தமிழ்நாட்டில் மக்களுக்கு எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும்,
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் படை,
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் படை,
புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்களின் படை முன்வந்து நிற்கும் என்பதை பறைசாற்றும் விதமாக இந்த போராட்டம் நடைபெறுகிறது.
-பழனியில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் @DrVpb அவர்கள்.
#AIADMK.
அதிமுகவில் இருந்து விலகுபவர்களுக்கான ஒரு சிறிய வேண்டுகோள்.
நீளமான விடைபெறும் கடிதங்களை எழுத வேண்டாம். அதை வாசிப்பதில் அதிமுக தொண்டர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை...🤔
வெறுமனே இந்த ஒரு சிறிய செய்தியை மட்டும் பதிவிடுங்கள்-
"இந்த சனிக்கிழமை பனையூரில் உள்ள ஒரு பச்சை நிற கேட்டின் வெளியே நானும் மகிழ்ச்சியாக காத்திருப்பேன்"
அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்வார்கள் 👍👍👍
கண்ணு மண்ணு தெரியாம நைட் எல்லாம் உட்கார்ந்து சரக்கு அடிச்சிட்டு, விடிஞ்சதுக்கப்புறம் போதை குறையாமல் கண்டதையும் எழுதுறதுக்கு முன்னாடி ஒரு டம்ளர் மோர் குடிக்கிறது நல்லது.
2019-ல அம்மா மறைவுக்கு அப்புறம் கட்சியை சிதறாம காப்பாத்துனாரு
2021-ல வெறும் 3% வாக்கு வித்தியாசத்துலதான் ஆட்சியை இழந்தோம், ஆனா பலமான எதிர்க்கட்சியா நின்னோம்.
இந்த தேர்தலில் வடக்கு மண்டல தளபதியால ஜெயிக்க கூட முடியல
2024-ல கொள்கைக்காக துணிஞ்சு கூட்டணி இல்லாம தனித்து களம் கண்டோம்.
2026-ல கடுமையான மும்முனைப் போட்டியிலும் 47 சீட் ஜெயிச்சது சாதாரண விஷயம் இல்லை. வடக்கு மண்டல தளபதி எத்தனை சீட்டு வாங்கி குடுத்தான்?
எதிரிகள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து அதிமுகவை அழிக்கணும்னு நினைச்சாலும், தொண்டர்களை வச்சு தனியா நின்னு சண்டை செய்ற சிங்கம் எடப்பாடியார்.
விழுந்த இடத்துல இருந்து எப்படி வேகமா எந்திரிக்கணும்னு எங்களுக்குத் தெரியும்.
தொடர் சோதனைகளையும் தாண்டி, வாக்கு வங்கியைக் கட்டுக்கோப்பா வச்சிருக்கிற ஒரே தலைவர் எடப்பாடியார் மட்டும்தான்.
இன்னிக்கு இவ்வளவு கேள்வி கேட்கற நீ, "சோபா குள்ள என்ன இருந்துச்சு", "எதுக்காக மாற்றி ஓட்டு போட்டன்னு", ஒரு கேள்வியாச்சு கேட்டு இருக்கலாமே?
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். 20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 TMC நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில், மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அவர்கள், கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழகத்திற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதைக் கேட்கும்போது, 'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது ? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள். ஆனால், அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல. பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை மதிக்காத கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழக மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
ஜவுக்கு : சண்முகம் ஆளுங்க தான் அடிச்சாங்க ஆனா அது சண்முகத்துக்கு தெரியாது.
: சரி உனக்கு எப்படி தெரியும்? சோர்ஸ் சொன்னாங்க.
ஜவுக்கு : சண்முகம் மேல FIR போட்டது விஜய்க்கு தெரியாது. விஜய் சொல்லவும் இல்லை.
: இது யாரு சொன்னது? இதுவும் சோர்ஸ்.
ஜவுக்கு :FIR A ல சண்முகம் பேர போட சொன்னது எடப்பாடி தான்.
: இது யாரு சொன்னது? சோர்ஸ்
ஸ்டாலின் போன ஆட்சியில் இதை தான பண்ணான் , அவன போம்மையினு தான சொன்ன?
1950களில் மெத்தப் படித்த ராஜாஜி, விடுதலை போராட்டத்தில் 9 வருடம் சிறை சென்ற காமராஜர் தமிழகத்துக்கு முதலமைச்சராக கிடைத்தார்கள்.
2026ல் "பம்பாய் சிட்டி, சுக்கா ரொட்டி வித்தா பாரு செவத்த குட்டி, red light, good night" என பாடல் பாடிய விஜய் முதலமைச்சராக கிடைத்திருக்கிறார்.
அந்தந்த கால மக்களின் தர்மம், தரத்தைப் பொறுத்து தலைவர்கள் அமைகிறார்கள்.
குடிமராமத்து, பிளாஸ்டிக் ஒழிப்பு, 7.5% மருத்துவ இடஒதுக்கீடு, காவிரி டெல்டா மீட்பு என தொலைநோக்கு திட்டங்களால் தமிழகத்தை காத்தவர் எடப்பாடியார்! காமராஜருக்கு பின் தமிழினத்தில் பிறந்த மகத்தான தலைவர்.
100% ஊடக சுதந்திரம் தந்தவரை கிள்ளுக்கீரையாக நினைத்து ஜூனியர் விகடன் போன்ற ஊடகங்கள் அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்! போற்றாவிட்டாலும் தூற்றாதீர்கள்! #EPS #TNPolitics
#Junior_Vikatan
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விற்பனை விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் பதவி விலகி விசாரனையை எதிர் கொள்ள வேண்டும். அதற்கு பயந்து கொண்டு கேள்வி கேட்பவர்களை அதுவும் பெண்களை எல்லாம் கைது செய்ய காவல்துறையை தூண்டிவிடுவது ரமேஷ் செய்யும் "தான் யார் என்ற தன்னிலை மறந்து, அதிகார போதையின் உச்சத்தில் ஆடும் -தான்தோன்றித்தனமான ஆட்டம்".
இன்று அடுத்த வீடியோ. எப்படி எப்படி எல்லாம் ரமேஷ் ஊரை ஏமாற்றுகிறார் இந்த விவகாரத்தில் என்பதற்கான விவரங்களை வெளியிடுகிறோம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் வழக்கின் விசாரணைக்காக காவல்துறையின் அழைப்பின் பேரில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் திரு.விஜயன் அவர்களிடம் விசாரணை எனும் பெயரில் காவலில் வைத்து அலைக்கழித்ததோடு, அவரின் செல்போனையும் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்திருக்கும் காவல்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தவெக சட்டமன்ற உறுப்பினர் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் வழக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் காவல்துறை, கடந்த மே மாதம் இரவு 8 ஆம் தேதி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்ததாக ஆளுநரிடம் வழங்கப்பட்ட போலிக் கடித விவகாரத்தில் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாருக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது ஏன்?
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் நடத்த முயன்றதோடு, புதுச்சேரியில் தங்கியிருந்தவரை சென்னைக்கு அழைத்து வந்து, காரில் வைத்து கடிதம் ஒன்றில் அவர் கையெழுத்திடுவது போல வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் யார்? என்பதை கண்டறிய முனைப்பு காட்டாத காவல்துறை, தற்போது, ஆளுங்கட்சி விவகாரம் என்பதால் விசாரணை எனும் பெயரில் ஊடகவியலாளர் திரு.விஜயன் அவர்களை அலைக்கழித்திருப்பது பத்திரிகை மற்றும் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகும்.
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்” என்ற திருக்குறளுக்கு ஏற்ப -
தவறான வழியில் ஆட்சியமைக்க தவெகவினர் செய்த தவறுகளே, அவர்களுக்கு விரைவில் தகுந்த பாடத்தை புகட்டப்போவது நிச்சயம். @pttv_tweets
பழனி கோவில் நில பத்திரப்பதிவு முறைகேட்டில் அமைச்சர் ரமேஷுக்கு தொடர்பிருப்பதாக சொன்ன எதிர்க்கட்சி ஆதரவு சமூக வலைத்தளவாசிகள் மீது வழக்கு என்பது திசை திருப்பும் உத்தியாகவே தெரிகிறது.
அமைச்சருக்கு தொடர்பிருப்பதாக சொன்னதே வழக்கு பதிய போதுமான காரணம் என்றால், சிபிஐ விசாரணையில் கரூர் சம்பவம் இருக்கும் நிலையில் "அன்றைய கரூர் காவல்துறை நாடகம் போட்டு என்னை பிரச்சார இடத்துக்கு கொண்டுவந்து அங்குள்ள மக்கள் சாக காரணமானார்கள்" என்று பேசிய விஜய் மீது தாராளமாக வழக்கு போடலாம்.
அதிகாரத்தின் போதை மது போதையை விட ஆபத்தானது என்பதை ஆட்சியாளர்கள் உணரும் காலம் வரும்.
#இன்பன்உதயநிதி கூட படிச்ச சின்னஅண்ணியார் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண் நண்பரும் பட்டப்படிப்பை முடித்து தனது பட்டத்தை வாங்கி விட்டாரா? என திமுக கொத்தடிமைகள் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வருவது நகைச்சுவையாக இருக்கிறது?
"ஒரு பைசா லஞ்சம் இல்லை, மக்கள் நிம்மதி பெருமூச்சோட இருக்காங்க"ன்னு விஜய் சொன்னப்போ "இதே மாதிரி பேச்சை வேற எங்கேயோ பார்த்திருக்கோமே"ன்னு தோணுச்சு. அந்த Classicஐ நீங்களும் பாருங்க.
தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என ரீல்ஸ் கண்டெண்டுக்கு ஏற்றார் போல திரைப்பட வசனங்களை அடுக்கிய முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது ? எப்படி ஒழிக்கப் போகிறார் ?.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவரும், தவெக நிர்வாகியுமான திரு.வீராசாமி அவர்கள், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஏற்கனவே ஊழல் புகார்களுக்கு உள்ளாகி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி, தவெகவில் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட திரு.வீராசாமி அவர்கள், தற்போது ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், அவர் மீது ஏற்கனவே குவிந்திருக்கும் ஊழல் புகார்களையும், பொதுமக்கள் அவர் மீதி வைத்த குற்றச்சாட்டுகளையும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சொந்தமான கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது தவெக நிர்வாகி ஒருவர் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், தவெகவின் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவற்றின் லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே, ஒப்பந்ததாரரிடம் தவெக நிர்வாகி லஞ்சம் வாங்குவது போல சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் வீடியோக் காட்சிகளை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தி, லஞ்சம் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலங்களில் ஊழல் ஒழிப்பை பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu