அரசியல்ல இருக்கலாமா இல்ல போயிடலாமானு இருந்த எல்லா குழப்பமும் ஓவர்
அண்ணன் சொன்ன மாதிரி physical Mental health லாம் Fit ah வச்சிட்டு Ideal ah ரெடியா இருங்க இனி இழக்க ஒன்னுமே இல்ல களம் காத்துட்டு இருக்கு கொம்பம் மாதிரி இறங்குவோம்
நம்ம இறங்குனா நம்ம எதிர்ல ஒருத்தனும் நிக்க முடியாது
இன்று மன்னார்குடியில், பேச்சுரிமை மறுக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, கைது செய்யப்பட்ட செந்தமிழன் சீமான் உள்ளிட்ட உறவுகளை விடுதலை செய்யக் கோரி மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம்! தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! நாம் தமிழர்!
அன்பின் அண்ணன் நெல்சன் சேவியர் (@nelsonvijay08 ) அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!
அதிமுக உள்ளிட்டக் கட்சிகளின் மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் புழக்கத்தில் இருந்த ஒரு பாடலை மேடையில் பாடிக் காட்டியதற்காக ஐந்து பிரிவுகளின் கீழ் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டார் அண்ணன் சாட்டை துரைமுருகன். அந்தப் பாட்டில் 'சண்டாளன்' எனும் சொல்லாடல் இடம்பெற்றதால் அது சாதியைக் குறிக்கிறதெனக் கூறி, காவல்துறை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழும் வழக்குத் தொடுத்தது.
'சண்டாளன்' எனும் வார்த்தையோ, 'பண்டாரம்' எனும் வார்த்தையோ சாதியைக் குறிக்கிறதென பொதுச்சமூகத்தினரால் அறியப்படாமல், சாடுவதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகவே இன்றளவும் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இவ்விரு வார்த்தைகளையுமே கருணாநிதி பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, 'சண்டாள' எனும் வார்த்தையைத் தனது அறிக்கையிலும், சிறுகதையிலும், நேர்காணலிலும் இயல்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். 2013 ஆம் ஆண்டு வரைகூட அச்சொல்லாடலைக் கையாண்டிருக்கிறார். முத்தமிழ் வித்தகருக்கு அது சாதியைக் குறிக்கும் சொல் என்பது தெரியாதா? இல்லை! தெரிந்தேதான் பயன்படுத்தினாரா? என்று கேட்டால், பதிலில்லை. ஆனால், அவர் அச்சொல்லாடலைப் பயன்படுத்தும்போது அதற்கு சாதிய உள்நோக்கம் கற்பிக்கவில்லை.
அதேசமயம், அண்ணன் துரைமுருகன் அதனைப் பயன்படுத்தியபோது மட்டும் சாதியம் வந்துவிட்டது.
ஏற்கனவே எழுதப்பட்டு, மெட்டு அமைக்கப்பட்டு, பாடப்பட்டு பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருந்த ஒரு பாடலையை அரசியல் மேடையில் பாடிக் காட்டியதற்காக, ஒற்றை வார்த்தையை வைத்துக் கொண்டு, அதற்கு உள்நோக்கம் கற்பித்து, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்தது எல்லாம் திமுக அரசின் பச்சை அயோக்கியத்தனம்! அவதூறான ஒருவரது பேச்சை மற்றொருவர் மேற்கோள் காட்டி பேசினால்கூட, அவர் மீது வழக்குத் தொடுக்க முடியாது என்பதுதான் சட்டவிதி. எழுதியவரோ, பாடியவரோ சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாத ஒரு பாட்டை, மற்றொருவர் பாடிக் காட்டியதற்காக வழக்கு என்பது வெளிப்படையான அதிகார முறைகேடு!
'சாராய வியாபாரி ஸ்டாலின்' எனச் சாடி, கருணாபுரம் களநிலவரத்தை சாட்டையில் வெளியிட்டபோதே அவரைக் கைதுசெய்ய திமுக அரசு நாள் குறித்துவிட்டது என்பதை நன்றாக அறிவோம். அவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு சாக்கு; அவ்வளவே!
ஒருவேளை, உண்மையிலேயே அண்ணன் துரைமுருகன் அவதூறாகப் பேசியிருந்தால்கூட அதற்கு உரிமையியல் வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்க முன்வரலாம்; குற்றவியல் வழக்குத் தேவையில்லை. அண்ணாமலை மீது திமுக அரசால் தொடுக்கப்படும் அவதூறு வழக்கெல்லாம் குற்றவியல் நடவடிக்கையாக இல்லாமல், உரிமையியல் வழக்காகத்தானே இருக்கிறது. அதுபோல, 'வக்கீல் நோட்டீஸ்' அனுப்பாது, கைதுசெய்து சிறையில் அடைத்தே ஆக வேண்டுமென திமுக அரசு அடம்பிடித்ததேன்?
பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் குறித்து கோவை, பாரதியார் பல்கலைக்கழக வாசலில் மேடையிட்டு பேசிய எச்.ராஜா கைது செய்யப்பட்டிருக்கிறாரா? இல்லை!
முதல்வர் ஸ்டாலினை. 'முட்டாள்' என்று திட்டிய, “இசுலாமிய இயக்கங்கள் இந்துக் கோயில்களை இடிக்கின்றன” என மதவாத அவதூறு பரப்பிய சுப்ரமணியசுவாமி மீது ஏதேனும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? இல்லை!
'திமுகவினர் பொண்டாட்டியை விற்று பிழைப்பவர்கள்' என பெரியார் சொல்லாத ஒன்றை சொன்னதாகக்கூறி, இணையத்தில் பதிவிட்ட குருமூர்த்தி மீது வழக்குத் தொடுக்க வேண்டுமெனும் எண்ணமாவது திமுகவுக்கு வந்ததா? அதுவும் இல்லை!
அதெல்லாம்கூட போகட்டும்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரிய அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையின்படி, காவல்துறையினரையும், அதிகாரிகளையும் கைதுசெய்தாகிவிட்டதா? இல்லை!
வேங்கைவயல் வன்கொடுமைக் குற்றவாளிகளைக் கைதுசெய்தாகிவிட்டதா? இல்லை!
அம்பாசமுத்திரத்தில் விசாரணை சிறைவாசிகளின் பல்லைப் பிடுங்கி மனித உரிமை மீறலைச் செய்த காவல்துறை அதிகாரி பல்வீர் சிங்கைக் கைதுசெய்தாகிவிட்டதா? இல்லை!
அண்மையில் கொலைசெய்யப்பட ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் உண்மைக்குற்றவாளிகளைக் கைதுசெய்தாகிவிட்டதா? இல்லை!
தமிழக மின்சார வாரியத்துக்கு மூன்றாம் தர நிலக்கரியை அதிக விலைக்குத் தலையில் கட்டிய அதானி நிறுவனத்தார் எவர் மீதாவது வழக்குத் தொடுக்கப்பட்டு கைதுசெய்தாகிவிட்டதா? இல்லை!
சென்னை, எழும்பூரிலுள்ள கே.பி.பார்க் ஊழல் குற்றவாளிகளைக் கைதுசெய்தாகிவிட்டதா? இல்லை!
கொடநாடு கொலைகளில் முழுமையானக் கைதுநடவடிக்கை நிகழ்ந்திருக்கிறதா? இல்லை!
இப்படி, கைதுசெய்யப்பட வேண்டியவர்கள்/ சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் எத்தனையோ பேர் இருக்க அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களை நான்காவது முறையாக சிறைப்படுத்த துடித்தது ஸ்டாலினின் அதிகாரத்திமிர்!
கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை எல்லாம் காசை வாங்கிக் கொண்டு விட்டுவிட்டு, 'கள்ளத்தனம் கொண்ட கருணாநிதி..' எனும் பாடலைப் பாடியதற்காக அண்ணன் துரைமுருகனைக் கைதுசெய்ய நினைத்தது எல்லாம் திராவிட மாடல் அரசின் சிறப்பான (?) ஒரு செயல்பாடு!
தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாக கொலைகள் நடக்கின்றன. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரே படுகொலை செய்யப்படும் அளவுக்கு கொலைவெறித்தாக்குதல்களும், கூலிப்படைக்கலாச்சாரமும் மாநிலம் முழுமைக்கும் விரவிக் கிடக்கின்றன. கஞ்சா, அபின், மெத், போதை ஊசி, போதை சாக்லேட் என யாவும் கடைக்கோடி கிராமம்வரை சென்றுவிட்டது. ரௌடிசம் தலைவிரித்தாடுகிறது; சென்னை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகளிலேயே தொடர்ச்சியானப் படுகொலைகள் அரங்கேறுகின்றன; இதுமட்டுமில்லாது, சாதிய மோதல்கள், ஆணவக்கொலைகள், கள்ளச்சாராய புழக்கம் என தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துப் போயிருக்கிறது. இதுவெல்லாம் அண்ணன் துரைமுருகனாலா விளைந்தது? அவரா சட்டம் ஒழுங்கைக் கெடுத்தார்?
இங்கு அவர்களுக்கு பிரச்சினை, சாட்டை வலையொளியும், சாட்டை துரைமுருகனும்தான்! அவரது பேச்சுகளும், உரைவீச்சுகளும், அவை ஏற்படுத்தும் அதீத தாக்கமுமே ஆளும் திமுகவுக்கு உறுத்தலைத் தருகிறது.
குறள் 448:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
‘குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்’ என்பதுதான் இதற்கு கருணாநிதி எழுதிய பொழிப்புரை. ஆனால், விமர்சனங்களை ஏற்கவே முடியாத பாசிச அரசாக இருக்கிறது திமுக அரசு. ஏற்கனவே, தமிழகக் காட்சி ஊடகங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் திமுக, அரசியல் கருத்துருவாக்கத்தையும், ஊடகப் பிம்பக் கட்டுமானத்தையும் செய்து, தன்னை நிலைநிறுத்தத் துடிக்கிறது. “பாசிச பாஜக உள்ள வந்துரும்” எனப் பயமுறுத்தியே தனது குற்றங்களையும், தவறுகளையும் இன்றுவரை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒத்துஊத ஊடகவியலாளர்கள் எனும் போர்வையின் திமுகவின் சொம்பு, அண்டா, டம்ளர் என பல வகையறாக்கள்; ஊடக விவாதங்களையும், அதன் தலைப்புகளையும், அதன் பங்கேற்பாளர்களையும் திமுகவே தீர்மானிக்கும் எனும் அளவுக்கு அரசியல் நெருக்கடி. இதனால், மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும், உணர்வுகளையும், உரிமைக்குரல்களையும் அரசுக்குக் கொண்டு போய் சேர்க்க உறவுப்பாலமாகச் செயல்பட வேண்டிய ஊடகங்கள், அரசின் கருத்துருவாக்கத்தை மக்களிடம் திணிக்கும் ஊதுகுழலாக மாறி நிற்கின்றன. ஓரிருவர் திமுக அரசை விமர்சித்துப் பேசினால், அவர்களுக்கும், அச்சுறுத்தல்/ நெருக்கடி!
எண்ணற்ற சிக்கல்கள் நாட்டைச் சூழ்ந்திருக்க, கருணாநிதியை இழிவுப்படுத்திவிட்டதாகக் கூறி, அதற்கு சாதிய உள்நோக்கம் கற்பித்து, அதுவும் பட்டியல் பிரிவிலுள்ள சாதிகளை எல்லாம் கருணாநிதிக்கு முன்னிறுத்தி, சிண்டு முடிவதும், இதில் கொஞ்சம்கூட தொடர்பே இல்லாத நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தை உள்ளிழுத்து சண்டைமூட்டிவிட முனைவதுமான நெல்சன் சேவியர் அவர்களது பதிவு அற்பத்தனமானதாகும்.
அப்புறம், வெற்றிகொண்டான் முதல் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வரை தொழில்முறையாகவே மேடைகளில் அவதூறையும், ஆபாசத்தையும் கட்டவிழ்த்துவிட்டதெல்லாம் எந்த வகை அரசியலில் சேரும்? என்பதை நெல்சன் விளக்க வேண்டும்.
அதிமுகவின் ஆட்சியில் நடந்தேறிய அத்தனை அவலங்களும் திமுக ஆட்சியிலும் தொடரவே செய்கின்றன. ஆனால், அதனை அறச்சீற்றத்தோடு பேசத்தான் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் தயக்கம் காட்டுகின்றனர்.
அதே காவல் மரணங்கள்!
அதே மீனவர்கள் மீதான தாக்குதல்கள்!
அதே விவசாயிகள் மீதான அரசின் ஒடுக்குமுறைகள்!
அதே விவசாய நிலப்பறிப்புகள்!
அதே நாசகாரத் திட்டங்கள்!
அதே ஊழல்கள்!
அதே மதுவின் கொடுமைகள்!
அதே சாராய மரணங்கள்!
அதே ஆசிரியர்களின் போராட்டங்கள்!
அதே துப்புரவுத்தொழிலாளர்களின் கண்ணீர்கள்!
அதே செவிலியர்களின் கோரிக்கைகள்!
அதே போக்குவரத்துப்பணியாளர்களின் பணி நிறுத்தங்கள்!
அதே 110 விதியின் கீழான சட்டமன்ற அறிவிப்புகள்
அதே சட்டமன்ற இடைநீக்கங்கள்
அதே அதிகார அச்சுறுத்தல்கள்/ மிரட்டல்கள்!
அதே ஊடகத்தின் மீதான ஆதிக்கங்கள்!
அதே ஆரியத் தலைமைகளுடனான சமரசங்கள்!
அதே பாஜகவுடனான நேரடி/மறைமுகத்தொடர்புகள்!
அதே ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள்!
அதே சாதிவெறியாட்டத்துக்குத் துணைபோகும் அதிகாரம்!
அதே ஆணவக்கொலைகள்!
இது எதனைப் பேச விழைகிறீர்கள் உங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள்? பெரியார், அண்ணா, சமூக நீதி, விடியல், திராவிட மாடல் அரசு எனும் சொற்பதங்களைக் கொண்டு, திமுகவின் தவறுகளை மூடி மறைக்கிறீர்கள்! ஆளும் அரசுக்குத் துதிபாடுகிறீர்கள்!
‘ஸ்டாலின் அடித்தார் கில்லி!
அதிர்ந்தது தில்லி!’
‘ஸ்டாலின் ராஜ்ஜியம்!
ஆளுநர் பூஜ்ஜியம்’
‘வந்தார் உதயநிதி!
பாஜக சரணாகதி!’
என எதுகை மோனையாகத் தலைப்பிட்டு, திமுகவின் ஊதுகுழலாகச் செயல்படுவதைத் தவிர, என்ன அறச்சீற்றத்தை வெளிப்படுத்தினீர்கள்?
ஆளும் அரசு வேறு! அதிகார வர்க்கம் வேறு! எனப் பிரித்து, காவல்துறையின் மோசமானச் செயல்பாடுகளுக்குக்கூட காவல்துறை அமைச்சகத்தைத் தன்வசம் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பில்லை என்பதுபோல கட்டமைத்து, எல்லாவற்றுக்கும் அவரைக் காப்பாற்ற முற்படுகிறீர்கள்!
ஒரு பேருந்தில் நடத்துநருக்கும், காவலருக்கும் பயணச்சீட்டு எடுப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம், காவல்துறைக்கும், போக்குவரத்துத் துறைக்குமான மோதலாக மாறி, மூன்று நாட்கள்வரை அது நாடு முழுக்க எதிரொலித்து, பிறகு, அந்த நடத்துநரும், ஓட்டுநரும் சமாதானம் ஆனதுபோல ஒரு காணொளியை வெளியிட்டுத்தான் ஒரே அரசின் கீழுள்ள இரு துறைகளின் இணக்கப்பாட்டை உறுதிசெய்ய வேண்டிய இழிநிலையில்தான் தமிழக அரசின் நிர்வாகச்செயல்பாடு இருக்கிறது என்பது கேலிக்கூத்து இல்லையா? இதற்குத்தான் எத்தனை முட்டுகள்? எத்தனை உருட்டுகள்?
அவ்வப்போது பெரியாரைத் துணைக்கழைத்து நடக்கும் ஜல்லியடிகளுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
இங்குள்ள பெரியாரிய அமைப்புகள் எல்லாம் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துப் போராடத் துணிவார்களென்றால், பெரியார் சிலையை உடைப்பது பாஜககாரனாக இருக்காது; திமுககாரனாகத்தான் இருக்கும். ஆம்! 2009ஆம் ஆண்டு திமுகவுக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகத்தினர் தேர்தல் பரப்புரை செய்தபோது, சென்னை, இராயப்பேட்டையில் பெரியார் சிலையை உடைத்தவர்கள் திமுகவினர்; அவர்களைக் கட்சியைவிட்டு நீக்கவோ, கைதுசெய்யவோ அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிடவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தினரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரைக் கைதுசெய்தனர்.
எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம்! அவ்வளவு இருக்கிறது. நிறைவாக, ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன்.
நாளை நியாயத் தராசிட்டு, குற்றவாளிக்கூண்டில் திமுக ஏற்றப்படும் வேளையில், திமுக அரசின் அயோக்கியத்தனங்களை மூடி மறைத்து, அவர்களுக்கு ஒத்து ஊதும் உங்களைப் போன்ற ஊடகவியலாளர்களும் சேர்ந்து ஏற நேரிடுமென எச்சரிக்கிறேன்.
வாழ்த்துகள்..! மென்மேலும் வளர்க..!
வெளி நாட்டிலும், வெளி மாநிலத்திலும் நடக்கும் அவலங்கள்கூட பேசப்படும் உங்கள் சேனலில், மேல்மா விவசாயிகளின் போராட்டம் குறித்தும், அப்போராட்டத்தில் விவசாயிகள் மீது திமுக அரசால் குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டது குறித்தும் ஒற்றைக்காணொளிகூட இல்லையே ஏன்? அதற்கு News Value இல்லையென்று நினைக்கிறீர்களா? இல்லை! திமுக அரசை விமர்சிக்கும் காணொளிகளை இட வேண்டாமென்று முடிவு செய்துவிட்டீர்களா?
@jeevasagapthan1
எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்
கடல் விழுங்கும் முன்பே நிலம் விழுங்க வந்த பகை முடித்து புகழ் படைத்த மகுறொளியாற்றின்
பண்பலை அடக்கத்தில் வாழ்ந்த நம்பாட்டன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன் ❤️🔥
#தமிழினத்தலைவர்69#TamilsLeaderPrabhakaran