மேடைப் பேச்சு ஒரு பக்கம், நிஜக் கொடுமைகள் மறுபக்கம் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குபவர்களைக் கூடவே வைத்துக் கொண்டு பேசுவது நியாயமா முதல்வர் அவர்களே? மாற்றத்தை உங்கள் கட்சியிலிருந்து தொடங்குங்கள், அதன் பின் மக்களுக்குப் பேசுங்கள்!
#TVKFails
அமைதியாக இருக்கலாம் என்று நினைத்தாலும், இந்த #SofaModel ஆட்சியில் நடக்கும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளையும், குதிரை பேரத்தையும் மக்களிடம் எடுத்துரைக்காமல் இருக்க முடியாது.
எங்களுடைய கேள்விகள் வலுவாக இருக்கும் டம்மி CM சார்!
#TVKFails
மின்தடையை சரிசெய்யத் துப்பில்லாமல், "ஃபியூஸ் திருடு போய்விட்டது" என்று சிறுபிள்ளைத்தனமான கதைகளை அவிழ்த்துவிடும் மின் வெட்டு அமைச்சர் நிர்மல் குமாருக்கு இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க தைரியம் இருக்கிறதா?
பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின்தடை ஏற்படும்? ஃபியூஸ் திருடுபோனால் மின்சாரம் முற்றிலுமாகத் தடைபடும், ஆனால் எப்படி விட்டுவிட்டு வருகிறது? அதுவும் ஒரே நேரத்தில் சென்னையின் பல பகுதிகளில் எப்படி திட்டமிட்டபடி ஃபியூஸ் திருடுபோகும்?
தங்களது நிர்வாகத் திறனின்மையை மறைக்க இப்படியா அபாண்டமாகப் பொய்சொல்லி மக்களை முட்டாளாக்க நினைப்பது?
ஒருமுறை தெரியாமல் வாக்களித்துவிட்டார்கள் என்பதற்காக, 5 வருடங்களும் மக்களை முட்டாள்களாகவே நடத்த முடிவு செய்துவிட்டது இந்த டம்மி CM தலைமையிலான #SofaModel தவெக அரசு.
கழகத் தலைவர் அவர்களின் பேச்சைத் திரித்துப் பரப்புகிறார்கள். ஆட்சிக் கலைப்பு அல்லது கவிழ்ப்பு என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல; மக்கள் ஏற்கனவே களைத்துப் போய்விட்டார்கள்.
“இந்த ஆட்சியை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டோம்” என்று தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருந்தார். ஆனால், தொடர்ந்து நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் நடமாட்டம், மின்வெட்டு, மக்கள் போராட்டங்கள் போன்ற சூழ்நிலையில் விமர்சனம் செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது.“மூன்று மாதம் கூட தாங்காது போலிருக்கிறது” என்ற தலைவரின் கருத்து, ஆட்சி கவிழும் என்ற பொருளில் அல்ல; மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தியைக் குறிப்பதாகும்.
கலைப்பு அல்லது கவிழ்ப்பு எங்கள் நோக்கம் அல்ல. மக்களே மிக விரைவாக ஏமாற்றமும் சோர்வும் அடைந்துவிட்டார்கள் என்பதைத்தான் தலைவர் சுட்டிக்காட்டினார்.
@mkstalin
“கழகத் தலைவர் அவர்களது பேச்சைத் திரித்துப் பரப்புகிறார்கள்”
“ஆட்சிக் கலைப்பு - கவிழ்ப்பு என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல; மக்கள்தான் களைத்துப் போய்விட்டார்கள்”
- விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. அவர்கள் அறிக்கை.
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியைப் பார்த்தாலும் நாளிதழ்களைத் திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான த.வெ.க. நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர்.
ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்தப் பெண்ணால் குற்றம் சாட்டப்படும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறது தூய சக்தி என்று கபட வேடம் போடும் அரசு.
“இந்த ஆட்சியை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டோம்” என்று எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லியிருந்தாலும், நிலைமை மிக மோசமாகப் போய்வரும் நிலையில் அவர் விமர்சனம் செய்தார். “ஆறு மாதம் அல்ல, மூன்று மாதம் கூட தாங்காது என்ற நிலைமையில் தான் ஆட்சி போய்க்கொண்டு இருக்கிறது” என்று தலைவர் அவர்கள் பேசினார்கள். ஆனால், மூன்று மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அவர் சொன்னதாகத் திரித்து செய்தி பரப்பப்படுகிறது.
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்கள் கேட்டபோது, தி.மு.க. தலைவர் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பேசி உள்ளனர். ஆட்சி கவிழும் என்று தலைவர் அவர்கள் பேசவுமில்லை; அது அவரது நிலைப்பாடும் அல்ல!
“ஆறு மாதம் வரை, இந்த ஆட்சி பற்றி விமர்சித்துப் பேசப் போவதில்லை” என்று அவர் சொல்லியிருந்தார். ஆனால் நாள்தோறும் கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டுகள், போதை மருந்துகள் நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சுகள், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதைப் பார்க்கும் போது, இதை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும் என்ற பொருளில், “மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது” என்று பொருள்படும்படிதான் சொன்னார்கள்.
ஆசை அறுபது நாள் என்பார்கள். ஆனால் இன்றைய ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்கள் ஒரு வாரம் தான் அமைதியாக இருந்தார்கள். சமூகவலைத்தளங்கள் முழுக்கவே ஆளும் கட்சிக்கு எதிரான ஆவேசமான கருத்துகளைத்தான் மக்கள் சொல்லி வருகிறார்கள்.
இதைத்தான் தலைவர் அவர்கள் தனது உரையில் சுட்டிக் காட்டினார்கள். கலைப்பு, கவிழ்ப்பு எண்ணத்தோடு அல்ல. மக்களே களைத்துப் போய்விட்டார்கள் அதற்குள்!
சிங்கப்பெண் படை முதலில் களமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டியது தூத்துக்குடியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த தவெகவினர் மீதும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிரட்டல் விடும் தவெக எம்எல்ஏ சரவணன் மீதும் தான்!
#TVKFails
பட்டப்பகல்ல ஒரு ஏரியால ஃபியூஸ் கேரியர திருடிட்டாங்க, அதனால தான் நடு ராத்திரில சென்னையோட பல ஏரியால பவர் கட் ஆகி மக்கள்லாம் இரவு உலா வர மாதிரி காத்தோட்டமா சாலையில விசில் ஊதி கொண்டாடுனாங்க. நம்புறோம் நம்புறோம்.
Victim cardம் Blame gameம் தான் அரசியல்னு நினைக்குறானுங்க போல.
Oxymoron-க்கு முகமிருந்தால் அது Toxic Vettri Kazhagam போலத்தான் இருக்கும்!
பெண்கள் பாதுகாப்புக்கு 'சிங்கப்பெண் படை' என தனக்குத் தெரிந்த அதே சினிமா பாணியில் ஒரு buildup.
சமீபத்தில் தூத்துக்குடியில் வேலே வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது TVK நிர்வாகிகள். அதை மறைக்க TVK MLA கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, இப்படி ஒன்று நடக்கிறது என்பதே கூட தெரியாத இந்த டம்மி CM தான், இந்தப் படையைத் தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப் போகிறாராம்!இதுதான் உங்களின் Women Safety லட்சணமா?
Social media-வில் நியாயமான கேள்வி கேட்டால் கூட பெண்களின் குடும்பத்தார் வரை இழுத்து ஆபாசமாக வசைபாடும் உங்களின் 'Abusive Warriors'-ஐ அரவணைத்துக்கொண்டு, நீங்க பெண்களைக் காக்கப் போகிறீர்களா? It's pure hypocrisy!
திமுக ஆட்சியின் Pink Patrol வாகனங்களுக்கு 'சிங்கப்பெண் படை' என்று புதுசா Sticker ஒட்டுவதும், பெண் காவலர்களின் Uniform-ஐ மாற்றுவதும் தான் உங்க பிரம்மாண்ட திட்டமா? வெறும் PR Optics & Narrative விளம்பரங்கள் நிஜ பாதுகாப்பை தராது.
இத்திட்டத்தின் Launch-ஐ காரணமே இல்லாமல் பலமுறை ஒத்திவைத்ததிலேயே உங்களின் அலட்சியம் அப்பட்டமா தெரியுது.
இந்த படைக்கு தனியாக ஒதுக்கப்பட்ட Budgetary Allocation எவ்வளவு?
இது புது நிதியா? இல்ல பழைய Police funds-ஐ பிரித்துச் செய்யும் கண்துடைப்பா?
New vehicles, CCTV integration மற்றும் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதற்கு எந்த Data-வும் அரசிடம் இல்லை.
உங்கள் Abusive warriors-க்கு அத்துப்படியான Cyber crimes-ஐ தடுக்க, கையாள அதற்கான Training Modules & SOPs எங்கே?
கேமரா முன் ஆக்ரோஷமாக dialogue பேசி Acting பண்ணுவதும், Sticker ஒட்டுவதும் வெற்று கைதட்டலை வேணா பெற்றுத் தரும். But where is the real women safety? 🤏🏼
சரி, இன்னைக்கு speech மனப்பாடம் பண்ணியாச்சா? இல்லை, இதிலும் தவறு நடந்தால் அதை எப்படி அடுத்தவர்கள் மீது பழி போடலாம் என்ற point கிடைக்காமல் உங்கள் script writer தடுமாறிக் கொண்டு இருக்கிறாரா?
#TVKFails
ஆளத் தெரியாத கையாலாகாத அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையை மறைக்க தினம் ஒரு கதையைச் சொல்கிறது. கடைசி வரைக்கும் ஓட்டு போட்ட மக்களுக்கு Current மட்டும் கிடையாது போல!
#TVKFails
ராப் இசை பாடகர் வேடன் அவர்கள் இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு @Udhaystalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது அவருக்கு @muthamilarignar பதிப்பகத்தின் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு: திமுக 75’ நூலையும், பெரியார்-அண்ணா-கலைஞர் சிலையையும் அன்பளிப்பாக வழங்கி வாழ்த்தினார் எதிர்கட்சித் தலைவர் அவர்கள்.
#Vedan
உண்மையை பேச வேண்டிய ஊடகங்கள், தினமும் பொய் செய்திகளை சாக்கடை போல வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறது; இப்படியும் நாலந்திர பிழைப்பு பிழைக்கலாம் என்பதற்கு சாட்சியாய் வாழ்பவர்கள் மனசாட்சியை குத்தகைக்கு விடுவார்களா? அல்லது விற்பனைக்கா? ஒரு சான் வயிற்றுக்கு இப்படி பொய் செய்தி வெளியிட்டுத்தான் பிழைக்க வேண்டுமா?
குறிப்பாக செய்தியை வாசிக்கும் பெண்மணி ஒரு செய்தியை வெளியிடும்போது உண்மையை மறைத்து ஒரு கட்சி சார்பான பெண்மணியாகவே இருப்பது ஏன்?
தொடர்ந்து இதுபோல அவதூறுகளை வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தெரிவித்துக்கொள்கிறோம்.