₹10 கூடுதல் வசூலிக்க இனி இடமே இல்லை!
டாஸ்மாக் ஊழியர்களின் நலனுக்காக அரசு ₹480.96 கோடி கூடுதல் செலவில் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.
01.09.2026 முதல் ஊதிய உயர்வு!
Supervisor - ₹33,023
Salesperson - ₹30,284
Assistant Salesperson - ₹28,680
மேலும்,
✅ ₹20,000 பண்டிகை முன்பணம்
✅ ஆண்டுக்கு 3 சீருடைகள் + தையல் கட்டணம்
✅ 8 மணி நேர வேலை + வாரம் ஒரு நாள் விடுமுறை
✅ கடைகளுக்கு தூய்மை பராமரிப்பு படி
✅ 250 ஊழியர்களுக்கு பதவி உயர்வு
ஊழியர்களுக்கு அரசு உரிய சலுகைகளை வழங்கிவிட்டது.
அதனால் இனி…
“₹10 கொடுங்க…” என்ற கூடுதல் வசூல் இருக்கக்கூடாது!
நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட ஒரு ரூபாய் கூட அதிகமாக வசூலித்தால் நடவடிக்கை உறுதி!
முதல் தவறு - 3 மாத இடைநீக்கம்
மீண்டும் தவறு - நேரடி பணிநீக்கம்!
சலுகை கொடுப்பதில் அரசு தாராளம்…
ஊழலில் மட்டும் அரசு இரக்கமற்றது! 🔥
இதுதான் மாற்றம்.
இதுதான் கட்டுப்பாடு.
இதுதான் மக்கள் நல ஆட்சி!
@VigneshTvkCbe@TVKVijayHQ
#TNAssmebly #TNCMVijay
பல வருஷங்களுக்கு முன்னாடி, சித்திக் சார் இயக்கத்துல தமிழ்ல 'பிரண்ட்ஸ்' படத்தோட படப்பிடிப்பு திருவனந்தபுரத்துல நடக்குது. அதுல நடிகர் சூர்யாவும் இருக்காரு.
சூர்யா அங்க இருக்கும்போது, தினமும் புரொடக்ஷன் பக்கம் ஒரு சின்ன குழந்தை, ஒரு பெண் குழந்தை வந்து சாப்பிட்டுட்டு போகுது. அங்க வேலை பாக்குற லைட் பாய் எப்பவுமே அந்த குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துட்டு இருக்காரு.
சூர்யா இதை கவனிச்சு, "யாரு இந்த குழந்தை?"ன்னு விசாரிக்கும்போது, அந்த குழந்தைக்கு ஆதரவா யாரும் இல்லன்னு தெரிய வருது. கொஞ்ச நாளா அந்த குழந்தையை பாக்க முடியல. படப்பிடிப்பு முடிஞ்சதும் சூர்யா அந்த குழந்தையோட வீட்டுக்கு போறாரு.
அதே லைட் பாய் தான் கூட்டிட்டு போறாரு. ஆனா அங்க வீடு இடிஞ்சு போய் கிடக்குது... வீடே இல்ல.
என்ன ஆச்சுன்னு பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட விசாரிக்கும்போது, அவங்க சொல்றாங்க: கொஞ்ச நாளைக்கு முன்னாடி வேறொரு தமிழ் இளைஞர் வந்து, இந்த குழந்தையை தத்தெடுத்து, அவங்களோட மாற்றுத்திறனாளி விதவைத் தாய்க்கும் சேர்த்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வெச்சிருக்காரு.
அந்த குழந்தையோட முழு படிப்புச் செலவையும் அவரே ஏத்துக்கிட்டாரு. பல வருஷங்களுக்கு அப்புறம், இன்னைக்கு அந்த பொண்ணு ஹைதராபாத் IIM-ல படிச்சிட்டு இருக்கு.
அன்னைக்கு அந்த குழந்தையையும் அவங்க மொத்த குடும்பத்தையும் காப்பாத்தி பொறுப்பேத்துக்கிட்ட அந்த நபரோட பேரு... ஜோசப் விஜய்.
சூர்யாவும் எத்தனையோ குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தர்ற ஒரு நல்ல மனிதர் தான். அவரு போய் அந்த குழந்தைக்கு உதவி செய்றதுக்கு முன்னாடியே... நம்ம அண்ணன் தூக்கிட்டாங்க! ♥️
@actorvijay@TVKVijayHQ@CMOTamilnadu ♥️♥️
காட்டாறு கிளம்பிருச்சு @imrajmohan இனி அதை அடக்க முடியாது! 💥 💥
அமைதியாகப் பேசுகிற மனிதனைச் சீண்டிவிட்டீர்கள் 🔥
“தலித்துகளுக்கு நாங்கள் செய்ததால்தான் அவர்கள் தங்கள் கலரைத் தூக்கிக்கொண்டு சுற்றுகிறார்கள்.
நாங்கள், ‘’திமுக போட்ட பிச்சை’’ என்று பேசியது உங்கள் ஆர்.எஸ். பாரதி. 🥿
அசிங்கமாக இல்லையா? வெளியில் ‘Beast’ படத்தைப் பற்றி பேசியதை நீங்கள் சட்டமன்றத்தில் பேசுகிறீர்கள். நீங்கள் பேசியதையெல்லாம் நாங்கள் இங்கே பேசினால், நாடு தாங்காது!
Mass Ragging! 🔥
#TVKVijay #TVK @TVKHQITWingOffl
மறக்கவே முடியாத நாள் இன்று!
3 ஆண்டுகளுக்கு முன்பாக பரந்தூர் சென்று ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்களின் குமுறல்களை ஆவணப்படுத்தி “பரந்தூர் Files" என்ற பெயரில் வெளியிட்டோம்.
யார் நினைத்தாலும் இந்த திட்டத்தை தடுக்க முடியாது என்று சில அரசு அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள். சென்று வேறு வேலை இருந்தால் பாருங்கள் என்றும் அலட்சியப்படுத்தினர். மத்திய அரசு தரப்பில் இருந்த பிரதிநிதிகளிடம் கூட நான் தயாரித்த ஆவணங்களை காட்டி, இந்த திட்டம் ஏன் வரக்கூடாது என்பதை பற்றி விளக்கி இருந்தேன். ஆனால் பதில் வரவில்லை. மாறாக எனக்கு தான் பாடம் எடுத்து அனுப்பினார்கள்.
சென்னைக்கு இன்னொரு விமானநிலையம் வரக்கூடாது என்பது நோக்கம் அல்ல. கம்பன் கால்வாய் என்பது புறநகர் சென்னை பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளின் மூல ஆதாரமாக விளங்குகிறது. அதை முழுமையாக அகற்றிவிட்டு செய்யப்படும் இந்த திட்டம் என்பது சென்னைக்கும் சேர்த்தே ஆபத்தை ஏற்படுத்தும். பறவைகளின் வழித்தடமாக இருக்கும் ஒரு ஊர் தான் பரந்தூர். இயற்கை தாய்யின் மடியில் கைவைத்துவிட்டு, ஒரு திட்டம் வந்தால், அது எப்படி பார்த்தாலும் சரியாக இருக்காது என்பதே உண்மை.
https://t.co/llZxbOsxj7
இந்த தருணத்தில் கிட்டத்தட்ட 1000 நாட்களாக அறவழியில் போராடிய ஏகனாபுரம் மக்களுக்கும் இந்திய ஜனநாயகத்தின் மீது அவர்கள் வைத்த நம்பிக்கைக்கும் முதல் நன்றி.
தேர்தல் நேரத்தில் சொன்னதை மறந்துபோகும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் சொன்னதை போலவே பரந்தூர் திட்டத்தை கைவிட்ட முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கு நன்றி.
#பரந்தூர் #Vijay #TVK
அறிவாளித்தனமாக பேச வேண்டுமென ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டு வந்து ஒவ்வொரு முறையும் பல்பு வாங்குகின்றார் திரு உதயநிதி அவர்கள்.
உள்ளபடியே Presence of mind என்பது அவருக்கு இல்லை. மிகவும் தடுமாறுகின்றார். ஏதேனும் ஏட்டிக்கு போட்டியாக பேசி தன் கட்சி காரர்களையே கோர்த்து விடுகின்றார்.
பதில் சொல்ல முடியாமல் சட்டமன்றத்தில் இருந்து திடீர் திடீரென வெளிநடப்பு செய்கின்றார். வெளிநடப்பு செய்தவுடன் சட்டமன்றத்தில் என்ன நடந்தது என்ன பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுக்கும் பொழுதும் கூட ஸ்கிரிப்ட் பேப்பரை பார்த்து தான் வாசிக்கின்றார். சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தவுடன் பத்திரிகையாளர்களை சந்திக்கும் அந்த in-between gape'க்குள் யார்தான் அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுக்கின்றார்கள் என தெரியவில்லை.
இப்பவும் சொல்றேன் உதயநிதி அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு மட்டுமல்ல திமுகவின் தலைமை பொறுப்புக்கே Unfit.
திமுக வரலாற்றை புரட்டி பார்த்தால் மயக்கம் தான் வரும்...
1977 எம்.ஜி.ஆர் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது. திமுக தலைவர் கருணாநிதி பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார். "உடன் பிறப்பே… பார்த்தீரா நடிகரின் ஆட்சியை..." "நாடெல்லாம் ஊழல். நாளெல்லாம் ஊழல்" என்று...
அடுத்த நாள் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில் "ஏய் கருணாநிதி என்று தொடங்கி புரட்சித் தலைவர் ஆட்சியிலா ஊழல் என்று கேள்விக் கணைகளை வீசி, "அரசியலின் அசிங்கமே. தமிழகத்தின் களங்கமே" என்று பதிலடி கொடுத்திருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது. "உடன்பிறப்பே. பார்த்தாயா? நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா. மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா. யார் இந்த மந்திரக்கோல்? (நாஞ்சில் மனோகரன்) இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணி முத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்த மந்திரக்கோல்" என்று தொடங்கி "நேற்று அப்படி இருந்த மந்திரக்கோலுக்கு இன்று அண்ணா நகரில் பத்து இலட்ச ரூபாயில் பங்களா எப்படி வந்தது" என்று போட்டு தாக்கியிருந்தார்.
மீண்டும் அடுத்த நாள் ‘தென்னகம்’ பத்திரிகையில் "ஏ கருணாநிதி என்று தொடங்கி ‘அண்ணாநகர் வீடு பத்து இலட்சமா? விற்பதுக்கு நான் தயார். வாங்குவதற்கு நீர் தயாரா" என்று கேட்டு எழுதி கருணாநிதி சொல்வதை அபாண்டம், அண்டப் புளுகு, வடிகட்டின பொய் என எழுதியிருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் "உடன் பிறப்பே பார்த்தாயா. நடிகர் ஆட்சியின் மந்திரக்கோல் என்ன எழுதியிருக்கிறது. வீட்டை வாங்க தயாரா? என்று. கேட்கும் போதே உதிரம் கொதிக்க வில்லையா. தோள்கள் துடிக்கவில்லையா? அனுப்பு பணத்தை... வாங்கு வீட்டை" என்று எழுதி முடித்தார்.
அடுத்த நாளில் இருந்து தொண்டன் பணம் அனுப்பிக் கொண்டே இருந்தான். அனுப்பும் பணம் வந்தபடியே இருந்தது. தினசரி ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்றும் எழுதினார். தங்கள் பெயரை தலைவர் குறிப்பிடுகிறார் என்றால் தொண்டன் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? தொடர்ந்து அனுப்பினான். பதிமூன்று இலட்சம் ரூபாய் வரை பணம் சேர்ந்ததாக தகவல். ஆனால், முரசொலியில் அனல் பறந்த அந்த போட்டி கட்டுரை அதன்பின்னர் இல்லாமல் போனது; வீடு வாங்குவது குறித்து மூச்சுப் பேச்சில்லை.
சிறிது காலத்தில் அரசியல் காட்சிகள் மாறுகின்றன. எம்.ஜி.ஆரிடம் இருந்த நாஞ்சில் மனோகரன் கருணாநிதியின் திமுக பக்கம் திரும்பி வந்தார். அதே அண்ணா நகரில் ஒரு பொது கூட்டம். கருணாநிதியும் நாஞ்சில் மனோகரனும் ஒரே மேடையில் இருந்தார்கள். மைக்கை பிடித்த கருணாநிதி, நாஞ்சில் மனோகரனை வானளாவப் புகழ்ந்தார். நாஞ்சிலாரைப் போல் உண்டா? என்றார். கீழே அமர்ந்திருந்த திமுக, தொண்டன் வழக்கம்போல கை தட்டிக்கொண்டு இருந்தான்.
உ.பி.,க்கள் அசருவதேயில்லை. கை தட்டினார்கள் தட்டினார்கள். தட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.