முதலில் இந்த தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லுகிறேன் இதைப் பார்த்த பிறகும் தம்பிகளை பாராட்ட முன்வராத அரசியல் கட்சிகளை வன்மையாக கண்டிக்கிறேன் விருதாச்சலம் எம்பி வெளியூர் எம்எல்ஏ வெளியூர் அப்படி இருக்கும்போது எப்படி நல்லது நடக்கும் @CMOTamilnadu@vikatan
https://t.co/MtRZOOOCmH
Exciting news! The promo of the movie I acted in has been released today! I’m truly thrilled — please watch it, enjoy it, and share it with your friends to spread the love and support!"
https://t.co/Za71h2sDsl
Exciting news! The promo of the movie I acted in has been released today! I’m truly thrilled — please watch it, enjoy it, and share it with your friends to spread the love and support!"
https://t.co/Za71h2sDsl
இன்று, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அபிநயா திருமண மண்டபத்தில் நடைபெற்ற, பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கோவி.ஏழுமலை - வளர்மதி ஏழுமலை தம்பதியரின் அன்பு மகன் ஏ.செல்வகுமார் - வெ.பிரஷீத்தா இணையரின் திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்திய போது.!
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் மு.ரா.மோகன் - மாலதி மோகன் தம்பதியரின் அன்பு மகள் மோ.ரீனாசென் - ப.ரிஷி இணையரின் திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்திய போது.!
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், விஜயா மாநகரம் - சந்தோஷ் ஆறுமுகம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற, விருத்தாச்சலம் வடக்கு ஒன்றிய பாட்டாளி சமூக ஊடகப் பேரவை செயலாளர் D.E.இளவரசு - K.S.கவிபாக்யா இணையரின் திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்திய போது.!
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த கொசப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி ஊடக பேரவையின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வமணியின் தந்தை சண்முகம் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.
சண்முகம் அவர்களை இழந்து வாடும் அவரது புதல்வர் செல்வமணி உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி சமூக ஊடகப் பேரவையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்களின் வீடுகளையும், காடுகளையும் அழித்து விட்டு தான் தொழிற்சாலை வேண்டுமா? தொழிலதிபர்களின் முகவரா திமுக அரசு?
கடலூரை அடுத்த கொடுக்கன்பாளையத்தில் பொதுமக்கள் வாழும் குடியிருப்புகளையும், அவர்கள் வளர்த்த முந்திரி மரங்களையும் அகற்றி விட்டு, தோல் அல்லாத காலனி தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருப்பதும், அவர்கள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது.
கடலூர் மாவட்டம் கொடுக்கன்பாளையம். பெத்தாங்குப்பம். மலையடி குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முந்திரி சாகுபடி செய்து வாழ்ந்து வந்தனர். கடந்த ஜனவரி மாதத்தில் காவல்துறை உதவியுடன் அந்த நிலங்களில் இருந்து அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்; அங்கு வளர்க்கப்பட்டிருந்த முந்திரி மரங்களில் பெரும்பாலானவை பிடுங்கி எறியப்பட்டன. அப்போதே, தனியார் தொழில் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காகவே பொதுமக்கள் வெளியேற்றப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றஞ்சாட்டி வந்தது. இப்போது அந்த நிலங்கள் காலனி தொழிற்சாலை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு உண்மையாகியிருக்கிறது.
கொடுக்கன்பாளையம். பெத்தாங்குப்பம். மலையடி குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நிலங்களில் அங்குள்ள மக்கள் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவற்றில் தீர்ப்பு வராத நிலையில், அங்குள்ள நிலங்களை தனியாருக்கு தாரைவார்க்க முயல்வது நியாயமல்ல.
கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளமாக உள்ளன. தமிழக அரசு நினைத்தால் அந்த இடங்களை காலனி தொழிற்சாலை அமைக்க ஒதுக்கலாம். அதை விடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலங்களைப் பறித்து தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்க முயல்வது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். மக்களைக் காக்க வேண்டிய அரசு , தொழிலதிபர்களின் முகவராக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவது நியாயமல்ல.
கொடுக்கன்பாளையம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் காலனி தொழிற்சாலை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அந்தப் பகுதியில் தலைமுறை தலைமுறைகளாக முந்திரி சாகுபடி செய்து வரும் மக்களுக்கு அங்குள்ள நிலங்களை பட்டா செய்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu