தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
Impact After Term | 09 : Special Initiatives of the Finance Department | 03 : Litigation Risk Management System
Public finance management is not limited to budgeting, revenue mobilisation, and expenditure control. It also requires identifying and mitigating risks that could impose significant financial liabilities on the Government in the future.
When the DMK Government assumed office in 2021,Tamil Nadu was facing numerous high-risk litigations involving taxation, land acquisition, personnel-related matters, and procurement disputes, many of which carried the potential to impose substantial financial burdens on the State
Recognising the need for a more structured approach, Dr. @ptrmadurai announced the creation of a Litigation Risk Management System in the 2021-22 Budget to proactively identify, monitor, and manage cases with significant fiscal implications for the Government.
As part of this initiative, the Government constituted a high-level Litigation Advisory and Oversight Committee (LAOC) under the chairmanship of Justice K. Kannan, former Judge of the Punjab and Haryana High Court, along with experts in direct taxation, indirect taxation, civil litigation, public finance, and legal affairs.
The system introduced a coordinated framework for identifying High Risk Litigations, providing strategic legal guidance, strengthening inter-departmental coordination, and monitoring cases through a dedicated High-Risk Litigation window within the Integrated Court Case Monitoring System (ICCMS).
Within its first year, the Committee conducted 14 meetings and provided guidance on 26 high-risk cases across 14 Government departments. The initiative subsequently expanded, with 37 high-risk litigations across 15 departments receiving strategic guidance, while 88 high-risk cases across 10 departments are currently being monitored under the system.
More than a legal reform, the Litigation Risk Management System represented an important institutional reform in public finance management, helping the Government anticipate potential liabilities, reduce fiscal risks, and strengthen long-term financial sustainability.
— Admin Team
“கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி”
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
ஒரே ஒப்பந்தத்தையே எத்தனை தடவ திரும்ப திரும்ப போடுவீங்க.
ஹூன்டாய் நிறுவனம் கப்பல் கட்டும் தளம் அமைக்க, தமிழ்நாடு அரசோடு ஒப்பந்தம் போட்டது டிசம்பர் 2025 - திமுக ஆட்சியில்.
இந்த Reel ஆட்சியில், அரசு, முதலமைச்சர், அமைச்சர்கள் யார்கிட்ட இருந்தும் official statement வராது. ஆனா Fake News, Sticker News எல்லாம் தினசரி வரும்.
ஆதரத்தோட அம்பலப்படுத்துனா, நாங்களா சொன்னோம் அப்டின்னு தப்பிக்கிறது. கூச்சமே இல்லாத த.வெ.க.
நான் கூட transformer fuse என்னமோ நம்ம வீட்டு electric boxல இருக்க fuseனு நினைச்சேன்.. எதுக்கும் googleல தேடினா இந்த fuse தான் transformer fuse ஆம்.. இதை எப்படிடா ஒருத்தன் திருட முடியும்? அதுவும் power supply இருக்கும் போது?
பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?
சத்தமே இல்லாம வேலைய பாக்குற மொகரைகளை பாரு.. 😂😂 ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்களுக்கே ஸ்டிக்கர் ஒட்டி இப்பதான் ஆரம்பிச்சதா மீடியா, போஸ்டர், ரீல்ஸ்னு கத்துற கும்பல்டா நீங்க (கரண்ட் பில் ஆனலைன்ல கட்டலாம்ங்கறதே நீங்க கண்டுபிடிச்சதுதான😂).
இதுவும் அதேதான்… ஏற்கனவே திமுக அரசாங்கம் புரிந்துணர்வு செய்த திட்டம்தான். இந்தா கவ்விக்கிட்டு ஓடு.
சிங்கப்பெண் படை முதலில் களமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டியது தூத்துக்குடியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த தவெகவினர் மீதும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிரட்டல் விடும் தவெக எம்எல்ஏ சரவணன் மீதும் தான்!
#TVKFails
போதை ஊசி செலுத்திய இளம்பெண் பலி
திருச்சியில் நண்பர்களுடன் லாட்ஜில் போதை ஊசி செலுத்தியபோது மயக்கம் அடைந்து பெண் உயிரிழப்பு. இளம் பெண்ணின் நண்பர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை
உயிரிழந்த பெண்ணின் தாய் போதை மாத்திரைகளை விற்று வந்ததாக கூறப்படுகிறது. தாய் விற்க வைத்திருந்த மாத்திரையை மகள் எடுத்து பயன்படுத்தியதாக தகவல்
#trichy #dead #drugs #arrest
அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
'தூய சக்தி' போதை சக்தியானதா? ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் 'போதை சக்தியாக' மாறிவிட்டதா?
இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு ஆவணங்களோடு பிடிபட்டும், தங்களை 'ஜனநாயகத்தின் நான்காவது தூண்' என்று சொல்லிக்கொள்ளும் பிரதான ஊடகங்கள் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து மௌன விரதம் இருப்பது ஏன்?
தேர்தலின் போது தவெக-வை 'தமிழ்நாட்டின் மீட்பர்' என காசுக்காகப் பிரச்சாரம் செய்த சமூக வலைத்தள 'இன்ஃப்ளூயன்சர்கள்', இன்று மாநிலமே போதை மாஃபியாவிடம் சிக்கியிருக்கும்போது எங்கே ஒளிந்துகொண்டார்கள்?
தேர்தல் நிதியும் போதைப்பணமும்: ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தின் கறுப்புப் பணம்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் உங்களின் வெற்றிக்கு முதலீடு செய்யப்பட்டதா?
முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, கேமராக்களுக்குப் பின்னாலோ ஒளிந்துகொள்ளாமல் உடனடியாகப் பொதுவெளியில் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
#TVKFails