பொதுமக்கள் பெரிதும் விரும்பிப் பார்க்கும் பிரபல்யமான தொலைக் காட்சிகளில் இரவு நேர விவாதங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்த காலம் ஒன்று இருந்தது.
அந்நாட்களில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்குபெற்று விவாதம் முடிந்தவுடன் இணைப்பைத் துண்டிப்பதற்குள் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகள் வரும்.
தமிழ்நாட்டின் பலபகுதிகளில் இருந்து விவாதங்களை கேட்டவர்கள் பேசுவார்கள். நீங்கள் சொன்ன கருத்து மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் இருந்தது என்று சிலர் சொல்வார்கள். சிலர் நாம் சொன்ன புள்ளிவிவரங்கள் அல்லது தகவல்களில் தவறுகள் இருந்தால் அதனை சுட்டிக் காட்டுவார்கள்.
விவாத நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆன பின்னர் கூட விமானநிலையத்தில், ரயில் நிலையத்தில் பார்ப்பவர்கள் நீங்கள் அன்று பேசிய கருத்து மிகவும் சரி என்று சொல்வார்கள். நாம் சொல்கிற கருத்து மக்களைச் சென்று அடைந்ததில் நமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சிறப்பாக விவாதங்களை ஒருங்கிணைக்கும் சன் நியூஸ் குணசேகரன், நியூஸ் 18 கார்த்திகை செல்வன் போன்றோர் மிகச் சிறப்பான தயாரிப்பு டன் அந்த விவாத நிகழ்ச்சிகளை நடத்துவர்.
சில முக்கியமான விவாதங்களை இருபத்தைந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்ததாக மறுநாள் சொல்வார்கள். ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினால் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் பேருக்கு நமது கருத்துக்கள் சென்றடையலாம். ஒரு பெரிய மாநாடு என்றால் ஒரு லட்சம் பேர்.
ஒரு விவாத நிகழ்ச்சியில் நாம் சொல்லும் கருத்துக்களை இருபத்தைந்து லட்சம் பேர் கேட்கிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய தாக்கம் என்பதை நினைத்து நான் வியந்து போவேன்.
ஆனால் சமீப காலமாக இந்த இரவு நேர விவாதங்களின் வீச்சும் தாக்கமும் குறைந்துகொண்டே வருவதாக பலர் சொல்வதைத் கேட்கிறேன்.
கடந்த காலங்களில் சில நாட்களில் மட்டுமே அரசியல் நிகழ்வுகள் பற்றிய விவாதங்கள் இருக்கும். மற்ற நாட்களில் பொருளாதாரம், சமூகம், புதிய தொழில்நுட்பம், சர்வதேச நிகழ்வுகள், அகில இந்திய அரசியல் என்று பல விஷயங்கள் மற்றும் செய்திகளைப் பற்றிய விவாதங்கள் மற்றும் உரையாடல்கள் இருக்கும்.
ஆனால் இப்போது தினமும் அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பது போல தமிழக அரசியலைத் தவிர வேறு எந்த செய்திகளையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதில்லை. அதே நபர்கள்,அதே விஷயங்களை எத்தனை நாட்களுக்குத்தான் விவாதிப்பார்கள் என்று தெரியவில்லை. விவாதங்களில் தினசரி பங்கு பெறும் சில நண்பர்கள் ஒவ்வொரு நாளும் ஒரே செய்தியை முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது பெரிய வேடிக்கை.
தொலைக்காட்சி மிகவும் சக்தி வாய்ந்த ஊடகம். அதன் மூலம் ஒரு அறிவார்ந்த சமூகத்தை கட்டி எழுப்ப முடியும். அறம் சார்ந்த சிந்தனைகளை சமூகத்தில் விதைக்க முடியும். மூடப்பழக்க வழக்கங்களின் புழுக்கத்திலிருந்து சமுதாயத்தை மீட்டெடுத்து அறிவியல் பார்வை கொண்ட இளைய தலைமுறையை உருவாக்க முடியும்.அநியாயங்களையும்,அக்கிரமங்களையும் தட்டிக் கேட்டு தடுத்து நிறுத்த போராடும் அறச்சீற்றம் உடைய சமூகத்தை உருவாக்க முடியும்.
ஊடகங்களை வைத்திருப்பவர்களும், அதனை நடத்துகிறவர்களும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்களும் தங்களுக்கிருக்கும் சமூகப் பொறுப்பினை உணர்ந்து ,சரிந்து கொண்டிருக்கும் இந்த விவாதங்களின் தரத்தை மீட்டெடுக்க வேண்டுகிறேன்.
சமூக உணர்வோடு இந்த விவாதங்கள் நடந்தால் இரவு நேரங்களில்தமிழக இல்லங்கள் முழுவதும் பல்கலைக்கழகங்களாக மாறும்! அது மகத்தான மாற்றங்களைத் தரும்.
சம்பந்தப்பட்டவர்கள் அருள்கூர்ந்து பரிசீலிக்க வேண்டும்.
சா.பீட்டர் அல்போன்ஸ்
என்னுடைய ஒரே விருப்பம்
தவக்களைக் கழகம் 🐸
ஆட்சியில் அமர வேண்டும்
தவக்களை ஆட்சி மாற்றத்தை தராது..
ஏமாற்றத்தை தான் தரும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதை நாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்
இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் தவக்களைகள் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர குறையாது
எந்தப் பெண்களுக்கு யோசித்து யோசித்து திட்டங்களை முதல்வர்
@mkstalin கொண்டு வந்தாரோ அதே பெண்கள் தான் தற்போது முதுகில் குத்தியுள்ளனர்
எம்ஜிஆருக்கு.. ஜெயலலிதாவுக்கு..
தற்போது நடிகர் விஜய்க்கு..
அவர்களுக்கு சினிமா தான் முக்கியம்
எவ்வளவு நல்லது செய்தாலும் இவர்கள் மாற மாட்டார்கள்
🙉
@idonashok@aathini_twitz உள்ளதில் ஒப்பீட்டளவில் எது நல்லதோ அதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, அப்பழுக்கற்ற பரிசுத்தமான ஒன்றைத் தேடிப்போனால் அழிந்தே போவோம். ஏனென்றால் அப்படி ஒன்று மனித சமூகத்தில் இருந்ததும் இல்லை, இனி இருக்கபோவதும் இல்லை.
வேட்பாளர்கள் பட்டியலுக்கே
Social Media அனல் பறக்குதே
நாளைக்கு தேர்தல் அறிக்கை வருது 💥💥
உடன்பிறப்புகளே நாளைக்கு Weekend வேற
மஜாவா கொண்டாடுவோம் 😎🌄🌄
#VoteForDMK
https://t.co/C7xTOL6e1N
தவெக செல்லங்களா... உங்க தலைல ஒருத்தன் நல்லா மிளகா அரைச்சுட்டே இருக்கான். அவனுக்கு காலேல ஒன்னுக்கு வரலேனா கூட திமுக திமுகனு டிவீட் போடுறான். நீங்களும் தூக்கிட்டு சுத்துறீங்க. தேர்தல் அறிவிச்சுட்டா திமுக கூட்டத்துக்கே தேர்தல் ஆணையம்தான் அனுமதி கொடுக்கணும். இவன் என்னடான்னா இவன் கூட்டத்துக்கு திமுக அனுமதி கொடுக்கலனு டிவீட் போடுறான். உங்களை எவ்வளவோ இளிச்சவாயி முட்டாப்பீசுகளா நினைச்சிருந்தா இப்படி டிவீட் போட்டிருப்பான்? இப்படியே எத்தனை நாள் அவன் சொல்ற பொய்யெல்லாம் சுமந்துட்டே அலைவீங்க. உங்களை சுத்தமா புடிக்காத எங்களுக்கே உங்களைப் பாத்தா பாவமா இருக்கு. அந்த அளவுக்கு உங்களை ஏமாத்துறான். உங்களுக்கு உங்க மேல பாவமாவே இல்லையா? அவ்ளோ சுய வெறுப்புலயா அலையிறீங்க? :(