அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.
பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்.
எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.
குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தேவா அவர்கள் இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின. இன்றளவும், தேவா அவர்களின் இசையோடுதான் ரஜினிகாந்த் அவர்களின் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம். நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழ்நாட்டில் இருக்காது. கலைஞானி கமலஹாசன் அவர்களது அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார். குறிப்பாக, வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.
நாயகர்களுக்கான mass பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். தலைவர் கலைஞர் அவர்கள்தான், தேவா அவர்களின் இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.
எண்பதுகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார். அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும்.
ஒருபுறம் இசைஞானி இளையராஜா அவர்களும், மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களும் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா.
தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது. தேவா அவர்களை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், தேவா அவர்களின் இரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!
கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!
நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்!
அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்! 🇮🇳
#IndependenceDay
மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் @KanimozhiDMK பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை @CMOTamilnadu புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்.
இதோ அடுத்த அதிர்ச்சி செய்தி
நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்
கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை பகுதியில் எட்டு வயதே ஆன நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி பள்ளி முடிந்து சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பொழுது மர்ம நபர் ஒருவர் சிறுமியின் வாயை மூடி புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் உள்ளது குழந்தைகள் இளைஞர்கள் வயதானவர்கள் பெண்கள் என அத்தனை பேருக்கும் ஆபத்தான சூழல் நிலவுகிறது
அமுதன் என்றொரு மாணவனே இங்கு படிக்கவில்லை என்று கல்லூரியும், அப்படியொருவர் பிறக்கவேயில்லை என அரசும் சொல்லிவிட வேண்டியது தானே?
- ஆதவன் தீட்சண்யா
தமுஎகச மாநில துணைத் தலைவர்
@manuvirothi
இது விசிக தோழர்களை வேண்டுமானால் குஷி படுத்தலாம்.. பொதுமக்களுக்கு தெரியும் தோழர்.. ஜனநாயகன் படத்துக்கு வன்னி அண்ணன் குடுத்த statement என்ன, ஜோசியக்காரரை அரசுப் பொறுப்பில் விஜய் உக்கார வைக்க முயற்சி செய்தபொழுதி எழுச்சித்தமிழர் சொன்ன statement என்ன, தேர்தலுக்கு முன் RSS ன் கள்ளக்குழந்தையாக இருந்த தவெக அமைச்சர் பதவி குடுத்த பின்பு எப்படி அம்பேத்கரின் பேரனானார் என்பதெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் தோழர்...
இதற்கு கண்டனமோ இதைப்பற்றி பேசவோ கூடாது இதுபோன்ற RSS BJP சம்மந்தப்பட்ட விசயங்கள் பேசுபொருளாகிவிடக்கூடாது என்பதற்காகவே அதிமுக திமுக கூட்டணி பிறகு நாதக திமுக கூட்டணி இப்ப திமுக பாஜக கூட்டணி.. சவுக்கு சங்கர சொன்னேன்...
எ.வ.வேலு டிக்கெட் போட்டது 17 தேதி
நீ ரெய்டு போனது 25 ஆம் தேதி
அப்புறம் என்ன ஓடிப்போயிட்டாரு
Mr.முட்டாள் முதலைமச்சர் அவர்களே check your records with officials
பொய் பேசக்கூடாது
- ஆ.ராசா
கரூர் அசம்பாவிதம் தொடர்பாக கரூர் Town காவல் நிலையத்தில் பதிவு செய்த FIR-ஐ என்ன காரணத்தினால் Block பண்ணி வைத்துள்ளீர்கள் @karurpolice ?
@CMOTamilnadu சொல்வது போல
நீங்கள் @tnpoliceoffl தான் சதி செய்து 41 அப்பாவிகளை கொன்றீர்களா ?
பதிவு செய்த FIR-ன் புகார்தாரர் யார் @karurpolice ?
FIR-ஐ பதிவு செய்த அதிகாரி மற்றும்
கரூரில் நடந்த சம்பவத்தை புகாராக தெரிவித்த அதிகாரியை @TVKVijayHQ அரசு பழிவாங்கியுள்ளதா ?
@CMOTamilnadu அவர்கள் கரூர் சம்பவம் குறித்து பதிவு செய்த FIR-ஐ unblock செய்ய @tnpoliceoffl@karurpolice
காவல்துறைக்கு உத்தரவிடவேண்டும்
அன்பு உடன்பிறப்புகளே… உங்கள் உணர்வுகளை நான் உணர்ந்திருக்கிறேன். காலத்திற்கேற்ற மறுசீரமைப்புக்கும் - மறுகட்டுமானத்திற்கும் இதுவே தருணம்!
#UdanpirapinKural