வெறும் 5 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த விஜய்யால், ஒரு முன்னாள் திமுக அமைச்சரைக் கைது செய்ய முடிகிறது. ஆனால், 13 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவால் ஏன் இதுவரை திமுக முன்னாள் அமைச்சர் ஒருவரைக்கூடக் கைது செய்ய முடியவில்லை? இதை கேட்டா நம்ம சிஸ்டம் அப்படி இருக்குன்னு கதை விடுவது 🤷♂️. பாஜக தங்களுக்கு தேவை என்றால் அதே சிஸ்டத்தை பயன்படுத்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்று பலரை கைது செய்து உள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில், ஏதாவது ஒரு அமைச்சரின் வீட்டில் காலையில் ED ரெய்டு நடந்தால், இரவுக்குள் விமானம் பிடித்து டெல்லிக்குச் செல்வது; பின் அந்த வழக்கை அப்படியே கிடப்பில் போடுவது.
திமுக மற்றும் பாஜகவின் மேல்மட்டத் தலைவர்களுக்கு இடையே பேக்கரி டீலிங் செய்து கொள்வது. ஆனால், பொதுவெளியில் மட்டும் இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் எதிர்ப்புத் தெரிவிப்பதுபோல்
பேசிக்கொள்வது! 😂
இந்த படம் எல்லாம் இன்னும் எவ்வளவு நாளைக்கு ஓடுதுன்னு பார்ப்போம்....