1200 ஆண்டுகள் பழமையான இங்கிலாந்தின் வரலாற்றில், சென்னையைச் சேர்ந்த முதல் தமிழர் பெண்மணியாக, துணை மேயராக மீண்டும் பதவியேற்கும் அரிய பெருமையைப் பெற்றிருக்கும் மாண்புமிகு டாக்டர் திருமதி. மோனிகா தேவேந்திரன் அவர்களுக்கு, என் உள்ளம் கனிந்த, நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
தங்களின் தூய சேவையும், உறுதியான தலைமையும் இங்கிலாந்து மக்களின் வாழ்வில் புதிய புரட்சியை உருவாக்குவதோடு, உலகத் தமிழ்ச் சமூகத்திற்கு மாண்பு சேர்க்கிறது. இந்த உயரிய பதவியில், தங்களின் ஞானமும், திறனும், அர்ப்பணிப்பும் மேலும் பல உன்னத புரட்சிகளைப் படைக்கும் என உறுதியாக நம்புகிறேன்!
தமிழர் பெருமையை உலகறியச் செய்யும் தங்களின் பயணம் என்றென்றும் தொடர வாழ்த்துகிறேன்!
#DrMonicaDevendran
கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதியின் உறுதியை நிலைநாட்டியுள்ளது.
2019-ல் தமிழகத்தை அதிரவைத்த இந்த வழக்கில், ஒன்பது குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் தைரியமான சாட்சியங்கள் மற்றும் சிபிஐயின் வலுவான ஆதாரங்கள் இந்த தீர்ப்பை சாத்தியமாக்கியுள்ளன.
நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையுடன் அபராதம் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ₹85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கியதோடு, சமூகத்தில் இத்தகைய கொடிய குற்றங்களுக்கு எதிராக கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. நமது நீதித்துறையின் இந்த உறுதியான நடவடிக்கையை மனதார பாராட்டுவோம்.
நீதி வென்றது!
#PollachiCase
மதுரையின் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் தெய்வீக வைபவம், இன்று பக்தர்களின் அளப்பரிய ஆரவாரத்துடன், பச்சைப் பட்டணிந்து, அழகர் பெருமான் வைகையில் இறங்கிய காட்சி, கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. இந்தப் புனித நிகழ்வு, தமிழகத்தின் கலாச்சார பெருமையை உலகறியச் செய்திருக்கிறது.
தமிழக மக்கள் அனைவருக்கும், அழகர் பெருமானின் அருளாசிகள் கிடைக்கட்டும். நமது மாநிலம் செழிப்புடனும், சமாதானத்துடனும், வளமுடனும் திகழ, அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபடுவோம். இத்திருவிழா, நமது பண்பாட்டு ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தட்டும்!
#ChithiraiThiruvizha2025 | #Kallazhagar | #AlagarKovil
Breaking 🚨
Now India started to respond with much greater force, drones fired into Pakistan in response to their today evening attack. This video is from Jalalpur jattan in Pakistan
#IndiaPakistanWar#IndiaPakistanWar2025#IndianArmy#IndianNavy