அநீதியை எதிர்த்து நிற்கவும், ஆதிக்கத்தைக் கேள்வி கேட்கவும் கற்றுத் தந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாள் இன்று!
நம் கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, பெரியாரும் உயிரோடுதான் இருப்பார்.
#Periyar148#SocialJusticeDay
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சாலை சிம்சன் அருகேயுள்ள தந்தை பெரியாரின் திருவுருவச்சிலைக்கு அருகே பெரியாரின் திருவுருவப்படத்திற்கு கழகத்தலைவர் @mkstalin அவர்களுடன் இணைந்து மரியாதைச் செலுத்தினோம்.
பெரியாரின் கொள்கைகளை வென்றெடுப்போம் - சமூக நீதி காப்போம்!!
#சமூகநீதிநாள் #SocialJusticeDay #PeriyarForever
என் கருத்துக்கள் பாராட்டப்படுகிறதா? அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப்படுகிறதா? அல்லது இழிதாகக் கருதப்படுகிறதா? என்பதைக் குறித்து நான் கவலைப்படாமல், என் கருத்துக்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு கசப்பாயிருந்தாலும், உண்மையை எடுத்துரைப்பது தான் என் வாழ்க்கையின் இலட்சியம்! - தந்தை பெரியார், விடுதலை - 28.9.1958
#Periyar148 #SocialJusticeDay #PeriyarForever
புதுச்சேரி :
தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட பாக்குமுடையான்பேட் பூத் ஏர்போர்ட் சாலை, வன்னியர் வீதி ஆகிய பகுதியில் கழக அமைப்பாளர் @R_SivaDMK , விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் பொன் @gauthamponmudy ஆகியோர் முன்னிலையில் திமுக வேட்பாளர் சேதுசெல்வம் வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.
இந்த வாக்கு சேகரிப்பின்போது, தட்டாஞ்சாவடி தொகுதி திமுக பொறுப்பாளர் @drnithish_pydmk மற்றும் புதுச்சேரி, விழுப்புரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, தொகுதி, சார்பு அணி, நகரம், பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
@mkstalin | @udhaystalin |
#VoteForRisingSun 🌄
#DMKPuducherry
மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கின் போது மாண்பமை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவமதித்தது மற்றும் பக்தர்களை அனுமதிக்காமல் அவமதித்தது தொடர்பாக முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு.P.வில்சன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கின் போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்பமை தலைமை நீதிபதி அவர்களை அவமதிக்கும் வகையில் மாண்புமிகு அமைச்சர் ஜெகதீஸ்வரி நடந்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
இந்தச் செய்திகள் உண்மையாக இருந்தால், இத்தகைய ஆணவத்திற்கு அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இடமில்லை. தலைமை நீதிபதி அவர்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கமான நீதித்துறையின் தலைவர் ஆவார். நெறிமுறைப்படி (Protocol), அவர் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சபாநாயகருக்கு அடுத்தபடியாக வைக்கப்படுகிறார். மற்ற அமைச்சர்கள் மற்றும் ஆளும் கூட்டணியின் உறுப்பினர்களான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்வரிசை இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கும் போது, தலைமை நீதிபதி மட்டும் ஏன் அவமதிக்கப்பட்டார்?
அனைத்திற்கும் மேலாக, அன்னை மீனாட்சியின் குடமுழுக்கு விழாவைக் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் மூலமாகவும், புனித தீர்த்தத்தைப் பெற அனுமதிக்கப்படாததன் மூலமாகவும் பக்தர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் இவற்றுக்காகத் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கோருவதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். என மாநிலங்களவை உறுப்பினர் -மூத்த வழக்கறிஞர் வில்சன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்;
தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுவோம்!
#StopHindiImposition#தமிழ்_வாழ்க
தமிழ்நாட்டிற்கு ரூ.3,000 கோடி வரும் என்று ஒருத்தர் சொல்றாரு, தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என ஆசையாக இருக்கிறது என சொல்றாங்க. இந்த கதையெல்லாம் யார் கேட்டாங்க? MoU போட்டாங்களா இல்லையா? இருந்தா கணக்குல காட்டுங்க!
@trbrajaa#TNInvestments#LondonVisit#TVKVijayFails
இது நம்முடைய களம். இந்த களத்திலே நாம் வென்றாக வேண்டும். எனவே, நீங்கள் பழைய திமுககாரனாக மாறுங்கள்.
கழக பொதுச்செயலாளர் திரு துரை முருகன் அவர்கள்.
#MupperumVizha
☀️ தந்தை பெரியார் - விடியலுக்கான கேள்விகளை விதைத்தவர்!
☀️ பேரறிஞர் அண்ணா - தமிழ்நாட்டுக்கான அரசியலை வடிவமைத்தவர்!
☀️ திராவிட முன்னேற்றக் கழகம் - சாமானிய மக்களால் கட்டமைக்கப்பட்ட இயக்கம்!
இந்தப் பேராளுமைகளின் பிறந்தநாளையும், பேரியக்கத்தின் பிறந்தநாளையும் இணைத்துக் கொண்டாடும் #முப்பெரும்_விழா - வரலாற்றைத் திரும்பிப் பார்க்க மட்டுமல்ல; அடுத்த தலைமுறை முன்னோக்கிப் பயணிப்பதற்கும்தான்!
சிந்திக்காமல் Scroll செய்வதும், சரிபார்க்காமல் Share செய்வதும் அல்ல அரசியல். Clarity over Virality என்பதே இளைஞர்களின் அரசியலாக உருப்பெற உழைப்போம்!
“என் மிசா கைதை உங்க எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல! என்னோட தியாகத்துக்கு மார்க் போட உங்க எவனுக்கும் தகுதி இல்ல!” - கழகத் தலைவர் @mkstalin அவர்கள்.
#MKStalin#முப்பெரும்_விழா#DMK4TN