பணம் உங்களிடம் இருந்தால்
நான்கு பேர்
உங்களை வந்து பார்ப்பார்கள்.
பணம் .....
உங்களிடம் இல்லாவிட்டால்
நான்கு பேரை
நீங்கள் போய் பார்க்க
வேண்டியிருக்கும்.
- ஆட்டோ சித்தர்.
இப்போது ஆச்சர்யங்கள் நிறைந்த
ஒரு புத்தகம் அச்சில்.......
"வாவ்.....ஐந்தறிவு "
இன்னும் ஒரு வாரத்தில்
உங்கள் கைகளில்......
இது ஒரு புதிய தலைமுறை வெளியீடு.
உங்கள் மனம் எப்போது டல்லடிக்கும்..எப்போது டமுக்கடிக்கும் ?
யாராவது வீட்டுக்கு வந்து வெட்டி அரட்டை அடிக்கும்போது நேரம் வீணாகிறதே என்று நினைக்கையில் மனசுக்குள் டன் டன்னாய் டல்
ஒரு நாவலை எழுதி முடித்து விட்டு கைகளை தூக்கி சோம்பல் முறிக்கும் போது மனசுக்குள் டமுக்கோ
டமுக்கு.
பெற்றவர்களின் அருமை பிள்ளைகளுக்கு
ஏன் ஸார் புரிவதில்லை?
( எம்.இளங்கோவன்,
தேவகோட்டை)
வெறுமையாய் இருக்கும் சாய்வு
நாற்காலிகளையும்,
பிரிக்கப் படாத
நாளிதழ்களையும் பார்க்கும் போது
மட்டுமே
அவர்களுக்கு
அம்மா, அப்பாக்களின்
அருமை புரியும்.
எல்லோருக்கும் நம்மைப் பிடிக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?
( முத்துராமன், காரைக்குடி)
நமக்கு துன்பம் தருகிறவர்களுக்கு தண்டனை தர தாமதம் செய்யுங்கள்.
ஆனால்......
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனைக் கூட செய்யாதீர்கள்.
அப்புறம்..என்ன?
நமக்கு எல்லோரும்
நல்லவர்களே !
ஆடும் சரி, மானும் சரி வேரை
விட்டுட்டுத்தான் புற்களை சாப்பிடும், சில நாட்கள் கழித்து அதே இடத்தில் புற்களை மீண்டும் வளரும் மீண்டும் அதையே உணவாக எடுத்துக் கொள்ளும்..!!
ஆனால் மனிதன் தான்
இயற்கையை வேரோடு அழித்துக் கொண்டு இருக்கிறான்..!!
'இப்படித்தான்' என மாறிப் போன வாழ்வையும்..
'இனியென்ன சுவாரஸ்யம்' என்றான மனதிற்கும்
இதுதான் வாழ்வின் உயிர்ப்பென்பதை
பரிசளித்துவிட்டு போகின்றது,
எதிர்படும் அன்பின் இழைகள்...