நாம் தமிழர் கட்சி - விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதி வல்லம் ஒன்றியம் தளவாளப்பட்டு கிராம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த களப்போராளி அன்புத்தம்பி க.இராம்குமார் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்
நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி க.இராம்குமார் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,
உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி க.இராம்குமார் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!
ஆதித்தமிழ்க் குடியில் மிகவும் எளிய பின்புலத்தில் பிறந்து சாதிய அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகி ஆழ்தளத்திற்குத் தள்ளப்பட்டபோதும் தனது ஒப்பற்ற செயல்திறனால் தலைவனாக வளர்ந்து உயர்ந்து சாதி பேதமற்ற சமூக விடுதலைக்காகவும், தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்காகவும் அயராது களத்தில் நிற்கிற தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அன்பிற்குரிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளை உரித்தாக்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
அண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும்! தமிழ்ச்சமூகம் விடுதலையை எட்டட்டும்!
இன்று (17-08-2026) அண்ணன் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் தமிழ்த்தேசிய மாநாடு வெல்லட்டும்..!
@thirumaofficial
கர்நாடக வனத்துறையால் 3 அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயல்! மானின் உயிருக்கு இருக்கும் மதிப்பு மானத்தமிழன் உயிருக்கு இல்லையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குட்பட்ட அனூர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் சிறிதும் ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. வழிதவறிய தங்களின் மாடுகளை தேடி வந்தவர்களை வேட்டையாட வந்தவர்கள் என்றுகூறி கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றுள்ளது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும்.
வழிதவறிய மாடுகளை தேடி வந்த தமிழர்களை, மானை வேட்டையாட வந்தவர்கள் என்று கர்நாடக வனத்துறை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறது? அப்படியே வேட்டையாட வந்தவர்களாக இருந்தாலும் அவர்களை சுட்டுக்கொல்ல கர்நாடக வனத்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும், அவர்களை கைது செய்து சட்டப்படி தண்டனைப்பெற்று தருவதை விடுத்து, எந்த விசாரணையும் இன்றி சுட்டுக்கொன்றது ஏன்? மானை சுட்டார்கள் என்றால் சுடப்பட்ட மான் எங்கே? மானை சுட்டவர்களுக்கு மரண தண்டனை? மனிதர்களை சுட்டவர்களுக்கு என்ன தண்டனை? மானின் உயிரை மலிவாகிவிட்டதா சகமனிதனின் உயிர்? மானின் உயிருக்கு இருக்கும் மதிப்பு மானத்தமிழன் உயிருக்கு இல்லையா? மனிதநேயம் பேசும் நியாயவான்கள், மனித உரிமை ஆர்வலர்கள் யாருமே இதைப்பற்றி பேசாமல் கடந்து செல்வது சரிதானா? விலங்குகளை வேட்டையாடினால்கூட கேட்பதற்கு வனத்துறையும், வனவிலங்கு ஆர்வலர்கள் இருக்கிறார்கள்? தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு எந்த நாதி இருக்கிறது? வனவிலங்குகளை வேட்டையாடுவது கொடுங்குற்றம் என்றால் தமிழர்களை சுட்டுக்கொல்வது புனித சட்டமா?
தமிழர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றால், எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை சுட்டுக்கொல்கிறது.
தமிழர்கள் கூலி வேலைக்கு சென்றால் செம்மரம் கடத்த வந்ததாக ஆந்திர காவல்துறை சுட்டுக்கொன்றது. தற்போது மாடுகளை தேடி சென்ற தமிழர்களை வேட்டையாட வந்ததாக கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றுள்ளது. இலங்கை ராணுவம்தான் இனவெறியுடன் தமிழர்களை கொல்கிறது என்றால் ஆந்திர, கர்நாடக வனத்துறை தமிழர்களை மட்டும் குறிவைத்து சுட்டுக்கொல்வதற்கு பெயரென்ன? அண்டை நாடான இலங்கையிடம் இருக்கும் அதே இனவெறியும், வெறுப்பும் அண்டை மாநிலங்களிடமும் இருந்தால் ஒரு நாட்டிற்குள் நாம் இருப்பதற்கான அர்த்தம் என்ன?
சொந்த நாட்டு குடிமக்களை சகோதர மாநில வனத்துறையினர் எவ்வித விசாரணையும் இன்றி சிறிதும் மனச்சான்றின்றி, சுட்டுக் கொல்வார்கள் என்றால், இதில் எங்கே இருக்கிறது தேச ஒற்றுமை? எங்கே இருக்கிறது இந்திய ஒருமைப்பாடு? தேசபக்தி குறித்து பாடமெடுத்தவர்கள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? திராவிடம் பேசும் திருவாளர்கள் இதற்கு வாய்த்திறவாமல் அமைதி காப்பது ஏன்? இந்திய ஒன்றியத்தை பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசும் இதுவரை கர்நாடக அரசை கண்டிக்காது வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது. பாகிஸ்தான் கடற்படையால் ஒரு குஜராத் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டாலும் பதறித்துடிக்கும் பாஜக அரசு, கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும் எந்த சலனமும் இன்றி அமைதியாக இருப்பது ஏன்? இதனை பிரதமர் மோடியோ, காங்கிரசு மூத்த தலைவர் ராகுல்காந்தியோ இதுவரை கண்டிக்காதது ஏன்? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? தமிழர்களுக்கான ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா?
பீகார் மாநிலத்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பரவிய வதந்திக்கே அம்மாநில சட்டமன்றம் அதிர்ந்தது. ஆய்வுக்குழுவை அனுப்பி பீகாரிகள் பாதுகாப்பை உறுதி செய்தது. அந்த அக்கறையில் அணுவளவாவது தவெக அரசிற்கு இருக்கிறதா?
3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தவெக அரசு இதுவரை ஆற்றிய எதிர்வினை என்ன? தமிழர்கள் மானை வேட்டையாட வந்தார்கள் என்று கர்நாடக அரசு பழிபோடுவதை தமிழக அரசு ஏற்கிறதா? எதிர்க்கிறதா? இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாடு வனத்துறை அமைச்சர், தமிழ்நாடு முதல்வர் ஆகியோரின் கருத்து என்ன? அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்திற்கு அரசு வழங்கப்போகும் நிதியுதவி என்ன? அவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு வேலை வழங்குமா?
காவிரி சிக்கல் போல, இதிலும் கர்நாடக காங்கிரசு அரசை கண்டிக்க தவெக அரசுக்கு துணிவில்லையா? ஆட்சிக்கு ஆபத்துவந்துவிடுமோ என்று அஞ்சுகிறதா? இதுதான் தமிழர் உரிமையை தவெக அரசு காக்கும் முறையா? கர்நாடகாவை சேர்ந்தவரை தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தவெக அரசு நியமித்ததறகு பரிசுதான், 3 அப்பாவி தமிழர்களை கர்நாடக வனத்துறை சுட்டுக்கொன்றுள்ளதா?
இன்னும் எத்தனை எத்தனை துயரங்களைத்தான் தமிழினம் தாங்குவது? பெருங்கொடுமை!
கர்நாடக வனத்துறையால் 3 அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு உடனடியாக வனத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்குழுவை அனுப்புவதுடன், கர்நாடக வனத்துறை மீது கொலை வழக்கு பதிந்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மாஞ்சோலை அடுத்து மேகமலை... ஆக்கிரமிப்பு என்று கூறுவது கொடுமை - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
#Seeman#NTK#Megamalai#News18TamilNadu
WATCH NOW https://t.co/TCsOveCuy4
ம.பொ.சிவஞானம் திருப்பதி சென்று போராடிய நாள்
16.8.1947 ஆம் ஆண்டு தமிழர் தாயகப் பகுதியான திருப்பதியை மீட்க தமது தோழர்களோடு ம.பொ.சிவஞானம் புறப்பட்டார்.
அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சுவர்களில் எழுதப்பட்டன.
சுதந்திர தின விழா முடிந்து புறப்பட்டபோது, காரில் இருந்தபடியே அனைவருக்கும் ‘Bye’ சொல்லி விடைபெற்ற முதல்வர் விஜய்!
#CMVijay | #IndependenceDay | #Chennai
நண்பர் எனக் கூறி நடிகர் மம்மூட்டி தன்னை கட்டியணைத்து புகைப்படம் எடுத்தது மகிழ்ச்சி அளிப்பதாக திருப்பத்தூர் கிரேன் ஆப்ரேட்டர் பாண்டியன் நெகிழ்ச்சி
#Mammootty#Karaikudi#News18TamilNadu
#JUSTIN நமது தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் மிகப்பெரிய விடுதலைக்கு சமமான விஷயம் தான் - சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் பேச்சு
#CMVijay#IndependenceDay#CMSpeech#News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9
சுதந்திர தினத்தையொட்டி நெல்லையப்பர் கோயிலில் தேசியக் கொடியை ஏற்றி, கொடி கம்பத்திற்கு கற்பூரம் காட்டி வழிபட்ட மக்கள்!
Nellai | Independence Day | Flag Hoisting | 15 Aug 2026
#Newstamil24x7#Temple
#WATCH | 80வது சுதந்திர தினத்தை ஒட்டி பஞ்சாப்பில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி - வாகா எல்லையில் வெகு விமர்சையாக நடந்த தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி.. மிடுக்குடன் அணிவகுத்த ராணுவ வீரர்கள்...!
#SunNews | #AttariWagahBorder | #IndependenceDay
தலைவரின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்த கடற்கரும்புலி மேஜர் திசையரசியின் உயிரோட்டம்
15.08.2000 அன்று கடல் விநியோக நடவடிக்கைக்கு தயாராகிக்கொண்டிருந்த தருணம் வட தமிழீழம் முல்லை மாவட்டத்தில் கடற்புலிகளின் சாலைத்தளம் மீதான எதிரிகளின் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் திசையரசி அவர்களின் வீர நினைவு சுமந்த உயிரோட்டம்....