மக்கள் பணத்தில் ஒரு பைசாவைக்கூட தொட மாட்டோம்; தொடவும் விடமாட்டோம். தொட்டவர்களையும் விடமாட்டோம் எனச் சட்டமன்றத்தில் ஆவேசமாக முழங்கினார் (?) முதல்வர் விஜய்.
தவெகவின் ஆட்சியில் ஊழல் செய்ய மாட்டோம்; யாரையும் ஊழல் செய்யவும் விடமாட்டோம்; கடந்த காலத்தில் ஊழல் செய்தவர்களையும்கூட சும்மாவிட மாட்டோம் என்பதுதான் விஜய் பேச்சுக்கானப் பொழிப்புரை.
நிற்க!
அதிமுகவை 'ஊழல் சக்தி' எனத் தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டார் விஜய்!
எம்.ஜி.ஆர். ஆட்சியில் எரிசாராய ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, அதற்கென ‘ரே’ கமிஷன் அமைக்கப்பட்டது. பல்கேரியா நாட்டிலிருந்து கப்பல்கள் இறக்குமதி செய்ததிலும் ஊழல் என விமர்சிக்கப்பட்டது. அதனால், எம்.ஜி.ஆரை மனதில் வைத்து அதிமுகவை ஊழல் சக்தியெனக் குறிப்பிடுகிறாரா விஜய்? என்றால், இல்லை! எம்.ஜி.ஆரைக் அரசியல் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டாடுகிறது தவெக.
ஊழல் வழக்கில் நிரூபிக்கப்பட்ட குற்றவாளி அம்மையார் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவை மையப்படுத்தி, அதிமுகவை ஊழல் சக்தி எனக் குறிப்பிடுகிறாரா விஜய்? எனக் கேட்டால், இல்லை. ஜெயலலிதாவை ஏற்று, உள்வாங்கிக் கொள்கிறது தவெக.
ஓ.பன்னீர்செல்வத்தை மையப்படுத்தி அதிமுகவை ஊழல் சக்தி என்கிறாரா விஜய்? எனக் கேட்டால், ஜெயலலிதா இல்லாத காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தது வெறும் 72 நாட்கள்தான். அதனால், ஓ.பன்னீர்செல்வத்தை மையப்படுத்திச் சொல்வதற்கு வாய்ப்பில்லை.
எனவே, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தக் காலக்கட்டத்தை மையப்படுத்தித்தான் அதிமுகவை ஊழல் சக்தி எனக் குறிப்பிடுகிறார் விஜய் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை ஊழல் ஆட்சி என விஜய் கூறுவாரென்றால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை ஊழல் அமைச்சரவை என்றே பொருள்படும். அந்த அமைச்சரவை 4 ஆண்டுகள் 2 மாதங்கள் 20 நாட்கள் இருந்தது. 2021ஆம் ஆண்டு காலாவதியானது.
அந்த அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். அவர் தற்போது தவெகவின் அமைச்சரவையில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்.
எடப்பாடியின் அமைச்சரவையில், தொழிற்துறை அமைச்சராக இருந்தவர் எம்.சி.சம்பத்; அவர் தற்போது தவெகவில் இருக்கிறார்.
எடப்பாடியின் அமைச்சரவையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தவர் கடம்பூர் ராஜூ; அவரும் தற்போது தவெகவில்தான் இருக்கிறார்.
எடப்பாடியின் அமைச்சரவையில், கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்தவர் உடுமலை ராதாகிருஷ்ணன்; அவரும் தற்போது தவெகவில்தான் இருக்கிறார்.
எடப்பாடியின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் வெல்லமண்டி நடராஜன்; அவரும் தற்போது தவெகவில்தான் இருக்கிறார்.
எடப்பாடியின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர்; அவரும் தற்போது தவெகவில்தான் இணையவிருக்கிறார்.
எடப்பாடியின் அமைச்சரவையில் இருந்தவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரும் தவெகவில் ஐக்கியமானாலும் ஆச்சர்யத்துக்கு இடமில்லை.
இதுபோக, எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற/ பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சிலரும் தவெகவில் இணைந்துவிட்டனர். இன்னும் பலர் இணையக் காத்திருக்கின்றனர்.
அதிமுகவை ஊழல் சக்தி என வர்ணித்துவிட்டு, அதிமுக அதிகாரத்திலிருந்தபோது ஊரை அடித்து உலையில் போட்ட ஊழல்பேர்வழிகளை தனது கட்சியில் சேர்த்துக் கொள்ளும் விஜய், எப்படி ஊழலை ஒழிப்பார்? எப்படி ஊழல்வாதிகளைத் தண்டிப்பார்?
‘ஊழல் செய்தவர்களை விடமாட்டேன்’ என சட்டமன்றத்தில் விஜய் முழங்கியதன் உட்பொருள், “ஊழல்பேர்வழிகளை விட மாட்டேன்; விடாமல் துரத்தி என்னுடைய கட்சியில் சேர்த்துக் கொள்வேன்” என்பதா?
துஷ்டச் சக்திகளை எல்லாம் கட்சியில சேர்த்துக்கிட்டு, தூய சக்தின்னு சுயதம்பட்டம் அடிக்கலாமா? நாற்றமெடுக்கும் ஊழல் பெருச்சாளிகளை பக்கத்தில் வச்சுக்கிட்டு மாற்றம்னு பேசலாமா?
What Bro? its Very Wrong Bro !
முன்னாள் அமைச்சர் EV வேலு மீது லஞ்ச ஒழிப்பு துறையால் பதியப்பட்ட FIR . அறப்போர் புகாரில் தவெக அரசின் முதல் FIR இது. வரவேற்போம் ! அறப்போர் புகாரில் என்ன சொல்லப்பட்டது ? திரட்டிய ஆதாரங்கள் என்ன ? அடுத்து செய்யவேண்டியது என்ன ?
தவெக ஆட்சியின் மீதான விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்புணர்வோடு எந்தப் பதிலும் கூறவில்லை முதல்வர் விஜய்.
தனக்கு வாக்குச் செலுத்திய கூட்டத்தைத் திருப்திப்படுத்த எந்தத் தோரணையில் பேச வேண்டுமோ, எந்த உடல்மொழியைப் பயன்படுத்த வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்.
அதனைப் பின்னணி பாடலோடும், இசையோடும் போட்டு பரப்ப Galatta, Behinwoods யூடியூப் சேனல்களும், News Tamil, Polimer காட்சி ஊடகங்களும் இருக்கின்றன. அவை அதனைச் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன.
பொதுச்சமூகத்துக்கும், அறிவுச் சமூகத்துக்கும் விஜய் எப்போதும் பதில் சொல்வதில்லை அல்லது விஜய்க்கான பதிலை எழுதிக் கொடுப்பவர், எழுதுவதில்லை.
தனக்கு வாக்குச் செலுத்தியவர்களின் எதிர்பார்ப்பின் தேவையை அறிந்து, அவர்களின் மனநிலை அறிந்தே தோரணை, உடல்மொழி, வசனங்கள், ஏற்ற இறக்கத் தொனி, நையாண்டிப் பார்வை என ஜனரஞ்சகமாகக் கொடுத்திருக்கிறார் விஜய்.
மொத்தத்தில், சட்டசபை சர்க்கஸ் கூடாரம் போல ஆகியிருக்கிறது.
அரசுப்பள்ளிகள குழந்தைகளை விஜய்க்கு "வாழ்க" போட வைக்கிற அவலங்கள் அச்சத்தை தருது.
அரசுப்பள்ளிகளில் கட்டுப்பாடுகள் குறித்து சுற்றறிக்கையை எல்லா அரசுப்பள்ளிகளுக்கும் உடனடியாக அனுப்புங்க. இல்லைனா இது பெரிய ஆபத்தாக அமையும்.
அதே திமுக பாணி அரசு வேண்டாம்,
மாற்றுங்க னா @imrajmohan
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட விடமாட்டோம் தொட்டவர்களை விட மாட்டோம்...
விஜய் பேச்சு..
வசனம் எல்லாம் இருக்கட்டும் CM சார்...
இந்த கால் நடைத்துறை அமைச்சர் கமலி அவர்கள் அவர் குடும்பத்தினர் அதிகாரிகள் இடமாறுதலுக்கும் வசூல் செய்வதாக புகாரை முன்பே முன்வைத்தோம். அதற்கு என்ன பதில். இது எதில் வரும்? மக்கள் பணத்திலா இல்லை மாமூலா?
இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை ஜுனீயர் விகடன் சென்ற 7 ஆம் தேதி வெளியிட்ட நாளிதழிலும் கூறியுள்ளது.. என்ன நவடிக்கை எடுப்பீர்.
நான் சொல்கிறேன் வசூல் எல்லா பக்கமும் ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களும் தொடங்கிவிட்டனர்..
வசனம் பேசுவதை விட்டு கொஞ்சம் உண்மை பேசுங்கள்...