'Vijay Thalapathi' ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.டி-கள்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. ரீல்ஸ்-காக மாதம் 5 கோடி செலவிடப்படுகிறது என்பது செய்திகள் வரை வெளியானது. ஆனாலும், அந்த ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை.
தற்போது அதற்கும் மேல் போய், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோசியல் மீடியா ஐ.டி-க்கள் 'Vijay Thalapathi' என்று மாற்றப்பட்டு பொய்யான செய்திகள் / AI வீடியோ பதிவிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஐ.டிக்கள் ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு/மாற்றப்பட்டு உள்ளன.
இது எங்க போய் முடியுமோ !
அண்ணாமலை மீதான திமுக பதிவு செய்த அவதூறு வழக்கை வாபஸ் பெறக்காரணம் என்ன? 2021-26 ஆண்டுகாலத்தில் அண்ணாமலை மீது Piyush Manush கொடுத்த வழக்கின் மீதும் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அவர் இன்றளவும் சுட்டிக்காட்டுகிறார். தீவிர ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கல்யாணராமன் என்பவர், பெரியார் சிலையை உடைப்பேன் என தொடர்ந்து பேசியவர், குண்டர் சட்டத்தில் கைதானவர், அண்பாமலை செய்த ஊழல்கள், மோசடிகள் குறித்து ஆதாரங்களோடு 2 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்தார். அவை இன்றளவும் பொதுவெளியில் உள்ளது. இவற்றின் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அண்ணாமலையின் மதவெறி தூண்டும் பிரச்சார பயணத்திற்கு எவ்வுத தடையுமில்லாமல் அனுமதியளித்தது மட்டுமல்லாமல், அண்ணாமலைக்கான உதவிகளை திமுகவின் மூத்த பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் செய்தார்கள் எனும் குற்றச்சாட்டு பலமாக தோழர்கள் பலர் முன்வைத்தார்கள். இன்று தவெகவை எதிர்கிறார்கள் என்பதற்காக , திராவிடத்தை இழிவு செய்த மாரிதாஸ், சாட்டை துரைமுருகன் போன்றோரின் வீடியோக்களை திமுக ஐ.டி விங் குடுவின் மூத்தவர்கள் பலர் ஆதரிக்கிறார்கள், பரப்புகிறார்கள், பகிர்கிறார்கள். இது என்னவகையான அரசியல்?
இதே ஆதரவை இங்குள்ள முற்போக்கு இயக்கங்களுக்கு திமுக கொடுத்ததில்லை. மே17 இயக்கம் இன்றளவும் அதிமுக-பாஜக ஆட்சிகாலத்து வழக்குகளை சுமக்கிறது. ரவுடிப்பட்டியலில் என்னுடைய பெயரை கடந்த 5 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் வைத்திருந்தது திமுக. என்மீதான அநீதியான சிறப்பு விசாரணைகளை தொடர்ந்து நடத்தியது. இதுபோல பல செயற்பாட்டாளர்கள் போராட்ட வழக்குகளைச் சுமக்கிறார்கள். ஆனால் அண்ணாமலைக்கு முழு பாதுகாப்பை கொடுக்கிறார்கள், ஆதரவு கொடுக்கிறார்கள்.
தன் கழுத்துக்கு கத்தி வைப்பது ராஜதந்திரம் ஆகாது. திமுகவின் எதிர்கால தலைவரை வீழ்த்தும் வலிமையை அண்ணாமலைக்கு ஊட்டி வளர்க்கிறது திமுக. இதுகுறித்து நாம் கவலைபப்டப்போவதில்லை. ஆனால், தமிழ்நாட்டின் சீரழிவு சக்தியான அண்ணாமலையை எதிர்த்து நின்று போராடுவது மிக முக்கியமானது. ஆர்.எஸ்.எஸ்சின் கள்ளக்குழந்தையை ஆதரிப்பது, பாம்புக்கு பால்வார்க்கும் முட்டாள்தனத்திற்கு ஒப்பானது. திமுக பைல்ஸ், அறிவாலயத்தை செங்கல்-செங்கல்லாக பிரிப்பேன் எனும் அண்ணாமலையின் கருத்துகளை திமுக ஏற்கிறதா என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகளையும் தலித்முரசுவும், காட்டாறு அதிதீவிர பெரிதாரிஸ்டும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? சாதியை ஒழிக்கும் வழியை அண்ணாமலை வாயிலாக நடைமுறைப்படுத்துகிறார்களா? திமுக் ஆட்சிகாலத்தின் போது கைகட்டி மெளனம் காத்து திராவிடத்தை காக்கிறோம் என்ற சான்றோர்கள் அண்ணாமலை குறித்து வாய்திறக்காமல் மெளனம் காத்தது எதனால் என தெரியாது. ஆனால் மே17 இயக்கம் பெரியாரிய-திராவிட அரசியலுக்கான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தே வருகிறது, இனிமேலும் முன்னெடுக்கும். ஆளும்வர்க்கத்தின் தொங்குசதையல்ல பெரியாரியமும், திராவிடமும் என்பதை நன்கு அறிந்தவர்கள் மே17 இயக்கத்தினர்.
அண்ணாமலை மீதான வழக்குகளை திரும்பபெற்று, அவருக்கு சாதகமான நகர்வுகளைச் செய்யும் திமுகவின் முடிவுகளுக்கு மே17 இயக்கத்தின் வன்மையான கண்டனங்கள்.
@RahulGandhi Don't you feel ashame to say "together"?
You have clearly shown after TN election result that the federalism will be curtailed if you are in Power. So better alliance with BJP as your ideas are now a days getting closer to them.
பாஜக என்பது பெருச்சாளி என்றால் அதன் குட்டி மட்டும் ஆட்டுக்குட்டியாக இருக்க முடியுமா?
அண்ணாமலையின் அரசியல் எப்படி மதச்சார்பற்றதாக, சாதி சார்பற்றதாக இருக்க முடியும்?
அவர் வளர்த்தது சாதி-மத அரசியல். அவரது கட்சியும் இதைத்தானே வளர்த்தெடுக்கும்.
ஆர்.எஸ்.எஸ் எனும் பெயரை வைத்து வளர முடியாது என்பதை தெரிந்துகொண்டதாலேயே 'இந்து முன்னனி' எனும் பெயரில் பெருச்சாளி குட்டியை 1980களில் 'ராமகோபாலனை' வைத்து ஈன்றெடுத்தார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும், 'இந்து முன்னனி'க்கும் எவ்வித வேறுபாடுமில்லை.
இதேபோல தற்போது அண்ணாமலையை களம் இறக்கியுள்ளனர். தமிழ்நாட்டின் மிகமோசமான கட்சியாக இது உருவெடுக்குமென்பதில் இருவேறு கருத்து இருக்க இயலாது.
@manickamtagore ரோசம் ரெம்ப அதிகமா இருந்தா தனியா தமிழ்நாடு தேர்தல்ல நின்னு "000" வ விட ஒரு சீட்டு அதிகமா வாங்கிப்புடுங்க டா பாக்கலாம்.. #000காங்கிரஸ்#000TNCC
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
The allegation regarding a tender being floated and closed within a single day, and the subsequent withdrawal of the tender along with the suspension of officials following public scrutiny, is worth noting.
It was the DMK Government led by Thiru. @mkstalin that, through the 2022–23 Budget presented by then Finance Minister Dr. @ptrmadurai, announced mandatory e-procurement for all government procurements from 01.04.2023 onwards. This was subsequently operationalised through https://t.co/PnKFJzoJcj.93 dated 30.03.2023, amending the Tamil Nadu Transparency in Tenders Rules.
This episode also underlines the importance of the systemic reforms and transparent governance introduced by the DMK Government.
— Admin Team
கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது.
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும்.
இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இது மிகமிக தவறான முன்னுதாரணம்.
இதைத்தான் பாஜக விரும்புகிறது.
உங்களது வழிபாட்டு முறைகளை தனிப்பட்ட விசயமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நாளை இன்னொருவர் மணி அடித்துக் கொண்டு, ஓமகுண்டம் வளர்த்தால் அதை ஏற்போமா?
அல்லது பாதிரியார்களை வைத்துக் கொண்டு
அமைச்சர் அலுவலகத்தை ஜெபக்கூடமாக மாற்றினாலும் தவறு தான்.
(பெரும்பான்மை மதவெறிக்கு சற்றும் சளைத்ததல்ல சிறுபான்மை மதவெறி.
எல்லா மதவெறியும் கண்டிக்கப்பட வேண்டும்.
இது மனிதநெறிக்கு எதிரானது).
சூர்யா சேவியர்
22-05-26
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
@Karthik85206641@SriramMadras@TTVDhinakaran திமுக வ நக்கலனா தூக்கம் வராதா டா.. போய் சட்டம் படிச்சவங்யல வச்சு எப்டி கடிதம் எழுதணும், ஆளுநரை எப்டி பாக்கனும்னு கத்துட்டு அப்புறம் ஆட்சி அமைக்கிற முடிவுக்கு வாங்க டா..