No queue.
No Sub-Registrar’s Office visit.
No lost working day.
We submitted our Memorandum of Deposit of Title Deeds i.e Collateral security for bank loan online on 26 August and received the digitally signed document the next day.
Five Stars to the Government of Tamil Nadu for making Ease of Doing Business a reality—especially for industries & MSMEs.
@Guidance_TN@TNDIPRNEWS
#EaseOfDoingBusiness #MSME #DigitalTamilNadu
"Canceling the Parandur airport project, which is linked to the Adani Group, is a massive decision. Touching Adani is like touching Modi.
Chief Minister Vijay showed his guts by making this call. 🔥
For four years, police strictly controlled the Parandur area and kept outsiders out. Stalin's rule was an autocratic regime that literally trampled democratic rights under foot.
Why did DMK MLAs walk out after the announcement? What do they lose if the Parandur project is cancelled?
It was common knowledge that people close to the DMK had bought up thousands of acres around the project site."
- Senior Journalist Mani
மறக்கவே முடியாத நாள் இன்று!
3 ஆண்டுகளுக்கு முன்பாக பரந்தூர் சென்று ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்களின் குமுறல்களை ஆவணப்படுத்தி “பரந்தூர் Files" என்ற பெயரில் வெளியிட்டோம்.
யார் நினைத்தாலும் இந்த திட்டத்தை தடுக்க முடியாது என்று சில அரசு அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள். சென்று வேறு வேலை இருந்தால் பாருங்கள் என்றும் அலட்சியப்படுத்தினர். மத்திய அரசு தரப்பில் இருந்த பிரதிநிதிகளிடம் கூட நான் தயாரித்த ஆவணங்களை காட்டி, இந்த திட்டம் ஏன் வரக்கூடாது என்பதை பற்றி விளக்கி இருந்தேன். ஆனால் பதில் வரவில்லை. மாறாக எனக்கு தான் பாடம் எடுத்து அனுப்பினார்கள்.
சென்னைக்கு இன்னொரு விமானநிலையம் வரக்கூடாது என்பது நோக்கம் அல்ல. கம்பன் கால்வாய் என்பது புறநகர் சென்னை பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளின் மூல ஆதாரமாக விளங்குகிறது. அதை முழுமையாக அகற்றிவிட்டு செய்யப்படும் இந்த திட்டம் என்பது சென்னைக்கும் சேர்த்தே ஆபத்தை ஏற்படுத்தும். பறவைகளின் வழித்தடமாக இருக்கும் ஒரு ஊர் தான் பரந்தூர். இயற்கை தாய்யின் மடியில் கைவைத்துவிட்டு, ஒரு திட்டம் வந்தால், அது எப்படி பார்த்தாலும் சரியாக இருக்காது என்பதே உண்மை.
https://t.co/llZxbOsxj7
இந்த தருணத்தில் கிட்டத்தட்ட 1000 நாட்களாக அறவழியில் போராடிய ஏகனாபுரம் மக்களுக்கும் இந்திய ஜனநாயகத்தின் மீது அவர்கள் வைத்த நம்பிக்கைக்கும் முதல் நன்றி.
தேர்தல் நேரத்தில் சொன்னதை மறந்துபோகும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் சொன்னதை போலவே பரந்தூர் திட்டத்தை கைவிட்ட முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கு நன்றி.
#பரந்தூர் #Vijay #TVK
2 positive aspects of TVK govt.
1 - corruption has come down
2- we don’t feel threatened to express our views even if it is against the govt.
Amidst all other criticisms, we do have to accept the truth as it stares at us.
1972-ல் பிரதமர் இந்திரா பேச்சைக்கேட்டு வழக்கை வாபஸ் வாங்கியவர், 1974-ல் ஒப்பந்தத்தை ரிவ்யூ செய்து புது ஒப்பந்தம் போடாமல் தவிர்த்து 3 அணைகள் கட்டும்வரை வேடிக்கை பார்த்த அவருதான் @CMOTamilnadu sir...
மனசுல இருக்குறதை சொல்லிடுவோம்!!
இந்த @TVKVijayHQ ஆட்சி வந்த பிறகு நிஜமாகவே பல மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன...
1. Traffic jam இல்லாத CM convoy..
2. அரசியல்வாதி என்றால் வெள்ளை வேட்டி சட்டை தான் போடணும் என்பதை மாற்றும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் dress code..
3.. சுறுசுறுப்பான அமைச்சர்கள்..
@CTR_Nirmalkumar@RameshOffcl@arunraajkg@Keerthana4VNR
மற்றும் பலர்..
4. தமிழ்த்தாய் வாழ்த்தை விட்டுத் தராமல்,
அதே நேரம் பெரிய டிராமா எதுவும் செய்யாமல் சரியான handling!!
5. Party fund முறை ஒழிக்கப்பட்டது...
6. வள்ளலார் சர்வதேச மையத்தை அறநிலையத்துறை cancel செய்தது..
7. Dvac மூலமாக, பல fir களை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது...
8. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிபிஐக்கு எதிரான மேல் முறையீட்டை வாபஸ் பெற்றது..
9. தினம் ஒரு இடத்திற்கு விசிட் செய்து விஷயங்களை தெரிந்து கொள்வதில் முதல்வர் காட்டும் ஆர்வம்!!
10. தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் பேரை வைத்தது..
11. காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்டியது...
12. பல இடங்களில் இருந்து ஆதாரபூர்வமாக வந்த செய்திகளின்படி, லஞ்சம் நீக்கப்பட்டிருப்பது..
13. மக்களின் வெறுப்புக்கு ஆளாகாதபடி இது வரை ஆட்சியை நடத்திச் செல்வது!!
14. Tasmac தனியார் வசம் ஒப்படைக்கப்போவதாக ஒரு செய்தி உலா வருகிறது!!
உண்மையாக இருந்தால் மிகச் சிறப்பான முன்னெடுப்பு!!
15. El nino இயற்கை சூழல் பற்றி அறிய, ஒரு சரியான குழுவை அமைத்திருப்பது...
16. பட்ஜெட் வருகிறது!!
அதுவும் நன்றாக அமையும் என்று எதிர்பார்க்க வாய்ப்பு அதிகம்!!
இன்னும் எழுதலாம்!!
நடக்க நடக்க!!
இதே போல ஆட்சி தொடர்ந்து நடந்தால் இந்த ஆட்சியை யாரும் அசைக்க முடியாது...
குறைகள் ஆங்காங்கே இருக்கலாம்..
இரண்டு மாதங்களில் இந்த வளர்ச்சியே மிக அதிகம்!!
மேலும் மேலும் தமிழகம் முன்னேற திட்டங்களும் சட்டங்களும் வரட்டும்!!
இந்தப் பதிவை படிப்பவர்கள் சிலர் என்னைக் கடியலாம்!!
பரவாயில்லை...ஓரளவு நடுநிலையுடன் எழுதியிருக்கும் திருப்தி எனக்குப் போதும்!!
🙏🙏🙏
மலைகள், ஆறுகள், கல் குன்றுகள் இவைதான் நம் கனிம வளங்கள்.
இவற்றிலிருந்துதான் மணல், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் உருவாகின்றன.
இதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளும்,
கேரளா போன்ற மாநிலங்களும் பின்பற்றுவதைப் போல,
தமிழகத்தின் கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் முறைகளுக்குத் தடை விதித்து அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் உண்மையில் பாராட்டுக்குரியவை.
"சொந்த வீடு
அற்றவனுக்கு சொந்த ஊர்
என்று எதுவும் இல்லை"
என்பார் என் தந்தை.
சொந்த வீட்டுக் கனவுகளோடு இருக்கும் உள்ளூர் மக்களுக்கு, அவர்தம் வீடு கட்டும் பணிகளுக்குக் கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதில் எந்தச் சிரமமும் இனி இருக்காது என்று நம்புகிறேன்.
மகிழ்ச்சி.வாழ்த்துகள்.
#TamilNadu #TNGovernment #MineralResources #EnvironmentProtection #Construction
@TVKVijayHQ
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
மக்கள் முடிவை தவறென்று சொல்ல நீங்கள் யார்?
தி.மு.க - அ.தி.மு.க புடிக்காததால் தான் மக்கள் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள்.. விஜய் நல்லது செய்வார் என நம்புவோம். - சிவக்குமார் ❤️
பக்கத்துல கடப்பா முகம்😂
உண்மை என்ன தெரியுமா கார்த்தி ? டெப்பாசிட் திரும்ப வாங்குற அளவுக்கு கூட தமிழக மக்கள் உங்களை நம்புவதில்லை .
விவாதற்திக்கு வர்றேன் - தலைப்பு " ஏன் நாம் தமிழர் தமிழகம் முழுதும் டெபாசிட் இழந்தது ? " - இந்த தலைப்பில் இருந்து ஆரம்பிக்கலாம் !
விஜய் ஈழ மக்களை வைத்து வியாபாரம் செய்வதில்லை - அதனால் உங்களுக்கு அவரை பற்றி ஒரு நொடி பேச கூட அருகதை இல்லை !
உங்களால் ஈழ மக்களுக்கு ஒரு பயனும் இல்லை கார்த்தி .
புலம் பெயர் தமிழர்களின் உணர்ச்சியை தூண்டி , வசூல் செய்வதை நிறுத்தி விட்டு - முடிந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ங்க .
ஆன்லைன் காட்டுற வீரத்த , மக்களிடம் காட்டி , அடுத்த முறையாவது டெபாசிட் வாங்குங்க !
அடுத்த எம் ஜி ஆர் விஜயை ஆளுநர் உடனடியாக அழைத்து பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்..நடிகர் தம்பிராமையா வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்..
#TVK | #TVKVijay | #ThambiRamaiah | #PolimerNews | #Governor
சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் திரு @actorvijay , @TVKVijayHQ அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன்..
உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான்... எந்த கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்த பிடியில் இருந்து விலக்கி என்னையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி.. 🙏 🙏 🙏
அதுவே எங்கள் நோக்கமுமாக இருந்தது என்பதே உண்மை.
மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித்தரும் என நம்புகிறேன்.. தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்.