தமிழகத்தில் எதிர்பாராவிதமாக
5 மாதங்களுக்கு முன் அமைந்த
த.வெ.க. கூட்டணி அரசின் ,
தமிழ்நாடு மின்சார வாரியம் வரலாற்றிலேயே இல்லாத வகையில்
யூனிட் ஒன்றுக்கு சராசரியாக
35 ரூபாய் என்ற மிக, மிக அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது!
ஏற்கனவே தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மின்சார வாரியம் கடன் சுமையால் தள்ளாடுகிறது என்றும், முந்தைய ஆட்சியில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி, மின் கணக்கீட்டில் மாறுதல் செய்கிறோம் என்று ஏற்கனவே ரூ.1500 மின் கட்டணம் செலுத்தி வந்த தமிழக மக்கள் தற்போது சுமார் ரூ.4,000 வரை கட்டுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இந்த அதிக விலையில் மின் கொள்முதல் செய்ய போடப்பட்ட ஒப்பந்தம், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேலும் கடன் சுமையில் மூழ்கடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தேர்தலுக்கு முன் தனது சொகுசுப் பேருந்தில் மேல்புறத்தில் இருந்து வசனம் பேசிய நடிகர் விஜய், எழுதிக் கொடுத்த வசனத்தை, அதாவது மின்சார வாரியத்தைப் பற்றி பேசும்போது, 'டெண்டர்' என்ற வார்த்தையை மிக அழகாக, தொண்டை நரம்பு தெறிக்குமளவிற்கு, ஏற்ற இறக்கத்துடன் பேசி கைத்தட்டலை பெற்று. ஆட்சியைப் அமைத்த திரு. ஜோசப் விஜய், மின் பற்றாக்குறை அவசர நிலையை பயன்படுத்தி, ஏற்கனவே யுனிட் ஒன்றிற்கு ரூ.11-20 கொள்முதல் பொடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சராசரி யூனிட் ஒன்றுக்கு ரூ.35 வரை அதிக விலைக்கு 'மின் கொள்முதல் ஒப்பந்தம்' செய்வதில் மிகப் பெரிய 'மெகா ஊழல்' நடைபெற்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் 'வெற்றி மெகா வசூல் திட்டத்தை' தொடங்கிவிட்டதாக மக்கள் பரவலாக பேசுகின்றனர்.
ஏற்கனவே பல லட்சம் கோடி கடனில் மிதக்கும் தமிழக மின்சார வாரியத்தை மேலும் கடனில் மூழ்கடித்து கடைசியில் தனியாருக்கு தாரை வார்க்க இந்த அரசு திட்டமிடுகிறதோ என்ற ஐயம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அநியாய விலைக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் இந்த ஒப்பந்தத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த ஒப்பந்தத்தை இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilNadu@AIADMKOfficial
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.
இதுபோன்ற Sensitive-ஆன, பல ஆண்டுகள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த ஒரு விஷயம், தற்போது பொதுவெளியில் வந்திருக்கும் போது, காவல்துறை இந்த வழக்கை எந்தவித Pressure-ம் இன்றி கையாள வேண்டும்.
தற்போது, தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் காவல்துறை விசாரணையின் ஊடாக இந்த வழக்கில் சிக்கி உள்ளதாக செய்திகளில் வந்துள்ளன.
பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும் என்பதை @AIADMKOfficial தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு “பெரிய இடமாக” இருந்தாலும், இந்த சுதந்திர சமூகத்தில் எந்த ஒரு இடமும் அளிக்க கூடாது.
இந்த வழக்கில் யாருக்கு தொடர்பு இருந்தாலும், இதனை மறைக்க துணை நின்றது எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@AIADMKITWINGOFL
இந்திய விடுதலைக்காகத் தெற்கிலிருந்து வீறுகொண்டு எழுந்த நெற்கட்டான் செவலின் மாவீரர், இளம் வயதிலேயே துணிச்சலோடு “வெள்ளையனே வெளியேறு”என வீர முழக்கமிட்டதோடு,
போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத தீரராகத் திகழ்ந்து, வீரத்தில் மட்டுமல்லாமல் இறைபணியிலும் சிறந்து விளங்கிய மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
தென்காசி மாவட்டம், 'நெற்கட்டும்செவல்' என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, @AIADMKOfficial சார்பில் தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
@AIADMKITWINGOFL
இன்றைய சட்டமன்றத்தின் Statement: செங்கோ இட்டயணை பார்த்து, இவருக்கு எல்லாம் பேச யோகிதையே கிடையாதுனு சொல்லி முடிச்சது தான்,
@EPSTamilNadu தலைவர் blast.. 🔥
சட்டசபையில,
அப்பா சண்டை
பொண்டாட்டி சண்டை
பங்காளி சண்டை
மாமா மச்சான் சண்டை
பவுடர் சண்டை நடக்கும் போது,
ஒருத்தர் மட்டும் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்தார் 🙂❤️
எடப்பாடியார் எனும் அரசர் 👑
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “ராஜ கோபுரங்கள் நினைவு உற்சவம்” நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று, மறைந்த திரை ஆளுமைகளான இயக்குனர் இமயம் திரு. பாரதிராஜா மற்றும் இயக்குனர் திரு. கே. பாக்யராஜ் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி உரையாற்றினார்கள்.
#Bharathiraaja #Bhagyaraj
கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்,
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற, 'தமிழ் திரையுலகம் ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,
இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா, திரைப்பட இயக்குநர் திரு. K. பாக்யராஜ் ஆகியோரது சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு,
அவர்களது நினைவுகளை தமிழ்நாடு மக்களோடுப் பகிர்ந்து கொண்டார்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இன்றைய தினம் நிதி நிலை அறிக்கையின் துறை வாரியான மானியக் கோரிக்கைகளில் கழகத்தின் சார்பில் உரையாற்றிய கழக சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. சொரத்தூர் இரா. ராஜேந்திரன் (நெய்வேலி) மற்றும் திரு. ஆர். மணி (ஓமலூர்) ஆகியோர் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் #எடப்பாடியார் அவர்களை அவர்தம் சட்டமன்ற அலுவல் அறையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
#TNAssembly #AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், சென்னைக்கு வருகை புரிந்த மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து, பூங்கொத்து அளித்து வரவேற்றார்கள்.
அரசியலால் நான் அடைந்த வேதனை அனைத்திற்கும் மருந்து கிடைத்த தினம் இன்று
முன்னாள் முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் தனது பொற்கரங்களால் பொன்னாடை அணிவித்து என்னை ஊக்கப்படுத்தினார்
72-வது #NationalFilmAwards விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. @dhanushkraja அவர்கள் இயக்கி நடித்து வெளியான #Raayan திரைப்படக் குழுவினருக்கும்,
தேசிய, சமூக மற்றும் சுற்றுசூழல் கருத்துகள் கூறும் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள @SathyaJyothi தயாரிப்பில், திரு. @ArunMatheswaran அவர்கள் இயக்கத்தில், திரு. #தனுஷ் அவர்கள் நடிப்பில் வெளியான #CaptainMiller படக்குழுவினருக்கும்,
#CaptainMiller திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. #தனுஷ் அவர்களுக்கும்,
#Amaran திரைப்படத்திற்காக பின்னணி இசைக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. @gvprakash அவர்களுக்கும்,
#Amaran திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. @Rajkumar_KP அவர்களுக்கும்,
#Amaran திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. கலைவாணன் அவர்களுக்கும்,
#Maharaja திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ள செல்வி. சாச்சனா நமிதாஸ் அவர்களுக்கும்,
#Maharaja திரைப்படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. அனல் அரசு அவர்களுக்கும்,
#Meiyazhagan திரைப்படத்திற்காக சிறந்த ஒலிக்கலவை விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. சுரேன் G அவர்களுக்கும்,
Non-Feature Films பிரிவில் #Blue படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. TS ஹரிஹரசுதன் அவர்களுக்கும்
விருது அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களின் கலைச் சேவை மக்களை மென்மேலும் மகிழ்வித்து, தாங்கள் இன்னும் பல அங்கீகாரங்களைப் பெற வாழ்த்துகிறேன்.
@AIADMKOfficial
#72ndNationalAwards
#TamilCinema