விஜய்க்கு ஓட்டு போட்டேன்னு சொன்னா சொல்ல சொல்ல அடி விழுது!! இந்த மாற்றத்துக்கு தான் ஓட்டு போட்டிங்களா? தேடி வந்த அப்பாவி நபரை கொடூரமாக அடிக்கும் தவெக MLA, துணை சபாநாயகர்! அதிர்ச்சி வீடியோ
உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்!
சமூகநீதி முழக்கமாக அல்ல, நடைமுறையாக வேண்டும். உண்மையான மக்கள் தொகை,கல்வி,வேலைவாய்ப்பு,பொருளாதார நிலவரம் தெரியாமல் உரிய இடஒதுக்கீடும் பிரதிநிதித்துவமும் சாத்தியமில்லை
@VelmuruganTVK#CasteCensus#SocialJustice#ConductCasteCensus
தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கத்தின் பொதுச் செயலாளராக என்னை நியமித்து, பொறுப்பை வழங்கிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் முத்தமிழன் வேல்முருகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@VelmuruganTVK@TVKITWING@Thiruna21766795@ratcat0444
#WATCH | "சினிமாவில் ஹீரோவாக இருந்தவர், நிஜத்திலும் அப்படிதான் இருப்பார் என நினைத்து சில லட்சம் பேர் செய்த தவறால்..." -மு.க.ஸ்டாலின்
#SunNews | #Vijay | #TVK
காவிரி – வைகை – குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கி திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்!
என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலையில் நடைபெற்ற கோரிக்கை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினேன்.
#காவிரி_வைகை_குண்டாறு
#நதிநீர்_இணைப்புத்_திட்டம்
#விவசாயிகள்_வாழ்வாதாரம்
#நீர்வள_மேலாண்மை
#தமிழக_வாழ்வுரிமைக்_கட்சி
மழையால் சாலைகள் மரணப் பள்ளங்களாக மாறுவது ஏன்?
ஒப்பந்தங்களில் முறைகேடா? பணிகளில் தரக்குறைவா? மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு?
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள சாலைகள் மழைநீரால் மேலும் ஆபத்தானதாக மாறியுள்ளன. சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி அவை கண்ணுக்குத் தெரியாமல் போவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் வேளச்சேரி சாலையில் மழைநீரால் மறைந்த பள்ளத்தில் சிக்கிய தனியார் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ஓட்டுநரும் செவிலியரும் காயமடைந்துள்ளனர். இதே சாலையில் முறையாக மூடப்படாத பள்ளங்களில் பல்வேறு வாகனங்கள் சிக்கிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
ஒரு சாலை அமைக்கப்படுகிறது. ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது. அதிகாரிகள் பணியின் தரத்தை ஆய்வு செய்து சான்றளிக்கின்றனர். ஆனால் சில காலத்திலேயே அந்தச் சாலை மரணப் பள்ளங்களாக மாறுகிறது என்றால், இதற்கு பொறுப்பேற்பது யார்?
தரமற்ற சாலைப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களிடம் ஒப்பந்த விதிகளின்படி அபராதம் வசூலித்து, அவர்களது சொந்த செலவில் சாலையை மீண்டும் தரமான முறையில் அமைக்க அரசு உத்தரவிடுமா?
மோசமான சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் இரத்து செய்யப்படுமா?
அதேபோல், பணியின் தரத்தை முறையாகக் கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மற்றும் தரச்சான்று வழங்கிய பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? தரமற்ற பணியால் அரசுக்கு ஏற்பட்ட நிதியிழப்பை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க அரசு தயாரா?
தரமற்ற சாலைப் பணிகள் தொடர்பாக மதுரை கிளை உயர்நீதிமன்றமும், சாலைப் பணிகளின் தரத்தை உறுதி செய்யும் நடைமுறைகள் மற்றும் தவறு செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
முந்தைய ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட ஒப்பந்தமாக இருந்தாலும், தற்போதைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பணியாக இருந்தாலும், மக்களின் வரிப்பணத்தில் செய்யப்பட்ட பணியின் தரத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பொறுப்பானவர்கள் யார் என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சாலைகள் மோசமடைந்த பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. அடுத்த விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்படும் முன்பே மாநிலம் முழுவதும் ஆபத்தான சாலைகளை ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும்.
சாலைகள் மக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக அமைக்கப்பட வேண்டுமே தவிர, மரணப் பள்ளங்களாக மாறுவதற்காக அல்ல.
எனவே, மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சாலைகள் மோசமடைந்த பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. அடுத்த விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்படும் முன்பே மாநிலம் முழுவதும் ஆபத்தான சாலைகளை ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும், தரமற்ற சாலைகளை அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#RoadSafety #tamil #TamilNaduRoads
#சாலைபாதுகாப்பு #மக்களின்உயிர்பாதுகாப்பு
மேகதாதுவில் அணைகட்டி தமிழகத்தை பாலைவனமாக்க முயலும் கர்நாடக அரசைக் கண்டித்தும் 3 அப்பாவி தமிழர்களை சுட்டுப் படுகொலை செய்த கர்நாடக வனத்துறையைக் கண்டித்தும் மேச்சேரி பேருந்து நிலையத்தில் கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினேன்.
மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடா?
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பதவி உயர்வு பெற்றது எப்படி?
நடவடிக்கைக்கு தயக்கம் காட்டுவது ஏன்?
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, 2017 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இவ்விவகாரம் தொடர்பாக எட்டு வட்டாட்சியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான துறைரீதியான நடவடிக்கை குறித்துச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
மாணவர்களின் கல்வி, உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டிய நிர்வாக அமைப்புகளின் செயல்பாடே தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக, குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சில அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றதாகவும், சிலர் பணி ஓய்வு பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது ஆழ்ந்த கவலைக்குரியது.
மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த பிறகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கத் தாமதமானது ஏன்?
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெறும் சூழலில், சம்பந்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வும் பணி ஓய்வும் வழங்கப்பட்டதன் பின்னணி என்ன?
மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்க வேண்டிய உயர் அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால், அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்?
2017 முதல் 2023 வரை இந்நிதி நிர்வாகத்தில் தொடர்புடைய அனைவரின் பங்கும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதா?
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமின்றி, முறைகேட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் அரசியல் அல்லது நிர்வாகப் பின்னணியைப் பாராமல் ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் இதில் தொடர்புடைவர்கள் என விசாரணையில் நிரூபிக்கப்பட்டாலும், தற்போதைய ஆட்சியில் இருப்பவர்கள் தொடர்புடைவர்கள் எனத் தெரியவந்தாலும் பாரபட்சமின்றி ஒரே சட்ட நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும்.
மேலும், முறைகேட்டால் இழப்பு ஏற்பட்ட அரசுப் பணத்தை முழுமையாக மீட்டெடுத்து, அது மாணவர்களின் நலனுக்கே பயன்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்.
மாணவர்களின் உரிமைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெறுவது என்பது சாதாரண நிர்வாகத் தவறாகக் கடந்து செல்லக்கூடியதல்ல. கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி, கல்வி பயிலும் மாணவர்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதே ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும்.
எனவே, இவ்விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுத்து, நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் உரிய விளக்கம் அளிப்பதுடன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யமின்றிச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#தமிழக_வாழ்வுரிமைக்கட்சி
#மாணவர்_நிதி_முறைகேடு
#StudentFundScam #tamil
#AccountabilityNow
சென்னையைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ் ஜோன் இந்தியா (Space Zone India), சார்பில்
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தையில் நடைபெற்ற "மிஷன் ரூமி" ட்வின் – 2026’ ராக்கெட் ஏவும் நிகழ்வில் பங்கேற்றேன்.
நெடுஞ்சாலை முதல் மருத்துவமனை வரை,
இந்தியின் ஆதிக்கமா?
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை அரசே சீர்குலைக்கிறதா?
தமிழர் கோயிலிலும் இந்தி நுழைவதா?
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைத் தரைமட்டமாக்கும் வகையில், மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு துறைகளில் இந்தி இடம்பெறும் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளிவருவது கடும் கண்டனத்திற்குரியது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்த இந்தி எழுத்துகள் அகற்றப்பட்டதுடன், இரு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அந்தப் பிரச்சினை ஓய்வதற்குள், கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து உறைகளில், மருந்து உட்கொள்ளும் முறைகள் உள்ளிட்ட விவரங்கள் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும் அச்சிடப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2025 டிசம்பரில் இந்த உறைகள் அச்சிடப்பட்டதாகவும், தற்போது அவற்றின் பயன்பாட்டை நிறுத்த மருத்துவமனை நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படியானால், இத்தனை மாதங்களாக அரசு மருத்துவமனைகளுக்குள் இந்தி இடம்பெற்றதை நிர்வாகம் கவனிக்காமல் இருந்ததா? அல்லது தெரிந்தே அனுமதித்ததா?
இந்தி அச்சிடப்பட்ட மருந்து உறைகளைத் தேர்வு செய்து அரசுப் பணத்தில் கொள்முதல் செய்தது யார்? அச்சு மாதிரியைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?
ஒவ்வொரு முறையும் இந்தியை அரசுத் துறைகளுக்குள் நுழையவிடுவது யார்? இந்தித் திணிப்புக்குத் துணைபோகும் அந்த “கறுப்பு ஆடுகள்” யார்? தமிழ்நாடு அரசு அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமா?
தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டமைப்புக்குள் இந்தி நுழைவதற்கான "பாசிசத்தின் மெயின் டீமாகச் செயல்படுவது யார்?” மக்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு முறையும் கீழ்மட்ட அதிகாரிகளை மட்டும் பலிகடாவாக்கிவிட்டு, பின்னணியில் முடிவெடுத்தவர்களை அரசு பாதுகாக்கிறதா?
இந்நிலையில், மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் நுழைவாயிலில் தமிழ் எழுத்துகள் அகற்றப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையும் கூடுதல் கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசு தரப்பில் தமிழ் அகற்றப்படவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பெயர்ப்பலகையில் உண்மையில் என்ன மாற்றம் செய்யப்பட்டது என்பதையும், அதற்கான ஆவணங்களையும் அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
கோயில் பெயர்ப்பலகையில் மாற்றம் செய்தது யார்? எந்த உத்தரவின் அடிப்படையில் செய்தார்கள்? தமிழுக்கு எதிரான எந்த மாற்றமும் நடைபெறவில்லை என்பதை அரசு வெளிப்படையாக நிரூபிக்கத் தயாரா?
நெடுஞ்சாலைப் பலகை, அரசு மருத்துவமனை மருந்து உறை, கோயில் பெயர்ப்பலகை என வெவ்வேறு இடங்களில் ஒரே மொழி தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து எழுவது சாதாரண நிர்வாகத் தவறுகளின் தொடர்ச்சியா? அல்லது அரசு நிர்வாகத்தின் பல்வேறு அடுக்குகளில் கொள்கைக்கு முரணான செயல்பாடுகள் ஊடுருவியுள்ளனவா?
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை மதிப்பதாகக் கூறும் அரசு, அதன் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளிலேயே இந்தி இடம்பெறுவதைத் தடுக்க வேண்டும். அனைத்து அரசு நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படும் அறிவிப்புப் பலகைகள், ரசீதுகள், மருந்து உறைகள், விண்ணப்பப் படிவங்கள் உள்ளிட்ட அச்சுப் பொருட்களை உடனடியாகத் தணிக்கை செய்து, இருமொழிக் கொள்கைக்கு முரணானவற்றை அகற்ற வேண்டும்.
மேலும், இந்தித் திணிப்புக்கு துணைபோகும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு, பொறுப்பை நிர்ணயித்து, துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
#தமிழ்_எங்கள்_உரிமை #இருமொழிக்_கொள்கை
#StopHindiImposition #tamil #SaveTamil
போராட்டம் பண்ணா குழந்தைகளை உங்கள் காவல்துறையை வைத்து அடிப்பீங்களா விஜய்
மேடைக்கு மேடை உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க குடும்பம்ன்னு சொல்லி பெண்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிட்டு இப்படி குழந்தைகள், பெண்களை தாக்குறது தான் தூய சக்தியா.??
#TVKEXPOSED
வருசநாடு மேகமலை மக்களின் நிலவுரிமையைப் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாகத் தலையிடுமா? ஆட்சியாளர்களின் கள்ள மௌனம் ஏன்?
தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராமங்களில் பல தலைமுறைகளாகத் தங்களின் பூர்வீக நிலங்களில் உழுதுண்டு வாழும் எளிய மக்களை, உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி வாழ்விடங்களிலிருந்து வெளியேற்ற முனையும் போக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.
தங்களின் நிலவுரிமையைக் காக்கக் கோரி அப்பகுதி மக்கள் உண்ணாநிலை, அறவழி மற்றும் காத்திருப்புப் போராட்டங்களை நாள்கணக்கில் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இம்மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கப் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் களத்தில் இறங்கித் தொடர்ந்து போராடி வருகின்றன.
குறிப்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அண்மையில் மதுரையில் அனைத்துக் கட்சிக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் எமது கட்சியின் சார்பில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினேன்.
இத்தனை போராட்டங்கள் தீவிரமாக வெடித்தும், தமிழ்நாட்டின் முதலமைச்சரோ, வனத்துறை உள்ளிட்ட துறைசார்ந்த அமைச்சர்களோ அல்லது அப்பகுதிச் சட்டமன்ற உறுப்பினர்களோ எவருமே இவ்விவகாரத்தில் கிஞ்சித்தும் அக்கறை காட்டவில்லை. மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவோ, அவர்களது கோரிக்கைகளைக் கேட்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு தொடர்ந்து கள்ள மௌனம் சாதிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வாக்களித்த குடிமக்களை நடுரோட்டில் தவிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் மக்களாட்சியின் அழகா?
மேகமலை வனப்பகுதியில் வாழும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களையும் தங்களின் வாழ்விடங்களைவிட்டு அப்புறப்படுத்தத் துடிப்பது அப்பட்டமான அநீதியாகும்.
காடுகளைப் பேணிப் பாதுகாக்கும் பழங்குடி மற்றும் பாரம்பரியக் குடிகளின் வாழ்வைச் சிதைத்துவிட்டு, யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன?
எனவே, தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், வருசநாடு, மேகமலை மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்ற அதிகாரப்பூர்வ உத்தரவாதத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வலுவான சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து மக்களின் பாரம்பரியக் குடியுரிமையை நிலைநாட்ட வேண்டும்.
அமைச்சர்கள் நேரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண வேண்டும்.
மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கத் தவறினால், ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையும் சனநாயக சக்திகளையும் ஓரணியில் திரட்டி மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்!
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#மேகமலை_மக்களின்_வாழ்வுரிமை
#வருசநாடு_காத்திருப்பு_போராட்டம்
#ProtectMeghamalaiPeople
#tamil
#தமிழகவாழ்வுரிமைக்கட்சி
Congratulations Vithya!!
Records are meant to be broken & there is no greater reward for an athlete than to see the next generation go beyond the boundaries we once set. Vithya Ramraj breaking my 43-year-old national record in the 400m hurdles is an incredibly special moment.