தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டை மிகப்பெரிய மக்கள் திரளுடன் நடத்தி முடித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு வாழ்த்துகள். அண்ணன் திருமா அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
அதேவேளையில், மாநாட்டில் திரண்டிருந்த பெரும் கூட்டத்தின் உற்சாகத்தின் மற்றும் கட்டுப்பாடற்ற தன்மை காரணமாக, அண்ணன் திருமாவளவன் அவர்கள் தனது உரையை முழுமையாகவும் தெளிவாகவும் பேச முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.
ஆனால், இந்த மாநாடு நிறைவடைந்தபோது தேசிய கீதம் இசைக்கப்பட்டது என்பது மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.
தமிழ்த்தேசியத்திற்கும் இந்திய தேசிய கீதத்திற்கும் என்ன தொடர்பு?
தமிழ்த்தேசியம் என்பது வெறும் மொழிப் பெருமையைப் பேசுவது அல்ல. அது தமிழர் என்ற தேசிய இனத்தின் உரிமை, அரசியல் அதிகாரம், இறையாண்மை, அடையாளம், நலன் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிப் பேசும் ஒரு விடுதலைக் கருத்தியல்.
தமிழர் தங்களுடைய நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கோட்பாடு என்றால், ஒரு தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டின் நிறைவில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்படுவதன் அரசியல் மற்றும் கருத்தியல் பொருள் என்ன?
இது வெறும் ஒரு நிகழ்ச்சி நிரல் சார்ந்த முடிவா?
அல்லது தமிழ்த்தேசியக் கருத்தியலுக்கும் இந்திய தேசிய அரசியலுக்கும் இடையிலான ஒரு சமரசத்தின் வெளிப்பாடா?
இதற்கான தெளிவான விளக்கத்தை அண்ணன் திருமாவளவன் அவர்கள்தான் வழங்க வேண்டும்.
தமிழ்த் தேசியம் பேசப்படும் ஒரு மேடையில், அந்தக் கருத்தியலின் அடிப்படைக் கேள்விகளுக்கு முரணாகத் தோன்றும் ஒரு நடைமுறை இடம்பெற்றால், அதை கேள்வி கேட்பதும் விவாதிப்பதும் அவசியம்.
தமிழர் உரிமை, தமிழர் எதிர்காலம், தமிழர் அரசியல் அதிகாரம் ஆகியவற்றைப் பேசும் அனைவரும் இந்தக் கேள்வியை உணர்வுபூர்வமாக அல்ல; கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அணுக வேண்டும்.
தமிழ்த்தேசியம் என்றால் என்ன?
அதன் அரசியல் எல்லை எது?
அதன் இறுதி இலக்கு என்ன?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளை அண்ணன் திருமாவளவன் அவர்கள் தனது உரையில் தெளிவாக வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்தேன்.
குறிப்பாக, நீண்டகாலமாக அவர் சார்ந்திருக்கும் திராவிடக் கருத்தியலுடன், தமிழ்த்தேசியக் கருத்தியலை எந்தெந்த புள்ளிகளில் பொருத்திப் பார்க்கிறார் என்பதையும், இந்த இரு அரசியல் கருத்தியல்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் ஒற்றுமைகளையும் அவர் எவ்வாறு அணுகுகிறார் என்பதையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்தது.
ஆனால், தமிழ்த்தேசியம் குறித்த இந்தக் கேள்விகளிலும், அதன் கருத்தியல் அடிப்படைகள் குறித்த விவாதத்திலும் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் இல்லை என்பதையே, அவர் சுருக்கமாகப் பேசிய உரையின் வழியாக நான் உணர்ந்தேன்.
தனக்கிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் உடனான கூட்டணி குறித்த நிலைப்பாட்டை உறுதி செய்வதிலும், அங்கே கூடியிருந்த பெரும் கூட்டத்தை மகிழ்விக்கும் வகையில் “நாம் ஆளுங்கட்சியாக மாறுவோம்” என்று அரசியல் இலக்குகளைப் பேசுவதிலும் அவர் காட்டிய ஆர்வம், தமிழ்த்தேசிய விடுதலைக் கருத்தியலை விளக்குவதில் இருந்திருந்தால், இந்த மாநாடு உண்மையான தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
ஆனால், தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ன?
அதன் அரசியல் எல்லை எது?
தமிழர் இறையாண்மை குறித்த அதன் நிலைப்பாடு என்ன?
தமிழ்த்தேசியத்திற்கும் திராவிடக் கருத்தியலுக்கும் இடையிலான உறவு என்ன?
இந்திய தேசிய அரசியலுக்குள் தமிழ்த்தேசியத்தின் இடம் என்ன?
என்பது போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு ஆழமான அரசியல் விவாதத்தை உருவாக்காமல், பெரும்பாலும் அரசியல் கூட்டணி, ஆட்சி அதிகாரம் மற்றும் தேர்தல் வெற்றி குறித்த விருப்பங்களை மட்டுமே முன்னிறுத்திய மாநாடாக இது முடிந்து விட்டது.
தமிழ்த்தேசியம் என்பது வெறும் தேர்தல் முழக்கமாக மாறிவிடக் கூடாது. அது ஒரு விடுதலைக் கருத்தியல். ஒரு தேசிய இனத்தின் அரசியல் தத்துவம். ஒரு தேசிய இனத்தின் நலன் மற்றும் உரிமைக்கான கோட்பாடு.
அந்தக் கருத்தியலை தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தும், அதை முழுமையாகப் பயன்படுத்தாமல் விட்டது தான் இந்த மாநாட்டின் மிகப்பெரிய ஏமாற்றம்.
மக்கள் கூட்டத்தின் அளவு ஒரு மாநாட்டின் வெற்றியை நிர்ணயிக்கலாம்.
ஆனால், ஒரு மாநாட்டின் வரலாற்று முக்கியத்துவத்தை நிர்ணயிப்பது, அங்கே முன்வைக்கப்படும் கருத்துகளின் ஆழமும் தெளிவும் தான்.
அந்த வகையில், மிகப்பெரிய மக்கள் திரள் இருந்தும், தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கேள்விகளுக்கு விடை காண முடியாமல் முடிந்த மாநாடாகவே இது அமைந்துவிட்டது.
@itwingvck
25 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோருகிறார் அவரது மனைவி. விவாகரத்துக்கான காரணங்களில் தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்.
ஒரு மனைவி தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரும்பட்சத்தில் குடும்ப வன்முறை, சித்ரவதை, கணவரின் தவறான நடத்தை, தாம்பத்தியமின்மை போன்றவற்றில் தனக்கு நடந்தவற்றைக் குறிப்பிட்டால்தான் அது விவாகரத்துக்கான வழக்காக நிற்கும்; விவாகரத்து குறித்தப் பரிசீலனைக்கு அது எடுத்துக் கொள்ளப்படும். அந்தவகையில்தான், அதனைக் குறிப்பிட்டிருக்கிறார் அவரது மனைவி. அவரது விவாகரத்து மனு வெளியே கசிந்ததால் அதில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு ஊடகங்களில் செய்தியாகின; சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளானது. மற்றபடி, அவர் காணொளி வெளியிட்டோ, அறிக்கை வாயிலாகவே, செய்தியாளர் சந்திப்பை நடத்தியோ எதனையும் கூறவும் இல்லை; பொதுவெளியில் வந்து குற்றஞ்சாட்டிப் பேசவும் இல்லை. அப்படி செய்வதற்கான எல்லா வாய்ப்புகளுமிருந்தும் அதனைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார். தனது கணவரின் பிம்பத்தைச் சிதைப்பது நோக்கமாக இருந்திருந்தால், மேற்கூறியவற்றில் ஒன்றையாவது அவர் செய்திருப்பார். ஆனால், செய்யவில்லை. அவர் தன்னைப் பாதிக்கப்பட்ட தரப்பாகக் கருதி, விவாகரத்தும், ஜீவனாம்சமும் கோருகிறார். அதற்காக மனுவில் தனக்கு நடந்தவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வளவே! அதற்காக அவரைக் கொச்சைப்படுத்துவதும், குணப்படுகொலை செய்வதும், அவருக்கு உள்நோக்கம் கற்பித்து, அரசியல் சாயம் பூசுவதும் படுஅபத்தம்.
அதேசமயம், எல்லா விவரங்களும் ஊடகங்களில் செய்தியானதால் விளக்கம் அளிக்கப் போகிறாரா? மறுப்புத் தெரிவிக்கப் போகிறாரா? இல்லையென்றால், அமைதியாகக் கடந்து, விவாகரத்து வழக்கை எதிர்கொள்ளப் போகிறாரா? என்பது கணவர் தரப்பு முடிவு.
இதனைத்தாண்டி, அந்த நடிகரின் அரசியலை எதிர்ப்பதற்கு இதனை ஒரு ஆயுதமாக எடுக்க வேண்டிய எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை. எடுக்கப் போவதுமில்லை. கடந்தே செல்கிறோம்.
கரூர் பேரவலத்தில் சதி நடந்ததெனப் பொய்யைப் புனைந்து, நடிகரின் தவறுகளை மூடி மறைத்து, அவரை முழுமையாகக் காப்பாற்றிவிட செய்த இழிவானப் பரப்புரை போல, மனைவியின் விவாகரத்து வழக்குக்கும் ஒரு சாயம் பூசி, அவருக்கு உள்நோக்கம் கற்பித்து, அனுதாபத்தை ஏற்படுத்தி, நடிகர் மீதான விசுவாசத்தைக் காட்ட அவரது ரசிகர்கள்/ தொண்டர்கள் முற்படுவார்களேயானால், அதனைவிட அருவருப்பு வேறில்லை.
"கரூரில் களத்தைவிட்டு ஏன் வெளியேறினார்?" என அவரைக் கேட்காது, "கரூரில் உடனடியாக அவசர ஊர்திகள் வந்தது எப்படி?" எனக் கேட்டதுபோல, "இப்படி ஒரு குற்றச்சாட்டு மனைவியாலே வருவதுபோல ஏன் நடந்துகொண்டார்?" எனக் கேட்காது, "இவ்வளவு நாட்கள் இருந்துவிட்டு இப்போது விவாகரத்து மனுவை அளித்தது எதற்காக?" என அவரது மனைவியைக் கேட்பீர்களென்றால், தலைக்கேறிய உங்களது ரசிகவெறி மிக மிக ஆபத்தானது.
எங்கள் தேசம்!
ஓர் இனத்தின் பெருங்கனவு!
உலகத் தமிழர்களின் வலைத் தொலைக்காட்சி!
இது மானத் தமிழினத்தின் மனசாட்சி!
https://t.co/Nc2dTbqOTD
உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் #எங்கள்தேசம் வலைத் தொலைக்காட்சியைப் பின்தொடருங்கள்! பேராதரவைத் தாருங்கள்!
@ndtv has failed in Journalism.
Naam tamizhar party is the third largest parties in Tamil nadu holding 8.22% standalone vote share.
NDTV has rebuffed Naam Tamizhar Party, by not inviting their spokespersons and leaders in its recent TN summit. All other party leaders were invited, including TvK who has not even contested in one election.
NDTV has cancelled ethical journalism by blowing trumpets to celebrities, hyping an off screen and off camera interview given to them, allegedly Mr. Vijay.
A real gutsy political leader, will never be hesitant to voice his political idealogy, plans for governance and views on public issues before the media. This unethical script driven propaganda, is endorsed and hyped by ndtv, a national disgrace.
What's the point of mock interviews @ndtvindia ?
'Settlement' ho gaya kya?
முருகா!
மாற்றத்தை விரும்பும்
மக்களின் மாநாடு
இது நம் இனத்தின் திருவிழா!
எல்லோரும் கூடுவோம்!
மாசி 09 சனிக்கிழமை |
21-02-2026 | திருச்சி
#மக்களின்_மாநாடு2026
நிதி அளிக்க👇
https://t.co/oXPUtu9pHv
பிப்ரவரி 21 திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டிற்குச் செல்கிறேன்" என பதிவு செய்துவிட்டேன்! 🎉
https://t.co/zutH42lGJr
#மக்களின்_மாநாடு2026
hey @grok,
based on my tweets history state -
what is my physical age?
what is my mental age?
what is my IQ?
what is my EQ?
what is my ideal profession?
what is my worst nightmare?
எனக்கு தமிழ் இனத்தின் மானமும் அதன் எதிர்காலமும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான்.
இரண்டே நாளில் படத்தை எடுக்கவில்லை என்றால் நடப்பது வேற .
கிங்டம் படம் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்த கோரி கொந்தளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் .
#சீமான்
#NTK