‘பெரியாரைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக சீமான் அறிவிப்பு
சமீபகாலமாக சீமான் பெரியார் தொடர்பாக பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், இந்த தலைப்பால் அக்கட்ச���யினரிடையே குழப்பம் நிலவியது; இதையடுத்து இதில் குறிப்பிடப்படும் ‘பெரியார்’ என்பது ஒருவரை குறிப்பிடுவது அல்ல; பெரியோர்கள், மூத்தோர்கள், மகத்தான சிந்தனையாளர்கள் ஆகியோரை போற்றுவதை குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நாதக தரப்பில் விளக்கம்
#Periyar #Ntk #Seeman #ThanthiTV
வள்ளுவருக்கு கூட விளக்க உரை தேவை, பாரதிக்கு தேவை இல்லையாம். ஆமாப்பா! இன்னும் ஒரு 1000 வருடங்களுக்கு பிறகு பாரதியின் கவிதைக்கும் விளக்க உரை தேவைப்படும்.. வள்ளுவன், கம்பன், காலம் என்ன?, பாரதியின் காலம் என்ன?.. இதெல்லாம் ஒரு ஒப்பீடா??
இது ஆரிய நாடு என்று சொன்னவர் பாரதியார். அப்போ சீமானும் இது ஆரிய நாடு என்ற கொள்கை கொண்டவர் தானா?
தமிழுக்கு இலக்கணம் வகுத்து கொடுத்தது ஆரிய மைந்தன் என்று சொன்னவர் பாரதியார் அப்போ சீமானும் அந்த கொள்கை உடையவர் தானா?
திருக்குறள், சிலப்பதிகாரம் எல்லாம் ஆரியச் செல்வம் என்று சொன்னவர் பாரதியார். அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
உலகில் உள்ள எல்லா நாகரிகங்களுக்கும் மூலம் ஆரிய நாகரிகம் என்று சொன்னவர் பாரதியார். அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
சமஸ்கிருதத்தில் உள்ள வர்க்க எழுத்துக்கள் போல தமிழில் இல்லை. தமிழில் எழுத்துக் குறையுள்ளது என்று சொன்னவர் பாரதியார். அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
நன்னூலை வெறுத்தவர் பார���ியார் அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
இந்தியாவின் பொது மொழியாக இந்தி தான் வர வேண்டும் என்று சொன்னவர் பாரதியார். அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
சமஸ்கிருதம் தான் பொது மொழியாக வேண்டும் என்று சொன்னவர் பாரதியார். அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
நால் வருணத்தின் பெருமை பேசியவர் பாரதியார். அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
கலப்பு மணத்த��ற்கு எதிராக இருந்தவர் பாரதியார் அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
நீதிக்கட்சியின் டாக்டர் மாதவன் தனிநாடு கேட்கும் போது அதை கேலி செய்தவர் பாரதியார். அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்கக் கூடாது என்று சாடியவர் பாரதியார். அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
பெண்கள் விவாகாரத்து செய்து கொள்ளக் கூடாது என்று சொன்னவர் பாரதியார். அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
நிலங்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் பாரதியார். அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
இந்து மதத்தை ஆதரித்து பௌத்த மதத்தை வெறுத்தார் பாரதியார். அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
மதமாற்றம் பற்றி கவலைப்பட்டவர் பாரதியார்.அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
பசு இந்துக்களின் தெய்வம் என்றவர் பாரதியார். அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
கிறிஸ்தவர்கள் தேசபக்தி அற்றவர்கள். கிறிஸ்தவ பள்ளிகளில் இந்துக்களை சேர்க்காதீர்கள் என்று சொன்னவர் பாரதியார். அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
இந்தியாவுக்கு சுதந்திரம் இந்து தர்மத்தைக் காப்பதற்கே என்று சொன்னவர் பாரதியார். அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
உடன்கட்டை ஏறி இறந்து போனவர்களை உத்தமிகள் என்று சொன்னவர் பாரதியார். அப்போ சீமானும் அந்தக் கொள்கை உடையவர் தானா?
பாரதி ஒரு இந்து தேசிய, இந்திய தேசிய கவிஞர்.
தமிழ் தேசியத்திற்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தான் கவிஞர்
இந்த சீமான் கூட்டம் எதையும் தெரிந்து கொள்ளாமல் கண்டதை உளறும் கும்பல்
பாரதியாரை பாரதிதாசன் விட்டுக் கொடுக்காமல் அதே நேரம் மற்றவர்கள் பாரதியாரை விமர்சனம் செய்தாலும் தான் விமர்சனம் செய்யாமல் போனது பழகிய பழக்கத்தால் தான்.
நிறைய பாரதியைப் பற்றி உண்மைகளை பாரதிதாசன் மறைத்து விட்டார் . புகழ்ச்சியை மட்டும் தான் பாரதியாருக்கு பாரதிதாசன் கொடுத்தார்.
பாரதிதாசனிடம் இருந்து நட்பிற்கு உண்மையாக இருப்பதை கற்றுக் கொள்ளலாம்.
ஆணவக்கொலைகளுக்குத் தனிச்சட்டம் வேண்டாம் என்ற மனநிலையி��் இருந்த முதல்வர், இப்போது தனி கமிஷன் அமைத்திருப்பது நம்பிக்கையான விஷயம். அடுத்தடுத்த ஆணவப்படுகொலையால் மக்கள் மத்தியில் எழுந்த அழுத்தத்தால் அந்த கமிஷனை அமைத்திருக்கிறார். ஆனால், அந்த கமிஷன் எப்படி செயல்படுகிறது எனப் பாருங்கள்.
கமிஷன் அமைக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னமும் ஆணவக்கொலைகளால் பாதிக்கப்பட்ட யாரையும் அந்த கமிஷன் சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களை���் சந்திக்காமல் ��ப்படி சட்டம் இயற்றுவீர்கள்? இதிலும் மெத்தனப் போக்கைக் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கௌசல்யா
நாடு விடுதலை பெற்ற நாளில் எந்த நிலையில் வழிபாட்டுத்தலங்களும், அதன் தன்மையும் இருந்ததோ அதே நிலையே தொடர வேண்டுமென்கிறது 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டம். அச்சட்டத்தின்படி, திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே இருந்த வழிபாட்டு முறைகளும், நடைமுறைகளுமே தொடருவதே சரியானதாக இருக்கும். அந்த வகையில், காலங்காலமாக தீபமேற்றும் இடத்தைவிடுத்து, தர்காவுக்கு அருகில் புதிய இடத்தில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற ஒன்றாகும். பொதுமக்கள் தங்களது மனஅமைதிக்காகவும், மெய்யியல் நம்பிக்கைக்காகவும் வழிபடும் வழிபாட்டுத்தலங்களையே பதற்றத்துக்குரிய இடமாக மாற்றுவது இழிவான அரசியலாகும்.
‘நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமன்றம் எனும் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டால், அரசியலமைப்புச்சட்டம் தோல்வி அடைந்ததாகப் பொருள் என்கிறார்’ அண்ணல் அம்பேத்கர். அத்தகைய நிலையில், தற்காலச்சூழல் மாறியிருப்பது கெடுவாய்��்பானதாகும். மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்துச் சமத்துவத்தை நிலைநாட்ட மண்ணின் மக்கள் தமிழர் எனும் இன உணர்வோடு திரள்வதே ஓர்மைக்கான ஒற்றைப் பெருவாய்ப்பாகும்.
திருப்பரங்குன்றம் மலையை வைத்து மதுரையில் மதமோதலை உருவாக்கி, மக்களைப் பிளவுபடுத்த முற்படும் சதிச்செயல்களை சாதி, மதம் கடந்து மொழியால் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற இன அடையாளத்தோடு ஒற்றுமை உணர்வுடன் ஓரண��யில் நின்று முறியடிப்போம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2)
திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா? மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு மண்ணின் மக்கள் ஓர்மைப்படுவோம்!
மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுநாள்வரை பின்பற்றாத ஒரு நடைமுறையைச் சட்டத்தின் வாயிலாகப் புகுத்தி, தர்காவுக்கு அருகாமையில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற பிரிவினைகளுக்கே வழிவகுக்கும். இராமஜென்ம பூமியை வழிபடத்தான் போகிறோமென உச்ச நீதிமன்றத்தில் கூறிய இதே மதவாத கும்பல், பாபர் மசூதிய��� அயோத்தியில் என்ன செய்தது என்பதை நாடறியும். அதுபோல, மதுரை மண்ணை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சிக்கு நீதித்துறையே துணைநிற்பது வெட்கக்கேடானதாகும். சமூக அமைதியை சீர்கெடுக்கும் நோக்கோடு செய்யப்படு��் இத்தகைய சதிச்செயல்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. மதம் கடந்த ஒற்றுமையைப் போற்றிக் காத்து வரும் மகத்துவம் மிகுந்த மதுரை மண்ணில் மதமோதலை உருவாக்குவதற்காகக் குறிவைத்து நடத்தப்படும் இந்துத்துவ அமைப்புகளின் மதவாத அரசியல் செயல்பாடுகள் யாவும் தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட வேண்டியதாகும்.
முப்பாட்டன் முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் சிவன் கோயிலும், மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. பல நூறு ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த வழிபாட்டுத்தலங்களால் எந்தச் சமயத்தவரிடையேயும் எந்த மோதலும் இதுவரை நிகழ்ந்ததில்லை. ‘உன் மதம் சிறந்ததென்றால் வழிபடு! என் மதமும் சிறந்ததது; வழிவிடு’ எனும் மதநல்லிணக்கக் கோட்பாட்டைப் பின்பற்றி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகச் சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் மதுரை மண்ணின் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் சிக்கந்தர் தர்காவைக் குறிவைத்து, ‘சிக்கந்தர் மலை’ எனப் புதிய பெயரைப் புனைந்து, இசுலாமியர்கள் மலையை ஆக்கிரமிக்க முயல்வதாக அவதூறைப் பரப்பி, மதவுணர்வுகளைத் தூண்டக்கூடிய வேலையை இந்துத்துவ அமைப்புகள் செய்வது மிக ஆபத்தான அரசியலாகும். சிக்கந்தர் மலை என எந்த இசுலாமிய இயக்கமும் கூறாத சொல்லாடலை வலியத் திணித்து, திருப்பரங்குன்றம் மலைக்காகப் போராடுவதாகக் கூறும் பெருமக்களே! ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள மலைகள் எல்லாம் வேட்டை���ாடப்பட்டு, கனிமவளங்களாக அண்டை மாநிலங்களுக்கு அள்ளிச் செல்லப்படும்போது எங்கே போனீர்கள்? அப்போதெல்லாம் முருகன் மீதான உங்கள் இறைப்பற்று எங்கே போனது? தமிழ் வழிவந்த முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பல நூறு கோயில்களில் குடமுழுக்கும், வழிபாடும் செய்யக்கூட வழியற்ற நிலை தாய்த்தமிழ்நாட்டில் இருக்கிறதே? அதற்கெதிராக ஒருநாளும் நீங்கள் வீதிக்கு வந்து போராடியதில்லையே ஏன்? வாக்குவேட���டைக்காக சமூக அமைதியைக் கெடுக்க முயல்வதுதான் உங்களது ஆன்மீகப்பற்றா? வழிபாட்டுணர்வா? பேரவலம்!
சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு வழிபடும் முறை இசுலாமியச் சொந்தங்களிடையே பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதனைச் சிக்கலாக்கி, அரசியல் ஆதாயம் தேட முற்படும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளை உரிய நேரத்தில் கட்டுப்படுத்தத்தவறிய திமுக அரசு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடச் சென்ற அபுதாஹீரைத் தடுத்து நிறுத்தி, அனுமதி மறுத்த காவலர்கள் மீது துறைசார்ந்து நடவடிக்கை எடுத்து, அங்கு பல ஆண்டுகளாக ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்யும் முறை இ���ுக்கிறதென்பதை அரசுத்தரப்பு மக்களுக்கு எடுத்துரைத்திருந்தால் மதவெறியர்களின் அரசியல் சூழ்ச்சிகள் நடந்தேறியிருக்குமா? தும்பை விட்டுவிட்டு இப்போது வாலைப் பிடிக்கிற வேலையைச் செய்கிறது ஆளும் திமுக அரசு. ‘இந்துக்களின் விரோதி’ என மதவாதிகள் செய்யும் அரசியல் பரப்புரைக்குப் பயந்து, சமரசம் செய்துகொள்ளும் திமுக அரசின் கையாலாகாத்தனமே இந்தளவில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
(1/2)
@idumbaikarthi மதமாற்ற தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு: 2002
கரசேவையை ஜெயலலிதா வெளிப்படையாக ஆதரித்தது 1990-ஆம் ஆண்டு.
இரு முறை பாஜகவோடு கூட்டணி வைத்த ஆண்டு 1998, 1999 நாடாளுமன்றத் தேர்தல்,
இதெலாம் தெரிஞ்சும் நீங்க ஏன் டா 2011ல ஆதரவு கொடுத்தீங்க பைத்தியம்
ஜெயலலிதா மதச் சார்பின்மையையும், சட்டம் ஒழுங்கையும் காத்தாராம். சொல்வது தவெகவைச் சேர்ந்த அருண்ராஜ்.
மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. கரசேவையை ஆதரித்தவர் ஜெயலலிதா. இரு முறை பாஜகவோடு கூட்டணி வைத்தவர் ஜெயலலிதா.
சட்டம் ஒழுங்கு சொல்லவே தேவையில்லை. வாசாத்தி பா��ியல் வன்முறைகள் தொடங்கி, சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் அடித்தது தொடங்கி எல்லாம் ஜெயலலிதா ஆட்சியின் உபயம்தான். இதுவெல்லாம் சட்டம் ஒழுங்கில் வருமா?
துணிவோடு ஒரு முடிவை எடுப்பவர்தான் ஜெயலலிதா. அதற்காக, அவர் நிகழ்த்திய அரச வன்முறையையும், எதேச்சதிகாரப்போக்கையும், அடக்குமுறைகளையும் எப்படி ஏற்க முடியும்? எப்படி நியாயப்படுத்த முடியும் அண்ணே? @arunrajkg
பெரியாரின பிம்பத்தை உடைக்காமல் விடமாட்டேன் என துள்ளிய ஒருவர்..ஈரோடு தேர்தலில் டெபாசிட் இழந்தார்.
* தற்போது காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியது மூன்று நாட்களாக பேசுபொருளாகி.. கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
* காமராஜருக்கு ஏசி வசதி செய்தது மற்றும் தமிழ்நாட்டை இனி நீங்கள்தான் காப்பாற்ற வேண்டுமெ�� கருணாநிதியிடம் காமராஜர் சொன்னதாக திருச்சி சிவா கூறியுள்ளார்.
* இவ்விரண்டு தகவலும் உங்களுக்கு யார் சொன்னது எனக்கேட்டால்.. கருணாநிதி சொன்னாராம்.
* நாட்டை ஆள்��வர்கள்.. மக்களின் பணத்தை.. தங்கள் குடும்ப நலனுக்காக சேர்த்தது, சேர்ப்பது எத்தனை கோடி என்பதுதான் அவர்களின் நேர்மைக்கான அளவுகோல்.
* அவ்வகையில் காமராஜர் சேர்த்து எத்தனை லட்சம்? எத்தனை கோடி ரூபாய்?
* தமிழக மக்கள் பலரும் மறுக்க இயலாத உண்மை.. இம்மாநிலத்தின் சிறந்த முதல்வர் காமராஜர் என்பதே. இரண்டாம், மூன்றாம் இடத்திற்கு யார் வேண்டுமானாலும் போட்டி போடட்டும்.
* காமராஜரின் புகழை மழுங்கடிக்க முயலும் எந்த முயற்சியும் தமிழர்களிடம எடுபடாது.
நான் ஜோசப். உணவு இல்லை! வீடு இல்லை! தண்ணீர் இல்லை! - பசியால் வாடும் பாலஸ்தீன குழந்தையின் அழுகுரல். உலகமே, பாலஸ்தீனத்தை விடுவிக்க ஒன்றுபடுங்கள்! #FreePalestine#EndGazaSiege#AllEyesOnMadleen More: https://t.co/HkiJiuOJGH
முதன் முதலாக 'துவையல் விருந்து' என்ற பெயரில் சமபந்த�� விருந்தினைத் தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றாக அமரவைத்து உணவளித்த உண்மையான அருந்தவத் தமிழ்ப்பெரியார்!
'கோயிலுக்குள் நுழையாதே தீட்டு' என்று தடுத்த கோட்பாட்டிற்கு எதிராக, அந்த கோயிலே எனக்கு தீட்டு என்று முழங்கி, 'கண்ணாடி முன் நின்று, உன்ன��� நீயே வழிபடு! நீதான் கடவுள்!' என்று தனிவழியைத் தோற்றுவித்த உண்மையான மெய்யியல் பேரறிஞர்!
பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன்னுடைய சொந்த நிலத்தில் தனிக் கிணறு வெட்டி, அதில் அனைத்து மக்களையும் நீர் எடுக்க அனுமதித்து, அதையே பொதுக்கிணறாக்கிய உண்மையான பொதுவுடைமைவாதி!
முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது என்ற கட்டுப்பாடுகளைத் தகர்க்க, அதைத் தலையில் கட்டிக்கொள்ளச் செய்து, தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திய உண்மையான சமயப்புரட்சியாளர்!
'தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்' என்று கற்பித்த உண்மையான பேரருளாளர்!
ஐயா வைகுண்டர் அவர்கள் தமிழ் மண்ணில் தோன்றியத் திருநாளில், ஐயாவின் சமத்துவ வழிப்பற்றி வணங்குவோம்!
ஐயா வைகுண்டரின் அருட்கொடையை நினைந்து போற்றுவோம்!
நாம் தமிழர்!