விடியா திமுக ஆட்��ியில்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு இன்று முதல்,
கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு
வரும் 82 மாவட்டக் கழகங்களும்,
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து,
விடியா திமுக ஆட்சிக்கு எதிராக,
“விடியா ஆட்சி உங்கள்
வீட்டு Bill-லே சாட்சி”
என்ற தலைப்பில், AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக முன்னேடுத்து,
மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியோடு எனது தலைமையில் நடைபெற்ற கழக ஆட்சிக் காலத்தையும்; தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற���பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த விடியா திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Bill-ஐ இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வோம், விடியா திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்...
@AIADMKOfficial
#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி
The passing of Thiru. Ajit Pawar, Deputy Chief Minister of Maharashtra and National President of the Nationalist Congress Party (NCP), following a tragic accident, is a profound loss to Maharashtra’s politics and public life.
Known for his vast administrative experience and decisive leadership, his untimely demise leaves a void that will be difficult to fill.
I extend my deepest condolences to his family, party colleagues, and supporters.
May his soul rest in eternal peace.
@AIADMKOfficial@AjitPawarSpeaks #AjitPawar
“விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி'"
மின்சார கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி தமிழக மக்களின் வாழ்க்கையை இருளில் தள்ளிய விடியா திமுக அரசு!!
#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி
நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள் என்பதை சிலர் மறந்துவிட்டனர் ,
- AMMK பொதுச்செயலாளர்
திரு.@TTVDhinakaran
“Real மங்காத்தா Movie Moment”
@EPSTamilNadu
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. தர்மர் அவர்களின் தலைமையில் ஓபிஎஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இன்றைய தினம், மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்கள் எனது இல்லத்திற்கு வருகை புரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாளை நடைபெறவுள்ள மாபெரும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து கலந்த��லோசித்தோம்.
சுமார் 5 லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ள நாளைய பொதுக்கூட்டம், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த தொடக்கம், எங்கள் கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கான அச்சாணி!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#EPSfor2026
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் @AIADMKOfficial இயக்கத்திற்கு அடித்தளமிட்ட நம் உயிர்நிகர் தலைவர் புரட்சித் தலைவர் ��ம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாளில், தமிழக மக்களின் ஏற்றத்திற்கான #அஇஅதிமுக_தேர்தல்வாக்குறுதி-களின் முதற்கட்டமாக, 5 முக்கிய வாக்குறுதிகளை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் இன்று அறிவித்தார்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அமையவுள்ள அஇஅதிமுக ஆட்சியில்,
●பொருளாதார சமநிலைக்கு உதவிட, "குல விளக்குத் திட்டம்" வாயிலாக, ஒவ்வொரு வீட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்தக்கூடிய மகளிருக்கு மாதம் ரூ.2000/- வழங்கப்படும்.
●மகளிருக்கு செயல்படுத்தப்படும் பேருந்து ���ிட்டம் போன்றே, கல்வி, பணி, தொழில் நிமித்தமாக பயணிக்கும் ஆண்களுக்கு உதவிடும் வகையில், "ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம்" செயல்படுத்தப்படும்.
●ஏழை எளிய, நடுத்தர மக்களின் பெரும் கனவான "சொந்த வீடு" என்பதை நனவாக்கிட, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி, கிராமப்புறத்தில் கான்கிரீட் வீடும், நகர்ப்புறத்தில் அடுக்குமாடி வீடும் கட்டித் தரும் "அம்ம��� இல்லம் திட்டம்" திட்டம் மூலம் விலையில்லா வீடுகள் வழங்கப்படும். அதைப் போலவே, ஒரே ��ுடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
●அஇஅதிமுக-வின் கோரிக்கை ஏற்று, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ள நிலையில், கிராமப்புற பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்திடும் வகையில், வேலைநாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
●வேலை���்கு செல்லும் பெண்களின் சுய சுதந்திரத்தை உறுதி செய்திடவும், இன்றைக்கு பல்வேறு பணிகளுக்கு அடிப்படை தேவையாக இருக்கக் கூடிய இருசக்கர வாகனத்தை அவர்கள் பெற்றிட வழிவகை செய்திடவும், "அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்" வாயிலாக ரூ.25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு வழங்கப்படும்.
அனைத்து தரப்பின் தேவைகளையும் அறிந்து, எண்ணங்கள் புரிந்து, மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடும் நோக்கில் இந்த வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.
ஒவ்வொரு செயலையும் "எண்ணித் துணிய வேண்டும்" என்ற வள்ளுவ வழியில், நாங்கள் ஒரு வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்றுவதற்கான சாத��தியக்கூறுகளை ஆராய்ந்து, மக்களுக்கு சுமை இன்றி அவற்றை அளிப்பதற்கான செயல்திட்டத்தோடு அவற்றை அஇஅதிமுக ஆட்சியில் நிறைவேற்ற முடியும் என்ற உறுதியோடு அறிவிக்கிறோம்.
இது தொடக்கம் தான்.
இன்னும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை உள்ளடக்கிய எதிர்காலத்தைக் கட்டமைக்கும் முன்னெடுப்புகளோடு கூடிய அறிவிப்புகளாக, அஇஅதிமுக-வின் அடுத்தடுத்த தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் வெளியாகும்.
சொல்வதை மட்டுமல்ல, சொல்லாத பல நல்லத் திட்டங்களையும் அள்ளித் தந்த பெருமைக்குரிய அஇஅதிமுக அரசு, மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் முழு நிர்வாகத் திறனோடு ஆட்சி நடத்தி, மக்கள் மகிழ்வோடு வாழ்வதற்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
At the end of the day, the Hon’ble Governor is also a citizen of this country with a conscience...
நீங்க 4.5 வருஷமா உருட்டுற உருட்டையெல்லாம், உங்க ஆட்சியோட லட்சணத்தை பார்த்த அவர் ஏன் உருட்ட வேண்டும்?
மேதகு ஆளுநர் சொன்ன எந்த கருத்தில் தவறு இருக்கிறது? பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் புழக்கம், தொழில் வளர்ச்சி முடக்கம் என மக்களும், எதிர்க்கட்சியான @AIADMKOfficial-ம் இத்தனை நாட்கள் சொல்லி வரும் உண்மைகளை தானே ஆளுநர் பட்டியலிட்டுள்ளார்?
அரசியலமைப்பு சட்ட��்தைக் காட்டினால், அதே சட்டத்தில் "Article 19" இருக்கிறது... அதன்படி கருத்துரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை,
அது ஆளுநருக்கும் பொருந்தும் அல்லவா?
ஆளுநரிடம் அரசியல் செய்ய செலவிட்ட நேரத்தில்,
ஒருமுறையாவது மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய யோசித்திருந்தால், ஆளுநர் உங்கள் அரசை சாடுவதற்கான காரணங்களாவது குறைந்திருக்கும்!
#DMKFailsTN
மதுரை திருநகர் "அறிஞர் அண்ணா பூங்கா"வின் பெயரை "ஸ்டெம்" பூங்கா என பெயர் மாற்றியிருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள்.
மேடைஏறி வெறும் வாய்ச் சவடால்கள் பேசும் போதும், தங்கள் குடும்ப தயாரிப்பில் வரும் திரைப்படங்களின் வெற்று வசனங்களிலும், மட்டும் அண்ணாவின் கொள்கை குன்றுகளை போல வேடமிடும் திமுக தலைவர் ஸ்டாலின், திருநகர் பூங்கா பகுதி உருவானது முதலே இருந்துவரும் "அறிஞர் அண்ணா" அவர்களின் பெயரை தற்போது திட்டமிட்டு மாற்றியிருப்பது ஏன்???
சான்றோர் பெருமக்கள் பலரது பெயர்களில் இருந்துவந்த பல்வேறு திட்டங்களுக்கும், பேருந்து நிலையங்களுக்கும், கட்டிடங்களுக்கும் பெயர்மாற்றி தன் தந்தை "கருணாநிதியின்" பெயரை வைப்பதில் அதீத ஆர்வத்தோடு செயல்பட்டு வரும் ஸ்டாலின், இன்னும் ஒருபடி மேலே சென்று அண்ணாவின் பெயரையே அழிக்க நினைப்பது எத்தகைய குரூரம்..
அறிவியல், பொறியியல், கணிதம் சார்ந்த பூங்காவாக மாற்றுவதாக சொல்பவர்கள், இவை அனைத்திற்கும் தமிழ்நாட்டில் அடித்தளமிட்ட பேரறிஞரின் பெயரைத் தானே பூங்காவிற்கு தொடர்ந்து சூட்டியிருக்க வேண்டும். அண்ணாவின் புகழை அழிக���க நினைப்பவர்கள் 2026 தேர்தலுக்குப் பிறகு அழிந்து போவது உறுதி...
பழைய ஒய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு,
ஆட்சிக்கு வந்தபின் அரசு ஊழியர்களை இதுவரை ஏமாற்றி வந்த நிலையில், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கும். அரசு ஊழியர்களின் போராட்டங்களை தற்காலிகமாக சமாளிப்பதற்கும்,
பங்களிப்புடன் கூடிய மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம��க அறிவித்து மீண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளார் விடியா திமுக அரசின் முதலமைச்சர் @mkstalin
இச்செயல் 'புதிய மொந்தையில் பழைய கள்' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்கள் தங்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழாவை இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்து வழிபடும் இந்த திருவிழாவானது படுகர் இன மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், ஒற்றுமையையும் எடுத்துரைக்கிறது.
"ஹெத்தை' அம்மன் திருவிழாவிற்கு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உள்ளூர் விடுமுறை அளித்திருந்ததை நினைவு கூறும் இந்த வேளையில் ஹெத்தை அம்மனின் பூரண அருளால் தீமை அழிந்து, நன்மை பிறந்து, வளம் செழித்து மக்கள் யாவரும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்...
@AIADMKOfficial