறிப்பிட்டிருக்கிறார்... அதன் மீது ஏதேனும் நடவடிக்கையை போலீஸ் எடுக்குமா என்பது குறித்து அறிய அவா...
தவெக அரசை கவிழ்ப்பதற்காக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுகிறார்கள் திமுகவினர் என அமைச்சர் @CTR_Nirmalkumar ஆதாரமற்ற கு���்றசாட்டை முன் வைத்திருக்கிறார். அவருடைய பேட்டியில் “Only Sound No Substance”
நமக்கு எழும் கேள்விகள்.
1. ஊத்தங்கரை எம்எல்ஏ மட்டுமே புகார் கொடுத்திருக்கிறார்.
வேறு எந்தெந்த எம்எல்ஏக்கள் என்ற விவரத்தை வெளியிட்டிருக்க வேண்டுமா, இல்லையா?
2. பணம் ஏதாவது கைமாறியதா? தகவல் இல்லை.
சபா நாயகரை பதவி நீ��்கும் தீர்மானம் ஏதாவது நிலுவையில் உள்ளதா?
இல்லை.
3.புகார் 29ஆம் தேதி கொடுக்கப்பட்டிருக்கிறது, இதே அவசரம் அமைச்சர் சரத் மேலெழுந்திருக்கும் புகார் மீது காட்டப்பட்டதா?
இல்லை
4. யாரோ ஒரு நபர் ஒரு எம்எல்ஏவை தொடர்பு கொண்டார் கைது செய்திருக்கிறீர்கள், ஏன் பின்னர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கைது செய்யவில்லை? ஆதாரம் ஏதும் இல்லை என்பதால் தானே?
5. மீடியாவில் ஆதாரமற்ற தகவல்களை ப���ப்பி, திமுக மீது அவதூறு செய்வது ஏன்?
6. நாளை ஊழலில் ஊறி திளைத்த 2 விஜயபாஸ்கர்களையும் கட்சியில் இணைக்க இது “டேக் டைவர்ஷனா?”
7. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் என வைகோ பொது வெளியில் போட்டுடைத்ததால் நடத்தப்படும் இமேஜ் க்ளினிங் முயற்சியா இது?
8. அதிமுகவின் 5 எம்எல்ஏக்கள் பதவி விலகல், குதிரை பேரம் தானே?
பதில் உண்டா?
த வேகா ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சிகளில் இறங்கி
தன்னிடம் பேரம் பேசியதாக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் காவல்துறையில் புகார் கொடு��்கிறார் உடனே காவல்துறை மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டது புகார் மனுவை தவிர வேறு எந்த சான்றும் இதற்கு இல்லை கைது செய்யப்பட்டுள்ளவர்கள் செந்தில் பாலாஜி உடன் நெருக்கமானவர்கள் என்று துணைக் கதை ஒன்றும் எழுதப்படுகிறது
சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்கு முயற்சி செய்தாலே வழக்கு சிறை ; ஆனால்
திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றமதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலகச் செய்து ஆதரவு தர வேண்டும் என்று
முதல்வர் விஜய் தன்னிடம் கூறினார் என்று வைகோ ஒப்புதல் வாக்கு மூலமே கொடுத்தாரே;
இதற்கு முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கலாமா? இது சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கும் வேலை தானே?
குதிரை பேரத்திற்காக கைது செய்யப்பட வேண்டிய நபர் நடிகர் விஜய் தான்.
தனது ஆட்சியை தக்க வைக்கவும், பெரும்பான்மையை அதிகப்படுத்தவும் நடிகர் விஜய் ஈடுபட்ட குதிரை பேரங்களின் பட்டியல் பெரியது.
1.அமமுக சட்டமன்��� உறுப்பினர் காமராஜிடம் கையெழுத்து வாங்கும் வீடியோ வெளியானது. அவரே பின் ஒப்புக்கொண்டார்.
2.அதிமுக 6 MLA கள் ராஜினாமா செய்துவிட்டு உடனே TVK கட்சியில் இணைகிறார்கள்.
3.வைகோ நேரடியாக பத்திரிக்கையாளரிடம், விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொன்னார், நானே இடைத்தேர்தலில் பரப்புரை செய்வதாக சொன்னார்.
இதெல்லாம் குதிரை பேரமில்லையென்றால் இதற்கு பெயர் என்ன?
திமுகவும், அதிமுக���ும் இணைந்தாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை.
தவெக உறுப்பினர்களை தூக்குவதால் திமுகவுக்கு எந்த���் பயனும் இல்லை. ஆட்சி அமைக்கப் போவதுமில்லை.
நடிகர் நடத்தும் குதிரை பேரத்தை திசைதிருப்ப, மக்களிடம் அனுதாபம் தேட, மேற்கொள்ளப்பட்ட முயற்சியே 3 பேர் கைது.
நடிகர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் புகாருக்கு கைது என்றால்,
டிடிவி தினகரன் புகாருக்கு,
வைகோ வெளிப்படையாக கூறியதற்கு,
யாரை கைது செய்வீர்கள்?
50 ஆண்டு காலம் அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான திமுக தலைவர் அரசியலை விட்டே வில�� வேண்டுமென்று,
5 கட்சி மாறிய ஒரு அற்பப்புழு பேசுகிறான்.
நாவை அடக்கு!
இன்றைக்கு தவெக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் அன்று திமுக கூட்டணியில் இருந்தபொழுது திருப்பரங���குன்றம் விவகாரத்தில் திமுக-வுடன் சேர்ந்து இசுலாமியர்களுக்கு ஆதரவாக RSSற்கு எதிராக நிலைப்பாடு எடுத்தன..
ஆனால் அதே கூட்டணி கட்சிகள் இன்று தவெக-வுடன் இருக்கும்பொழுது "திருப்பரங்குன்றம் files" என்கிற ஆவணப்படத்தை திரையிட இந்து முன்னணி மிரட்டி தவெக-வை அடிபணிய வைத்து போலீஸை வைத்தே திரையிட அனுமதியை மறுக்கும்பொழுது அதை கண்டித்து அறிக்கைகூட விடாமல் தவெக-வின் பாஜக ஆதரவு நிலைப்பாட்டையே கடைபிடிக்கிறது என்றால், அப்ப எங்க போறோமோ அவங்க மனம் கோணாமல் நடந்துககொள்ள வேண்டும் என்பதுதான் கொள்கையா??? அப்படி பார்த்தால் இவர்கள் எல்லோரையும்விட திமுக-தானே சிறந்த கொள்கை பிடிப்பான கட்சி.. அப்ப அம்பேத்கர் மார்க்ஸ்னு பேசுரதெல்லாம்???
“கிடைத்த சோபாவில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்பவர்கள்.”
இன்றைக்கு த வெ க வின் கூட்டணியில் இருப்பவர்கள் அதில் சேர்ந்தவர்கள் தங்களை நியாயப்படுத்த ஆளாள��க்கு ஒரு காரணம் கூறுகிறார்கள். அது குறித்து த வெ கவும் தனது நிலைப்பாட்டைச் சொல்கிறது. சரி அது அவர்களின் கூட்டணி தர்மம். சிபி ஐ சிபிஎம் போன்ற இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை யாரிடமும் காசு வாங்காமல் வேலை பார்ப்பார்கள் என்பது ஒரு நம்பிக்கை.
ஆனால் ஏறக்குறைய மூன்று நான்கு முறை திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தல் செலவிற்கு திமுகவில் இருந்து பணம் வாங்கிப் பிறகு தேர்தலில் வெற்றிய���ம் பெற்றார்கள். சிபிஎம் ஐப் பொறுத்த வரையில் அதனுடைய இலக்கிய பிரிவு என்ற��� சொல்லுகிற த மு எ க ச ஆட்கள் தான் ஏறக்குறைய திமுக ஆட்சியை நடத்தினார்கள்.அவர்கள் தான் ஸ்டாலினுக்கு பல்வேறு வகையில் இலக்கிய அரசியல் பொருளாதார கருத்துக்கள் என்ற பெயரில் முட்டுக் கொடுத்தார்கள். புத்தக கண்காட்சிகள் புத்தகத் திருவிழாக்கள் இவர்களது புத்தகங்களை அரசு செலவில் அச்சிட்டுக்கொள்வது இவர்கள் சொல்பவர்களுக்கு விருது என்றெல்லாம் மேடைக்கு மேடை கொண்டாடினார்கள் விழா எடுத���தார்கள். இப்போது சிபிஎம் க்கு திமுக கசக்கிறதா? ஆடத் தெரியாமல் தெருக்கோணல் என்கிற மனநிலையில் இருக்கிறார்கள் போல.
கலைஞருக்கு நான் சத்தியம் செய்து கொடுத்தேன் ஸ்டாலினை நான் காப்பாற்றுவேன் துணையாக இருப்பேன் போர்வாளாக இருப்பேன் தோளாக இருப்பேன் அவருக்குப் பாதுகாவலனாக இருந்து வழிநடத்துவேன் என்று காஞ்சிபுரத்தில் பேசியவர் வைகோ! தொடர்ந்து திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும் என்று சொன்னால் இந்த தமிழ் தேசியம் பேசுபவர்களை ஒழிக்க வேண்டும் என்றும் சொன்னார். அவர்கள் திராவிடத்தைகாலி செய்வதற்கே தமிழ் தேசியத்தைப் பேசிக்கொண்டே ஏமாற்றுகிறார்கள் என்றும் சொன்னார். அதன் அடிப்படையில் திமுக அதிமுக ஒன்று சேர வேண்டும் என்று சொன்னவரும் அவர்தான். ஆனால் இப்போது வந்து அதிமுகவும் திமுகவும் சேர்வது என்ன வகையில் நியாயம் என்று கேட்கிறார். திராவிடத்தை அழிப்பதற்காக வேலை செய்கிறார்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் திராவிட இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்று சொன்னதெல்லாம் பம்மாத்தா? பதவி சுகமா?
இப்படி எல்லாம் சொன்னவர் அதிமுக திமுக கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்கிறார்கள் அது எப்படி சரியாகும் என்று இப்போது வந்து கேட்கிறார்!. அப்போது ஒரு பேச்சு!இப்போது ஒரு பேச்சு! இது என்ன அரசியல் தார்மீகம் என்று தெரியவில்லை.! இவர் திமுக கூட்டணியில் நின்ற போது இரண்டு எம்எல்ஏக்கள் உதய சூரியன் சின்னத்தில் நின்றவர்கள் த வெ க வில் இணைய மறுத்து திரும்பவும் திமுகவிற்கே போய்விட்டார்கள். இவர் மட்டும் தவெகவில் சேர்ந்து கொண்டு குதிரை பேரம் பற்��ிப் பேசிக் கொண்டிருக்கிறார். குதிரைபேரம் பத்தாதா ஒட்டக பேரம் என்று ஒரு புதிய வார்த்தையை வேறு சொல்கிறார். ஒட்டகபேரம் என்று எங்கே இருக்கிறது? ஒட்டகம் மெதுவாக டல்லாக நடக்கும். ஆனால் ஹார்ஸ் பவர் என்கிற குதிரை பொதி சுமந்தாலும் மிக வேகமாகப் பாயும். ஆக அது வேறு இது வேறு!
என்ன அர்த்தத்தில் நிருபர்களிடம் பேசுகிறார் விளங்கவில்லையே ? கேள்வி கேட்பவர்களிடம் அட ம��ன்ட்டாக உனக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று பதட்டத்துடன் கோபிக்கிறார். என்ன கோபித்தாலும் நீங்கள் இந்த பேரத்தில் இருக்கிறீர்கள் என்று அவர்கள் எதிர்வினை செய்கிறார்கள். மதி முக வில் மிச்சமாகி த வெ க வில் இன்று வந்து இணைய இருக்கும் இரண்டு எம்எல்ஏ களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலில் மீண்டும் நிறுத்தினால் நானே வந்து பிரச்சாரம் செய்து அவர்களை ஜெயிக்க வைப்பேன் என்று வ��ஜய் சொன்னதாகச் சொல்லுகிறார். ஏறக்குறைய மதிமுகவை இப்படித்தான் வைகோவே முடித்து வைத்துவிட்டார். இதன் மூலம் இன்னமும் அவரை நம்பிக் கொண்டிருக்கும் சிலருக்குப் பாடம் கிடைத்திருக்கும்.
பேச்சில் தெளிவும் சுத்தமான வாக்குறுதியும் அவரிடம் இல்லையே? கண்டபடி உளறிக்கொண்டு அல்லவா இருக்கிறார். வாசல் காவலுக்கு வேலை கேட்டு நிற்பது போல இருக்கிறது அவரது நிலைமை. இவர் இத்தனை நாள் எங்கிருந்த���ராம் பத்திரிகையாளர்களைக் கேட்கிறார்! நீங்கள் திமுக சார்பில் பேசிக்கொண்டு வந்து என்னிடம் கேள்வி கேட்டால் அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்கிறார். நான் என்னும் அந்த மனப்பான்மை அவருக்கு கை வந்த அதிகாரம்! அந்தப் பித்தம் தெளியாமலே கண்டபடி வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டுகிறார். நேற்று வரை நாங்கள் எல்லாம் திமுக என்று சொன்னவர் இன்று திமுக கரப்சன் பார்ட்டி என்கிறார்.
நீங்கள் தேர்தலுக்கு பணம் வாங்கிவிட்டு அதை கரப்க்ஷன் என்று சொல்வது என்ன வகையான புத்திசாலித்தனம். எல்லாவற்றையும் மறைப்பதற்காக உளறிக் கொட்ட கூடாது. மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் உங்களுடைய சுயநலமும் நோக்கமும் தெரிந்துதான்
வைகோ கூறியது “மதிமுக 2 MLA ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை மீண்டும் ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு” என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார்
ஆக விஜய் குதிரை பேரம் நேரடியாக நடத்தி வருகிறார்.. பதவி விலகுவது அவர்களாக செய்கிறார்கள் என்று இத்தனை நாட்களாக ஆதவ் முதல் அனைத்து TVk கும்பலும் சொன்னது பொய்..
விஜய் இதில் என்ன குறைந்��பட்ச நேர்மை இருக்கு?
“தமி��்நாடு அரசின் டெல்லிப் பிரதிநிதியாக கர்நாடகாவை சேர்ந்த படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமித்தது தவெகவின் உட்கட்சி விவகாரம்" - திருமாவளவன்
அந்த ஆளு கட்சி பிரதிநிதியாக சென்றால் அவங்க கட்சி விவகாரம் - ஆனால் போவது தமிழக மக்கள் பிரதிநிதியாக.. திருமாவளவன் இப்படி இந்த விஜய் ஆட்சியின் கீழ்தரமான செயலுக்கு முட்டுகொடுப்பது பிழைப்புவாதம்..
வாழ்நாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது.
என் 8 வயது மகனை யாரோ இருவர் உடல் ரீதியாகத் துன்புறுத்த, சற்றுதள்ளி நடைபயிற்சியில் இருந்த நான் ஓடிப்போய் தடுத்துக் கேட்டேன்.
மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமராக்களும் வேண்டாமென்றே பழுதாக்கப்பட்ட அது ஓர் இருள் சூழ்ந்த விளையாட்டுத் திடல்.
ஆளரவம் பெரிதாக இல்லை. உடன் எங்களை 10-12 கஞ்சாவாசிகள் சூழ்ந்துகொண்டார்கள். 15 முதல் 20 வயது இருக்கலாம் அனைவருக்கும்.
பதற்றத்துடன் நான் என் மகனின் தோளைத் தொட, அவன் உடல் அச்சத்தில் அதிர்ந்துகொண்டிருந்தது. வேறு வழியின்றி சூழ்ந்திருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தபடியே அலைபேசியில் 100-ஐ முயற்சித்தேன்.
ஒவ்வொரு முறையும் நெடுநேரம் காத்திருந்த பின் ஓரிரு Ring ஆகி Receiver எடுத்துப் பிறகு அணைக்கப்பட்டது போல தொடர்பு அறுந்தது.
அருகில் உள்ள R6_ குமரன் நகர் காவல் நிலைய எண்ணுக்கும் முயன்றேன். உபயோகத்தில் இல்லை என்றே வந்தது.
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உயிர்ப்பாதுகாப்பில்லாத சூழலில் இறுதிவரை எங்களுக்கு காவல்துறை தொடர்பு கிடைக்கவேயில்லை.
அசம்பாவிதங்களின்றி நானும் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு காவல்துறை என எதுவும் இல்லை!
என..
==
இயக்குனர் ச.முரளி மனோகர் என்பவர் காவல்துறைக்கு தான் போன் செய்ததையும் ஆதாரத்துன் பதிவு செய்திருக்கிறார்.
@kalaiyalan
Rajkumar Narasinghan
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வர��ம் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர்.
அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்..
இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி.
இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்..
அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான்.
விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில்.
இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது!
அந்த MLA மீது வழக்கு பதிவு செ��்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்..
அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் ம���மனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள்.
வணக்கம் லாட்டரி..
Constitutional Morality, Accountability எதுவுமே இல்லாமல் தான் வகிக்கிற முதலமைச்சர் பதவிக்குப் பொருத்தமானவராக இல்லாமல் பிதற்றியிருக்கிறார் விஜய்!
சட்டமன்றத்திற்குள்ளே கேள்வி கேட்டால் தயக்கம், மயக்கம், இயலாமையை காட்டிவிட்டு
திருச்சியில் வீரவசனம் பேசுவது அரசியல் அசிங்கம், புலம்பல்!
அரசியல் சட்டத்தால் திருத்தப்பட்ட EWS சட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னவர் ஸ்டாலின்!
ஒரு தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட மோடியிடம் கெஞ்சுபவர் விஜய், உங்கள் வீரம் என்ன? இந்த வீரத்தை நாங்கள் அம்பலப்பட��த்தக் கூடாதா?
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா,எம்.பி அவர்களின் செய்தியாளர் சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (02-06-2026) திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா,எம்.பி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தது குறித்த செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்று 234 தொகுதிகளில் 107 இடங்களில் வெற்றி பெற்று, அந்த எண்ணிக்கையோடு தமிழக வெற்றிக் கழகம் ஆ��்சிப் பொறுப்பினை ஏற்றது. முதலமைச்சராக மாண்புமிகு விஜய் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது போதுமான வாக்குகளைப் பெறுகிற அளவிற்கு எதிர்க்கட்சிகளும் அவர்களுக்கு ஒத்துழைத்து அவர் முதலமைச்சராகப் பணியைத் தொடர்ந்து வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் அமைக்கப்பட்டிருக்கின்ற புதிய ஆட்சிக்கு வாழ்த்துகளைச் சொன்னதோடு "ஆறு மாத காலத்திற்கு உங்களுடைய ஆட்சியினுடைய திறனைக் கடுமையாக விமர்சிக்க ���ாட்டோம்" என்று கூறி இந்த அரசாங்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விழைந்தார்கள்.
அதற்குப் பிறகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் டெல்லிக்குச் சென்றார்; பிரதமரைப் பார்த்தார். ஏனைய மூன்று மாநில (அசாம், மேற்கு வங்காளம், கேரளா) முதலமைச்சர்களைப் பிரதமர் ஏறத்தாழ 40 முதல் 50 நிமிடங்கள் சந்தித்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ தமிழ்நாட்டினுடைய முதலமைச்சருக்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே பிரதமரால் ஒதுக்கப்பட்டு, உடனடியாக நிர்மலா சீதாராமனைத் தவிர வேறு யாரையும் சந்திக்காமல் அவர் திரும்பி இருக்கிறார்.
அதற்குப் பிறகு முதன்முதலாகத் தமிழ்நாட்டினுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராகத் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வதற்குத் திருச்சிக்குச் சென்றவர் ஒரு 18 நிமிடங்கள் பேசியிருக்கிறார். அரசியல் சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள ஒரு பதவியில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்ற ஒருவர் அரசியல் சட்டம் என்ன ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கச் சொல்கிறதோ அதாவது Constitutional Morality -ஐ பின்பற்ற வேண்டும்.
இன்னும் நான் தெளிவாகச் சொல்வதென்றால், அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்���ர் அவர்கள் பேசுகின்றபோது:
"அரசியல் சட்டம் இருக்கிற எல்லா நாடுகளுக்கும் அரசியல் ஒழுக்கம் என்று ஒன்று தேவையில்லாமல் இருக்கலாம், ஆனால் இந்தியாவிற்கு Constitutional Morality தேவைப்படுகிறது. அது முதலமைச்சர்களுக்கும், அமைச்சர்களுக்கும், பிரதமர்களுக்கும் பொருந்தும்" என்று உரையாற்றியிருக்கிறார்.
அந்த Constitutional Morality, Accountability எதுவுமே இல்லாமல், தான் வகிக்கிற பதவிக்குப் பொருத்தமானவராக இல்லாமல், தன்னுட��ய தகுதியைக் குறைத்துக்கொண்டு பிதற்றியிருக்கிறார்; வீராவசனம் பேசியிருக்கிறார்.
நான் தமிழ்நாட்டு மக்களை, அவருக்கு வாக்களித்த பெருமக்களை, வாக்களிக்காத பெருமக்களை வாக்களிக்காவிட்டாலும் எனக்கும் சேர்த்து அவர்தான் முதலமைச்சர் என்கின்ற அந்த உணர்வோடு, மிகுந்த மரியாதையோடு கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான்: சட்டமன்றத்தில் பதிலுரை ஆற்றிய மாண்புமிகு விஜய் அவர்களுடைய Tone and tenor, அவருடைய குரலினுடைய வலிமை, அந்த அழுத்தம், அந்தச் சத்தம்... அதையும், திருச்சியில் அவர் உரையாற்றுகிறபோது எள்ளலும் துள்ளலுமாக, கர்ஜித்ததாகச் சொல்லிக்கொண்டு கத்திக்கொண்டு பேசினாரே அந்தப் பேச்சையும், இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏன் சட்டமன்றத்திற்குள்ளே தளர்வு, சோர்வு, தயக்கம், மயக்கம், இயலாமை? ஆனால் திருச்சியில் ஏன் இந்த வீரவசனம்? அந்த வசனத்தை எழுதிக் கொடுத்தது யார்? என்கி���்ற பொருத்தப்பாட்டை, ஒப்பீட்டை நீங்கள் எண்ணிப்பார்த்தால், இதற்குப் பின்னாலே இருக்கின்ற அரசியல் தந்திரம், அரசியல் அசிங்கம், புலம்பல் எல்லாம் உங்களுக்குத் தெரியும்.
அவர் சொல்லுகிறார், ஒவ்வொரு வரிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் குறை சொல்வதாக நினைத்துக் கொண்டு "Stalin சார்" என்பது... அப்புறம் "திமுக-வுக்கும் தவெக-வுக்கும் தான் போட்டி, மத்தவங்க எல்லாம் அள்ளு சில்லு" என்கிறார். மத்தவங்க எல்லாம் அள்ளு சில்லுன்னா யார்? அதிமுக மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களா?
"உங்களுக்கும் எனக்கும் தான் போட்டி, மத்தவங்க எல்லாம் அள்ளு சில்லு" என்றீர்களே முதலமைச்சர் அவர்களே, உங்களுக்கு ரொம்ப சங்கடமாக இல்லையா? நான் வேறு வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை. அந்த அள்ளு சில்லு வீட்டுக்கே நீங்களே போய், சால்வை போட்டு, அவர்களோடு சேர்ந்து ஓட்டு வாங்கினீர்களே... அந்த அள்ளு சில்லுகிட்ட போய் கெஞ்சிக் கூத்தாடியது தில்லுமுல்லு அரசியலா, அநாகரிக அரசியலா? அதைத் தமிழ்நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?
நான் இப்போதும் சொல்கிறேன், இந்த ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, ஒரு முதலமைச்சருக்குத் தர வேண்டிய மரியாதையை எங்களுடைய தலைவரும் நாங்களும் தர��் தயார். ஆனால் எங்களுடைய நிலைப்பாடு உணர்ச்சிவசப்பட்டவர்கள் இந்த ஆட்சியை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்ற காரணத்தினால் அதே வழியில் முதலமைச்சரும் செல்லக் கூடாது என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொன்றுக்கும் அரசியல் புரிதல் இல்லாமல் "கவர்ச்சி அரசியல்" என்கிறார்கள். வாதத்திற்கு வைத்துக்கொள்வோம், ஏன் சினிமா நடிகருக்குக் கவர்ச்சி அரசியல் இருக்க���் கூடாது? "அந்தக் கவர்ச்சி அரசியலில் இருந்து வெளியே வாருங்கள்" என்று தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்வதற்கு மற்ற கட்சிகளுக்கு எல்லாம் உரிமை இல்லையா? அது என்ன "கவர்ச்சி அரசியல்" என்று வார்த்தையைப் பயன்படுத்தினால் எனக்கு நன்றாக வந்துவிடும்... என்ன வார்த்தை வந்துவிடும்? இது முதலமைச்சருக்கு அழகா?
"You are occupying the constitutional chair, brother / bro Vijay" என்று நாங்களும் கேட்போம்.
ஒரு முதலமைச்சராகப் போகிறீர்கள், நன்றி சொல்கிறீர்கள். திமுகவை விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, விமர்சியுங்கள். அதற்கு ஒரு ஐந்து நிமிடம் எடுத்துக்கொள்ளுங்கள். மீதி 10 நிமிடங்கள், "பிரதமரோடு போனேன், சந்தித்தேன், என்ன செய்யப் போகிறேன், பிரதமரிடம் மனு அளித்திருக்கிறேன்" என்று ஏதாவது சொல்லியிருக்கிறீர்களா?
நான் கேட்கிறேன், யாரைப் பார்த்து நீங்க��் குறை சொல்கிறீர்கள்? தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நீங்கள் போய் கடிதம் கொடுக்கிறீர்கள். நீங்கள் சொன்ன "Stalin சார்" யார் தெரியுமா? அரசியல் சட்டத்தால் திருத்தப்பட்ட EWS (Economically Weaker Sections) constitutional mandate, once it was passed by the Parliament, அதைத் தமிழ்நாட்டுக்குள்ளே அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னவர்தான் ஸ்டாலின்! நீங்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் போட்டிருப்பது என்ன தெரியுமா? வெறும் அரசாணை (G.O.) சார். அரசியல் சட்டத்தை மீறினால் ஆட்சியையே கலைக்கலாம். நாங்கள் மீறியிருக்கிறோம், தாழ்த்தப்பட்டவர்களுக்காக, பிற்படுத்தப்பட்டவர்களுக்காக! நீங்கள் ஒரு தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் போய் கெஞ்சுகிறீர்களே, கூத்தாடுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன? இந்த வீரத்தை நாங்கள் அம்பலப்படுத்தக் கூடாதா?
ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, "நாங்கள் உங்களுடைய governance-ஐத் தான் ஆறு மாதம் கழித்து விமர்சிப்��ோம்" என்று சொன்னோம். "உங்களுடைய இயலாமையை, day-to-day administration-இல் இருக்கிற குறைபாடுகளை நாங்கள் விமர்சிக்க மாட்டோம்" என்று நீங்களும் சொல்ல முடியாது, நாங்களும் கேட்க முடியாது.
நாங்கள் day-to-day administration-ஐச் சொன்னால்... இவ்வளவு கொலை நடக்கிறது, கொள்ளை நடக்கிறது, இவ்வளவு பாலியல் தொந்தரவுகள் நடக்கின்றன என்று சொன்னால், நீங்கள் உடனே முந்தைய அரசை விமர்சிக்கிறீர்களா? நீங்கள் சொன்னீர்களே, "நான் வந்த உடனே எல்லாம் சரியாகிவிடும்" என்று. சரி, பணம் இல்லை, நிதிநிலைமையைச் சீர் செய்வதற்கு ஆறு மாதம் ஆகலாம் அல்லது இரண்டு வருடம் ஆகலாம். சட்டம் ஒழுங்குக்கு என்ன பிரச்சனை? போலீஸ் உங்களிடம் தானே இருக்கிறது? துப்பாக்கி உங்கள் கையில் தானே இருக்கிறது? Transferring authority நீங்கதானே? அதற்கு என்ன கால அவகாசம் வேண்டும் என்று கேட்கிறேன்? உளவுத்துறையைச் சரியாக வைத்திருக்க வேண்டியதுதானே நீங்கள்?
உங்களுடைய உரையில் அப்புறம் வேறு என்னவெல்லாம் சொல்கிறீர்கள்? இப்போது தமிழ்நாட்டுக்கு அவர் கையெழுத்துப் போட்டதில் "சிங்கப்பெண்" என்று ஒரு திட்டத்திற்கு உங்களின் முதல் கையெழுத்தைப் போட்டீர்கள். நான் கேட்கிறேன், "சிங்கப்பெண்" திட்டத்திற்கு budgetary support என்ன? கலைஞர் மூன்று கையெழுத்துப் போட்டார், எங்களுடைய தலைவர் ஸ்டாலின் முதல் கையெழுத்துப் போட்டார் முதலமைச்சராக வரும்போது. அதற்கெல்லாம் budgetary support என்ன என்று நிதித்துறை செயலாளரோடு பேசி, நிதி ஒதுக்கீடு செய்து முடித்த பிறகுதான் கையெழுத்துப் போடுவோம். "சிங்கப்பெண்" திட்டத்திற்கு budget allocation என்ன? நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், பெயரை மட்டும் மாற்றிவிட்டால் போதுமா?
ஒரு IG-யைப் போட்டீர்கள், புதிதாக recruit பண்ணினீர்களா? அதற்குப் புதிதாக department வாங்கிக் கொடுத்தீர்களா? அல்லது எந்தெந்த மாவட்டத்தில் "சிங்கப்பெண்" திட்டத்திற்குப் போலீஸ் allot ஆகியிருக்கிறார்கள்? எத்தனை வாகனங்கள் நீங்கள் வாங்கியிருக்கிறீர்கள்? அதை ஏன் என்னை விவாதிக்க வைக்கவில்லை? கையெழுத்துப் போட்டீர்களே, ஏன் என்னை விவாதிக்க வைக்கவில்லை என்று கேட்கிறேன். உங்களை "inability, incompetent" என்று நான் சொல்வதில் என்ன தப்பு? ஆனால் நீங்கள் பேசுவதைப் பார்த்தால், கைதட்டலுக்காக, உணர்ச்சியைத் தூண்டுவதற்காக எல்லாம் பண்ணுகிறீர்களா?
நாங்கள் என்ன சக்தி தெரியுமா? மும்மொழிக் கொள்கையை நாங்கள் உள்ள��� விடவில்லை. என்னென்ன திட்டங்களை நிறுத்தி வைத்திருக்கிறோம்! Delimitation-ஐ நாங்கள் தான் நிறுத்தினோம். National Education Policy-யை நாங்கள் தான் நிறுத்தினோம். PM-SHRI திட்டத்தில் 2500 கோடி இழந்தாலும் பரவாயில்லை, 10000 கோடி நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, "மாநில உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன்; மோடி ��வர்களே, நான் அதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்" என்று சொன்னவர் தூர சக்தியாம், ஓர சக்தியாம், கோர சக்தியாம், பார சக்தியாம், தூர்ந்துபோன சக்தியாம்!
Bro Vijay, bro... எங்கே bro போச்சு உங்களுடைய சக்தி? பிரதமர் முன்னாடி "முடியாது" என்று சொல்லிட்டு வாங்க bro. ஏன் bro, மாண்புமிகு முதலமைச்சர் bro, ஏன் பேசாமல் வந்தீர்கள்? ஏன் bro, பிரஸ்ஸைப் பார்ப்பதற்கு உங்களுக்குத் தைரியம் இல்லை? ஏன் bro, எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டு���்கு இவ்வளவு நேரம் வீரம்?
உங்களுக்கு எவ்வளவு பிரச்சனை இருக்கு! "பாசிசத்தையும் எதிர்க்கிறோம், பாயாசத்தையும் எதிர்க்கிறோம்" என்றீர்கள். ரைட், பாயாசத்தை முடித்துவிட்டீர்கள்; பாசிசம் என்ன ஆயிற்று bro? திருவள்ளுவருக்குக் காவி உடை, காவி கலர் போட்டிருக்கிறார் கவர்னர். உங்களிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம்" என்கிறீர்கள். எப்போது பேசுவீர்கள்? திருவள்ள���வர் எங்களுடைய இனத்தினுடைய, மொழியினுடைய, கலாச்சாரத்தினுடைய அடையாளம். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று emblem போட்டுக்கொண்டால் பத்தாது. திருவள்ளுவருக்கு இங்கே காவி சாயம் பூசும்போது, "நான் இப்போது பேச மாட்டேன்" என்று சொன்னால், எங்களுடைய மொழியையும் இனத்தையும் தாழ்த்துகிற ஒருவரைக் கேள்வி கேட்பதற்குத் த��ப்பு இல்லாத ஒரு சக்தி, எங்களைப் பார்த்துத் தீய சக்தி, தூர சக்தி என்று சொல்லுவீங்களா? நீங்கள் என்ன சக்தி? நார சக்தியா? கேட்க மாட்டோமா?
அப்புறம் நாங்கள் சாதி, மதம், பணத்தையெல்லாம் உடைத்துவிட்டோம் என்கிறீர்கள். நீங்கள் சாதி பார்த்து candidate-ஐப் போடவில்லையா? நீங்கள் மதமே பார்க்கவில்லையா? கையில் ஒரு மதம், நெற்றியில் ஒரு மதம்... பதவி ஏற்கும்போது "ஜோசப் விஜய் என்னும் நான்..." அது ஒரு மதம். என்ன bro, total contradiction bro! Bundle of contradictions! இந்த bundle of contradictions-ஐத் தாண்டி வந்துவிட்டீர்கள் அல்லவா? அதையெல்லாம் உள்ளே மறைத்துப் போட்டு வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதைவிடப் பெரிய கொடுமை, திருச்சி கிழக்கு தொகுதி வந்து, "என்னுடைய செல்லப் பிள்ளை..." ஐயோ ஜனங்களே ஜாக்கிரதையாக இருங்கள்! நான் இப்போது கேட்கிறேன், இதெல்லாம் ஒரு chief minister-இன் பிரச்சனையா? ஒரு chief minister-க்கு முன்னாடி என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன? த��ிழ்நாட்டுக்குத் தர வேண்டிய உரிமைகளை நீங்கள் வாங்கினீர்களா?
இன்றைக்குப் பக்கத்து மாநிலத்தினுடைய துணை முதலமைச்சர் D.K. Shivakumar பேசியிருக்கிறார்: "திமுக-வும் ஸ்டாலினும் இருக்கிற வரைக்கும் தான் எங்களுக்குப் பிரச்சனை, மேகதாது அணை கட்டுவதற்க��� இனிமேல் எங்களுக்குப் பிரச்சனை இல்லை" என்கிறார். இதைக் கேட்டதற்குப் பிறகு, காங்கிரஸ்கார்கள் இங்கே இருக்கிற இரண்டு அமைச்சர்கள் அதற்குத் தான் எதிர்வினை ஆற்றியிருக்கிறீர்களா? முதலமைச்சர் அவர்களே, உங்களைச் சொல்கிறார், நீங்கள் ஒரு ஆளே இல்லை என்கிறார் அவர்; "எங்களுக்குப் பிரச்சனையே இல்லை" என்கிறார். D.K. Shivakumar-க்கு உங்கள் பதில் என்ன?
அப்புறம் பச்சைத் துண்டைப் போட்டுக்கொண்டு சொன்னீர���களே, நான் விவசாயி மகனாகப் பிறக்காமல் இருப்பதற்கு வருத்தப்பட்டேன் என்று.. நான் விவசாய வீட்டுப் பிள்ளை, எட்டாவது பிள்ளை, நான் கடைசிப் பிள்ளை, எனக்கு ஏர் ஓட்டத் தெரியும், தண்ணீர் பாய்ச்சத் தெரியும், உழவு தெரியும், வண்டி மாடு ஓட்டியிருக்கிறேன், எல்லாம் பண்ணியிருக்கிறேன்" என்று. நீங்கள், "ஐயயோ, எனக்கு விவசாயப் பிள்ளையாகப் பிறக்காமல் போய்விட்டதே" என்றீர்களே, இன்றைக்குப் பார்த்தீர்க���ா டிவியில்? விவசாயிகள் போராடுகிறார்கள், "பிணமாக நடித்துக்கொண்டு போராடுகிறோம், இந்த ஆட்சியில் நாங்கள் பிணமாகிக் கொண்டிருக்கிறோம்" என்று.
இன்னொன்று கேட்கிறேன், "எங்களை ஆறு மாதம் கேள்வி கேட்காதீர்கள்" என்று சொன்னீர்களே, நீங்கள் ஆறு மாதம் அல்ல, ஆறு வருடம் கூடக் கேள்வி கேட்க வேண்டாம். உங்களுடைய தேர்தல் அறிக்கையில் உங்களுடைய நடத்தை, நாணயம் இருக்கிறதா? Reserve Bank guidelines இல்லாமல் நீங்கள் விவசாயக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய முடியாது. 2025 guidelines இருக்கும்போது, நீங்கள் 2026-இல் தானே தேர்தல் அறிக்கை தயாரிக்கிறீர்கள்? அந்த அறிக்கை தயாரிக்கும்போது இப்படி ஒரு சட்டம் இருப்பது என்பது தெரியாமல் கூட ஒரு அரசியல் கட்சி தேர்தல் அறிக்கை கொடுத்தால், உங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம்? "ரொம்ப கல்வியாளர்கள்" என்று பெயர் வச்சிடலாமா? "மெத்த படித்தவர்கள்", "பேரறிவாளர்கள்", "ஞானிகள்" என்று பெயர் வச்சிடலாமா? நீங்களே ஒரு வார்த்தையைச் சொல்லுங்களேன்! அப்போ நீங்களே ஒரு வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு, அதை முடிக்க முடியாமல் இப்போது புதுப்புது நிபந்தனைகள் வைக்கிறீர்கள் 200 யூனிட் மின்சாரத்திற்கு!
அப்புறம் கச்சத்தீவு... கச்சத்தீவு வந்து நீண்ட நாள் எங்களுடைய தமிழருடைய பிரச்சனை, மீனவருடைய பிரச்சனை. "அதைக் கேட்டிருக்கிறேன்" என்று சொல்லுங்கள், "கேட்போம்" என்று சொல்லுங்கள், "போராடு��ோம்" என்று சொல்லுங்கள், ஒத்துக்கொள்கிறோம். அதில் அரசியல் சட்டச் சிக்கலே இருக்கிறது. தமிழ்நாடு அரசாங்கத்தினுடைய, சட்டமன்றத்தினுடைய அனுமதி இல்லாமலேயே அன்றைக்குக் கச்சத்தீவை மத்திய அரசாங்கம் தாரை வார்த்தது. அதைத் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி, கலைஞர் தலைமையில் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு கண்டித்திருக்கிறது. எல்லாம் ஆவணங்களாக இருக்கின்றன. உடனே நீங்கள் செய்து கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஆனால் குறைந்தபட்ச ஒரு accountability வேண்டாமா? உங்க அமைச்சர்களுக்கு என்ன அமைச்சர்கள் அவர்கள்? கச்சத்தீவைப் பற்றிப் பேசினால் "No comments". திருவள்ளுவர் சிலைக்கு ஏன் காவி சாயம் அடிக்கிறார் கவர்னர் என்று கேட்டால், "அதை இப்போது பேச வேண்டாம்" என்கிறார்கள்.
பக்ரீத்துக்கு ஒரு judgment வந்திருக்கிறது, எங்கள் கட்சியின் சார்ப���ல் சரவணன், கழகத்தினுடைய துணைப் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி எல்லாம் அதைக் கண்டித்திருக்கிறார்கள். நீங்கள் என்ன பேசியிருக்கிறீர்கள்? "மாநில உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்று போனீர்களே, பிரதமரிடம் என்ன கேட்டு வந்தீர்கள்? "மதச்சார்பின்மையை விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்றீர்களே, இந்த judgment-இல் உங்களுடைய பதில் என்ன? உங்கள் comments என்ன? Appeal போகப் போகிறீர்களா, என்ன பண்ணப் போகிறீர்கள்? எதுவுமே இல்லையே!
இப்படி இந்த electricity bill, இன்றைக்கு electricity scarcity-க்கு திமுக ஆட்சி மேல் பழி போடுகிறீர்களே, ஏன்? கோடைகாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் back records இருக்கின்றன. ஏப்ரல் மாதத்திலிருந்து மே மாதத்தில் தமிழ்நாட்டில் எவ்வளவு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் என்பதற்கு ஜெயலலிதா ��ாலத்திலிருந்து, எங்களுடைய காலத்திலிருந்து, எடப்பாடி காலத்திலிருந்து back record, track record இருக்கிறது. வழக்கமாக ஒரு அரசாங்கம் என்ன பண்ணும் என்றால், எந்தப் பருவக்காலத்தில் எவ்வளவு தேவைப்படும் என்பதை முன்கூட்டி அறிந்து அதற்கான கூடுதல் மின்சாரத்தைப் பெற வேண்டும். கூடுதல் விலையாக இருந்தால் கூட அதையும் சேர்த்து அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று, "வேறு வழி இல்லை, நாங்கள் வாங்குகிறோம்" என்று சொ���்ல வேண்டும். அதைச் செய்வதற்குக் கூடத் துப்பு இல்லை உங்களுக்கு! கரண்ட் இப்போது போய்விட்டது என்றால் காரணம் ஸ்டாலின் என்கிறீர்கள், திமுக என்கிறீர்கள்.
Bro, Chief Minister, Honorable Vijay bro... really we are afraid, bro! எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை bro. தூக்கம் வரமாட்டேங்குது bro. ஒன்றுமே சரியில்லையே bro. தொலைநோக்குத் திட்டமும் ஒன்றும் கிடையாது, day-to-day administration-உம் ஒன்றும் கிடையாது. என்ன பண்றதுன்னு தெரியல bro. ஏதாவது ஒரு நல்ல முடிவு எடுங்கள் bro, இல்லைன்னா நல்லா இருக்காது bro.
எங்களுடைய தலைவர், எங்களுடைய திமுக, திராவிட முன்னேற்றக் கழகம் உங்களுடைய நியாயமான எல்லாச் செயல்களுக்கும் உடன்நிற்கத் தயாராக இருக்கிறது.
முதிர்ச்சி இல்லாமல், முன்னனுபவம் இல்லாமல் போவதில் தவறில்லை, ஆனால் முதிர்ச்சி இல்லாத, பக்கு��ம் இல்லாத, எதைப் பற்றியும் சிந்திக்காத ஒரு தாந்தோன்றித்தனமான அரசாங்கத்தைத் தந்துகொண்டிருக்கிற முதலமைச்சர் அவர்களே... உங்களைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாக்களித்த மக்களின் சார்பில், வாக்களிக்காத மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அப்புறம் சொல்கிறீர்கள், "ஒரே தலைவர், ஒரே நம்பிக்கை நான் தான்" என்று. உங்களுக்கு ஓட்டு போட்டது 35% தான். Parliamentary democracy, I admit. நாடாளுமன்ற தேர்தல் முற���யில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள். ஆனால் "தமிழ்நாட்டு மக்களுக்கு நான் தான் தலைவன்" என்று சொல்ல உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, எந்த அனுமதியும் இல்லை. ஏனென்றால், 65% பேர் உங்களை வேண்டாம் என்று ஓட்டு போட்டிருக்கிறார்கள். Electoral policy-படி அதுதான் சரி என்று நான் சொல்லவில்லை, அரசியல் சட்டப்படி அதுதான் சரி. ஆனால் மனதிலே வைத்துக்கொள்ளுங்கள், உங்களை வேண்டாம் என்று நிராகரித்தவர்கள் 65% பேர் இருக்கிறார்கள். அந்த 65%-த்தில் இன்னும் ஒரு 10, 15 சதவீதமாவது உங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு முயற்சி எடுங்கள். எங்களை, எங்கள் தலைவரை எப்போது பார்த்தாலும் குறை சொல்லி, அதிலே எள்ளலும் துள்ளலுமாகப் பேசி, நக்கல் நையாண்டி பேசி, உங்களுடைய முதலமைச்சர் என்ற நாற்காலிக்குரிய தகுதியைக் குறைத்துக்கொள்ளாதீர்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
திமுக ஜெயிச்சுடும் , கூட நிப்போம்ண்ணு இருந்துட்டு , திமுக ஜெயிக்கல்லிண்ணு தெரிஞ்ச அடுத்த நிமிடமே பல்டி அடிச்ச ஓடுகாலி காங்கிரஸ் , எனக்கு கம்மியாத் தான் குடுத்தாங்க , எனக்கு சூரியன்ல நிக்க சொன்னதால அமைச்சர் பதவி போச்சு , நல்லவேளை நாங்க சொந்த சின்னத்துல நிண்ணதால ஓடிப் போய் அமைச்சர் பதவி வாங்கிட்டோம் இப்படி வித விதமா புத்திய காட்டுனவங்க மத்தியில , தொகுதியே இல்லைண்ணாலும் பிரச்சாரமும் பண்ணிட்டு இன்னும் நொள்ளை சொல்லாம இருக்குறவன் பெரிய மனுஷன் தான் !
தேர்தலுக்கு முன்னாடியே 32 இடங்கள் உறுதியாகி !
பின்னர் பெரியவர் தடுத்ததால் கூட்டணியிலேயே தொடர்ந்து!
முடிவுக்கு பின்னர் -பார்த்திங்களா நாம போயிருந்த இந்நேரம் கட்சி பாதிக்கு பாதி ஜெயிச்சிருப்போம் -எல்லாம் உங்களால தான் என்று க���ிந்து!
பின்னர் வீட்டுக்கு வந்தபொழுது துள்ளி குதித்து!
இன்று கரை ஒதுங்கியிருக்கிறது!
துரோகம் இவன் ரத்தத்தில் கலந்தது!
போய் தொலைங்கடா , நாசகார பயலுகளா!
நீங்க யாரும் இல்லாமலும் திமுக வென்று இருக்கிறது -இனியும் வெல்லும்!
கொள்கை, நேர்மை, மக்கள் நலன் எதுவும் இல்லாமல், எந்த சூழ்நிலையிலும் தங்களுக்கு அரசியல் லாபம் கிடைத்தாலே போதும் என்ற சந்தர்ப்பவாத அணுகுமுறைய���டு செயல்பட்ட முதுகு குத்திகள் #CPIM, #VCK... இவர்களின் உண்மையான முகம் இன்று முழுமையாக அம்பலமாகி விட்டது.
திமுகவை விமர்சிப்பது அரசியல் உரிமைதான். ஆனால் திட்டமிட்ட அவதூறு, பொய்யான குற்றச்சாட்டு, அரசியல் பலிகடா ஆக்கும் முயற்சி ஆகியவற்றின் பின்னால் இருந்த @thirumaofficial @Shanmugamcpim எச்சி பொறுக்கி திண்ணும் சுயநல நோக்கம் இருந்தது என்று இன்று அனைவருக்கும் தெளிவாக விளக்கி இருக்கார் தோழர் தியாகு. 🔥
#DMK4Ever
தமிழ்நாடு முதல்வர்கள் டெல்லி சென்றால் ஒட்டுமொத்த நாட்டின் ஊடகமும் திரும்பி பார்க்கும்..அதுதான் அன்றைய பிரேக்கிங் நியூஸ்..
காரணம் ஜெயலலிதா ஒருமுறை டெல்லி சென்று வாஜ்பாய் ஆட்சியையே கலைத்துவிட்டார்.. கலைஞர் டெல்லி சென்று அதே வாஜ்பாய் ஆட்சியையும் பிறகு அடுத்த ஆண்டே மன்மோகன் சிங்க ஆட்சியையும் காப்பாற்றினார்..ஸ்டாலின் டெல்லி சென்று இந்தியா கூட்டணியை உருவாக்கினார்..ஆனால் இன்று...
பிரதமரை ஒருவர் சந்தித்த நேரம் வெறும் 8-10 நிமிடங்கள்.உள்துறை அமைச���சரை சந்திக்க நேரமே வழங்கப்படவில்லை. தங்கள்
திடீர் கூட்டணிக் கட்சி தலைவரான ராகுல்காந்தியையும் சந்திக்கவில்லை. வெறும் கையோடு திரும்புகிறார் ஒருவர்..
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட ஏற்பாடு செய்து தர வேண்டும்- இவிஎம் பிரதமரிடம்
இவிஎம் ஜோசப் விஜய் வேண்டுகோள்.
தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான்- மக்களின் முதல்���ர் ஸ்டாலின்.
உரிமை என்பது அடக்குபவனிடம்
கெஞ்சிப் பெறுவதல்ல.
உரிமை என்பது அடக்குபவனை
விஞ்சி நிற்பது.