இன்று ( 03. 07. 2026 ) சென்னை - நீலாங்கரை - ஆர்கே கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற, வேலம்மாள் கல்விக் குழுமம் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு, செல்வன். எம். வி. விவேகானந்த் - திருமதி. எம். நந்தினி கிருஷ்ணா இணையரை வாழ்த்தினோம்..
இந்திய திருநாட்டின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தாமிரபரணி இல்லத்தில் தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினோம்.
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!
சிவகங்கை - கரிசல்பட்டி, சாரா மெட்ரிகுலேசன் பள்ளியில், ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கி, முகாமினை ஆய்வு செய்து பார்வையிட்டோம்.
#நலம்_காக்கும்_ஸ்டாலின்
சிவகாசி மாநகராட்சி மேயர் சகோதரி சங்கீதா இன்பம் அவர்களின் இல்லத்திருமணவிழாவில் பங்கேற்பதற்காக விருதுநகர் மாவட்டத்துக்கு இன்று வருகை தந்த போது, விருதுநகரில் உற்சாக வரவேற்பளித்த கழக நிர்வாகிகள் - உடன் பிறப்புகள் - இளைஞரணியினர் - தொ.மு.ச தோழர்கள் அனைவருக்கும் என் அன்பும், நன்றியும். @KKSSRR_DMK@TThenarasu@GprMadurai
மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா?
தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!
அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்!
வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் ஒன்றிய பா.ஜ.க. அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்!
காவியா - கல்வியா?
படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வைக் கோவையில் பதிலாகச் சொல்லியிருக்கிறது @dmk_studentwing!
அரைவேக்காட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு அறநிலையத்துறை சட்டமும் தெரியவில்லை, கடந்தகால அ.தி.மு.க. ஆட்சிகளிலும் கோயில் நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை.
ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராகவோ, அதனைக் கொச்சைப்படுத்தியோ பேசினால் #ஓரணியில்_தமிழ்நாடு உங்களை ஓட ஓட விரட்டும், எங்கள் Dravidian Stock கூட்டம்💪🏻
@dmk_studentwing@rajiv_dmk
#மாற்றுத்திறனாளிகள்_நாள்:
மனு கொடுக்கும் இடத்தில் இருந்து, மக்கள் பிரதிநிதிகளாக உயர்ந்துள்ள மாற்றுத்திறனாளிகள்!
மக்களாட்சியின் உயிர்த்துடிப்பாக விளங்கும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி நமது #DravidianModel அரசு காட்டியுள்ள பாதையை அனைத்து மாநிலங்களும் பின்பற்றும் நாள் விரைவில் வந்தே தீரும்.
#LeaveNoOneBehind! #IDPD2025
சிவகங்கை மாவட்டத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா 2025ஐ முன்னிட்டு நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்பு பள்ளி மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டோம்.
கழக இளைஞர் அணி நடத்திய #திமுக75_அறிவுத்திருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற #இருவண்ணக்கொடிக்கு_வயது75 கருத்தரங்கத்தின் ஐந்தாவது அமர்வில், `திராவிடப் பொருளாதாரத்தின் திசைவழி’ என்ற தலைப்பில், கழக செய்தித் தொடர்புக்குழு துணைச்செயலாளர் சகோதரர் @SuriyaKML அவர்கள் ஆற்றிய உரை தொகுக்கப்பட்டு ‘முரசொலி’யில் வெளியாகியுள்ளது.
‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று பேரறிஞர் அண்ணா உரிமை முழக்கம் எழுப்பிய காலத்தில் இருந்து, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றிய கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் காலம்வரை, தி.மு.கழகம் இதை எப்படி சாதித்தது என்பதை எளியமொழியில் பல்வேறு உதாரணங்களுடன் விளக்கிய சகோதரர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அன்பும் நன்றியும்.
#DMK75
#VibeWithMKS நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்ட நினைவு.
முதல்வர் கிரிக்கெட் மீது எவ்வளவு ஈடுபாட்டோடு இருந்திருக்கிறார், என்பதனை இந்த வீடியோவில் புரிந்துக் கொள்ளலாம்.
சிறப்பாக பந்து வீசி விக்கெட்டை எடுத்த முதல்வர்😊💪
Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal’s visit to High Glory Footwear factory site at SIPCOT Ulundurpet today, for the “Pou Chen Vision and Infrastructure Walkthrough”, reflects our commitment to ensuring every MoU is converted to #JobsForTN.
Pou Chen is the World’s Largest branded athletic and casual footwear manufacturer, producing over 300 million pairs annually for global brands such as @Nike. The foundation stone was laid by Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal in January 2024 during the Global Investors Meet and despite global trade headwinds/tariff wars/sector slowdowns this Rs.2302 crore project will become a reality and generate over 20,000 job opportunities.
Pou Chen has committed max jobs for the people of Ulundurpettai and rest of Kallakurichi district and the Honourable CM handed out next set of job offers today.
#InvestInTN #BullishOnTN #JobsForTN #DravidianModel
#WATCH | திருவண்ணாமலையில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைக்க வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு
#SunNews | #CMMKStalin | #Tiruvannamalai | @mkstalin