தமிழர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறை.. "முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கொதித்துபேசிய வேல்முருகன்
ManonmaniamSundaranarUniversity | MSUniversity | Tirunelveli | Graduation | GovernorArlekar
#Newstamil24x7#GraduationDay#CMvijay
மத்திய அரசின் மாநில பாடல் குறித்த சுற்றறிக்கை பாஜக ஆளும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பொருந்தாதது ஏன்?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை தராத விவகாரம் குறித்து முதல்வர் அமைதி காப்பது வருத்தத்திற்கு உரியது… முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
- வேல்முருகன்
ஆளுநரின் தொடர் தமிழ் விரோத நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தொடர்ச்சியாக கள்ள மௌனம் சாதிப்பது ஏன்?…
- தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு வேல்முருகன் அவர்கள் கண்டனம்.
News Update | "முதல்வரின் மவுனம் வருத்தத்திற்குரியது"
தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட வேண்டும் என்ற ஆளுநரின் செயலுக்கு தவாக தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம்
மத்திய அரசின் மாநில பாடல் குறித்த சுற்றறிக்கை பாஜக ஆளும் மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பொருந்தாதது ஏன்?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை தராத விவகாரம் குறித்து முதல்வர் அமைதி காப்பது வருத்தத்திற்கு உரியது; முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வேல்முருகன்
ManonmaniamSundaranarUniversity | MSUniversity | Tirunelveli | Graduation | GovernorArlekar
#ManonmaniamSundaranarUniversity #GraduationDay
#WATCH | "ஆளுநரின் தொடர் தமிழ் விரோத நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தொடர்ச்சியாக கள்ள மௌனம் சாதிப்பது ஏன்?"
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டதற்கு தவாக தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம்.
#SunNews | #TVelmurugan | #TVKVijay
Breaking News | நெய்வேலி சுரங்க விரிவாக்கம்
நெய்வேலி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியீடு
தென்குத்து கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியீடு; பாமக, கம்யூ. தவாக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பை மீறி அறிவிப்பாணை வெளியீடு
Neyveli | NLC | Notification | 29 July 2026
#Neyveli #NLC #Notification
சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகமான திருவள்ளுவர் இல்லத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்!
#TVK | #TVKVijay | #BanNeet | #Velmurugan | #TamilnaduNews | #Nakkheeran
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் 2வது நாளாக போராட்டம்!
#Velmurugan#NEETProtest@VelmuruganTVK
ஆளுநருக்கு கண்டனம்!
தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட வேண்டும் என்ற ஆளுநரின் செயலுக்குதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம்!
#velmurugan#governor#tamizhthaivazhthu#karandigital
"இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியது.. விஜய் என்கிற தனிப்பட்ட ஒருவரை பார்க்க சென்றபோது இறந்த குடும்பங்களுக்கு அவர் தனிப்பட்ட முறையில் உதவி செய்யலாம்”- வேல்முருகன்
Karur Incident | Court Judgement | 28 July 2026
#Velmurugan#Newstamil24x7
தமிழ்நாடு, கேரளாவின் கல்குவாரியா?
இயற்கை வளங்கள், கார்ப்பரேட்டுகளின் இலாபத்திற்கானதா?
தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ளக் கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்குமாறு கேரள முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பது, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை மீண்டும் எல்லைத் தாண்டிச் சுரண்ட அனுமதி கோரும் முயற்சியாகவே இருக்கிறது. கேரள அரசு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழிஞ்சம் துறைமுகம் உள்ளிட்ட முக்கிய கட்டுமானப் பணிகளுக்குத் தமிழ்நாட்டின் கல், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் அவசியம் எனக் கூறித் தளர்வு கோரியுள்ளது.
கேரளா தனது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறது. தன் மாநிலத்தின் மலைகளை வெட்டி எடுக்க ஒப்பந்தங்கள் போடப்பட்ட பிறகும் வெட்ட அனுமதிக்காமல் பாதுகாக்கும் கேரள அரசு, தமிழ்நாட்டின் மலைகளையும் பாறைகளையும் வெட்டி தனது வளர்ச்சிக்காகப் பயன்படுத்த அனுமதி கேட்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
இதிலும் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், கேரளாவின் விழிஞ்சம் துறைமுகமும், தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி துறைமுகமும், நாட்டின் பல விமான நிலையங்களும், அதானி குழுமத்தின் ஒப்பந்த நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இன்று துறைமுகங்கள், விமான நிலையங்கள், விரைவுச் சாலைகள் என்ற பெயரில் பெருநிறுவனங்களின் இலாபத்திற்காக, இயற்கை வளங்கள் வேகமாகச் சுரண்டப்படும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து வெளியே பிற மாநிலங்களுக்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கானச் சுமையுந்து (லாரி) வாகனங்களில் கொண்டு செல்லப்படும் கற்களும், எம்சாண்டும், மணலும் வெறும் கட்டுமானப் பொருட்கள் அல்ல. தமிழரின் மலைகள், தமிழரின் நீராதாரங்கள், தமிழரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தமிழரின் எதிர்கால வாழ்வுரிமை ஆகியவற்றையே சுமந்து செல்கின்றன.
உலகமே காலநிலை மாற்றம், எல் நினோ போன்ற இயற்கைப் பேரிடர்களால் அச்சமடைந்து வரும் இந்தக் காலகட்டத்தில், இயற்கை வளங்களை விற்று வளர்ச்சி என்ற மாயையை உருவாக்காமல், அவற்றைப் பாதுகாப்பதே உண்மையான முன்னேற்றமாகும்.
எனவே, தமிழக அரசு தற்போது எடுத்துள்ள கனிம வளப் போக்குவரத்து கட்டுப்பாட்டு முடிவில் எந்தவிதத் தளர்வும் அளிக்கக் கூடாது.
அதுமட்டுமல்லாமல்,
தமிழ்நாட்டின் கனிம வளங்கள் தமிழ்நாட்டு மக்களின் தேவைக்கே பயன்படுத்தப்படும். அண்டை மாநிலங்களின் கட்டுமானங்களுக்கோ, பெருநிறுவனங்களின் இலாபத்திற்கோ, வெளிநாடுகளுக்கோ தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் வழங்கப்படமாட்டாது
என்ற, உறுதியானக் கொள்கை அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#தமிழக_கனிமவளம்_தமிழருக்கே
#மலைகளை_காப்போம்
#SaveTamilNaduResources
#TamilNaduFirst
#tamil
தமிழக அரசே!
விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அவர்களை விடுதலை செய்!
விவசாயிகளின் நலனுக்காகச் சட்டப்பூர்வமாகவும், சனநாயக வழியிலும் தொடர்ந்து போராடி வரும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அவர்களை, வீட்டுக்காவலில் வைத்து அவரது குரலை ஒடுக்க முயற்சிப்பது சனநாயகத்திற்கு எதிரான செயல். கருத்தை எதிர்கொள்ள முடியாத ஆட்சிகள்தான் அடக்குமுறையை ஆயுதமாக்கும்.
கர்நாடக அரசு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் மேகதாது அணை உள்ளிட்ட பிரச்சினைகளில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு கோரி போராட்டம் அறிவித்த விவசாய சங்கத் தலைவரை, வீட்டுக்காவலில் அடைப்பது தமிழக அரசின் தவறான அணுகுமுறையாகும். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், அய்யாக்கண்ணு அவர்கள் மீதான வீட்டுக்காவல் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உடனடியாக வீட்டுக்காவல் நடவடிக்கையை திரும்பப் பெற்று, விவசாயிகளின் சனநாயக உரிமைகளை மதித்து, அவர்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் தமிழக அரசு உறுதியாக முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#விவசாயிகளுடன்_தமிழகம்
#அய்யாக்கண்ணுவுக்கு_நீதி
#StandWithFarmers
#JusticeForAyyakannu