நீதியே முக்கியம்; நிதி இரண்டாம் பட்சம்.!
மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறைச்சாலை மரண வழக்கைச் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்.!
.................................................
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய சபரிவர்மன் என்பவர் சட்டவிரோதமாகக் குட்கா விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜூலை மாதம் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அம்மாவட்டத்திலுள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
அவருடைய பிரேதப் பரிசோதனையில் 19 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தது தெரிகிறது. கைதுக்கு முன் எந்தவிதமான வெளி மற்றும் உள் காயங்களும் இல்லாதபோது, 19 காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், அதை ஏற்படுத்தியவர்கள், ஒரு மாற்றுத்திறனாளி எனத் தெரிந்தும் அவ்வளவு கொடூரமாகத் தாக்க வேண்டிய அவசியம் என்ன, அதற்கான சூழ்நிலைகள் ஆகியவை குறித்து அக்குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, மனிதநேயமிக்க ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
காவல்துறை சித்திரவதைகள் மற்றும் மரணங்கள், சிறைச்சாலை மரணங்கள் முற்றாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இந்தச் சம்பவங்கள் தொடர் நிகழ்வுகளாகின்றன.
கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு மானாமதுரை கோவில் காவலர் அஜித் குமார் மரணம்; மூன்று மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் மரணம்; கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சாத்தான்குளம் ஜெயராஜ் & பென்னிக்ஸ் மரணங்கள் நடந்தும், இது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டிருந்தும் கூட, காவல் நிலைய அத்துமீறல்கள் மட்டும் குறைந்தபாடில்லை.
எனவே, இப்பொழுது அவருடைய குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாயும் தற்காலிக அரசு வேலையும் கொடுப்பதற்குச் சென்ற அமைச்சர்கள் கூட, அவருடைய குடும்பத்தால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். எனவே, சபரிவர்மனுடைய மரணத்திற்கு நீதி கிடைப்பதுதான் மிக முக்கியமே தவிர, நிதி இரண்டாம் பட்சமாகும்.
மரணமடைந்து நான்கு தினங்களாகியும், அவர் பலியானதற்குத் தலையாய காரணம் யார் என்பது வெளிவராத சூழலில், அவருடைய குடும்பத்தார் இன்னும் அவரது பிரேதத்தைக்கூட வாங்காமல் போராடி வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு, நீதி நிலைநாட்டப்படும் வகையில் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படக்கூடிய வகையில், இந்த விசாரணையைச் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
17.07.2026
புதிய தலைமுறையின் மூத்த ஊடகவியலாளர் விஜயன் அவர்களை, விசாரணை என்ற பெயரில் கடந்த இரண்டு தினங்களாகக் காவல் நிலையத்திற்கு அழைத்து அலைக்கழித்தது ஏற்புடையதல்ல.!
............................................
தவெக அரசைக் கவிழ்க்க, ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா அவர்களிடம் ஆசைவார்த்தை காட்டி, திருநாவுக்கரசு என்பவர் விலை பேசினார் எனவும், மேலே குறிப்பிட்ட திருநாவுக்கரசு, விஜயன் அவர்களுடன் தொடர்பில் இருந்தார் எனவும் காவல்துறையால் காரணம் சொல்லப்படுவதாகத் தெரிகிறது.
பொதுவாக ஊடகவியலாளர்கள், உள்ளூர் மற்றும் உலக அரசியல் விவரங்களைத் தெரிந்துகொள்ளவும், கள நிலவரங்களை அறிந்துகொள்ளவும் எல்லா அரசியல்வாதிகளிடமும் பேசுவது புதியதல்ல. அந்த வகையில், ஊடகவியலாளர் என்ற ஸ்தானத்திலிருந்து பேசியிருந்தால் கிரிமினல் நோக்கமுடையதாகக் கருதக் கூடாது.
மேலும், விசாரணையின்போது அவருக்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில் நடத்தியதும், அவரது கைபேசியைப் பிடுங்கி வைத்துக்கொண்டதும் வரம்பு மிஞ்சிய செயலாகும்.
காவல்துறை ஊடகவியலாளர்களைக் கவனத்தோடும் கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் எனவும், விஜயன் அவர்களுக்குக் கடந்த இரண்டு தினங்களாகக் கொடுக்கப்பட்ட மன உளைச்சலுக்குக் காவல்துறை அவரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி சார்பாக
கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
16.07.2026
SHOCKING NEWS வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெருங்குடி, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள நிலங்களை விற்கவோ, வாங்கவோ, வீடு கட்டவோ, வங்கிகளில் கடன் வாங்கவோ உச்சநீதிமன்றமும், தேசிய பசுமை தீர்ப்பாயம் நிரந்தர தடை. இந்த அதிரடி தீர்ப்பால் சுமார் 1.5 லட்சம் மக்களின் சொத்துக்களின் உரிமை இழந்து விட்டனர் ( zero value) ஆனது. இதனால் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் அடியோடு முடங்கியது. பல லட்சம் மக்கள் கண்ணீருடன் வேதனை.. மக்களே இனியும் நீர் நிலைகள் அருகில் சொத்து வாங்கி உங்கள் பணத்தை இழக்கவேண்டாம்.*
ரஜினி கமலை வைத்து ₹1000 கோடி ரூபாய் பொருட்செலவில் லண்டன் ஹோட்டல் ஒன்றில் பார்ட் டைம் வேலை செய்து சம்பாதித்து படம் தயாரிக்கும் #இன்பன்உதயநிதி பற்றி ஒரு விழிப்புணர்வு காணொளி பதிவு உங்கள் பார்வைக்கு.
பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் நிலப் பத்திரப்பதிவு மோசடி!
உடந்தையாக இருந்த மேலிடப் புள்ளிகள் யார்?
.............................................
உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான, பழனியின் மையப்பகுதியில் கார் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்த ₹100 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை சட்ட விதிமுறைகளுக்கு மாறாக மூன்று தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்தது எப்படி?
இரவுகளில் கன்னக்கோல் போடுவதைப் பற்றியும், வீடு புகுந்து திருடுவதைப் பற்றியும், பிக்பாக்கெட் அடிப்பதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பட்டப்பகலில் முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையே பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிப்பது எப்படிச் சாத்தியமாயிற்று?
பழனி முருகன் கோவிலுக்கு அருகாமையில், பழனி நகராட்சியின் 3-ஆவது வார்டு, 25-ஆவது பிளாக்கில், சர்வே எண்கள் 998 மற்றும் 999-இல் உள்ள 1.40 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை, கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ், பழனி அருகே உள்ள பாப்பாங்குளம் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி அருகே உள்ள டி.கே.என் புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய மூவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதும்; இதற்கு உடந்தையாகச் சார்பதிவாளர் மணிகண்டன் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவருகிறது.
இந்த நிலம் ஆட்சேபனைக்குரியது என அறநிலையத்துறை ஆணை இருப்பது தெரிந்தும், யாருடைய தூண்டுதலின் பேரில் அல்லது ஆதரவின் பேரில் இந்த நில மோசடி நடந்துள்ளது என்பது தமிழக மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.
இந்த குற்றச்சாட்டு வெளியானவுடன், அடிமட்ட அளவில் சார்பதிவாளர் உள்ளிட்ட ஒருசிலர் பெயரைக் குறிப்பிட்டு வெறுமனே ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்மை வெளிவராது.
ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு மாதத்தில், சட்டமன்றத்திற்கு உள்ளும், பொதுவெளியிலும் விஜய் அவர்கள் தூய ஆட்சியைப் பற்றி வலியுறுத்தி வருகிறார். ஆனால், பழனி முருகன் கோவில் சொந்தமான நிலம் சட்டவிரோதமாக சில தனிநபர்களின் பெயரில் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலிடப் புள்ளிகளின் ஆதரவு இல்லாமல் இந்த குற்றம் நடைபெற வாய்ப்பில்லை.
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆட்சி வந்த பிறகு எழுப்பப்பட்டிருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுவாகும். ஒரு அரசை வீழ்த்த 100 குற்றச்சாட்டுகள் தேவையில்லை; வலுவான ஒரு குற்றச்சாட்டே போதுமானது.
எனவே, விஜய் அரசு பழனி முருகன் கோவில் மோசடி நிலப்பத்திரபதிவு உண்மைத்தன்மையை நடுநிலையான, நேர்மையான, சுதந்திரமான விசாரணை, குறிப்பாக உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதியின் (Sitting Judge) கீழ் நடத்தப்பட்டு, அந்த மேலிடப்புள்ளி யார் என்பது ஆன்மீகப் பெரியோர்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டு சமந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15.07.2026
"என்னுடைய வாழ்க்கையும் ஐயா பூமணியின் வாழ்க்கையும் ஒன்று தான்.." தெற்கத்தி மக்களின் வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும் என்றால், எழுத்தாளர் பூமணியின் எழுத்துக்களை வாசிக்காமல் அந்த படத்தை எடுக்கமுடியாது - சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பூமணி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் இயக்குநர் மாரி செல்வராஜ் உருக்கமான பேட்டி
#Kovilpatti | #Director | #MariSelvaraj | #PolimerNews
பத்தாண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்தபோதுதான், பிணவறையில் உடற்கூறாய்வில் மனித உடல் அறுக்கப்பட்டு அதன் உடல் பாகங்கள் ஆய்வு செய்வப்படுவதை நேரடியாகப் பார்த்தேன்.
இதுவரை அந்த உயிரை வாழ்வித்த உடலின் ஒவ்வொரு உறுப்பும் எத்தகைய அதிசயமான ஒழுங்கில் செயல்பட்டிருக்கின்றன, ரத்தம் சதை எலும்பு கொழுப்பு நரம்பு என்று நிறைந்திருக்கும் அந்த மனித உடலின் காட்சி மனதில் ஏற்படுத்திய அழுத்தமும் பிரமிப்பும் அப்படியே நினைவில் இருக்கிறது. அந்த உயிரை இயக்கிய உடலின் வரலாறாய், நினைவில் நிற்கும் அக்காட்சி மனம் முழுவதும் நிரம்பி, வேறு எந்தச் சிந்தனைக்கும் இடமில்லாத ஒரு மூர்ச்சையான நிலையை இப்போது நினைத்தாலும் கொடுத்துவிடும்.
மனித உடலின் பின்னிருக்கும் அந்தக் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் போல, இந்தச் சமூகத்தில் ஒவ்வொருவரும் வாழ்ந்து முடிக்கும் பெரு வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நான் கண்டது எழுத்தாளர் பூமணியின் 'அஞ்ஞாடி' நாவலில்தான்.
மில்லியன் ஆண்டுகால உயிரினங்களின் வரலாற்றைக் கொண்ட இந்தப் பூமியில், சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி வாழத் தொடங்கிய மனிதக் குலத்தின் வரலாற்றில், கடந்த இருநூறு ஆண்டுகளாக கரிசல் மண்ணில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை, சமூக, சமய, அரசியல் பின்புலங்களோடும் தேர்ந்த வரலாற்றுத் தரவுகளோடும் பெரும் உழைப்பில் எழுதப்பட்ட நாவல் 'அஞ்ஞாடி'.
அந்த நாவலை வாசித்தபோது ஏற்பட்ட வியப்பைவிட, அதை கரிசல் மண்ணின் கலெக்டராக அதன் தடங்களைத் தேடி, இன்று வாழும் மக்களிடம் அந்த பண்பாட்டு பரிணாமத்தின் கூறுகளை கண்டபோதுதான் எனக்கு சமூகவியல் மானுடவியல் அடிப்படையில், ஆட்சி அதிகாரத்தின் சட்டங்களும் திட்டங்களும் எதன் வழியாக வளர்ந்து வந்திருக்கிறது என்ற புரிதல் பெரும் வியப்பைத் தந்தது.
விருதுநகர் மாவட்டத்தின், மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய நாட்களில், வெயிலைப் போர்த்தி பரந்து விரிந்திருக்கும் கரிசல் மண்ணில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணித்த ஒவ்வொரு தருணத்திலும் பல்வேறு சமூக மக்களின் வாழ்வியல் வளர்ச்சி, சிவகாசி கலவரம் கொள்ளை, அது ஏற்படுத்திய சமூகப் பாதிப்புகள், சமயப் போராட்டங்கள், சமூகங்களின் பாடுகள், உழைப்பால் மண்ணை வளப்படுத்தி தொழில்களை உருவாக்கிய மக்கள், கடந்த இருநூறு ஆண்டுகளாக மண்ணை கீழிருந்து மேலாகக் கிண்டி உருமாற்றிய உழைப்பின் வரலாறு, இவை அனைத்தையும் 'அஞ்ஞாடி' நாவலின் வழியே ஆழமாக உணர்ந்தேன்.
அப்போது தான் இந்த வாழ்வையும், இந்த மண்ணின் நினைவுகளையும், இந்த மக்களின் வரலாற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற பேராவல் உருவானது. அதன் விளைவாக மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் கரிசல் இலக்கியக் கழகம் உருவாக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தின் 150 ஆண்டு கால (1800-1950) வரலாற்று பயணத்தினை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவின் மூலமாக ஆவணப்படுத்தினோம். கரிசல் இலக்கியத்தின் ஆய்வுகள் படைப்புகளின் வழி மக்களின் பண்பாட்டு வரலாற்றை ஆவணப்படுத்தினோம்.
கரிசல் இலக்கியக் கழகத்தின் தோற்றத்திற்கும், அதன் செயல்பாட்டிற்கும், அதன் வரலாற்றுத் தேவைக்கும் வழிகாட்டியாக இருந்தவர் எழுத்தாளர் பூமணி. பல்வேறு இலக்கிய நிகழ்வுகளின் வாயிலாக கரிசல் மண்ணின் பண்பாட்டு வரலாற்றை கவனப்படுத்த வேண்டியதின் அவசியத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.
நீண்ட காலமாக மன்னர்களின் வரலாறே மண்ணின் வரலாறு என்று சொல்லப்பட்ட சூழலில், மக்களின் வரலாறே மண்ணின் வரலாறு என்பதைத் தனது எழுத்தின் வழியாக ஆவணப்படுத்தியவர் பூமணி.
"ஆறு செல்வதே கிழக்கு; அரசன் சொல்வதே வழக்கு" என்று அஞ்ஞாடி நாவலில் அவர் எழுதியிருப்பார். அவ்வாறே, வெகுஜன ரசனைப் போக்கிற்கு எழுதும் பாதையை அவர் ஏற்றாரில்லை, எளிய மனிதர்களின் வாழ்வியல் போராட்டங்கள், ஒருவருக்கொருவர் செய்த, செய்யாமல் போன உதவிகள், அவர்கள் அனுபவித்த அவமானங்கள், நிறைவேறாமல் நீர்த்துப்போன கனவுகள் என இவை அனைத்தையும் கரிசல் மண்ணின் ஆன்மாவாகப் பதிவு செய்த சிறந்த படைப்பாளி அவர்.
மிகச்சிறந்த நாவலாசிரியரான எழுத்தாளர் பூமணியின் மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரைப் பார்த்ததும், பழகியதும், உரையாடியதும் இன்று நினைவுகளாக மனதில் வந்து செல்கின்றன.
அவருடைய இலக்கியப் பணிகளும், எழுத்துக்களும், சிந்தனைகளும் இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்ந்து, தலைமுறைகளுக்கு வழிகாட்டும்.
அமைதியில் ஆழ்க அய்யா !