இடும்பாவனம் அரசுப் பள்ளியில் நடந்த கூத்து இது!
கட்சிக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் கூத்து அடிப்பதை எல்லாம் அனுமதிக்கிறதா பள்ளிக்கல்வித்துறை?
@imrajmohan
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் நாள் 19.6.2026-ன், வ.எண் 5ல், தெரிவிக்கப்பட்ட அரசினர் தனி தீர்மானம் மூலம் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நான் ஆதரித்து பேசினேன்.
எனக்கு அடுத்து உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் தன்னுடைய உரையில் ஏற்கனவே திருத்தம் ஒன்று அளித்திருப்பதாகவும், அது பற்றிய கருத்தை தெரிவித்தார்கள். உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து, 'நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான ஒரு பத்தியை' இணைக்கலாம் என தெரிவித்தார்கள்.
பொதுவாக தீர்மானத்திற்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு, பேரவையில் பின்னர்தான் சேர்க்கப்பட வேண்டும். வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் கொண்டுவந்த திருத்தத்துடன் கூடிய தீர்மானத்தை முன்மொழியப்படாமல், வழிமொழியப்படாமல், விவாதிக்கப்படாமல், வாக்கெடுப்பிற்கும் விடப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் முரணானது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 19.6.2026 சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்தோமே தவிர, முதலமைச்சர் கடைசியாக மொழிந்த இடைச் செருகல் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.
திருத்திய தீர்மானம் அரசினர் தனித் தீர்மானம் ஆகாது. இத்தீர்மானம் யாரை மகிழ்விக்க ? யாரை வஞ்சிக்க ?
@AIADMKOfficial
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட #NEET, Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது.
மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும்.
கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் - சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்.
இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் தம்பி - தங்கைகள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#BanNEET
தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் செயலுக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தை தி.மு.கழகம் சார்பில் ஆதரித்து உரையாற்றினோம்.
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேகதாதுவில் அணை கட்ட முயல்வது New Dispute ஆக இருப்பதால், The Inter-State Water Disputes Act 1956-ன்படி புதிய தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தத்தைத் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றும்,,
இந்த தீர்மானத்தை கடிதமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல், தமிழ்நாட்டு சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று நேரில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
நாம் அளித்தத் திருத்தத்தை இணைத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
காவிரி மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.கழகம் துணை நிற்கும்!
#Mekedatu #CauveryRights
அண்ணாமலை ஏன் விலகினார், அவர் தப்பான முடிவு எடுத்துட்டாரோன்னு எனக்கு இருந்த எல்லா குழப்பத்துக்கும் இந்த விகடன் பேட்டியின் வாயில் பதில் கிடைச்சுடுச்சு.
இந்த கும்பல் வச்சுகிட்டு அந்த மனுஷன் எப்படிடா கட்சி வளர்க்க முடியும்?அவர் எடுத்த முடிவு கரெக்ட்தான். இந்த நோட்டா கட்சி தேறாது🥱
சட்டமன்றத்தில் விஜய் என்கிற போலிபிம்பம் சுக்குநூறாக நொறுங்கி அடி விழுந்ததால் சட்டமன்ற நேரலைய நிறுத்தியாச்சு.
இந்த லட்சணத்துல முழுமையாக நேரலை இருக்கும் என்று வாக்குறுதி வேற 😁