”உங்க மகன் செந்தில் பாலாஜியும், அசோக் குமாரும் திங்கட்கிழமை சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துல ஆஜராகணும்”
த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது சகோதரருக்கும் சம்மன் வழங்க கரூர் சென்ற சென்னை போலீசார்.. செந்தில் பாலாஜி பெற்றோரிடம் சம்மனை வழங்கிய காட்சிகள்.!
#Karur | #DMK | #Senthibalaji | #AshokKumar | #Police | #PolimerNews
21 ஆண்டுகளாக நீடித்து வந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சோளங்குருணி கிராம கோயிலுக்குச் செல்லும் பாதை பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி, அனைவரும் எந்தத் தடையும் இன்றி கோயிலுக்குச் செல்லும் வகையில் பாதை மீட்கப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து, அன்புடன் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்த சோளங்குருணி கிராம மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நலனும், அடிப்படை தேவைகளும் நிறைவேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் தலைமையில் தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றுவோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ
🔥👌 @CTR_Nirmalkumar அமைச்சர்னா காரு பந்தானு இருப்பாங்ய! இதுவே திமுகவா இருந்தா மக்கள் யாரையும் கிட்ட கூட நெருங்க விட மாட்டாங்ய நீங்க என்ன இவ்ளோ சகஜமா இருக்கீங்க மக்கள் கூட!
இப்படி பண்ணா திமுக எப்படி பொழப்பு ஓட்டுறது?
ஜாலியா இருக்கும்ன்னு படத்துக்கு போன. தியேட்டர்ல ஆபரேட்டர்ரயும் சேத்து ஒரு 30 பேரு. அதுல நைட் ஷோ போன பாவத்துக்கு 20 பேர் தூங்கிட்டானுக. சரி படத்துல அப்டி என்ன இருக்குன்னு பாத்தா. அதுல ஒண்ணும் இல்ல கீழ போட்டுருங்குற காமெடி மாதிரி தான் படமும். அதுலயும் ஒண்ணுமே இல்ல. Part 1 ல கட் பண்ணுன சீன்ஸ்ஸ இதுல வச்சி மேக்கப் பண்ணிருக்காங்க.. குடும்பங்கள் எல்லாம் போய் பாக்க முடியாது.கர்ணர் சீட் விரும்பும் காதலர்களும். எதாவது ஐட்டத்த தள்ளிட்டு போறவனுக்கும் தான் சரியான படம் இது காமெடிங்குற பேர்ல அறுத்து வச்சிருக்கானுங்க.
நிறைய பேரு படத்த பார்க்காமலேயே மொக்க படம், பார்க்க சகிக்கல, அப்படின்னு பொய்யா சொல்லிட்டு இருக்கீங்க....
இப்போதான் படம் பாத்துட்டு வெளிய வர்றேன், நிஜமாலுமே படம் காட்டு மொக்கை தான்..
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க
#GattaKusthi2
பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.
சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம்