தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இதே நான் எழுதிய பதிவு காலத்துக்கும் நிலைச்சு நிற்கக் கூடிய ஒரு பதிவு ❤️என்னைக்கு இந்த வீடியோ எப்போது பார்த்தாலும் எனக்கு கண் கலங்கும் ❤️ இதெல்லாம் பாதம் தாங்கிய பழனிசாமிக்கு புரிய வாய்ப்பே இல்லை...
5 வருஷத்துக்கு முன்னாடி எழுதிய பதிவு தான்... இன்னைக்கு படிச்சாலும் அந்த வீடியோ பார்த்தாலும் சிலுக்குது அதுதான் எங்க தலைவன் ❤️
....
அம்மா மரணித்த போது எனக்கு அழுகை வரவில்லை..
அவரை காசநோய் பீடித்திருந்தது... ஒரு பக்க நுரையீரலை அது கபளீகரம் செய்திருந்தது...
அதனால் அவள் சொல்லொணாத் துயரம் அடைந்தாள்...
மரணம் அவள் சமீபமாய் இருந்தது...
ஒரு மாதம் இருமல் வலியோடு அதிகம் பேசினாள்... ஒருநாள் காலை ஏழு மணியளவில் மரித்துப்போனாள்...
அவள் இறந்த போது எனக்கு அழுகை வரவே இல்லை.... வலியிலிருந்து விடுதலை அடைந்தார் என்ற உணர்வு மட்டுமே மேலோங்கி இருந்தது...
அம்மாவின் உடலை குழியில் கிடத்தி அவள் மேல் மண் விழுந்த போது தான் அழுகை பீறிட்டு வந்தது...
அதற்கு முன் ஒரு சொட்டு அழுகை கூட எனக்கு வரவில்லை...
அப்பா இறந்து போன அரை மணி நேரத்தில் பெரும் அழுகை வந்தது... அடித்துக் கொண்டும் திட்டிக் கொண்டும் மறைமுகமான பாசம் முடிவுக்கு வந்த ஒரு கேவல் அதனுள் இருந்தது...
சத்யம் தியேட்டரில் படம் பார்க்கும்போது உணர்ச்சி வேகத்தில் அழுகை வந்தால் அழுது விடுவேன் அதற்கு நான் வெட்கம் பார்ப்பதில்லை...
இறந்த உடனே தனக்கான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்...
இரவு முழுவதும் பெரும் பதட்டம்.... நண்பகல் வரை ரத்த அழுத்தம் தமிழகத்தில் அனைவருக்கும் ஏறிக்கொண்டிருந்தது...
இடம் கொடுக்கவில்லை என்றால் தமிழகம் பெரும் கலவரத்தில் முடிந்திருக்கும்....
என் தலைவன் குளிக்கப் போய் 200 உயிர்களை பறித்தவன் அல்ல... அவன் சமூக நீதிக்காக கடைசிவரை போராடியவன்... அவனால் வாழ்வு பெற்றவர்கள் தமிழகத்தில் ஏராளம்...
பரபரக்கும் நொடிகளோடு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
சொத்துக் குவிப்பு குற்றவாளி எல்லாம் அரியவகை ஏழையாக பிறந்த காரணத்தால்... அரசு மரியாதையோடு நல்லடக்கம் நடைபெற்ற போது...
தலைவர் கலைஞர் இறந்தும் தனக்கான உரிமைக்காக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றாரே..??? என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தேன்...
நண்பகலில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ஒரு பெரும் சலசலப்பு...
தீர்ப்பு என்னவாக வந்திருக்கும் என்ற ஒரு பரபரப்பு அந்த நொடிகள் மிகக் கொடுமையானவை...
பதிவின் கீழே இருக்கும் வீடியோ காட்சியை பார்த்த நான் வீட்டின் ஹாலில் வெடித்து அழுதேன்...அப்படி ஒரு அழுகை எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை?
அப்போதுதான் தெரிந்தது அரியவகை ஏழையாக பிறக்காத காரணத்தால் திருட்டு ரயில் என்றும் தீய சக்தி என்றும் எள்ளி நகையாடிய கலைஞரை நான் எவ்வளவு நேசித்து இருக்கிறேன் என்று....
இந்த காட்சியை பார்க்கும் எந்த உடன்பிறப்பும் உடனே மறந்து விடமாட்டான்...
முக்கியமாக இந்த வீடியோவில் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தங்கை கனிமொழியை பார்த்தபிறகு மொத்தமாக உடைந்து அழும் அந்த காட்சியை எப்போது பார்த்தாலும் கயவர்களை மன்னிக்கவும் மறக்கவும் கூடாது என்று நினைவுகூற வைக்கும்...
இந்த பதிவையும் இந்த வீடியோவையும் பார்க்கும் எவருக்கும் கண்ணீர் வெளிப்படும் ஏனென்றால் உடன் பிறப்புகள் அவ்விதம் தான்
குறிப்பு...
இது அரசியல் பதிவு அல்ல அனுபவப்பகிர்வு... இதுபோல் நீங்கள் யாருக்காவது கண்கலங்கிய பதிவு இருந்தால் அதை பின்னூட்டங்களில் பகிரவும் நன்றி வணக்கம்
ஜாக்கி சேகர்
#Kalaignar #Stalin #DMK
#Jackiesekar #StalinIsMoreDangerous #KalaignarMemorial #kalaingar100 #kalaigarforever
தி.மு.கழக ஆட்சியின் சாதனைகளை, தமிழ்நாட்டின் பெருமைகளை உலகத்திற்கே எடுத்துச் சொல்லும் திராவிட பெருஞ்சுவர்!
தமிழ்நாட்டு மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்!
தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது!
தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அந்தச் சிங்கத்தின் பிள்ளை நான். தந்தையாக மட்டுமல்ல, தலைவராக அவரை எந்நாளும் போற்றி வணங்குபவன்!
பண்பற்ற பழனிசாமி அவர்களே,
தலைவர் கலைஞரும் நானும் மக்களைச் சந்தித்து முதலமைச்சரானவர்கள். உங்களைப் போல, கூவத்தூர் கும்மாளங்களால், கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் பொறுப்பை ஏலத்துக்கு எடுத்தவர்கள் அல்ல!
எங்களைப் பற்றிப் பேசும் தகுதி உங்களுக்கு இல்லை! தமிழ்நாட்டுக்கு மக்கள் என்றுமே அந்தத் தகுதியை உங்களுக்கு வழங்க மாட்டார்கள்!
மே 4: மக்களின் Judgement Day-வில் உங்களுக்கான தண்டனை கிடைக்கும்!
Preparedness cannot be outsourced to the people.
Prepared for what — leadership, or its absence?
மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா?
#Covid19-க்குத் தயாரானதுபோல் #WestAsiaWar-இன் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் மாண்புமிகு பிரதமர்.
🗓️11/03/2026
போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து,
⛽ அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்
✈️ வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்
⚡️ மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும்
- எனத் தங்களுக்குக் கடிதம் எழுதினேன். (https://t.co/iLujriPP2v)
🗓️12/03/2026
நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். (https://t.co/5yJehl0kYW)
🗓️14/03/2026
தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு,
🔷 உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட்
ஒன்றுக்கு ரூ.2 மானியம்!
🔷 MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்!
🔷 தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை.
🔷 உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி.
உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அறிவித்தோம். (https://t.co/5H0GZOFAHN)
அப்போதே கேட்டேன்:
மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது?
அப்போதும் பதில் இல்லை.
🗓️15/03/2026
தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள்.
மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன்,
அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்:
“எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?”
தேர்தலுக்காக உழைக்க, நான் ரெடி நீங்கள் ரெடியா?..
நம் மண், மொழி, மக்களை காக்க, நான் ரெடி நீங்கள் ரெடியா?..
திராவிட மாடல் 2.0-விற்கு, நான் ரெடி நீங்கள் ரெடியா?..
தேர்தல் நாள் :- 23-04-2026
#VoteForDMK
பெண்களுக்கான ஆட்சி, மக்களுக்கான நல்லாட்சி! - எனத் தமிழ்நாட்டு மக்கள் வழங்கும் நற்சான்றிதழே இந்த ஆட்சியின் மகத்தான சாட்சி. மக்களின் பேராதரவோடு 2026-ல் மகத்தான வெற்றி நிச்சயம்.
#StalinWave2026
பெண் கல்வியில் புரட்சி செய்யும் புதுமைப் பெண், பொருளாதார சுதந்திரம் தரும் மகளிர் உரிமைத் தொகை, தடையற்ற பயணத்திற்கு விடியல் பயணம் தமிழ்நாட்டின் இந்தத் திட்டங்கள் வெறும் பெயர்கள் அல்ல, பெண்களின் முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகள்.
தடைகளைத் தகர்த்து, கனவுகளை நனவாக்கும் தமிழ்நாட்டுப் பெண்களின் வெற்றிப் பயணம்! கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் என ஒவ்வொரு துறையிலும் சிகரம் தொடும் சிங்கப்பெண்களுக்கு எங்களின் வாழ்த்துகள்
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
#InternationalWomensDay #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
மேற்கு மண்டலமே அதிரும் வகையில் கோவையில் திரண்டிருக்கிறது கொள்கைப் படை! The OG Dravidian Stock! பெரியார், அண்ணா, கலைஞரின் வழியில் களமிறங்கும் கருப்பு-சிவப்புப் படை.
இன்று கோவையில் சந்திப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
தொடங்கியது வெல்லும் தமிழ்ப் பெண்களின் மாபெரும் பரப்புரை! வீடுகள் தோறும் விடியலின் சாதனைகளை கொண்டு சேர்க்கும் தலைவர் ஸ்டாலினின் மகளிர் படை.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
தொடங்கியது வெல்லும் தமிழ்ப் பெண்களின் மாபெரும் பரப்புரை! வீடுகள் தோறும் விடியலின் சாதனைகளை கொண்டு சேர்க்கும் தலைவர் ஸ்டாலினின் மகளிர் படை.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
கோவையில் திமுக மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. கருப்பு சிவப்பு இளைஞர் படை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர். இளந் தலைவர் எழுச்சிமிகு சிறப்புரை ஆற்றினார்!
#Youth4DMK2026
கோவை கருமத்தம்பட்டியில் கொள்கை உறுதிமிக்கக் இளைஞர் படை ஒன்று கூடுகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்ற இன்று மாலை திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
#Youth4DMK2026
திமுக என்ற ஆலமரத்தின் வேர்களாக விளங்கும் BLA-2, BLC, BDA வாக்குச்சாவடிக் குழுவினருக்கான, 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' தென் மண்டல பயிற்சி மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்!
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்