#HappyCoimbatoreDay
பெருமைமிகு கோவையின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். கோவை மக்கள் அனைவருக்கும் எனது கோவை தின வாழ்த்துகள்.
"மரியாதைக்கும் பண்பிற்கும் பெயர் போன மண்... வந்தாரை வாழ வைக்கும் கொங்கு மண்டலத்தின் தலைநகர் கோயம்புத்தூருக்கு இன்று 222-வது பிறந்த தினம்."
கடந்த 1804-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி தனி மாவட்டமாக உருவெடுத்த கோவை, இன்று 222 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நடைபோடுகிறது.
'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்ற அடையாளத்தோடு தொடங்கி, இன்று தகவல் தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம், தொழில்முனைவு எனப் பன்முக வளர்ச்சியோடு மிளிரும் கோவையின் வரலாற்றுப் பயணத்தையும், பெருமைகளையும் உள்ளடக்கியது கோவை.
மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் தவழும் ரம்மியமான சூழல்... இதமான காலநிலை... எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் தொழில் நகரம்... இதுதான் நம்ம ஊரு கோயம்புத்தூர்.
கரிசல் மண்ணும், பருத்தி விளைச்சலும் கோவையை 'தென்னிந்தியாவின் மான்செஸ்டராக' மாற்றியது. விஞ்ஞானி ஜி.டி. நாயுடு போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட மேதைகளின் கண்டுபிடிப்புகளால், பொறியியல் துறையில் கோவை புதிய உச்சத்தைத் தொட்டது. இன்று உலகின் மூலை முடுக்கெல்லாம் சுழலும் மோட்டார் பம்புகள் முதல் சமையலறை கிரைண்டர்கள் வரை கோவையின் முத்திரை பதிந்திருக்கிறது.
பஞ்சாலை நகரமாக இருந்த கோவை, இன்று கல்வியின் சரணாலயமாகவும், உலகத் தரத்திலான மருத்துவ மையமாகவும் உருமாறியுள்ளது. டைடல் பார்க் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஐ.டி. ஹப்பாகவும் கோவை வளர்ந்து நிற்கிறது.
உலகின் இரண்டாவது சுவையான குடிநீரான சிறுவாணியின் ருசியைப் போலவே, கோவை மக்களின் பேச்சிலும் ஒரு தனி இனிமை உண்டு. "என்னங்க... வாங்கங்க... சாப்டீங்களா?" என மரியாதையோடு அழைக்கும் கொங்குத் தமிழின் அழகு, வெளியூரிலிருந்து வருபவர்களையும் சொந்த ஊர்க்காரர்களாக உணர வைக்கும்.
தொழில் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், நொய்யல் நதியை மீட்டெடுப்பது, குளங்களைப் பாதுகாப்பது எனச் சுற்றுச்சூழல் விழிப்புணர்விலும் கோவை மக்கள் முன்னோடியாகத் திகழ்கிறார்கள். 222 ஆண்டுகால வரலாற்றைச் சுமந்துகொண்டு, பாரம்பரியமும் நவீனமும் கைகோர்க்கும் நகரமாக வீறுநடை போடுகிறது கோயம்புத்தூர்.
தொழில் துறையிலும், விருந்தோம்பலிலும், மனிதநேயத்திலும் சிறந்து விளங்கும் நமது கோயம்புத்தூர் மாநகரம் தனது 222-வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், கழக ஆட்சியின்போது, கோவைக்கு கொண்டுவரப்பட்ட சில மக்கள் நலத்திட்டங்களை நினைவுகூர்ந்து, மண்ணின் மைந்தனாக மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
கோவையின் அடுத்த 50 ஆண்டுகாலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, 5 ஆண்டுகளில் மிகக் குறுகிய காலத்திலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
குறிப்பாக, கொங்கு மண்டல விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பல தசாப்த காலக் கனவுத்திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கொண்டுவரப்பட்டது.
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலம், தமிழகத்தின் மிக நீளமான அவினாசி சாலை மேம்பாலம், திருச்சி சாலை மேம்பாலம், கவுண்டம்பாளையம் மேம்பாலம் பொள்ளாச்சி சாலை என நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன. மேலும், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆரம்பகட்டப் பணிகளும் கழக ஆட்சியிலேயே முன்னெடுக்கப்பட்டன.
கோவை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பில்லூர் மூன்றாவது கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதேபோல், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டன.
தொழில் நகரமான கோவையின் வளர்ச்சிக்கு விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதிலும், நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கும் வழிவகை செய்ய உறுதுனையாக இருந்துள்ளேன். மேலும் இந்த திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட்டு இருந்தால் கோவையை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்கும்.
ஸ்மார்ட் சிட்டி (Smart City) திட்டத்தின் கீழ் வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம் உள்ளிட்ட நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டு, கோவையின் அழகு மெருகூட்டப்பட்டது. தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் (IT Parks) மூலம் இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பட்டதாகவும், அது தொடர்பாக மாவட்ட ஆட்சியரே புகார் அளித்துள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு என்பது எல்லா இடங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டிய அத்தியாவசியமான ஒன்றாகும்.
பெண் மாவட்ட ஆட்சியர் அளித்திருக்கும் புகார் தொடர்பாக சட்ட ரீதியாக உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
உயர்நீதிமன்ற விசாரணையில் இவ்வழக்கு இருந்து வருகிறது. எனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படியும், வழிகாட்டுதலின்படியும், விசாரணை நடத்தி, தவறு நடந்திருக்கும்பட்சத்தில் சட்டப்படி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu
#கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பேரூராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் சிறப்பு முகாமை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தேன். #Coimbatore
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. ச.சேகர் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
உடன், முன்னாள் அமைச்சர் திரு. நத்தம் விஸ்வநாதன் M.L.A., முன்னாள் அமைச்சர் திரு. தங்கமணி, முன்னாள் அமைச்சர் திரு. சி.வி.சண்முகம் M.L.A., முன்னாள் அமைச்சர் திரு. கே.பி.அன்பழகன் M.L.A., மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.
“2 கோடி தொண்டரின் ஒருவர் தான் வேலுமணி”
என்னை உதாசீனப் படுத்துவதாக எண்ணி அவர் சொல்லி இருந்தாலும், இதை விட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது ?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்பது தான் என்னுடைய முதல் அடையாளம். இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல.
என்னைத் #தொண்டரில்_ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு நன்றி.
இந்த 2 கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டு தான் தாங்கள் இன்றைக்கு பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள்.
கொடிபிடிக்கும் அந்த தொண்டன் தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர். அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும். அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால்….. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும்.
ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பது தான் ஒரு தலைமைக்கு அழகு.
கடைக்கோடி தொண்டன் பத்திரிகை வைத்தால், அந்த கல்யாணத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருப்பார். கடைக்கோடி தொண்டனின் குரலுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் கான்வாயே நிற்கும். பொறுப்பில் இருப்பவர்களை விட, இயக்கத்தை உயிராய் நேசித்த அந்த அடிப்படைத் தொண்டனைத் தான் நம் தலைவர்கள் அதிகம் நேசித்தார்கள்; மதித்தார்கள்!
“இந்த இயக்கத்தை நேசிக்கும் எல்லோரும் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று சொல்வது வேலுமணி என்கிற ஒரு தொண்டன் மட்டுமா? இல்லையே- 2 கோடி தொண்டரில் யாரைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வார்கள்.
திருமதி. வி.கே. சசிகலா, திரு. டிடிவி தினகரன் ஆகியோர் தனி இயக்கம் ஆரம்பிக்கும் முன் பலமுறை நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற முன்வந்தார்கள்.
முன்னாள் முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம் ஆகியோர் திமுக-வுக்கு செல்லும் முடிவை எளிதாக எடுக்கவில்லை. அதற்கு முன் பலமுறை தங்களை ஆளாக்கிய இந்த இயக்கத்தில் பயணிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தார்கள்.
அதேபோல், இன்றைக்கு மாண்புமிகு அமைச்சராக இருக்கும் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு பேரவைத் தலைவராக உள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் உள்ளிட்ட பலர் கழகத்தில் இணைந்து பயணிக்க பலமுறை முயற்சி எடுத்தும், நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்ததால் தான் அவர்கள் எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றார்கள்.
இப்படி, தங்களுக்கு அடையாளம் கொடுத்த இயக்கத்தை விட்டுக்கொடுக்காமல் வந்தவர்களை, எப்போதும் போல உதாசீனப் படுத்தி அனுப்பிவைத்து தான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை ஒருகணம் உணர வேண்டும்.
பொதுச் செயலாளர் அவர்களிடம் எப்போதும் நான் கேட்பது என்று தான்- வேலுமணி உள்ளிட்ட அந்த 2 கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள்.
“தாய்வழி வந்த
தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று
நேர்வழி சென்றால்
நாளை நமதே!”
தமிழ் மண்ணின் பாரம்பரியக் கலையான ஒயிலாட்டத்தை மீட்டெடுத்து புத்துயிர் அளித்து, அதனை அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவரான ஒயிலாட்டம் கனகராஜ் (எ) முனைவர் க.கனகராஜ் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
கோயம்புத்தூரின் கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களில் பல பயிற்சிப் பட்டறைகள் வாயிலாக இளைய தலைமுறயினரிடம், நாட்டுப்பற்றுடன் கூடிய நாட்டுப்புறக்கலையை விதைத்தவர். தனது சங்கமம் கலைக்குழு வாயிலாக சுமார் நூற்றுக்கும் அதிகமான கிராமங்களிலும் ஒயிலாட்டத்தைக் கற்றுக் கொடுத்து அரங்கேற்றம் செய்தவர். அவரது கலைப்பயணம் எக்காலத்திற்கும் போற்றப்படும்.
கலைமாமணி விருது பெற்ற திரு. ஒயிலாட்டம் கனகராஜ் அவர்களின் மறைவு தமிழ் நாட்டுப்புற கலை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஒயிலாட்டம் நாட்டுப்புறக் கலைத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
மருத்துவ சேவையையே தனது வாழ்வின் மூச்சாகக் கொண்டு செயல்பட்டு வந்த கோவை கங்கா மருத்துவமனையின் நிறுவனரும்,
புகழ்பெற்ற பிளாஸ்டிக் மற்றும் கை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் திரு. எஸ். ராஜசபாபதி மற்றும் புகழ்பெற்ற எலும்பியல் மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் திரு. எஸ். ராஜசேகரன் ஆகியோரின் தாயாருமான மருத்துவர் திருமதி கனகவல்லி சண்முகநாதன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மருத்துவத்துறையில் பல சாதனைகளுடன் தனக்கென தனி முத்திரை பதித்தவர். சமூக நலன் சார்ந்த பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தரமான மருத்துவத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அவர் உருவாக்கிய கங்கா மருத்துவமனை இன்று லட்சக்கணக்கான மக்களின் உயிர்காக்கும் கோவிலாகத் திகழ்கிறது. நிர்வாகத்திலும் மனிதநேயத்திலும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்து கோயம்புத்தூருக்கும், தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தவர். அவரது வழிகாட்டுதலும் அர்ப்பணிப்பும் எதிர்காலத் தலைமுறை மருத்துவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஒரு சிறந்த பாடமாக அமையும்.
மருத்துவர் திருமதி கனகவல்லி சண்முகநாதன் அவர்களின் பிரிவால் வாடும் அவரது மகன்கள் டாக்டர் திரு. எஸ்.ராஜசபாபதி மற்றும் டாக்டர் திரு. எஸ்.ராஜசேகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கங்கா மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் மருத்துவத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
@gangahospital
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள், சிகிச்சை பலனின்றி காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
மக்கள் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர், தனது எளிமையால் அனைவரின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, அதன்பின் மாவட்டக் கழகச் செயலாளராக சிறப்பாக பணியாற்றியது என்றென்றும் நினைவில் இருக்கும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இந்திய விடுதலைக்காக சிறையில் செக்கிழுத்தச் செம்மல், சுதேசி கப்பல் நிறுவனத்தை நிறுவி ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுதினத்தில், இந்திய விடுதலைக்கான அவரின் தியாகங்களை நினைவுகூர்ந்து, போற்றி வணங்குகின்றேன்.
ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டமைப்பதிலும், ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதிலும் பத்திரிகை/ஊடகத் துறையின் பங்கு அளப்பரியது. உண்மையை ஆராய்ந்து நடுநிலையான செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் பத்திரிகையாளர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.
இரவு, பகல், மழை, வெயில் என நேரம் காலம் பார்க்காமல் நேர்மையான முறையில், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகவும், சமூகத்தில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வரும் அனைத்து செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பத்திரிகை/ஊடக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#NationalPressDay
அவிநாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆர்.பிரேமா அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
உடன், #கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. @PRGArunkumar மற்றும் கழக நிர்வாகிகள்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சகோதரர் திரு. சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து பொதுச்சேவையில் ஈடுபட இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
@Seeman4TN
As he steps into his 100th year today, heartiest birthday greetings to the veteran statesman and a towering architect of modern Indian politics, the esteemed Thiru. L.K.Advani Avl.
Your selfless service, unwavering dedication to nation-building, and steadfast commitment to democratic values serve as an enduring beacon of guidance for our country. Your visionary leadership, ideological conviction and principled public life continue to inspire generations of citizens and leaders alike.
I pray to the Almighty to bless you with perfect well-being, good health, and a long life.
இன்று 100வது பிறந்தநாள் காணும் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், நவீன இந்திய அரசியலின் மாபெரும் சிற்பிகளில் ஒருவருமான மதிப்பிற்குரிய திரு. எல்.கே.அத்வானி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டு நலனுக்காகவும், ஜனநாயக மாண்புகளுக்காகவும் நீங்கள் ஆற்றிய தன்னலமற்றத் தொண்டும், அர்ப்பணிப்புமிக்க வாழ்வும் இந்திய அரசியலுக்கு என்றும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றன. உங்களின் தீர்க்கமான தலைமைத்துவம், தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கை உறுதி ஆகியவை எதிர்காலத் தலைமுறையினருக்கு என்றும் உத்வேகம் அளிக்கும்.
தாங்கள் பூரண உடல்நலத்துடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், பல்லாண்டுகள் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
@BJP4India@BJP4TamilNadu
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் (WTA 250) தொடரின் இரண்டாவது சுற்றில் போலந்து வீராங்கனையை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி, இந்திய மகளிர் டென்னிஸில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, சானியா மிர்சாவுக்கு அடுத்து இச்சாதனையைப் புரிந்த முதல் வீராங்கனை என்ற புதிய வரலாற்றைப் படைத்துள்ள கோவை, காளப்பட்டியைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் ரேவதி அவர்களுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#கோவை காளப்பட்டி மண்ணிலிருந்து புறப்பட்டு, தனது அபார ஆட்டாத்தால், சர்வதேச டென்னிஸ் அரங்கில் கோவைக்கும், தமிழ்நாட்டிற்கும், ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளார் வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் ரேவதி.
அவர், அடுத்து வரக்கூடிய காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியிலும் சாதனை வெற்றிகளைப் பெற்று, உலகளவில் தாய்நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வாழ்த்துகிறேன்.
#WTA #ChennaiOpen #Tennis
#கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில் சக்தி ஆயுஷ் விவசாயிகள் தயாரிப்புகள் கடையை நல்லறம் அறக்கட்டளைத் தலைவர் திரு. @AnbuCoimbatore அவர்களுடன் இணைந்து திறந்து வைத்தேன்.