நீ எடுத்துச் சென்ற என்னை
உன்னோடே
வைத்துக் கொள்
ஏனெனில்
கொடுத்ததை
திருப்பி வாங்கும் பழக்கம் எனக்கில்லை...
நீ விட்டுச் சென்ற உன்னை
தயவு செய்து வந்து
எடுத்துச்செல்
உரிமையில்லாதவற்றை
உடன் வைத்திருப்பதால்
உறக்கம் கலைகிறது❣️
என் சந்தோஷத்தில் சிரிப்பவளும்
என் கவலையில் என்னோடு இருப்பவளும்
நான் சொல்லாமலே என்னை புரிந்து
கொள்பவளும்
ஒவ்வொரு நாளையும் அழகாக்கி
என் கூடவே நடப்பவளும் என்னவள் 💞
அவள்
நிலவாக ஜொலிக்க
நான் என் மீதே
இருள் பூசிக் கொள்வேன்...
அவள் கடலாக நிறைந்திட
நான் என்னையே மழையாக்கிப் பொழிந்திருவேன்...
அவள் ஆயுளை நீட்டிக்க
நான் என் உயிரையே மூச்சாக்கி தந்திடுவேன்...
ஏனெனில்
என் எல்லாமே
அவளாகிப் போனபின்
இங்கு எனக்கென்றோ எனதென்றோ
ஏதும் ஏது...?🥰
ரசனையாக பேசுவது
என்பது ஒரு கலை
அதை உணர்ந்த
உன்னத தேவதை நீ...
ஆனால்
நீ பேசாத போது
உன் கண்கள்
அழகாக பேசி விடுகிறது...
விழிகளால்
கவனத்தை ஈர்த்து
பார்வையால்
பேசும் வித்தையை
யாரிடம்
கற்று கொண்டாய்💕
இதயத்தில் சொல்லாத காதல் ஏராளம்...
உன் விழிகளில் மூழ்கிய நொடி முதல்
எந்தத் தூரமும் உன்னை மறக்கச் செய்யவில்லை...
என்றாவது ஒருநாள் உன் விழிகளைச் சந்திப்பேன்...
அன்று மௌனமே காதலாகும்❣️
பெண்ணின் காதல் சொல்லில் இல்லை... அவளின்
கோபம், கோரிக்கை,
கொஞ்சல் ,கெஞ்சல்,
தியாகம்,தவிப்பு,
வலி, வேதனை, அமைதி, அக்கறையிலும்
உணரக்கூடிய அழகான மொழி...
அம்மொழியை
முழுமையாக அறியும் ஆண்
ஒவ்வொரு நொடியும்
பிறவி பயனை அடைகிறான் ❤️
காண்பது
ஒரு நிமிடம் என்றால்
காத்திருப்பது
ஒரு யுகமாக இருக்கிறது
போதும் என்றே சொல்ல தெரியவில்லை
உன் முகம் காண வேண்டும் என்றே
தான் அடம்பிடிக்கிறது என் இதயம் 🥰
இரவு வேளைகளில்
வெட்ட வெளிகளில்
தினம் தினம்
தவம் கிடப்பதெல்லாம்
நல்ல நித்திரைக்காகவோ
நித்திரையில் வரும் சொப்பணத்திற்காகவோ அல்ல...
உன் வருகைக்காக மட்டுமே😍
அவளுக்காகவே
படைக்கப்பட்டிருக்கிறேன்
அவளின்
வருகை மட்டும் தான்
என்னை மகிழ்விக்கிறது...
அவளின்
குரல் மட்டும் தான்
என்னை
அமைதி படுத்துகிறது...
அவளின் மடி மட்டும்தான்
என்னை
உறங்க வைக்கிறது🥰
அழகென்பது முகத்தில் மட்டும் இல்லை…
அவள் பார்வை சொல்லாமல் சொல்லும்
ஆயிரம் கவிதைகளிலும் இருக்கிறது…
மௌனமாக நின்றாலும் மனதைத் திருடும்
அந்த அழகு தேவதைக்கு
என் மனதில் என்றும்
ஒரு தனி இடம்🥰