Shame on TN BJP..
தமிழக பாஜகவை சார்ந்தவர்களுக்கு துளியும் வெட்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது.
திரு. அண்ணாமலை தனது வயலுக்கும் ( பண்ணை ) நொய்யல் ஆற்றிற்கும் இடைப்பட்ட இடத்தில் மண் அரிப்பை தடுக்கவும் & மரம் நடவும் ₹10,000 செலுத்தி அனுமதி வாங்கி அந்த வேலைகளை நிறைவேற்றியுள்ளார்.
கோவை பாஜக Spiritual அணியை (!!!) சேர்ந்த பாபு என்பவர் அண்ணாமலை மணல் திருடியதாகவும் அதனால் அருகில் இருக்கும் கோவிலுக்கு ஆபத்து என்றும் கோவை ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார் ஜுனில்.
அந்த புகாரை விசாரித்த குழு அண்ணாமலை மீது எந்த தவறும் இல்லை என ரிப்போர்ட் அளித்துள்ளது.
திராவிட கட்சிகள் மீது இந்த மாதிரி எத்தனை புகார் அளித்தனர் இத்தனௌ வருடத்தில்? ஒரு தனி மனிதன் மீது எதற்கு இத்தனை வன்மம் இவர்களுக்கு 😡😡
https://t.co/ddm7sLVMqE
#அண்ணாமலை #annamalaikuppusamy #WETHELEADER #TNBJP
தமிழகத்தில் உள்ள எல்லா பஞ்சாயத்து நிர்வாகத்திலும் இந்த திட்டம் மூலமாக ஊழல் அரங்கேறுகிறது..
இத்திட்டம் குறித்து @CMOTamilnadu சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது.
@annamalai_k
திண்டுக்கல் அருகே 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளர் அம்பிகா மீது புகார்..மாறி மாறி மண்ணை அள்ளிவீசி ஒருவருக்கொருவர் தாக்குதல்!!
VillagePanchayat | RuralEmployment | Newsreport |10 July 2026
#Dindigul#Newstamil24x7
நமது வீ த லீடர்ஸ் இயக்கத்தின் திருச்செந்தூரில் நடைபெற இருக்கும் பொது கூட்டம் சமந்தமாக பாளையங்கோட்டை சட்டமன்றம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் நாளிதழ் செய்தி...
@annamalai_k#WTL#drugfree#tiruchandur
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று போட்டித் தேர்வை நடத்தியது. சுமார் 42,000 தேர்வாளர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வுகள், 48 பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்றன. கடந்த 25.06.2026 அன்று வெளியிடப்பட்ட இந்தத் தேர்வுகளின் முடிவுகள், பல குழப்பங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.
பாடப்பிரிவுகளுக்கு 150 மதிப்பெண்களுக்கான தேர்வும், விளக்கவுரைக்கு (Descriptive) 50 மதிப்பெண்களுக்கான தேர்வும் நடைமுறைப்படி நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்த் துறையில், 150 மதிப்பெண்களுக்கு 111 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த தேர்வாளருக்கு, விளக்கவுரை தேர்வில், பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதே போல, கணினி அறிவியல் துறையில் 107/150 மதிப்பெண்கள் பெற்றவருக்கு, விளக்கவுரை தேர்வில், 1/50 மட்டுமே கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில், இயற்பியல் பாடப்பிரிவில், 54/150 பெற்றவர், விளக்கவுரை தேர்வில், 49/50 பெற்றிருக்கிறார்.
இப்படி, மொத்தம் 43 பாடப்பிரிவுகளில், பாட மதிப்பெண் அதிகம் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்ணும், பாட மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிக அதிக மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மேலும், விளக்கவுரை மதிப்பெண்களில், 8.25, 24.75 என தசம, எண்ணிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும், தேர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படி, தேர்வு மதிப்பீட்டு முறையின் குழப்பத்தால், பல தேர்வாளர்களின் தரவரிசையில், பல நூறு இடங்கள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மதிப்பீட்டு முறையின் வெளிப்படைத் தன்மை குறித்தும், நம்பகத்தன்மை குறித்தும் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
உதவிப் பேராசிரியர் பணிக்காக, தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக தங்கள் கடுமையான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். தேர்வு மதிப்பீட்டில் இத்தனை குழப்பங்கள் ஏற்புடையது அல்ல. எனவே, இந்த விளக்கவுரை (Descriptive) தேர்வு மதிப்பீடு முறையை ஆய்வுக்குள்ளாக்க வேண்டும் என்றும், இந்தத் தேர்வை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 2708 பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெற்றுள்ளது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், கடந்த மே மாதம், 4000 பணியிடங்களையும் ஆறு மாதங்களில் நிரப்ப உத்தரவிட்டுள்ளது. எனவே, மீதமுள்ள பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
TVKஅரசின் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும்
ஒரு வாரம் மக்கள் நலனுக்கான விஷயங்களை பற்றிய பயிற்சி பட்டறை
நடத்தினால் நல்லதாக அமையும்.
தங்களின் மக்களுக்கான பணி என்ன என்பதை பற்றி புரிதல் இல்லாமல்
விளம்பர மோகத்தில் எதையாவது செய்ய வேண்டும் என்று செய்து வருவது போல
தெரிகிறது
We The Leaders இரண்டாவது மாநாடு திருச்செந்தூர் முருகன் மண்ணில் நடைபெற உள்ளது..
அதனை முன்னிட்டு ராதாபுரம் சட்டமன்றத்தில் உள்ள We The Leaders கலந்துரையாடல்
நாள் ஜூலை 12
நேரம் மாலை 03:30 மணி
இடம் வள்ளியூர் M S மஹால்
அனைவரும் வருக 🙏
போதைப்பொருட்களிடம் இருந்து நம் எதிர்காலத் தலைமுறையினரைக் காக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் "We The Leaders" பெருமையுடன் நடத்தும் "Drug Free Tamil Nadu" - White Band Month இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது!
விழிப்புணர்வு நிகழ்வுகளை நீங்களும் நடத்த விரும்பினால் We The Leaders அமைப்பிற்கு தெரிவிக்கவும்.
தொடர்புக்கு…
[email protected]
+918220635959
+918122942929
மாறுவோம்! மாற்றுவோம்! போதை இல்லா தமிழகம் படைப்போம்!
#WTL_WhiteBandMonth
@wetheleders இயக்கத்தின்
அம்பாசமுத்திரம் சட்டமன்றம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் பற்றிய நாளிதழ் செய்தி..
மாறுவோம் மாற்றுவோம்!
"போதையில்லா தமிழகம்
வளமான தமிழகம் "
தமிழகத்தின் ஆளுமை மிக்க தலைவர் திரு.@annamalai_k அவர்களின் தலைமையில் மக்கள் நலனுக்கான மாற்றத்தை ஏற்படுத்துவோம்
ஜீலை 26 ல் திருச்செந்தூரில் நடைபெற இருக்கும் பொது கூட்டம் சமந்தமாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்றம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திரு.@SGaneshMoorthy அவர்களும் நானும் கலந்து கொண்டு வழிகாட்டிய போது
ஏராளமான வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர்கள் பங்கேற்றனர்...
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற விவகாரத்தில், மாணவர்களின் பாதிப்பு குறித்து நாங்கள் குறிப்பிட்ட அதே தகவல்களை, இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் கூறியிருக்கிறார். எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி. மேலும், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், இந்த விவகாரத்தின் மிக முக்கியமான கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதிலளிக்கவில்லை. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அந்த நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பு? எந்த அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறினர்? இது வெறும் அலட்சியமா, அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா? யாருடைய அழுத்தத்தின் காரணமாக இது நடந்தது?
இந்தக் கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு தெளிவான பதிலை வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது மட்டுமே போதாது. இந்த அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டில் 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவுடன் இருக்கும் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கண்டறிந்து, அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்த விவகாரத்தை, தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்து செல்ல முடியாது.
அரசியலில் சீமானுடன் தான் போட்டி போடுவார் அண்ணாமலை...!
இதை பேசி ஆள் பிடிக்கும் கூட்டத்திற்கான பதில்..
அவர் யாருடன் போட்டி போடுவார் என்பதை பற்றி இயக்கத்தில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.
@BJP4TamilNadu உள்ளவர்கள் அதை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.
@annamalai_k
@thirumaofficial.அவர்களிடம் இதற்கு என்ன பதில் இருக்கும்...? 😀
இவங்க ஆள் பிடிக்கிற அரசியல்
ஆளும்கட்சி கூட்டணியில் இடம் பிடிக்கிற அரசியல் இதை தவிர வேறோன்றும் இல்லை..!
தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின் எந்த விதமான மாற்றமும் எந்த விதமான ஏற்றமும் வந்த மாதிரி தெரியவில்லை மக்கள் நலனில்
சுட்டிக்காட்டிய @annamalai_k❗
சுதாரித்ததா தவெக அரசு❓
அண்ணாமலை மட்டும் குரல் கொடுக்காமல் விட்டிருந்தால் இந்தக் கல்வியாண்டில் 650 மருத்துவக் கல்வி இடங்கள் காணாமல் போனது கூட தவெக அரசுக்கு தெரியாமலே போயிருக்கும் போல 🚶