பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 29&ஆம் நாள் நடைபெறும்!
#pmk#chennai#Dranbumaniramadass
மீண்டும் ஜல்லிக்கட்டு மாதிரியான ஒரு போராட்டத்தை தொடங்கினால் மத்திய அரசு தலையிட்டு மட்டுமே தீர்வு ஏற்படும்.. தயாராக இருங்கள் மக்களே.. விரைவில் ஒன்று கூடுவோம்.. காவிரியை வென்று கா���்டுவோம்..
“மயிலாடுதுறையில் நடந்தது தற்கொ**; அதை கொ**யாக திரித்து, ��தற்றமான சூழலை உருவாக்கி ஒரு சில அமைப்புகள் அதில் குளிர்காய்கின்றன; ஆணவக்கொ** எனத் திரிப்பது தவறான அரசியல்” பாமக தலைவர் அன்புமணி
#Anbumani | #PMK | #Salem
அமைச்சருக்கான நாற்காலியில் உட்காராமல் அன்புமணி அருகிலேயே சேர் போட்டு அமர்ந்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்... நீண்ட நேரம் வற்புறுத்தி அவரை அமைச்சருக்கான் சேரில் அமர வைத்த அன்புமணி..!
#Secretariat | #Anbumani | #PMK | #MinisterNAnand | #PolimerNews
#WATCH | “அடுத்த 50-100 ஆண்டுகளுக்கு அரசு என்ன செய்ய வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினோம்..”
நிர் மேலாண்மை திட்டங்கள் தொடர்பாக அமைச்சர்களை சந்தித்த பிறகு பாமக தலைவர் அன்புமணி பேட்டி
#SunNews | #Anbumani | #WaterResources
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், தஞ்சாவூரில் துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ��ற்படுத்தி உரையாற்றிய போது.!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில்..!
#காவிரிகாப்போம்#மேகதாதுஅணைதடுப்போம்#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
"சோசியல் மீடியாவை வைத்து ஆட்ச��� மாற்றமே பண்ணி இருக்கீங்க ; மேகதாது அணை கட்டுவதை தடுக்க முடியாத என்ன ?"
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
#AnbumaniRamadoss #MekedatuDam #PMK #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், பவானியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாற்றிய போது.!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
காவிரி காக்க கைகோர்ப்போம்....
வாருங்கள் இளைஞர்களே!
தீமைகளைத் தடுக்கும் திறனும், உரிமைகளைக் காக்கும் உணர்வும் கொண்ட உங்களைத் தான் நான் நம்ப���யிருக்கிறேன்.
காவிரியில் கர்நாடகம் கட்டத் துடிக்கும் மேகதாது அணை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி,
கர்நாடகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும்.
12500 ஏக்கர் வனப்பகுதிகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் என மேகதாது அணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எல்லையில்லாதவை.
சில லட்சம் பேரின் குடிநீருக்காக இவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
இந்தப் பேரழிவ��த் தடுக்கும் முயற்சிகளுக்கு நான் வழிகாட்டுகிறேன்.... ஆனால், அதை தடு��்து நிறுத்தும் திறன் உங்களுக்குத் தான் உண்டு.
உலக வரலாற்றில் இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளும் உண்டு.
அதனால் தான் உங்களை அழைக்கிறேன்.....
வாருங்கள் இளைய தலைமுறையினரே,
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடையை தகர்த்தைப் போல மேகதாது அணை சதியையும் தகர்ப்போம்!
உங்களுக்காக பிலிகுண்டுலுவில் காத்திருப்பேன்...!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu
அந்தமானுக்கு ஒரு நீதி? கர்நாடகாவுக்கு ஒரு நீதியா? அந்தமான் நிக்கோபார் தீவில் மத்திய அரசு அறிவித்த ’கிரேட் நிக்கோபார்’ திட்டத்தை காடுகள் அழிக்கப்படும் என்ற காரணத்தை கூறி எதிர்த்தார்.. ஆனால் 12,500 ஏக்கர் காட்டை அழித்���ு தான் மேகதாது அணையை கர்நாடகா அரசு கட்ட போகிறது இதற்கு ஏன் வாய் திறக்கவில்லை - ராகுல்காந்திக்கு அன்புமணி கேள்வி
#Chennai | #Anbumani | #PMK | #Mekatatu | #RagulGandhi #Congress | #PolimerNews
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு மனநலப் பிரிவு மற்றும் பச்சிளங்குழந்தை சிறப்பு பராமரிப்பு மையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது.!
#Dharmapuri | #GovernmentHospital | #pmk | #inspection | #sowmiyaanbumani
"காவிரி: அன்று 850 ஆண்டுகளுக்கு முன்பே தடையை உடைத்து காவிரியை மீட்டான் இரண்டாம் ராஜராஜ சோழன்!"
"இன்று மேகதாது அணைய தடுக்க உறுதி ஏற்போம்!"
----------
��ருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வெளியிட்ட காணொலியில் - 850- ஆண்டுகளுக்கு முன்பே போசள மன்னன் முதலாம் நரசிம்மன் காவிரியில் தடை ஏற்படுத்திய போது, இரண்டாம் இராஜராஜ சோழன் போர் தொடுத்து அந்த தடையை உடைத்தான் என்கிற செய்தியை குறிப்பிட்டார்.
அ��்த வரலாற்று விரிவாக காண்போம்:
----------
காவிரி காலம் காலமாய் தமிழ்நாட்டின் சொத்தாக இருக்கிறது. ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) காவிரியை ‘சோழர்களின் குலக்கொடி’ என்றும் ‘தண் தமிழ்ப் பாவை’ என்றும் போற்றுகிறது
"கோடாச் செங்கோல் சோழர் தம் குலக்கொடி
கோள் நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண் தமிழ்ப் பாவை"
(பொருள்: நீதிமுறைப்படி ச��ங்கோல் ஆட்சி நடத்தும் சோழர்களின் குலக்கொடி காவிரி ஆறு. பருவகாலம் மாறி கோடை நீண்டாலும், காவிரி தன் நிலை மாறாமல் பாய்ந்தோடும் குளிர்ந்த தமிழ்ப்பாவை ஆகும் என்கிறது மணிமேகலை 23 – 25)
தமிழர்களின் அடையாளமாகவும், வளமைக்கான ஆதாரமாகவும் இருந்து வரும் காவிரி ஆற்றில் சுமார் 850 ஆண்டுகளுக்கு முன்பே தடை ஏற்படுத்தப்பட்டது. அந்த தடையை உடைத்து மீட்டான் ஒரு சோழ மன்னன்.
கி.பி. 1146 – 1163 காலக்கட்டத்தில் சோழ நாட்டை இரண்டாம் ராஜராஜ சோழன் ஆட்சி செய்தான். இதே காலக்கட்டத்தில் கருநாடகத்தை ஆ��்சி செய்த போசளமன்னன் முதலாம் நரசிம்மன் செயற்கை மலைகளை உருவாக்கி தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீரை தடுத்தான். தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த இரண்டாம் ராஜராஜன் போசள நாட்டின் மீது படையெடுத்து செயற்கை மலைகளை தகர்த்து காவிரியை மீட்டான். இதனால், ‘காவிரி கண்ட சோழன்’, ‘பொன்னிக்கு வழிகண்ட கண்டன்’ என்றெல்லாம் இரண்டாம் ராஜராஜன் போற்றப்படுகிறான்.
இந்த செய்தியை தமிழ் இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ,
வழியிட்ட வாள் காண வாரிர்!"
என்கிறது ஒட்டக்கூத்தர் பாடிய இராசராச சோழன் உலா (85)
(பொருள்: மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் காவிரி நதி சோழ நாட்டிற்குள் நுழைய முடியாமல் தடைபட்டபோது, தன் வாளைக் கொண்டு மலைகளை வெட்டி, பொன்னி நதி (காவிரி) சோழ நாட்டில் பாய்ந்து வளம் கொழிக்க வழிசெய்த மன்னன் இரண்டாம் இராசராச சோழன்.)
இதே செய்தி அவர் பாடிய ‘தக்கயாகப் பரணி’ நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது (549)
"அலைகொன்று வருகங்கை வாராமல் மண்மேல்,
அடைகின்ற குன்றடு அறுக்கின்ற பூதம்,
ம��ைகொன்று பொன்னுக்கு வழிகண்ட கண்டன்,
பரராச ராசன்கை வாள் என்ன வேந்தே."
இப்பாடல்களில் ‘காவிரிக்குச் சோணாடு வாழ வழியிட்ட வாள்’ என்று கூறப்பட்டிருப்பதால், பகை வேந்தனால் தடுக்கப்பட்டிருந்த காவிரியை இரண்டாம் ராஜராஜ சோழன் மீட்டு கொண்டுவந்தான் என்பதே இதிலுள்ள வரலாற்று செய்தி என்கிறார் வரலாற்று பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். (தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4)
"வான் பொய்ப்பினும் தான் பொய்யா" காவிரி என சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் புகழப்படுவது போன்று, தமிழ் மன்னர்கள் ஆட்சியில் சுதந்திரமாக ஓடிவந்த காவிரி ஆறு சுதந்திர இந்தியாவியில் சிறை பிடிக்கப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்பு கிருஷ்ணசாகர் அணை கட்டப்பட்டது. அதன் பின்னர் கபினி அணை, ஹேமாவதி அணை, சுவர்ணவதி அணை, ஹாரங்கி அணை ஆகிய புதிய அணைகள் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலேயே கட்டப்பட்டு���ிட்டன. இதனால் தமிழ்நாடு மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பெருமழை பொழிந்து கருநாடக அணைகளில் தேக்கிவைக்க இடமில்லாத காலங்களில், வேறு வழியி��்றி வழிந்தோடும் தண்ணீர் மட்டுமே இப்போது தமிழ்நாட்டுக்கு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் எல்லையில் கருநாடக அரசு புதிதாக மேகதாது அணையை கட்ட முயல்வது, உண்மையில் தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்குவதற்கான திட்டமிட்ட சதிச்செயலே ஆகும்.
அன்று 850 ஆண்டுகளுக்கு முன்பே பகை அரசனால் கட்டப்பட்ட தடையை உடைத்து காவிரியை மீட்டான் இரண்டாம் ராஜராஜ சோழன்! அவன் வழி வந்த நாம் இன்று மேகதாது அணைய தடு��்க உறுதி ஏற்போம்!
---------
குறிப்பு: கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் யுனெஸ்கோவால் (UNESCO) உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைவைக்கப்பட்ட காவிரியை மீட்ட அதே இரண்டாம் ராஜராஜ சோழன் தான் இந்தக் கோவிலை கட்டியவர் ஆகும்.
#AnbumaniRamadoss
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#Mekedatu
"அந்தமானுக்கு ஒரு நீதி..? கர்நாடகாவிற்கு ஒரு நீதியா..? மேகதாது அணை கட்ட��வதற்கு கர்நாடகாவிலே எதிர்ப்பு உள்ளது..?" ராகுல் காந்திக்கு அன்புமணி கேள்வி
Karnataka | Mekedatu | Andaman
#Newstamil24x7 #Anbumani #RahulGandhi