Deeply saddened by the passing of Janaki amma.
Generations have grown up with your voice, and generations to come will continue to cherish it.
Thank you for filling our lives with timeless songs and unforgettable emotions. Your voice will always remain close to our hearts.
My heartfelt condolences to her family, friends and everyone who loved and admired her.
Rest in peace, amma 🙏🏻💔
Some people don’t just tell stories. They become a part of our story.
#KBhagyaraj sir was one such soul. Through his work, he made us laugh, think and feel, becoming a cherished part of countless lives and memories.
His stories, characters and the emotions he gave us will continue to live on for generations.
Deeply saddened by his passing. My heartfelt condolences to his family, friends and everyone who loved and admired him.
Rest in peace sir. 💔🙏🏻
தலைமைச் செயலகத்தில் உள்ள எமது அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை, மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களிடம் வழங்குவதற்கு நேற்று (25.06.26) மாலை தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டேன்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள், 'நானே உங்கள் அறைக்கு வந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறேன்' என்று நேரில் வருகை தந்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களின் மக்கள் நலப்பணி சிறந்து விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தினேன்.
@imrajmohan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu
இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @actorvijay அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது இனியவாழ்த்துகள்.
#HBDCMJosephVijay
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @TVKVijayHQ அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
கல்வி,சுகாதாரம்,தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் முதல் மாநிலம் என்ற பெருமையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதோடு இந்தச் சிறப்புகள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும், அனைத்து சமூகங்களையும் எட்டச் செய்து நல்லாட்சி நடத்த வாழ்த்துகிறேன்.
திருவண்ணாமலை மாவட்டம் - அய்யம்பாளையம் அஞ்சல், புதூர் கிராமத்தில் குடுகுடுப்பை தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் 130க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்களை இன்று (21.06.26) மாலை அவர்களது கிராமத்தில் சந்தித்தோம்.
ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை கொண்டிருக்கும் மக்கள், தங்களுக்கு இன்னமும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்றும், இதனால் இளம் தலைமுறையினர் உயர் கல்வி கற்பதற்கு பெரும் தடையாக உள்ளதாகவும் முறையிட்டனர். மற்ற மாவட்டங்களில் தங்கள் சமூகத்திற்கு வழங்கப்படும் பழங்குடியினர் பட்டியலில் (ST) உள்ள கணிக்கர் என்று சான்றிதழ் வழங்கும்படி கோரிக்கை வைத்தனர். மேலும் தங்கள் பகுதிக்கு சமூக நலக்கூடம் வேண்டும் என்றனர். மக்களின் கோரிக்கைகளை துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தேன்.
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் இன்று (18.06.26) தலைமைச் செயலகத்தில் எமது அறைக்கு வருகை புரிந்தார். திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 'கற்போம் பெரியாரியம்' நூலை வழங்கி வாழ்த்தினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த கோரிக்கைகளோடு வந்திருந்த மக்களின் குறைகளை அக்கறையோடு கேட்டு, உடனுக்குடன் அதிகாரிகளை தொடர்புகொண்டு அதற்கு தீர்வு கண்டார். நாடெங்கும் பேசப்படும் இளம் அமைச்சரின் துடிப்பான மக்கள் நலப்பணியை நேரில் கண்டேன். அவருக்கு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலையை வழங்கி வாழ்த்தினேன்.
@RameshOffcl
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
Heartbroken to hear about the passing of Bharathiraja sir.
I was fortunate to work with him and will always cherish those memories. His warmth, simplicity and passion for cinema touched everyone around him.
He inspired generations through his storytelling, and his legacy will continue to live on through the countless lives and films he influenced.
My heartfelt condolences to his family, friends, colleagues and everyone grieving this immense loss.
Rest in peace sir 🙏💔
தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே
#BharathiRaja 💐
“பாரதிராஜா ஒரு தனி வெடிப்பு. தமிழ் சினிமாவின் திசையையும் மொழியையும் மாற்றிய படைப்பாளர். என் போன்ற எண்ணற்றோருக்கு அவர் ஒரு பெரும் உத்வேகம். எளிய மக்களின் வாழ்வையும் உணர்வுகளையும் அசலான கலை வடிவமாக உயர்த்திக் காட்டியவர். மண்ணின் மணத்தையும் மனிதர்களின் உண்மையையும் திரையில் நிலைநிறுத்திய அந்த மகத்தான கலைஞருக்கு என் மனமார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.”
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், கொன்னமன்சேரி மற்றும் மீஞ்சூர் கிராமங்களில் வசித்துவரும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள், இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து தங்களுக்கு மனைப்பட்டா வழங்கும்படியும், புதிய வீடுகள் கட்டித் தரும்படியும் கோரிக்கை விடுத்தனர்.
'நமது முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு, நம் எல்லோருக்குமான அரசு. நமது சமூக நீதித்துறையின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மனைப்பட்டா இல்லாத நிலையை உருவாக்குவதே இலக்கு என்று தீர்மானித்து அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். நிச்சயம் நம் மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, மனைப்பட்டா வழங்க நானே நேரில் வருவேன்' என்று அவர்களிடம் உறுதி அளித்தேன்.
திரையுலகின் திசைவழிப் போக்கை மடைமாற்றம் செய்த பேராளுமை இயக்குநர் பாரதிராஜா!
-----------------------------------------
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் துயரமளிக்கிறது. தவிர்க்க இயலாத நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நான் புது தில்லியில் இருப்பதால், அண்ணன் பாரதிராஜா அவர்களின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்த இயலாத நிலையில் உள்ளேன். அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.
என்மீது பேரன்பைச் செலுத்தியவர். 'என்னைவிட என் தந்தை தான் உங்களை மிகவும் நேசிப்பவர்' என்று அவரது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் தனது தந்தையிடம் அறிமுகப்படுத்தினார். 'நீயும் என் பிள்ளை தான் தம்பி' என்று இயக்குநரின் தந்தை என்னிடத்தில் நெகிழ்வுடன் கூறிய அந்த நிகழ்வு இன்னும் எனது நெஞ்சில் நிழலாடுகிறது.
திரையுலகின் திசைவழி போக்கை மடைமாற்றம் செய்த பேராளுமை இயக்குநர் பாரதிரஜா. அரை நூற்றாண்டுக்கு முன், ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் திரைக்கலையை அதீத ஒப்பனைகளிலிருந்து மீட்டு, எளிய மக்களின்இயல்பான வாழ்வியலை புதிய மரபாக நிலைநாட்டியவர். சாதியத்துக்கு எதிரான புரட்சிகர சிந்தனைகளை விதைக்கும் 'வேதம்புதிது' என்னும் திரைக் காவியத்தைத் தமிழுலகுக்குக் கொடையளித்தவர். அப்படத்தில் இனமுரசு சத்யராஜ் அவர்களைக் கொண்டு சாதி ஆதிக்கத்துக்கு எதிராக கர்ஜனை செய்தவர்.
"பாலுத்தேவர் என்பதில், 'பாலு' ஒங்க பேரு; 'தேவர்' என்ன நீங்க படிச்சு வாங்குன பட்டமா ?" - என்று அவர் ஒரு குழந்தையின் மூலம் எழுப்பிய கேள்வி, மனசாட்சியுள்ள ஒவ்வொருவரின் நெஞ்சையும் உலுக்கியது.
அப்படத்தின் கடைசி காட்சியில், 'இளம்பிஞ்சுகளையாவது சுதந்திரமாக வாழவிடுங்கள்'- என்று அறிவுறுத்தும் வகையில் மூத்தோரிடமிருந்து இளையோரைப் பிரித்துக் காட்டுவது இன்றும் கண்ணிலேயே நிற்கிறது.
'இளந் தலைமுறையினரின் நெஞ்சில் சாதி நஞ்சைப் பாய்ச்ச வேண்டாம்' என்கிற அவரது கருத்து, தமிழ்நாட்டில் அம்பேத்கர் இயக்கங்கள் வலுப்பெறாத காலத்தில் தெறித்துத் திரையுலகை அதிரவைத்த ஒன்றாகும்.
'சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை' என்னும் சிறுத்தைகளின் கருத்தை எமது மேடைகளில் வழிமொழிந்தவர். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சார்ந்தோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
ராப் இசை உலகில் தனக்கென தனி அடையாளத்தையும் - இடத்தையும் பெற்றுள்ள ராப் பாடகர் வேடன் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்தார். சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதற்கு தனது வாழ்த்துகளை கூறினார்.
தமிழீழத்தில் ராப் பாடகர் சங்கீதன், தனது பாடலுக்காக இலங்கை அரசால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். தான் அடுத்து திட்டமிட்டுள்ள முன்னெடுப்புகள் குறித்து விவரித்தார். விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அவருக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்.
#வேடன்
#Vedan
எமது பேரியக்கத்தின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அறிஞர் ரவிக்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அறிவாற்றலும், அனுபவமும் எம்மை என்றும் வழிநடத்தட்டும் அண்ணா.
@WriterRavikumar