ஆகஸ்ட்-17 இன்று பிறந்தநாள் காணும் தமிழக அரசியலின் திசைவழி போக்கை தீர்மானிக்கும் பேராற்றல்மிக்க தலைவர் பெரும் நேசத்துக்கும் பிரியத்துக்கும் உரிய அன்பு அண்ணன் @thirumaofficial அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்… தமிழ்தேசிய மாநாடு வெல்லட்டும்.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாகச் சட்டமன்றத் தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம், அனைத்திந்திய அளவிலான #JointActionCommittee எனத் தமிழ்நாடு பற்ற வைத்த #FairDelimitation கோரிக்கை இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களைச் சந்தித்து நமது கோரிக்கையை வலியுறுத்த உள்ளார்கள்!
7.8.2026 ஆகத்து 17 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளுந்தூர்பேட்டையில் நடைபெறவிருக்கும் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு குறித்து கடலூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#வெல்வோம்_ஒன்றாக!
@OfficeOfOPS
இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்,
🌾 நாமக்கல் - சேந்தமங்கலம், நீலகிரி - பந்தலூர், திருவண்ணாமலை - கீழ்ப்பெண்ணாத்தூர் ஆகிய இடங்களில் வட்டச் செயல்முறைக் கிடங்குகளைத் திறந்து வைத்து, பல்வேறு மாவட்டங்களில் அமையவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 புதிய நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் -
💵 ஓய்வு பெற்று நலிந்த நிலையிலுள்ள பத்திரிகையாளர்களுக்கு மாதம் 12 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்குதல் மற்றும்
📜வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறையில் நில அளவர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கு TNPSC மூலம் தேர்வானவர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்குதல்.
"தி.குன்றம் கோயிலுக்கு ஆய்வு செய்ய தான் மட்டும் போகிறேன் யாரும் வரக்கூடாது என்று சொல்லிவிட்டு தீர்ப்பில் open call கொடுத்தேன் யாரும் வரவில்லை என்று அப்பட்டமான பொய்யை தீர்ப்பில் கூறியிருக்கிறார் GR.சுவாமிநாதன்"
-மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.
திச-11 | பிறந்தநாள் வாழ்த்து 🥳🥳
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மணிவிழா காணும் சட்டமன்ற நாயகர் அண்ணன் சிந்தனையார் @sinthanaivck அவர்களுக்கு எமது உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
#thiruma_army 🩵♥️
எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?
டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!
#என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி