பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
திமுக இதை செய்யாது.. கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கும்
இதை 100% எல்லா திமுககாரனும் சொல்வான்
எங்க ஒரே ஒரு காங்கிரஸ்காரனை நாங்க தவெக கூட போக மாட்டோம்னு சொல்ல சொல்லுங்க பாக்கலாம் 😤😤😤
காவியா - கல்வியா?
படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வைக் கோவையில் பதிலாகச் சொல்லியிருக்கிறது @dmk_studentwing!
அரைவேக்காட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு அறநிலையத்துறை சட்டமும் தெரியவில்லை, கடந்தகால அ.தி.மு.க. ஆட்சிகளிலும் கோயில் நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை.
ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராகவோ, அதனைக் கொச்சைப்படுத்தியோ பேசினால் #ஓரணியில்_தமிழ்நாடு உங்களை ஓட ஓட விரட்டும், எங்கள் Dravidian Stock கூட்டம்💪🏻
@dmk_studentwing@rajiv_dmk
தலைவர் கலைஞர் -
முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு!
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!
அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்!
#KalaignarForever
பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது!
அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!
முதல் அடியை ஓங்கி நடுமண்டையில் அடித்திருக்கிறது... காட்பரிஸ் டைரி மில்க் நிறுவனம் ❤️
பானி பூரி சாப்பிடவோ?
திட்டிய ஹிந்தி வார்த்தைகளை புரிந்து கொள்ளவோ... இந்தி தேவையில்லை...
அவ்வளவு ஏன்? சென்னையில் இருந்து வட மாநிலத்தில் வாழ சென்றால் கூட இந்தி மொழி அவசியமில்லை என்பதை தான் இந்த விளம்பரம் உணர்த்துகிறது ❤️
இந்தியாவில் உள்ள அனைத்து இந்திய மக்களையும் இணைக்க
இணைப்பு மொழியாக ஆங்கிலம் போதுமானது...
எந்த மொழியையும் அழிக்க வேண்டாம்... மொழியில் உயர்வு தாழ்வு வேண்டாம் ❤️
என்பதை தங்கள் விளம்பரத்தின் மூலம் காட்பரிஸ் நிறுவனத்தினர் அசத்தியிருக்கிறார்கள் ❤️❤️
நாட்டில் நடக்கும் கரண்ட் சினாரியோவை அமுல் தங்கள் விளம்பரங்கள் மூலம் நக்கல் விடுவார்கள்❤️
அந்த இடத்தை தற்போது காட்பெரிஸ் பிடித்துக் கொண்டிருக்கிறது ❤️ நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமான உண்மையைப் பேசும் விளம்பரம் ❤️ டீமுக்கும் கிரியேட்டருக்கும் வாழ்த்துக்கள் ❤️
- ஜாக்கிசேகர்
#இந்தியா #linklanguage #India #Tamil #TamilNadu #Hindi #தமிழ்
"இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?" என்று 'அறிவுப்பூர்வமான' வினாவை எழுப்பி, தங்கள் இந்தி விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இங்குள்ள பா.ஜ.க.வினர்!
தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே அறிந்துகொள்ளட்டும்!
#தமிழ்_வாழ்க!
#StopHindiImposition
#LetterToBrethren
சமூக வலைத்தளம் முழுக்க இரயில் #பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்!
அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!
இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!
உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி!
#தமிழ்_வாழ்க!
#InternationalMotherLanguageDay
உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் - உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!
உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் #தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!
இல்லை சார்.. எலக்சனுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு! போய் என் பழைய டைம்லைன் எல்லாம் செக் பண்ணி பாருங்க.. நான் பொது வாழ்வுக்கு வந்ததில் இருந்து மிக நீண்ட வருடங்களா எனது மாற்று மத சகோதரர்களுக்கு தீபாவளி வாழ்த்து வினாயகர் சதுர்த்தி வாழ்த்துனு எல்லா பண்டிக்கைகளுக்கும் வாழ்த்து சொல்லிட்டுதான் இருக்கேன். ஆனா வருசா வருசம் யார்னா ஒரு லூசு வந்து உங்களை மாதிரி இப்படி பேசும்.. நான் கண்டுக்குறது இல்லை. நன்றி சார்
I strongly condemn the celebration of Hindi Month valedictory function along with the Golden Jubilee celebrations of Chennai Doordarshan.
Hon’ble @PMOIndia,
The Constitution of India does not grant national language status to any language. In a multilingual nation, celebrating Hindi Month in non-Hindi speaking states is seen as an attempt to belittle other languages.
Therefore, I suggest that holding such Hindi-oriented events in non-Hindi speaking states could be avoided, and instead, the celebration of the local language month in the respective states should be encouraged.
சென்னை தொலைக்காட்சியின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடப்படுவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு @PMOIndia,
நாட்டின் தேசிய மொழி என்று அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழியையும் வரையறுக்கவில்லை.
பன்மொழிகள் நிறைந்த இந்திய நாட்டில், இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அதனை மட்டும் கொண்டாடுவது பிற மொழிகளைச் சிறுமைப்படுத்துவதாகும்.
இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, செம்மொழித் தகுதி பெற்ற அத்தனை மொழிகளையும் கொண்டாட வேண்டும்; நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்ற வேண்டும்!
#StopHindiImposition