“திருமா மீதான அவதூறுகளையும் விசிக மீதான நெறியற்ற விமர்சனங்களையும் தமிழ்ச்சமூகம் ஏற்காது. இடது உலகமும் முற்போக்கு உலகமும் ஏற்பதில்லை.”
“சுத்தி சுத்தி கூட்டணி பற்றிய விஷயங்களையே விவாதிக்காமல் உண்மையான சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் பத்திரிகையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.”
கொத்தூஸ் பத்திரிகையாளர்களை வார்த்தையால் அடித்திருக்கிறார் தோழர் வீரபாண்டியன்.
இந்திய இடதுசாரிகள், குறிப்பாக டில்லி மைய பார்ப்பனிய இடதுசாரிகள் இலங்கையின் ஜெ.வி.பி கட்சி, அரசை இடதுசாரி என முன்னிறுத்திக் கொண்டிருந்தால் அம்பலப்பட்டு போவார்கள். ஜெவிபி கும்பல் அமெரிக்க தூதரகத்தோடு வைத்திருந்த தொடர்புகள், நடத்திய பேரங்கள் அம்பலமானவை என்பதை தமிழ்நாட்டிலிருந்து யாரேனும் தெரிவித்தால் நல்லது. தமிழ் படைப்பாளியான தீபச்செல்வனின் படைப்புகள் சிங்கள படைப்பாளிகளால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழர்களின் சனநாயக கோரிக்கைகள் சிங்கள மக்களைச் சென்றடைவதை ஜெவிபி-என்.பி.பி அனுரா அரசு தடை செய்துள்ளது. படைப்பாளியின் மீது மோடி அரசு நடத்தும் அடக்குமுறைக்காக கொந்தளிக்கும் டில்லி-இடதுசாரிகள், பால்ஸ்*தீன அழிப்பிற்கு அங்கலாய்க்கும் இந்த பார்ப்பனிய இடதுசாரிகள் ஜெவிபி-ராஜபக்சே-ரணில் கும்பல் நடத்திய இனப்படுகொ*லையை குறித்து கள்ளமெளனம் காப்பது மட்டுமல்ல, தமிழர்களை பாசிஸ்டுகளாக சித்தரித்தன என்பது வரலாறு. ஜெவிபியின் தமிழர் விரோத, ஏகாதிபத்திய சார்பு அரசியல் குறித்து மே17 இயக்கம் தொகுத்துவைத்திருக்கும் கட்டுரைகளை விரைந்து கொண்டுவர முயல்கிறோம். சிவப்புச் சட்டை போட்டு, சேகுவேரா படத்தை வைத்தவனெல்லாம் இடதுசாரியென்றால் கம்போடியாவின் போல்போட்டையும் புரட்சியாளன் பட்டியலில் சேர்க்க வேன்டியிருக்கும். போலிகளிடமிருந்து, இடதுசாரி அரசியலை காக்க வேண்டியுள்ளது.
The martyred child Salma, only 5 years old:
I used to see her every day selling small cakes. She was the youngest small business owner in the world, selling just five cakes a day. She worked so hard, yet she was deprived of a childhood like other children. She sold cakes, but she never sold her homeland — not at any price.
I recorded this video during the harshest days of famine under the siege of northern Gaza.
Yesterday, when I went to provide care for a wounded person near her family’s tent, I asked about her, eager to see her again. The moment her name was mentioned, her family began to cry in deep grief. They told me that only days earlier, she was killed when an explosive device hidden inside a toy detonated. She thought it was a toy and picked it up because she could not afford to buy one — her family was poor.
She carried what she believed was a toy, but it exploded in her hands, and her small body was torn into five burned pieces.
Instead of the five cakes she used to sell every day, her body was turned into five shattered fragments — the result of deadly remnants left behind, turning Gaza’s children into victims day after day.
The martyred child Salma is only one story among thousands of stories of systematic killing and ethnic cleansing.
Please share the story of the martyred child Salma with the world. Perhaps something will move, and this hatred and killing will stop.
#Children_of_Gaza_are_being_killed before the eyes and ears of the whole world
#Gaza_is_calling_for_help
#Stop_the_killing
Written by Dr. Mostafa Naim
From northern Gaza
தோழர் பி.ஆர் பாண்டியன் அவர்களுக்கும், அவருடன் போராட்ட களத்தில் நின்ற விக்கிரபாண்டியம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு. செல்வராஜ் அவர்களுக்கும்
13 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவில் மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்தவர், விவசாயிக்ளின் பலவேறு கோரிக்கைகளுக்காக போராட்டங்களை நடத்தியவர். மேகேதாட்டு அணை எதிர்ப்பு, காவிரி உரிமை, நெல் கொள்முதல் என பல போராட்டங்களில் அவரோடு பங்கெடுத்துள்ளது மே17 இயக்கம். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய பால*ஸ்தீன ஆதரவு பேரணியிலும் பங்கெடுத்தவர்.
ஓ.என்.ஜி.சி நிறுவனம் எனும் இந்திய அரசு நிறுவனம் காவிரி டெல்டா மாவட்டங்களை சூறையாடி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசு நிறுவனம் என்பதால் இதன் மீது நடவடிக்கை எடுக்க இயலாத வகையில் சட்டங்களும் கடுமையாக்கப்பட்டன. காவிரி டெல்டாவில் எடுக்கப்படும் கச்சா எண்ணையினால் தமிழ்நாட்டிற்கு எவ்வித பயனும் இல்லை. மாறாக, வடஇந்திய கம்பெனிகள் கொழுத்து வளர்கின்றன.
இவ்வகையில் ஓ.என்.ஜி.சிக்கு எதிரான போராட்டம் விவசாயிகளிடத்தில் எதிரொளித்தது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் போராட்டத்தை நடத்தி வெற்றியும் கண்டனர். ஆனால் ஓ.என்.ஜி.சி நிறுவனம் காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலருக்கு கையூட்டு கொடுத்து தனது சதிவளைகளை விரித்துக்கொண்டே சென்றுள்ளது..
இந்த நிறுவனத்திற்கு எதிரான விவசாயிகள் போராடத்தை நடத்தியதற்காக, பொய் வழக்குகள் புனையப்படுவது வழக்கம். இந்த வழக்கை விசாரித்து கொடும் தீர்ப்பை வழங்கியுள்ளது கீழமை நீதிமன்றம். இந்த வழக்குகள் போராட்ட வழக்குகள். இவற்றை கடந்தகால அதிமுக அரசின் காலத்தில் ஓ.என்.ஜி.சி அழுத்தத்தினால் பதியப்பட்டவை. இந்த வழக்குகளை திமுக அரசு விசாரணைக்கு எடுத்து நடத்த வேண்டிய அவசியம் என்ன?
ஆட்சிக்கு வந்தவுடன் போராட்ட வழக்குகளை திரும்பப்பெறுவதாக வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆயினும் பெரும்பான்மை வழக்குகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2021ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக 'போராட்ட வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி' மாநாடு ஒன்றினை மே17 இயக்கமும், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியும் நடத்தியது. இதில் பலவேறு போராட்டங்களில் பங்கெடுத்து வழக்கு வாங்கியவர்கள் உரையாற்றினார்கள். 8 வழிசாலை வழக்கு, கெயில் பைப்லைன் வழக்கு, ஐ.டி.பி.எல் குழாய் வழக்கு, டாமாக் வழக்கு, ஸ்டெர்லைட் வழக்கு, மீத்தேன்-ஹைட்ரோகார்பன் வழக்கு, அணு உலை எதிர்ப்பு வழக்கு, 7 தமிழர் விடுதலை போராட்ட வழக்கு, மீத்தேன் எதிர்ப்பு வழக்கு, முல்லைபெரியாறு வழக்கு, மீனவர் உரிமை, காவிரி உரிமை போராட்ட வழக்குகள், கன்னியாகுமரி சரக்கு பெட்டகதுறைமுக வழக்கு, ஒக்கி புயல் போரட்ட வழக்கு, ஈ*ழப்போராட்ட வழக்கு என பல போராட்ட வழக்குகளை திரும்பபெற வேண்டுமென கோரிக்கை மாநாட்டை நடத்தினோம்.
வாக்குறுதி கொடுத்த திமுக அரசு, எவ்வழக்கையும் திரும்பப்பெறவில்லை. இதன் விளைவாக இந்த போராட்டங்களில் பங்கெடுத்து தமிழ்நாட்டு உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். இதன்படியே தோழர் பி.ஆர்.பாண்டியன் மீதான தண்டனையை நாம் அணுக வேண்டியுள்ளது. தமிழக திமுக அரசு இந்த வழக்கில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தாமல் அதனோடு உடன்பட்டு போராடியவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க உதவியுள்ளது என்பதாகவே பார்க்க இயலும்.
தோழர் பி.ஆர்.பாண்டியன் மீதான தீர்ப்பு என்பது போராடும் மக்களை மிரட்டும் நோக்கிலானது. மேலும் ஓ.என்.ஜி.சி தனது நாசகார திட்டத்தை எதிர்ப்பில்லாமல் நடத்தும் வகையில் போராட்ட மக்களை மிரட்டியுள்ளது. இவ்வகையில் இந்த தீர்ப்பும் திமுக அரசின் நடவடிக்கையும் வன்மையான எதிர்ப்பிற்குரியது. ஏழை விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைப்பதால் போராட்ட உணர்வை மழுங்கடிக்க இயலாது. இந்த எதேச்சதிகார போக்கு திமுக அரசைஅரசை மேலும் தனிமைப்படுத்திடவே செய்யும். தோழர் பி.ஆர்.பாண்டியன் உடனடியாக விடுதலையடையும் படியாக சனநாயக ஆற்றல்கள் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். திமுக அரசு கடந்த காலங்களில் பதிவு செய்த போராட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். இந்நிலை தொடருமெனில் திமுக மக்கள் திரள் அமைப்புகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிவரும். சனநாயக ஆற்றல்கள் ஒன்றுபட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஆதரவான போக்கினை தடுத்து நிறுத்த போராட வேண்டுமென மே17 இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
தோழர்.பி.ஆர்.பாண்டியன் மற்றும் விக்கிரபாண்டியம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு. செல்வராஜ் ஆகிய இருவரையும் விடுதலை செய்க.
போராட்ட வழக்குகளை திரும்பப்பெறுக.
திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
நீதிபதிகளின் சாதிய-மதவாத போக்கை சுட்டிக்காட்டுவது நீதிமன்ற அவமதிப்பென கருதப்படுமெனில், அந்த அவமதிப்பை நூறுமுறை செய்யத் துணிவோம், ஆயிரம்பேர் சிறைபுக அணியமாவோம்.
தன் சொந்த சாதிக்காரனின் எச்சில் இலையில், மற்ற சாதிக்காரன் புரள்வது இழிவில்லையென ஒருவர் தீர்ப்பு சொல்வாரெனில், அந்த நபரின் முகத்தில், அந்த எச்சில் இலையை வீசியெறியும் சமூகத்தினை படைக்கவே நாம் போராடுகின்றோம். சமூக நலனுக்காக எதையும் எதிர்கொள்ளும் துணிவுடனே நாம் களம் காண்கிறோம்.
நாமெல்லோரும் அறிந்த உண்மையை, உரியவர்களிடம் துணிவுடன் ஆவணமாக அளித்திருக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு துணையாக நிற்போம்.
பாஜக மட்டும் தான் பிற கட்சித் தலைவர்களை தன் கட்சி தலைவர்கள் போல கொண்டாடும், ஏனென்றால் கட்சி தொடங்கி 40 வருடம் ஆன பின்பும் ஒரு தலைவர் கூட உருவாகாத ஒரே கட்சி பாஜக மட்டும் தான்.
பார்வர்ட் ப்ளாக் தலைவர் முத்துராமலிங்கதேவரை கொண்டாடுவான்,
காங்கிரஸின் காமராசரை கொண்டாடுவான்,
அதிமுகவின் எம்.ஜி.ஆரை கொண்டாடுவான்.
"..தமிழ்நாட்டுக்கு உழைத்த உன் கட்சி தலைவன் பெயர் ஒன்றையாவது சொல்?.." என்றால் ஓடிப்போய் விடுவான்.
சாமி, பாடல், வரலாறு, இலக்கியம், மொழி, ஜி.எஸ்.டி வரி, ஓட்டு மட்டுமல்ல அடுத்த கட்சி தலைவர்களையும் திருடும் வழக்கம் கொண்டது பாஜக.
அஜீத்குமாருகு ஏற்பட்ட காயங்களின் பட்டியலை கவனியுங்கள்.
இது போல மிருகத்தனமாக அடித்து காயம் ஏற்படுத்த பெற்றோர்கள் கற்றுத் தருவதில்லை,
நண்பர்கள் கற்றுத் தருவதில்லை, உறவினர்கள் கற்றுத்தருவதில்லை,
பள்ளிக்கூடமோ- ஆசிரியர்களோ கற்றுத் தருவதில்லை, கல்லூரி நட்புகளோ-கராத்தே மாஸ்டரோ கூட கற்றுத் தருவதில்லை.
யார் இந்த கொடூரமான தாக்குதலை, தாக்குகின்ற மனநிலையை பயிற்சியளித்திருக்க முடியும்? அதுவும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாக இருக்க முடியும்?
நிராயுதபாணியான, வலியால் துடிக்கிற, அப்பாவியான தனி மனிதனை மரணம் உருவாகும்வகையில் கொடூரமாக தாக்கும் பயிற்சியை கற்றுத்தரும் ஒரு நிறுவனம் எப்படி மக்களுக்கானதாக இருக்க முடியும்?
பெற்றோர்-நண்பர்களுடன் அன்பாய், அரவணைப்புடன் வளர்ந்த இளைஞர்களை வன்முறை வெறியர்களாக மாற்றும் காவல்துறை எனும் அமைப்பு எவ்வாறு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும்? இந்த காவல்துறை நிறுவனம் சனநாயகத்திற்கானதா?
170 ஆண்டுக்கு முன்வரை காவல்துறை என எதுவுமில்லாமல் வாழ்ந்தது தமிழினம்.
வெள்ளையன் கொள்ளையடிக்க உருவாக்கப்பட்ட கட்டமைப்பை எத்தனைக்காலம் கட்டிகாப்பது? இந்திய அரசில் முதலாளிகளின், அதிகாரமிக்கவர்களின், உயர்சாதிகளின் நலனுக்காக பாதுகாக்கப்படும் வெள்ளையர் உருவாக்கிய காவல்துறை நமக்கானதா என சிந்திப்பது நல்லது.
கருப்பர்களுக்கு எதிரான போலீஸ் வன்முறையை கண்டித்து அமெரிக்காவில் எழுந்த போராட்டத்தில் பல மாகாணங்களில் 'காவல்துறை'யை கலைத்திட மாநகர நிர்வாகங்கள் தீர்மானம் போட்டன.
நமக்கு தேவை நிரந்தரத் தீர்வு.
அஜீத்குமாருக்கு நிகழ்ந்தது மற்றவர்களுக்கு நிகழாது என்பதற்கான உத்திரவாதம் தரும் சட்டரீதியான நடவடிக்கைகளும், கடந்த 10-15 ஆண்டுகால காவல்நிலைய/காவல்துறை கொலைகளுக்கான பொறுப்பேற்றலுடனும் இல்லாமல் இந்த துயர நிகழ்வு முடித்து வைக்கப்படுகிறது.
மீண்டும் நினைவில் கொள்வோம், இதுதனிப்பட்ட நிகழ்வல்ல. வன்முறை நிறுவனத்தின் தொடரும் அடக்குமுறை.
உலகளவில் இந்திய அரசு மட்டுமே 'ஐ.நாவின் அரச-சித்தரவதைகளுக்கு எதிரான சாசனத்தை ஏற்காத மாபெரும் சனநாயக நாடு!'
இவனுங்க கொண்டாடுற ஆளுங்கள பாரேன்.இந்த எளிமை கக்கன் பண்ண காரியம் தெரியுமா?1965 ஆம் ஆண்டில் இந்தி ஆதிக்க ஜெனரல் டயர்தான் இந்த கக்கன்.அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் உத்தரவின்பேரில் இந்தி போராட்டத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தியதில் 70 மாணவர்கள் இறந்தனர்.வடக்கன் ராமனின் படத்தை பெரியார் எரித்தபோது கடவுளையே எரிக்கிறாரா என முதல் ஆளாக குரல் கொடுத்தவர்தான் கக்கன்.அம்பேத்கரின் பேச்சை கேட்டு இந்துக்கள் மதம் மாறிவிடக்கூடாது என்பதற்காக கக்கன் வைத்திய நாத ஐயருடன் சேர்ந்து கொண்டு ஆலய போராட்டம் நடத்தி காந்திக்காக பல ட்ராமாக்களை பண்ணி எளிமை,ஏழைப
பாங்காளன் என காட்டி கொண்டாரே ஒழிய பக்கா இந்தி அடிமை இந்த எளிமை
தமிழர்களின் நூறுக்கும் அதிகமான சைவ வழிபாட்டு கோவில்களை இலங்கை அரசோடு கைகோர்த்து மோடி-பாஜக அரசு ஈழத்தில் இடித்தது ஏன்?
இந்த அயோக்கியத்தனத்தை மறைக்கவா முருகன்-விழா நடத்துகிறார்கள்.
@thiruja2009@asebastinraj2 சாதி மதங்கடந்து போராடிய மருதுபாண்டியர் வரலாற்றை திரித்து சங்கி கும்பல் காவி சாயம் பூச பார்க்கிறது. காட்டிக்கொடுத்ததுதான் எப்போதுமே சங்கிகளின் வரலாறாக இருக்கிறது
தோழர் ஒருவர் அழைத்திருந்தார், ".. திடீரென சங்கி கும்பல், மருதுபாண்டியரின் ஜம்பு தீபகற்ப பிரகடனத்தை பற்றி பேசுகிறதே, வெள்ளைக்காரனுக்கு நம்மைக் காட்டிக்கொடுத்த சங்கிகளுக்கு என்ன திடீர் அக்கறை?.." என்றார்.
"...தோழர்... பாளையக்காரர்கள் புரட்சியில் 'ஜம்பு பிரகடனம்' தனித்துவமானது, இது சாதி-மதம் கடந்து தமிழகத்தை ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை செய்யவேண்டுமென மருது சகோதரர்கள் திருச்சி கோட்டை சுவரில் அறிக்கை விடுத்த 224ம் ஆண்டை கொண்டாட ஜூன் 27ம் தேதி மாநாடு நடத்த மே மாதமே அனுமதி கோரி இருந்தோம்.. இதை அறிந்து சங்கிகள் அகண்ட பாரதத்திற்கு மருதுபாண்டியர்கள் போராடியதாக வழக்கம் போல பொய்கதை திரித்து பொதுக்கூட்டம் எங்களுக்கு முன்பே நடத்த முயன்றிருக்கின்றனர் ..இதற்காக ஆளுனர் அறிக்கை, தினமலரில் கட்டுரை, எச்சையின் பேட்டி என பதறிப்போய் அல்லாடுகின்றனர்..
நமக்கான சந்தேகம் என்னவென்றால், காவல்துறைக்கு நீண்டநாளுக்கு முன் மே17 இயக்கம் கொடுத்த 'ஜம்பு பிரகடன மாநாட்டு' அனுமதி கடித விவரங்கள் எப்படி சங்கிகளின் கைகளுக்கு சென்றது என்பதே?
அதுமட்டுமல்ல, ஏற்கனவே ' கோவை புரட்சி', ' தீரனும்-திப்புவும்', 'வேலூர் புரட்சி', 'மருதுவின் போர்கள்' என பாளையக்காரர் புரட்சி பற்றி தொடர் மாநாடுகளை மே17 இயக்கம் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. வெள்ளையர் எதிர்பு என்றாலே வடநாட்டில் 1858ல் நடந்த போரை பற்றி மட்டுமே சாவர்க்கர் பேசுவார். தமிழ்நாட்டு வீரர்களை குறித்து ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ கூட்டம் வாய் திறக்காது. காரணம் வடநாட்டு சிப்பாய் கலகத்தின் 'மங்கள் பாண்டே' எனும் பார்ப்பானை கொண்டாடுவது மட்டுமே பெருமை என்பார்கள்.
முகலாயர்களை எதிர்த்த மராத்திய சிவாஜி பெருமையை பேசுவார்கள், ஆனால் சிவாஜி வம்சாவளியாகிய தஞ்சை அரசர்கள் வெள்ளைக்காரனிடம் பாளையக்காரர்களை காட்டிக்கொடுத்ததை பேச மாட்டார்கள்.
ஆனால் மே17 இயக்கம் இந்த போர்களில் வெளிப்பட்ட தமிழர் ஒற்றுமை, தமிழர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாட்டாளிகளின் புரட்சி, தமிழ்நில மீட்பு ஆகிய அரசியலை முன்வைத்து பேசும். இந்து-முஸ்லீம் ஒற்றுமை மட்டுமில்லாமல் சாதிபேதம் கடந்து ஒன்றாக போர் புரிந்த தமிழக பாட்டாளிகளின் போர்க்குணத்தின் வரலாறை இன்றய தலைமுறைக்கு கொண்டு செல்ல இந்த மாநாடுகளை நடத்துகிறோம். பெரும் கடன்சுமைகளோடு இதை நாங்கள் செய்கிறோம். இந்த பரப்புரை சங்கிகளை தொந்தரவு செய்கிறது. 2022ல் கோவை புரட்சி கூட்டம் நாங்கள் நடத்தும் அதே நாளில், எங்கள் மாநாட்டிற்கு அருகே, ஆர்
எஸ்.எஸ் 'குயிலிக்கு' கூட்டம் நடத்துகிறோம் என உளறிக்கொட்டினார்கள்... தற்போது ஜம்பு பிரகடனத்தை 'அகண்டபாரத போர்' என பொய்யாக கதை சொல்கிறார்கள்... எங்களது பரப்புரை எதிரிகளை அச்சுறுத்துகிறது என்பதால் நாங்கள் சரியான திசையில் செல்கிறோம் எனும் மகிழ்ச்சியை சங்கிகளின் பதட்டம் காட்டியுள்ளது.. ஆகவே, எங்கள் மாநாட்டிற்கு அவசியம் வாருங்கள் தோழர்..." என்றேன்.
ஜூன்27ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள மாநாட்டிற்கு நீங்களும் அணியமாகுங்கள்.
' நமது வரலாறை நாம் பேசவில்லையென்றால், நம் எதிர்காலத்தை எதிரிகள் நிர்ணயிப்பார்கள் என்பதை மறவாதீர்கள்'
சில தலைவர்களின் தேதி உறுதியானதும் மேலதிக விவரங்களை தெரிவிக்கிறோம்.
மாஞ்சோலை தொழிலாளர்களை ஒருமையில் பேசி அழவைத்த நெல்லை ஆட்சியாளர்,
பழங்குடி-குறவர்கள் 'ஏன் அதிகம் பெற்றுக்கொள்கிறீர்கள்?' என்ற திருவண்ணாமலை ஆட்சியாளர், 'இதுகெல்லாம் படிச்சி என்ன செய்யப்போவுது?' என்ற தாம்பரம் கமிசனர், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டின் போது காணாமல் போன தூத்துக்குடி ஆட்சியர், 3 வயது குழந்தையின் நடத்தையால் பாலியல் குற்றம் நடந்தது எனும் மயிலாடுதுறை ஆட்சியாளர்.
IAS, IPS என்பதெல்லாம் அறிவாளிகளுக்கானதாக இருக்கலாம், அறஉணர்வு கொண்டவர்களுக்கானதா எனும் கேள்வியை இதுபோன்ற நிகழ்வுகள் எழுப்புகின்றன.
திமுகவுக்கு சொம்படிக்கும் ஒருத்தனாவது அர்ஜூன் சம்பத்தை கேள்வி கேக்குறானானு பாருங்க?
அர்.சம்பத்தை பாத்து எல்லாம் தொடைநடுங்கனும்னு தாத்தா காலத்து திமுக சொல்லி குடுக்குதா?