போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கனும்ப்பா அதுக்கு என்னென்ன பண்ணணுமோ நீ தைரியமா முடிவெடுனு முதலமைச்சர் விஜய் சொல்லுவாரு... அமைச்சர் விக்னேஷ் பேச்சு
#Coimbatore | #CMVijay | #Minister | #Vignesh | #PolimerNews
“இப்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் பேரிடர்க் காலத்தில்…” என்று திருவாய் மலர்ந்திருக்கும் திரு.உதயநிதி அவர்களே,
எது பேரிடர்க் காலம் என்று பார்ப்போமா?
தமிழகத்திற்கான பேரிடர்க் காலம்:
*அண்ணா உருவாக்கிய கட்சியை அவரது குடும்பத்தைக்கூட ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஐம்பெரும் தலைவர்கள் வரிசையில்கூட இடம் பெற்றிராத ஒரு குடும்பம் மட்டுமே கைப்பற்றியதே, அதுதான் தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட பேரிடர்க் காலம்.
*அண்ணாவிற்குப் பிறகு கலைஞரை முதல்வராகவும் தலைவராகவும் ஆக்கப் பேருதவியாக இருந்த எம்.ஜி.ஆரை நன்றி விசுவாசமின்றித் தூக்கி வீசிய ஒரு குடும்பத்தால் உருவானதுதான் தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட பேரிடர்க் காலம்.
*திருட்டு மாடல் திமுகவின் ஆட்சிக் காலம் முழுவதும் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஏற்பட்டதுதான் பேரிடர்க் காலம்.
தீயசக்தி திமுகவிற்கான பேரிடர்க் காலம்:
*ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொள்ளை அடித்த தீயசக்தி திமுகவிற்கு, அரசியலில் கொள்ளை அடிக்க இயலாத நிலையை உண்டாக்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் வருகைதான் திமுகவிற்கான அரசியல் பேரிடர்க் காலம்.
*லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்கி வரும் எங்கள் வெற்றித் தலைவர் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சிதான் தீயசக்தி திமுகவிற்கான அரசியல் பேரிடர்க் காலம்.
*அடித்த கொள்ளையால் அகப்பட்டு, தலைமறைவாகவும் வெளிநாட்டு மருத்துவமனைகளிலும் பதுங்கித் திரியும் திமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கும்தான் இது அரசியல் பேரிடர்க் காலம்.
*திமுக முன்னாள் அமைச்சர்கள் சிக்கினால், முக்கியக் குடும்பமும் சிக்கி, திக்கித் திணறுமோ என்பதுதான் தீயசக்தி திமுகவிற்கான அரசியல் பேரிடர்க் காலம்.
இப்படி தீயசக்தி திமுகவால் தமிழக அரசியலுக்கும் தமிழக மக்களுக்கும் பேரிடர்க் காலம் ஏற்பட்டதும் உண்மை. ஆட்சியில் இருந்தபோது அடித்த கொள்ளைகளால் திமுகவிற்கும் இப்போது பேரிடர்க் காலம் ஏற்பட்டு இருக்கிறது என்பதும் உண்மை.
ஆனால், எங்கள் வெற்றித் தலைவர் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சியின் காரணமாக, தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது. அந்த வகையில், தீதும் சூதும் நிறைந்த திமுகவிடம் இருந்து தப்பிய தமிழக மக்களுக்கு இது அழகிய தென்றல் காலம். அகமகிழும் பேரின்பக் காலம். ஆனால், தீயசக்தி திமுகவிற்கு இது பேரிடர்க் காலம்தான். அதில் சந்தேகமே இல்லை. எப்படியோ இப்படி உளறியாவது உண்மையை ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்.
முதல்வர் விஜய் அவர்களின் அதிரடி உத்தரவால் தரம் உயர்த்தப்பட்டு, சென்னை தலைநகரில் தினமும் 1.05 லட்சம் மக்களின் பசியாற்றி வருகிறது அம்மா உணவகங்கள்! தரமான உணவு, சிறந்த கட்டமைப்பு என மக்கள் மத்தியில் மீண்டும் பேராதரவு!
#AmmaUnavagam#CMVijay@CMOTamilnadu
21 ஆண்டுகளாக நீடித்து வந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சோளங்குருணி கிராம கோயிலுக்குச் செல்லும் பாதை பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி, அனைவரும் எந்தத் தடையும் இன்றி கோயிலுக்குச் செல்லும் வகையில் பாதை மீட்கப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து, அன்புடன் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்த சோளங்குருணி கிராம மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நலனும், அடிப்படை தேவைகளும் நிறைவேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் தலைமையில் தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றுவோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ
பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.
சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம்
வாய் இருக்கிறது என்பதற்காக வரம்பு மீறிப் பேசுவதில், fake narrative திமுகவை யாராலும் அடித்துக்கொள்ளவே முடியாது. அந்த வேலையை அச்சு பிறழாமல் செய்தால், திமுகவை மக்கள் நம்பிவிடுவர் என்ற நப்பாசையில் அவதூறு கழகத் தலைவராக மாறி, வெறும் வாயில் அவதூறுகளை மென்றுகொண்டே ஓர் அறிக்கை விட்டிருக்கிறார் ஸ்டாலின் சார்.
பொறுப்பானப் பதவியில் இருந்ததோடு, தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் பொறுப்பை உணராமல் பேசியது குறித்து உயர்நீதிமன்றம் என்ன கூறியது என திமுக மற்றும் ஸ்டாலின் சாரின் செவிகளில் ஏறாமல் போனது ஏனோ? அனிதா ராதாகிருஷ்ணனா அல்லது அவதூறு கோதாகிருஷ்ணனா என்பது போன்று பேசியதை ஸ்டாலின் சார் வேண்டுமானால் மெச்சிக் கொள்ளலாம். ஏனெனில், திமுக அவதூறு கழகமாக மாறி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இந்நிலையில், fake narrative அறிக்கை விட்டு, புனித பிம்பம் கட்டும் build up அரசியலை ஸ்டாலின் சார் செய்ய முற்பட்டுத் தோற்றிருக்கிறார்.
எந்தத் தவறும் செய்யாத பத்திரிகையாளர்கள் முதற்கொண்டு எத்தனையோ பேர் மீது அடக்குமுறையை ஏவிக் கைது செய்து சிறையில் அடைத்த ஸ்டாலின் சார், இப்போது ஜனநாயகக் காவலர் வேஷம் போடுகிறார். கைது மாடல் அரசாகவே மாறி இருந்த கரப்ஷன் கபடதாரிகளான திமுகவினர், சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அரசு மீது கல்லெறிவது கயமைத்தனமன்றி வேறென்ன? மக்கள் தீர்ப்பை மதிக்காமல், ஆட்சி அதிகாரம் இழந்த ஆத்திரத்தில், மனசாட்சி உள்ள மக்களாட்சியான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கத் தன் கொத்தடிமைக் கூட்டத்து முன்னாள் அமைச்சரைத் தூண்டிவிட்ட ஸ்டாலின் சார், இரண்டு நாள்களாக எங்கிருந்தார் என்று தெரியவில்லை. இப்போது வந்து, வீட்டுக்குள் இருந்து, வெற்று அறிக்கை வெளியிடுகிறார். உப்பைத் தின்றால் சப்பாத்தியா சாப்பிட முடியும்?. தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும்.
குதிரை பேரம், ஒட்டக பேரம் முதல் அனைத்து அரசியல் மிருக பேரங்களையும் நடத்தத் தொடங்கி உள்ள திமுக, மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்பதால் இப்போது ஜனநாயக வேஷம் போட்டு, அவதூறு கச்சேரியை ஆரம்பித்துள்ளது. திருட்டு மாடல் திமுக ஆட்சியின் ஒவ்வோர் ஊழலாக வெளிவந்துவிடுமே என்ற பயத்தில் உத்தமர் வேடம் போட்டு, மக்களை மீண்டும் ஏமாற்றும் வேலையில் ஸ்டாலின் சார் ஈடுபட்டால், இதை மறந்துவிட வேண்டாம்,
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
@mkstalin அங்கில் நீங்கள் வீட்டில் இப்படி பதிவு போட்டு ஓய்வு எடுங்கள். இதெல்லாம் ஓட்டப்பந்தயத்தில் எங்கள் உதய் அண்ணா பாத்துபாரு. அநாகரிகமான அரசியல்கு உதாரணம் திருட்டு முக தான் (திமுக). இதெல்லாம் நீங்கள் பேசலாமா சாரே
@Udhaystalin@ARROffice பொய் வழக்கா 😂😂அட எதிர் கட்சி தலைவரே வீடியோ ஆதாரம் எல்லாம் இருக்கு மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் நீங்கள் பன்றத . இதே உங்கள் ஆட்சில யாராவது இப்படி பேசி இருந்தால் சும்மா விட்டு இருப்பிங்களா ஓடு காலி அரசே. உங்கள் ஆட்சில இதெல்லாம் சகஜம் பா.
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
புரட்சித்தலைவி #அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய
என் பொதுவாழ்வுப் பயணம்…
35 ஆண்டுகளாக,
நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும்,
அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு…
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,
#நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக,
மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக,
தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று,
வளமான தமிழகத்தின்
எதிர்கால அரசியலுக்குப்
புதிய திசையை உருவாக்கி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையை ஏற்று,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும்,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேராதரவோடும்,
நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.
நேற்று போலவே…
இன்று இன்னும் உறுதியாக…
நாளை இன்னும் வலிமையாக…
மண்ணுக்கான..மக்களுக்கான
என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! 🙏🏻
#CVB #TVK
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் #CPIM சார்பில் நானும் #CPI மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மத்திய குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், #CPI தேசிய நிர்வாக குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில துணைச் செயலாளர்கள் என்.பெரியசாமி, ரவி, தேசியக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்து மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
@CMOTamilnadu
ஒரு பெண்ணை கணவன் மரியாதையின்றி, அங்கீகாரமின்றி அடிமை போல நடத்தினால், அந்த உறவை விட்டு வெளியேறுவதையே பெரியார் பெண் விடுதலை என்றார்.
ஆனால், பெரியாரின் பெயரை தினமும் உச்சரிக்கும் திமுகவினரின் கணக்கில், மரியாதையின்றி நடத்தப்படும் கூட்டணி கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறினால் அது மட்டும் "துரோகம்"!
DMK Alliance = Toxic Relationship.✨