திராவிட நாயகர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர், கலைஞர் அறிவாலயத்தில், கரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.. கரூர் மாவட்ட கழகத்தை, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகங்களாக பிரித்த கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றிகள் சமர்ப்பிக்கப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
10 வருசமா எந்த சலசலப்பும் இல்லாம
மொத்த கூட்டணி கட்சிகளையும் கட்டி ஆண்ட
கரிகாலன் 😎🖤❤
@mkstalin
"வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது!
வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததாகச் சரித்திரமே இல்லை!" -
மாண்புமிகு கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கான பாதுகாப்பை திரும்பப்பெற்றிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முன்னாள் முதலமைச்சரின் பாதுகாப்பு என்பது அவருக்கான உரிமை.
குறைக்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் அதிகரித்து வழங்குவதே மாண்பு. அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அறிவாலயத்தைக் கைப்பற்றுவோம் என்றார்கள் சிலர்;
அறிவாலயத்தை இடித்துத் தள்ளுவோம் என்றார்கள் சிலர்;
அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லாக பிடுங்கி எறியும் வரை ஓயமாட்டோம் என்றார்கள் சிலர்;
இப்போது வெள்ளை அடித்து வாடகைக்கு விடப்படும் என்கிறார்கள் மற்றும் சிலர்.
தொடங்கிய நாளிலிருந்தே
முடிவுரை எழுத நடந்த
முயற்சிகளை எல்லாம்
முறியடித்து வளரும் இயக்கம்
திராவிட முன்னேற்றக் கழகம்.
காலந்தோறும் மாற்றங்களையே வாழ்க்கை முறையாகக் கொண்டு,
தமிழ்நாட்டு மக்கள் நலனுக்குக்
குரல் கொடுப்பதையே தன்
குறிக்கோளாகக் கொண்ட
ஒரு இயக்கம்
வெள்ளை அடித்துக் கொண்டு புதுப்
பொலிவு பெறட்டும்;
தமிழ்நாட்டின் நலனுக்கும்
அது தேவை.
பெரியோர்கள் துணை நிற்க,
இளையோர்கள் வடம் பிடிக்க
கழகத்தேர் ஆழித் தேராக
நாடெங்கும் வலம் வரும்.
யாரோ இல்லாத இந்தியா கூட
உருவாகலாம் ஆனால்
கழகம் இல்லாத தமிழ்நாடு?
அது கற்பனைக் கனவு;
கானல் நீர்; காட்சிப் பிழை.
‘ஏசுவதால் இன்பம் அடைகிறார்கள், ஏசிவிட்டுப் போகட்டும்’ என்ற அறிஞர் அண்ணாவின் பெருந்தன்மையும்
‘என் முதுகிலே குத்தவில்லை; நெஞ்சிலேதான் குத்துகிறான்’ என்ற
முத்தமிழறிஞர் கலைஞரின் புறநானூற்றுப் பெருமிதத்தையும்
நினைவில் கொண்டு,
‘வாக்களிக்காதவர்களுக்கும் சேர்ந்தே திமுக போராடும்’ என்ற கழகத் தலைவர் @mkstalin வழியில், தமிழ்நாட்டின் உரிமைக்கும் உணர்வுக்கும் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
@arivalayam
நிஜமாகவே கலைஞரின் வீரியம் இன்னும் அறியாமல் தான் தமிழ்நாடு இருக்கிறது..
இந்த சீன் Pure goosebumps 🔥🔥🔥
@TheAIDravidian 👌 awesome
work https://t.co/7Fio0RKRAC
விழும் மழைத்துளி எங்கும் நிலம் மட்டுமே தேடும்;
எங்கள் உயிர்த்துளியென்று தமிழை உரக்க பாடும்;
சாஸ்திரம் எங்கும் பழங்கதையே கூறும்;
புது சரித்திரம் படைத்தலைவனையே பாடும்...!
🙏🏾நன்றி தலைவரே 🖤❤️
“தொடர்ந்து பயணியுங்கள்” என்ற உங்கள் ஒற்றை வார்த்தை, என்னைப் போன்ற ஒரு சாதாரண தொண்டனின் கொள்கைப் பயணத்திற்கான மிகப்பெரிய உத்வேகம்.
கடைக்கோடி தொண்டனையும் கைவிடாது கழகம் என்ற கழகத்தின் தாரக மந்திரத்தை, தங்கள் செயல்பாட்டின் மூலம் மெய்ப்பித்து, என்னைப் போன்ற விளிம்புநிலை மக்களையும் உயர்த்திப் பிடிக்கும் தங்களின் பண்பு, இன்று என்னைப் போன்ற பல இளைஞர்களை திராவிட இயக்கத்தின் கொள்கைப் பாதையை நோக்கி ஈர்த்திருக்கிறது.
கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து, கழகக் கொள்கையை ஏற்று, தங்களுடன் பயணிக்கத் தயாராக நிற்கும் இளைஞர்கள் இன்று ஏராளம். அதில் நானும் ஒருவர்.
விளிம்புநிலை மக்களும் முன்னேற வேண்டும் என்று தலைவர் கலைஞர் விதைத்த சமூகநீதியின் விதையின் சிறு வேராய் முளைத்த என்னைப் போன்ற பலரும், இந்த இயக்கத்தால் பயனடைந்திருக்கிறோம்.
பெற்றதைத் திரும்பக் கைம்மாறு செய்ய, இயக்கத்தால் பயனடைந்த ஒவ்வொருவரும் இயக்கத்திற்காக உழைக்க வேண்டும் என்ற உணர்வுடன், இளைஞர்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம் தலைவரே.
தாங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தலைவரே. 🖤❤️
தாங்கள் காட்டும் பாதையில்…
இளைஞரணி செயலாளர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன்…
கழகக் கொள்கையுடன்… தொடர்ந்து பயணிப்பேன்..
நன்றி தலைவரே 🖤❤️🙏🏾