உலகின் முதல்வன் எம் பெருமான் ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🙏
#தேவாரம் - #மூன்றாம்#திருமுறை
3098) அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும்,
செந்தமிழ்க் கீதம��ம், சீரினால் வளர்தர,
பந்து அணை மெல்விரலாளொடும் பயில்வு இடம்
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே.
🙏 திருச்சிற்றம்பலம் 🙏
#தேவாரக்கோயில்கள்-263
திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் கோயில்:
பெருமான் 3 முக லிங்கத் திருமேனியாக அருள்கிறார்.
இராஜகோபுரம், நந்தி, கொடிகம்பம் ஆகியன நேர் கோட்டில் அமையாமல் விலகி உள்ள அமைப்பு.
வரதராஜபெருமாளுக்கு பிரயோக சக்கரம் வழக்கப்படி இல்லாமல் மாறி உள்ளது.
ஓம் நம சிவாய 🌿🌿
#தேவாரம் - #மூன்றாம்#திருமுறை
3097) கறை அணி மிடறு உடைக் கண்ணுதல், நண்ணிய
பிறை அணி செஞ்சடைப் பிஞ்ஞ���ன், பேணும் ஊர்
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே,
மறை அணி நாவினான் மா மழபாடியே. 2
#சோமவார_பிரதோஷ_வழிபாடு
எல்லா தோஷங்களையும் போக்கக் கூடிய
சோமவார பிரதோஷ தினத்தில் விரதம்
இருந்து சிவபெருமானை வழிபட்டு அனைத்து வித
செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்....
ஓம் நமச்சிவாய
இந்த சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார்; நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். ஈசனின் பாதத்தை சிக்கெனப் பற்றுவோம். வேண்டியன எல்லாம் பெறுவோம்
மனிதனிடம் பக்தி கலக்கும்போது.
உணவு- பிரசாதமாகிறது
பட்டினி -விரதமாதகிறது
தண்ணீர் -தீர்த்தமாகிறது
இசை -கீர்த்தனையாகிறது
இதயம் -கோவிலாகிறது செயல்-சேவையாகிறது
பயணம் -யாத்திரையாகிறது மனிதன்-புனிதனாகிறான்.
ஓம் நமசிவாய
வருகிற மகாசிவராத்திரி .மார்ச் 1ஆம் தேதி முதல். வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு .முழு அனுமதி அளித்து .இந்து சமய அறநிலையத் துறையும் .வனத் துறையும்.உத்தரவிட்டுள்ளது!!! தென்க��ிலை வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு நன்றி
வெள்ளியங்கிரி மலை சிவனடியார்களுக்கும். பக்தர்களுக்கும் .தீப இயக்கம் .சார்பாக ஒரு நற்செய்தி. நேற்றைய பொழுது நிறைய நண்பர்கள் போன் செய்து மலையேற முடியுமா? அனுமதி கிடைக்குமா? என்று கேட்டிருந்தீர்கள் பக்��ர்களின் மனதைப் புரிந்து இறைவன்!! அதற்கான செயலில் இறங்கி உள்ளார்.
#சைவசமயம்