சோத்துப்பாறை அணையை திறந்து விட்ட தவெகவினரை கைது செய்ய வேண்டும்: அணைகளுக்கும் பாதுகாப்பில்லையா?
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அப்பகுதி தவெக நிர்வாகிகள், அதிகாரிகளுக்கு தெரியாமல் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டு, அதை ரீல்சாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டிய அணைகளுக்குள் கூட ஆளும்கட்சியினர் சட்டவிரோதமாக நுழைந்த்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
அணைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அணைகளில் உள்ள நீர் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட வேண்டும். அணைகளில் அளவுக்கு அதிகமாக நீர் உள்ள நேரத்தில் அதிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், 2015-ஆம் ஆண்டில் செம்பரம்பாக்கம் அணை திறக்கப்பட்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது போலவும், 2025-ஆம் ஆண்டில் சாத்தனூர் அணை திறக்கப்பட்டு விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது போலவும் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இது குறித்த எந்த கவலையும், அக்கறையும் இல்லாமல் அணையை தவெகவினர் எவ்வாறு திறந்தனர்; அவர்கள் அணையைத் திறக்கும் வரை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்பன உள்ளிட்ட வினாக்கள் எழுகின்றன. இவற்றுக்கு தமிழக அரசு விடையளிக்க வேண்டும்.
காவல் நிலையம், மருத்துவமனைகளில் நள்ளிரவில் ஆய்வு, புலியைத் துரத்துதல், அணையைத் திறத்தல் என அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை தங்களின் விருப்பம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய விதிமீறல்களுக்காக இதுவரை எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
சோத்துப்பாறை அணைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து தண்ணீரைத் திறந்து விட்ட தவெகவினர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
"திருச்செந்தூர் முருகன் கோயிலில் மீண்டும் சர்ச்சை!"🚨
மத அடையாளங்களுடன் வந்த பெண்ணிடம் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து பெறாமலேயே தரிசனத்திற்கு அனுமதித்தது ஏன்? நீதிமன்ற உத்தரவும், ஆகம விதிகளும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாதா?😡
#Tiruchendur
#TVK_கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஐஏஎஸ் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது மட்டுமில்லாமல்,
நள்ளிரவில் குடிபோதையில் அவரது கதவை தட்டிய விவாகரத்தில்,
#அந்தப்பெண் IAS கலெக்டரின் கணவர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான. எம் எல் ஏ விற்கு எதிராக புகார் அளித்தார் ...
#ஆனால் இதுவரை விஜய் எந்த ஒரு அறிக்கையோ கண்டனமோ நடவடிக்கையோ ஒன்றுமே இல்லை....
காஷ்மீர் இந்தியாவுக்குத் தான் சொந்தம். 🇮🇳🔥
பாகிஸ்தானால சொந்த நாட்டையே ஒழுங்கா பாத்துக்க முடியல, இதுல நம்ம கூட வந்து சண்டை போடப் போறாங்களா?
ஒரு நாள், பாகிஸ்தான் மக்களே அவங்க நாட்டுக்கு எதிரா போராடுவாங்க பாருங்க.
— விஜய் தேவரகொண்டா
ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு,
ஷாம்பு பயன்பாடு தான் காரணமா? யாருடைய
குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர்?
திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர் மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது.
நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்குவதற்கு காரணம் கழிவுகள் கலக்கவிடப்படுவது தான் என்பது சிறு குழந்தைகளும் அறிந்தது தான். கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்கவிடப்படுவது தான் அதில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் ஆகும். நொய்யலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்திருப்பது தான் அந்த அணையைக் திறக்கக் கூடாது என உழவர்கள் போராட்டம் நடத்துவதற்கு காரணம் என்பதும் பெரும்பான்மையினர் அறிந்தது தான்.
தென்பெண்ணை ஆற்றில் கெலவரப்பள்ளி அணையில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் கர்நாடகத்தில் அந்த ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகள் தான். இந்த இரு ஆறுகளிலும் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆறுகளை பலமுறை நான் நேரில் ஆய்வு செய்து அறிவுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு பல ஆணைகளை பிறப்பித்திருக்கிறது.
இவ்வளவுக்குப் பிறகும் அந்த ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தக் கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பாராட்டியது மட்டுமின்றி, சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார். அதை வைத்து பார்க்கும் போது தான் அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற ஐயம் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய 4 பெரிய மாநிலங்களில் உள்ள 28 இடங்களுக்கு எம்எல்சி (MLC) தேர்தல்கள் நடைபெற்றன.
இந்தத் தேர்தல்கள் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன.
காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களை வென்றது என்று நினைக்கிறீர்கள்? 🧐
பழனிபாபா, திருமாவளவன் போன்ற தவறான நபர்களை வளர்த்து விட்டது, ஈ.வே.ரா, அம்பேத்கர், காரல்மார்க்ஸ் போன்ற எதிர்மறை அடையாளங்களை சுமந்தது என இவரின் துவக்க காலம் விமர்சனத்திற்குட்பட்டது என்றாலும், இவரின் இறுதி கட்ட அரசியலில் OBC மக்களின் உண்மையான எதிரி யார் என்பதை தெளிவாக நமக்கு காட்டியவர், இவர் இல்லையென்றால் OBC மக்களின் உரிமைகள் மிக மோசமான நிலைமைக்கு சென்றிருக்கும், OBC க்களின் ஒப்பற்ற வரலாற்றுத் தலைவர் என்றால் அது ஐயா ராமதாஸ் அவர்கள் தான். He is taller than BRA
உலக மக்கள் தொகையில்
இந்தியா:- 17%
அமெரிக்கா:- 4%
ஓசோன் படலத்தை பாதிக்கும் கார்பன் வெளியிடும் சதவீதம்
இந்தியா:- 4%
அமெரிக்கா:- 24%
"பார்த்து பயன்படுத்துங்க" என இந்தியாவுக்கு அறிவுரை சொன்ன அமெரிக்காவை கதறவிட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்🔥
வட இந்தியாவிலும் PCR act க்கு எதிரான movements செயல்படத் துவங்கிவிட்டது, கூடியவிரைவில் அகில இந்திய அளவிலான ஒருங்கிணைப்பு ஏற்படும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த பிரச்சனை தேர்தல் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும். @EndScStAct