தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் @OfficeOfOPS அவர்களின் பேத்தி C.K.ஜெயவர்ஷினி - A மகாராஜன் இணையரின் திருமண வரவேற்பு விழா MRC நகரில் இன்று நடைபெற்ற போது, கழகத்தலைவர் @mkstalin அவர்களுடன் பங்கேற்றோம்.
மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
ஆட்சியிலிருந்தபோதே முதலமைச்சரும், கழகத் தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களைப் படித்துப் பார்த்தால், “Fair Delimitation” என்று பேசிவிட்டு, இப்போது “No Delimitation” என்று நடைமுறைக்குச் சாத்தியமற்ற பல்டி அடித்திருப்பது காங்கிரஸ் கட்சிதான் என்பது தெரியும்! பல்டி அடிப்பது காங்கிரஸ் கட்சிக்குப் பழக்க தோஷம்!
#FairDelimitation #Delimitation
கழக இளைஞர் அணிச் செயலாளரும் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான @Udhaystalin அவர்களின் பிறந்தநாள் விழா!🎉
⏰ காலை 9.00 மணி முதல்
📍 குறிஞ்சி இல்லம் - https://t.co/aL2gjkDS9c
கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்கிறார்.
#HBDUdhay #UdhayanidhiStalin
கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவிடத்தில், மலர் தூவி மரியாதை செய்தார். மேலும், திராவிடர் கழகத்தலைவர் அய்யா @AsiriyarKV அவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.
#HBDUdhay#TheHope#DMK4TN
கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளில், ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உறவுகளுடன் அன்பைப் பகிர்ந்து கொண்ட இனிய தருணங்கள்! 💓
#HBDUdhay#TheHope#DMK4TN
வீழாத கொள்கையும், இலட்சியமும்
கொண்ட ஈடில்லா இயக்கத்தின் இளைய சூரியன் நற்றமிழ் நாட்டின் நம்பிக்கைப் பேரொளி
இளம் தலைவர் அவர்களின் இனிய பிறந்தநாள் கொண்டாட்டமாய்…
இளைஞர் படையின் எழுச்சியோடு,
உற்சாகமும் மகிழ்ச்சியும் ஊற்றெடுக்க
"உதயா அண்ணன் வாராரு' இசைப் பாடல் வெளியீட்டு விழா மற்றும் மாற்றுத் திறனாளி அன்பர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்த நிகழ்வின் காணொளி!🔥💪🌄
@mkstalin@Udhaystalin@TThenarasu@dmk_youthwing
#HBDUdhay
#உதயா_அண்ணன்_வாராரு
#இளம்தலைவர்
#HBDUdhayAnna
நம்முடைய #ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பாரதி சாலையில் உள்ள அன்பகம் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் சகோதரிகளுடன் இணைந்து கேக் வெட்டினோம். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம். அவர்களின் அன்பில் நெகிழ்ந்தோம்.
எனது பிறந்த நாளை முன்னிட்டு எனக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்களுக்கும், பெரியார் திடலிலும் அறிக்கை வடிவிலும் வாழ்த்திய திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,
சமூக வலைத்தளத்தின் வாயிலாக வாழ்த்திய மாநிலங்களவை உறுப்பினரும் - மக்கள் நீதி மய்ய தலைவருமான கலைஞானி திரு.கமலஹாசன் சாருக்கும்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் திரு.வன்னி அரசு அவர்களுக்கும்,
தே.மு.தி.க பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அக்கா பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், மாநிலங்களவை உறுப்பினர் சகோதரர் எல்.கே.சுதீஷ் அவர்களுக்கும், வி.சி.க. பொதுச் செயலாளர் திரு.ரவிக்குமார் அவர்களுக்கும்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அண்ணன் கு.செல்வபெருந்தகை அவர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் அண்ணன் இரா.முத்தரசன் அவர்களுக்கும்,
சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் திரு.அண்ணாமலை அவர்களுக்கும், SDPI முன்னாள் மாநில தலைவர் சகோதரர் நெல்லை முபாரக் அவர்களுக்கும்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் அண்ணன் ஜான் பாண்டியன் அவர்களுக்கும், தமிழர் தேசம் கட்சியின் தலைவர் சகோதரர் கே.கே.செல்வகுமார் அவர்களுக்கும்,
திராவிட வெற்றிக்கழகத் தலைவர் அண்ணன் மல்லை சத்யா அவர்களுக்கும்,
தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் சகோதரர் நாகை திருவள்ளுவன் அவர்களுக்கும், திராவிட இயக்கத்தமிழர் பேரவையின் தலைவர் அண்ணன் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கும்,
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் அண்ணன் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் - திராவிட இயக்க ஆய்வாளர் அண்ணன் திருநாவுக்கரசு அவர்களுக்கும் - புதிய திராவிடர் கழக தலைவர் சகோதரர் ராஜ் உள்ளிட்ட தோழமை கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் - உறுப்பினர்களுக்கும்
தொலைபேசி வழி வாழ்த்திய இனமுரசு அண்ணன் சத்யராஜ், திரைக்கலைஞர் சகோதரர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், திரைப்பட இயக்குநர்கள் நண்பர் மாரி செல்வராஜ், சகோதரர் லோகேஷ் கனகராஜ், சகோதரர் நெல்சன், திரைக்கலைஞர்கள் நண்பர் ஆர்யா, சகோதரர் சூரி, சகோதரர் சந்தானம்,
ஒளிப்பதிவாளர் திரு.ரவி.கே.சந்திரன், திரு.எஸ்.வி.சேகர் அவர்களுக்கும், இசை அமைப்பாளர் சகோதரர் அனிருத் உள்ளிட்ட அனைத்து திரைத்துறை கலைஞர்களுக்கும்,
மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் உள்ளிட்ட பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று என்னை வாழ்த்திய கழகத்தலைவர் அவர்களுக்கும் - நேரில் வாழ்த்திய கழக பொதுச்செயலாளர் - பொருளாளர் - முதன்மைச் செயலாளர் - கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும்,
கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் - முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்,
மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர், வார்டு - கிளை கழகச் செயலாளர்கள் - உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும்,
என் அன்பிற்கினிய இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்கள் - மாவட்ட - மாநில - மாநகர அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து நிலை இளைஞரணி தம்பிமார்களுக்கும்,
கழகத்தின் அனைத்துச் சார்பு அணி நிர்வாகிகளுக்கும் - உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும்,
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேரில் வருகை தந்தும் - சமூக வலைத்தளம் மூலமாகவும் வாழ்த்திய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் என்னுடைய அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறுமாத காலத்தில் தமிழ்நாட்டின் மூலதனச் செலவினம் 11% சரிந்துள்ளதாக ‘ தி இந்து- பிசினஸ் லைன்’ இதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கின்றது.
இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் கர்நாடகா (+51%), உத்தரப் பிரதேசம் (+23%), ராஜஸ்தான் (+21%), மகாராஷ்டிரா (+5%) போன்ற மாநிலங்கள் மூலதனச் செலவுகளைப் பொறுத்து வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது, தமிழ்நாடு மட்டும் (-11%) பின்னடைவைச் சந்தித்துள்ளது கவலை அளிக்கின்றது.
கடந்த ஐந்து மாதங்களில் ஏற்பட்டுள்ள இந்த செலவுகள் கூட கடந்த கழக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கானவையாக இருக்கக்கூடிய நிலையில், இந்த அரசு எந்த புதிய பணிகளையும் மேற்கொள்ளாதது வெட்டவெளிச்சமாகியுள்ளது. சாலைகள், குடிநீர் வசதிகள், அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற, மக்களின் அத்தியாவசியக் கட்டமைப்புகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் செய்யப்படும் முதலீடாக இருக்கும் மூலதனச் செலவினம் சரிவடையும்போது, அதன் விளைவுகளை அன்றாடம் எதிர்கொள்ளப் போவது சாமானிய மக்கள்தான் என்பதை அரசு உணர வேண்டாமா?
தமிழ்நாட்டில் மட்டும் மூலதனச் செலவினம் 11% குறையக் காரணம் என்ன? பட்ஜெட்டில் மூலதனப் பணிகளுக்கு ஒதுக்கிய நிதியில், இதுவரை இந்த அரசு எந்தெந்தத் துறைகளில், எவ்வளவு நிதியினைச் செலவிட்டிருக்கின்றது? எத்தனைப் புதிய பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன? எந்தெந்தத் துறைகளில் செலவினம் தேக்கமடைந்துள்ளது? அத்தகைய தேக்க நிலைக்கான காரணம் என்ன?
ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களில் எத்தனைப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை? அவை தொடங்கப்படாததற்கான காரணங்கள் என்ன? இவற்றுக்குச் செலவிடப்படவேண்டிய நிதி ஆதாரங்கள் வேறு என்ன திட்டங்களுக்காகச் செலவிடப்படுகின்றன? என்பன போன்ற பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.
இவற்றுக்கெல்லாம் உரிய விளக்கத்தை அளித்து மக்களிடம் உண்மை நிலையை உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டிய கடமை அரசிற்கு இருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
#FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு
கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!
1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாற்றுத்திறன் மகளிர் இல்ல சகோதரிகளுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்தோம். அவர்களுடன் கேக் வெட்டி நலத்திட்டங்கள் வழங்கியதோடு, அவர்களின் அன்பான வாழ்த்தில் நெகிழ்ந்தோம்.
@nchitrarasu
Taking sports beyond cities and creating opportunities for rural talent were among the key initiatives during @Udhaystalin Anna's tenure as Sports Minister. His focus on grassroots sports has helped strengthen Tamil Nadu's sporting ecosystem.
May his commitment to public life continue to inspire.
Happy Birthday!🖤❤️
@mkstalin@dmk_youthwing
#HBDUdhay
#உதயா_அண்ணன்_வாராரு
#HBDUdhayAnna
#UdhayaAnnanVaaraaru
பிறந்த நாளை முன்னிட்டு நம் #ChepaukTriplicane தொகுதி TTK சாலையில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் காப்பகத்தில் வசிக்கும் முதியவர்கள் உட்பட அனைவருடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்தோம். மேலும், அவர்களுக்கு மழைக்காலத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். அவர்களுடைய வாழ்த்துகளுக்கு என் அன்பும், நன்றியும். @nchitrarasu
கம்பீர நடை போடும் கழக இளைஞர் அணியின்
இளைய சூரியன் இளம் தலைவரின்
இனிய அகவைத் திருநாளில்..
இடி மழையாய், புயல் மின்னலாய்,
இதயங்கள் துள்ளிடும் இசைத் தேரோட்டமாய்..
எதிரிகள் நடுங்கிட
வீரனாய் தீரனாய்
கலைஞராய் தலைவராய்
“உதயா அண்ணன் வாராரு…”
பகை வீழ வாள் ஏந்தும்
கழகத்தின் போராளியின்
எழுச்சிமிக்க இளைஞர் படையின்
உற்சாகம் மிகுந்த கொண்டாட்டத்தின் நடுவே..
உதயமானது உயிரான இளம் தலைவரின்
பிறந்தநாள் பாடல்! 💪🏻❤️🔥🔥🌄
@mkstalin@Udhaystalin@TThenarasu@dmk_youthwing
#இளம்தலைவர்
#உதயா_அண்ணன்_வாராரு
#HBDUdhayAnna
#UdhayaAnnanVaaraaru