எதைச் செய்தாவது ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள்.
எதையாவது செய்ய ஜெயித்தாக வேண்டுமென துடிப்பவர்கள் நாடு காக்கத் துணிகிறார்கள்.
முன்னது வெறி. பின்னது வீரம்.
நீங்கள் யார் பக்கம்?
தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் தூத்தூர் மீனவ கிராமத்திற்கு செல்லும் வழியில் அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டார்.
தலைவர் 2 1/2 கி.மீ நடந்தே அப்பகுதிக்குச் சென்று மீனவ சகோதரர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
#எதுவும்_தடையல்ல#சீரமைப்போம்_தமிழகத்தை
ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ’ஒரே பிரதமர்’.
எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு.
(1/2)
கூடிக் குறைவது, குறைந்து கூடுவது அன்றாட தங்க விலை. கூடிக்கொண்டு மட்டுமே போவது அத்தியாவசியமான கியாஸ் விலை.
விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசுக்குத் திட்டம் இருக்குமோ?
புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம்.
எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். #எதுவும்_தடையல்ல
இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு. #சீரமைப்போம்_தமிழகத்தை#எதுவும்_தடையல்ல
எழுச்சிக்கு முன்னுரை எழுதியாகிவிட்டது.நேற்று வைகை நகரில், @maiamofficial இன் கூட்டத்தில் கடலலைகள் பார்த்தீர்கள்.இன்று உசிலம்பட்டித் தெருக்களில், ஊழலுக்கு எதிரான திரட்சியைப் பார்க்கிறேன். இன்னும் இடையூறு செய்யுங்கள்...
தடைகளைத் தாண்டி எங்கள் மடைகள் பாயும்.
#சீரமைப்போம்_தமிழகத்தை