ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்தக் காணொளியே சான்று!
நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்!
#VoteForDMK
டேய் சங்கீஸ்😂
இருக்குற எல்லா ஊரையும் விட்டுட்டு மதுரைல போய் மதக்கலவரம் பண்ணலாம்னு உங்களுக்கு எவன்டா ஐடியா கொடுத்தான்?
Full video https://t.co/h6Y08FGDj5
கல்வியில் சிறந்த தமிழ் நாடு நிகழ்ச்சியை விஜய் டிவி அல்லது சன் டிவியில் முழுமையாக ஒளிபரப்ப வேண்டும்… மாணவ மாணவிகளின் பேச்சை அனைத்துக் கல்லூரிகளிலும் சிறு சிறு பகுதிகளாக ஒளிபரப்ப வேண்டும்… அது மேலும் பலரை கல்வி கற்க தூண்டும்.
இங்க உன்ன பத்து பேரு தினமும் டேய் லூசுக்கூதி ன்னு கூப்டலாம் ஆனா நீ என்னதான் லூசுக்கூதியாவே இருந்தாலும் அதுக்காக உன் certificate la உன் பேர் லூசுக்கூதின்னு ஆகாதுல அதுக்கு official ah சட்டப்படி மாத்தணும்டா அதைத்தான் அண்ணா பண்ணாருடா லூசுக்கூதி
எவன் வந்தாலும் மாறப்போறதில்லை, யார் வந்தாலும் நாம உழைச்சாதான் சோறு, எல்லாரும் கொள்ளைதான் அடிக்காங்க, இப்படிதான் இன்னும் அரசியல் புரிதல் இல்லாம பொதுப்புத்தில பேசிட்டு இருக்காங்க.
மத்த மாநிலங்கள்ல EWS இருக்கே, ஏன் தமிழ்நாட்டுல இல்லை?! மும்மொழி கட்டாயம்னு ஹிந்தி திணிப்பை இங்க ஏன் திணிக்க முடியல?! மற்ற மாநிலங்களை விட GDP அதிகமா இருக்குறது எப்பிடி?! மாணவர்களோட கற்றல், தேர்ச்சி விகிதாச்சாரம் என்ன?!
இதெல்லாம் எடுத்து ஒப்பிட்டு பாக்கணும், எல்லார் ஆட்சிலயும் இது ஒரே மாதிரி இல்லை. போன ஆட்சியில அதிமுக பண்ண நீட் தவறை சரி பண்ணத்தான் அவ்ளோ போராட்டம் போராட வேண்டியிருக்கு.
ஈஸியா சொல்லிறாங்க.
From Muthukumar Sankaran Tuticorin Facebook Post.
Url at the end
வண்டலூரில் இறங்கி பேருந்து மாற வேண்டியவன் அவ்வாறு செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று இந்தப் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வர என்ன காரணம்? காலையில் கிளாம்பாக்கத்திலிருந்து மாநகரப் பேருந்தில் மதுரவாயல் சென்ற போது ஒரு சம்பவம் நடந்தது.
தன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பயணி ஏதோ சுகவீனமுற்றிருக்கிறார் என்று இளம் பெண் ஒருவர் உரக்கக் குரல் எழுப்ப, அதற்குள் அவர் அருகில் அமர்ந்திருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் பயணி, அப்படியே முன்னால் சரிந்து விழ,அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. மோதிய வேகத்தில் அவர் வாயில் அடிபட்டு இரத்தம் கொட்டியது.
"பஸ்ஸை நிறுத்துங்க" என்று சிலர் கத்த, "இரும்பு ஏதாவது இருந்தால் கொடுங்க" என்று யாரோ சொல்ல "இரும்புச் சாவியெல்லாம் கொடுக்காதீங்க" என்று சத்தமிட்டுக் கொண்டே இளைய பெண் ஒருவர் முன்னால் வந்து நோயாளியைப் பரிசோதிக்க ஆரம்பித்தார்.
மடங்கிக் கிடக்கும் அவரைத் தூக்கிப் படுக்க வைக்க உதவுமாறு சக பயணிகள் உதவியைக் கோரினார். நோயாளி பருமனானவராக இருந்ததால் நான்கு பேர் சேர்ந்து அவரைத் தூக்கி இருக்கையில் அமர வைத்தோம். அந்தப் பெண் "பஸ் ஜன்னலைத் திறந்து காற்று வர வையுங்கள்" என்று எங்களிடம் சொன்னதுடன் . "பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டிச் செல்லுங்கள்" என்று ஓட்டுனருக்கும், "போரூர் டோல்கேட் 108 ஆம்புலன்சை அலர்ட் பண்ணுங்க " என்று நடத்துனருக்கும் அறிவுறுத்தினார்.
இதற்குள் அந்தப் பெண்ணுக்கு உதவ மற்றோர் இளைஞர் வந்து விட்டார். அவரும் மருத்துவராக இருக்கலாம். வந்தவுடன் முதலுதவியைத் தொடங்கினார். நோயாளியைத் தன் உடலோடு சாய்த்துக் கொண்டு முதுகில் ஓங்கித் தட்ட ஆரம்பித்தார்.
சுகவீனமுற்ற பயணியின் சொருகிய கண்கள் இயல்புக்குத் திரும்புகையில் அந்தப் பெண் அவரிடம் விடாமல் உரத்த குரலில் பேசிக் கொண்டே அவருடைய கன்னத்தைத் தட்டித் தட்டி நினைவுக்குக் கொண்டு வந்தார். "நான் பேசுறது புரியுதா?" "நீங்க எங்கே இருக்கீங்கன்னு தெரியுதா?" இது மாதிரி கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தார்.
இதற்குள் டோல் கேட் நெருங்கி விட, நடத்துனர் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் அலைபேசியில் பேசிக் கொண்டே பேருந்தை விட்டு இறங்கி முன்னால் ஓடித் தடுப்புகளை அகற்ற வைக்கிறார்.
ஆம்புலன்ஸ் உதவியாளர் ஓடிவந்து பயணியின் நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறார். பேருந்து நடத்துனர் பயணியின் மொபைல் ஃபோனைக் கேட்டுப் பெற்று, பயணி கடைசியாக பேசிய எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் சொல்கிறார். மறுமுனையில் இருந்து பேசியவர் தன்னிடம் இவர் முன்பு பணி புரிந்து பின்னர் விலகியதாகவும் மீண்டும் வேலை கேட்டு வருவதாகச் சற்று முன் ஃபோன் செய்திருந்ததாகவும் சொல்கிறார். எனினும் தான் கோயம்பேடு வந்து அவரை அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார். அதற்குள் ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் தொடர்பு கொண்டவரிடம் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து விடுங்கள் என்று சொல்லி விட்டுப் பயணியை ஆம்புலன்சுக்கு அழைத்துச் சென்றார்கள்.
"வழக்கமான மாத்திரைகளைச் சாப்பிடாமல் இருந்திருப்பீர்கள். வேறொன்றும் இருக்காது. உங்கள் பல் உடைந்து உதடு கடிபட்டதால் வந்த இரத்தமாகத் தான் இருக்கும். பயப்படாதீர்கள்" என்று அந்தப் பெண் தைரியம் சொல்லி வழிஅனுப்பினார்.
என்னை பூமர் என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள். அந்த நிமிடம் என் கண்கள் கலங்கின. அழுகையைத் தடுக்க முடியவில்லை. என் சக மனிதர்கள் ஒவ்வொருவரைக் குறித்தும் பெருமிதமாக உணர்ந்தேன்.
எவ்வளவு சிறப்பான, மனிதநேயம் நிறைந்த கட்டமைப்பு கொண்டது என் மாநிலம் என்று பெருமிதமாக இருந்தது. மாநகரப் பேருந்தொன்றில் இரு மருத்துவர்கள் பயணம் செய்து கொண்டிருப்பதை வேறு எந்த மாநிலத்திலும் நினைத்துப் பார்க்க முடியுமாவெனத் தெரியவில்லை. அந்தப் பேருந்து நடத்துனர் முகத்தையும் அவர் பதட்டத்துடன் இறங்கி ஓடி வழியேற்படுத்தியதையும் நான் மறக்கவே மாட்டேன்.
மதியம் திரும்பி வரும்போது தான் கிளாம்பாக்கம் வந்து இந்தப் புகைப்படத்தை எடுத்துக் கொண்டேன்.
- முத்துக்குமார் சங்கரன்
https://t.co/dW2ZYPbMXl
அழகாக தமிழ் பேசும் ஜார்கண்ட் பழங்குடியின குழந்தைகள்!
சில செய்தி சேகரிப்பு தருணங்கள் வாழ்வில் மறக்க முடியாததாக இருக்கும். அப்படி ஒன்று தான் இது
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்து நக்சல் பாதிப்பு அதிகம் இருக்கும் கிராமங்களில் ஒன்றான பிர்பாங்கி என்ற கிராமத்திற்கு சென்றோம்.
இந்த கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர் பிழைப்பிற்காக தென் மாநிலம் குறிப்பாக தமிழ்நாடு கேரளா மாநிலங்களுக்கு செல்கிறார்கள் சிலர் தங்கள் குடும்பத்துடனே வந்து சென்று விடுகின்றனர் குழந்தைகளை தமிழ் பள்ளிக்கூடங்களில் சேர்த்து படிக்கவும் வைக்கின்றனர்.
அப்படி தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார் புர்மெனி முண்டா என்னும் இந்த சிறுமி.
இங்கிட்டு அங்குட்டு என இந்தச் சிறுமி பேசிய தமிழ் ஆச்சரிய பட வைத்தது.
வெளி மாநிலத்திலிருந்து வந்திருக்கீங்க உங்களுக்கு தமிழ் மொழி தெரியாது எப்படி கத்துக்கிட்டீங்க என கேட்டபோது எல்லாருமே சொல்லிக் கொடுத்தாங்க அங்க எல்லாருமே என் கூட பிரெண்ட்ஸ் ஆயிட்டாங்க என அந்த சிறுமி சொல்ல சொல்ல எனக்கு நெஞ்செல்லாம் பூரித்து போனது.
ஏதோ ஒரு தெரியாத ஊர் தெரியாத மொழி பேசும் ஏதோ ஒரு இனத்தின் குழந்தையை நம் மக்கள் தன் இன குழந்தையாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் நம்ம ஊர் குழந்தைகளுக்கு எவ்வளவு பக்குவமான மனம் இருந்தால் இந்த சிறுமிக்கு எந்த ஒரு கசப்பான காயத்தையும் கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள்.
நம் மண் ஒரு குடும்பத்திற்கு கல்வி என்னும் பேரொளியை பாய்ச்சி உள்ளது. விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ள சிறுமி மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார் காலையில் சென்றால் மதியம் உணவுக்கு வந்துவிட்டு பிறகு மீண்டும் மாடு மேய்க்க சென்று மாலை 4 மணிக்கு வீடு திரும்பி விடுகிறார். ஆனால் அவர் நினைப்பு எல்லாம் பள்ளிக்கூடத்தில் தான் இருக்கிறது எப்போது மீண்டும் அங்கு போவோம் என்று இருக்கிறது என்பதை தான் மீண்டும் மீண்டும் சொல்கிறார்.
படிடா கண்ணு நல்லா படிச்சு முன்னேறி வாடா கண்ணு என சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.
நம் மண் வந்தாரை எல்லாம் வாரி அணைத்து வாழ்விக்கும் மண், அதனால் தான் அது வாழ்கிறது,வாழும், வாழ்வாங்கு வாழும்!!!
ஒரு தமிழனாக மிகப்பெருமையாக உணர்ந்த தருணம்!!!