@iyachamy Hello, Sir PSTM Certificate online la vangi upload pannanuma? Illa previous year exam ku direct school la irundhu vangunga certificate irundhale podhuma?
இதனால் பயண செலவு,சீண்டல்கள்,கூட்டநெரிசலிலும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே மதிய வேளைகளில் கல்லூரி நாட்களிலாவது முக்கிய வழித்தடங்களில் மகளிர் சிறப்பு பேருந்துகள் இ��க்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.பாதிப்புகள் ஏற்படும் முன் பாதுகாக்க வேண்டுகிறேன்.நன்றி @sivasankar1ss
Respected Officials , தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை வழித்தடத்தில் மதிய வேளைகளில் கல்லூரி முடிந்து தஞ்சாவூரிலும்,குறிப்பாக ஒரத்தநாட்டில் உள்ள மகளிர் கல்லூரி முடிந்து பெருமளவில் பயணப்படும் கல்லூரி மாணவிகள் தனியார் பேருந்துகளையே பெரிதும் சார்ந்துள்ளன��். @deepakj2012 @TnjCollector
Dravidian Party Now the time they not Concern about Employment and Livelihood things.They only Concentrate Media Celebrations,Different type of Statues, Corruption On Sand Mining and Elections.We Must Started Some Organization Like Pressure Group to Control #TNPSC actions.
TNPSC தேர்வர்கள் சார்பாக குரூப்-2 தேர்வு முடிவை வெளியிட வலியுறுத்திய இணைய நண்பர்கள் மற்றும் தலைவர்கள்
- திரு.மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
- திரு.எடப்பாடி பழனிச்சாமி
- திரு.டிடிவி தினகரன்
- திரு.அண்ணாமலை
மற்றும் தமிழக�� முதல்வர் திரு.முக ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி.
இப்படி ஒரு சப்பகட்டு கட்டி உருட்டி தள்ளும் அறிக்கையை காலைய���லிருந்து Notepadல் Type செய்து தற்பொழுது கொண்டு வந்துள்ளீர்கள். 1,00,000 tweets களை காலையிலிருந்து Trend செய்து @draramadoss @annamalai_k #EPS அறிக்கை வந்த பிறகு அலட்சியமாக வந்த
மெத்தன அறிக்கைக்கு கண்டனங்கள் #TNPSC
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்றுவரை வெளியிடப்படவில்லை.
பல்வேறு நிர்வாக குளறுபடிகளுக்கு இடையே தேர்வு நடைபெற்ற நிலையில் , தேர்வு முடிவுகளும் வெளியிடபடாமல் இருப்பது தேர்வர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது,
செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகளே 2 மாதங்களில் வெளியாகிவிட்ட நிலையில், மாநில தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு முடிவுகள் 10 மாதங்களாக வெளிவராமல் இருக்கின்றது.
சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரோ "இன்று வந்துவிடும்- நாளை வந்துவிடும்" என்று சொல்லி மாதங்களும் கடந்தோடுகிறதே தவிர முடிவுகளை வெளியிட எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டணங்கள்.
ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளி��் 5.50லட்சம் அரசுப்பணிகள் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி எண் 187ன் படி தற்போது வரை 2.5லட்சம் பணிகளுக்கான ஆணைகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், மெத்தனப் போக்கின் மொத்த உருவமாக இருக்கும் இந்த செயலற்ற விடியா அரசு, மற்ற வாக்குறுதிகளை போலவே இதையும் காற்றில் பறக்க விட்டுவிட்டது.
அமைப்பு குளறுபடிகளைக் களைவதற்கு, இந்த விடியா திமுக அரசு உடனடியாக டிஎன்பிஎஸ்சி அமைப்பிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, நிலுவையில் உள்ள தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட்டு, தேர்வானவர்களுக்கான பணி ஆணைகளை வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் காலி அரசு பணியிடங்களை நிரப்ப , முறையான தேர்வு கால அட்டவணைகளை வெளியிட்டு, அதனை சீரான முறையில் ஒழுங்குடன் பின்பற்றி உடனடியாக தேர்வுகளை நடத்திட
வேண்டுமென இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
#TNPSC #TNPSCGroup2
தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை பறிக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தலைவர் உட்பட பல்வேறு உறுப்பினர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது; காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
குரூப் 1, 2 மற்றும் 4 உள்ளிட்ட தேர்வுகள் மூலம் அரசுத்துறைகளின் அடிமட்ட பணியாளர்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை தேர்வு செய்யும் தேர்வாணையத்திற்கு தலைவர் உட்பட பல்வேறு உறுப்பினர்களின் பதவியிடங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமலே இருப்பது லட்ச��்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயலாகும்.
ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறைகளில் ஓய்வு பெறுவோரின் காலிப்பணியிடங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசுப் பணிக்காக காத்திருப்போரின் எண்ணிக்கையும் 65 லட்சத்தை தாண்டியிருப்பது உள்ளபடியே வேதனையளிக்கிறது.
தேர்வாணைய செயலாளர் திடீர் மாற்றம், அட்டவணை அ��ிவித்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம், தேர்வு நடத்துவதில் குழப்பம் என பல்வேறு புகார்களில் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் சிக்கித் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், லட்சக்கணக்கான இளைஞர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நவம்பர் மாதம் வெளியாக வேண்டிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணை தற்போது வரை வெளியிடப்படாத சூழலில், மேலும் தாமதமாகுமோ என்ற ���ச்சம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், குரூப் 2 தேர்வுகள் நடைபெற்று பத்து மாதங்கள் கடந்த நிலையிலும் முடிவுகள் வெளியிடப்படாமல் இருப்பதும், அக்டோபர் மாதம் வெளியிட வேண்டிய 2024 ஆம் ஆண்டு தேர்வு அட்டவணை தற்போது வரை வெளியாகாமல் இருப்பதும் தேர்வர்களுக்கு தேர்வாணையத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் ச���ய்கிறது.
எனவே, அரசுப்பணிக்காக முயற்சிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தில் அலட்சியம் காட்டாமல், டி.என்.பி.எஸ்.சி தலைவர், உறுப்பினர், செயலாளர் உட்பட அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவதோடு, தேர்வு அட்டவணை தொடங்கி பணி நியமனம் வரையிலான அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் உரிய நேரத்தில் முடிக்கும் வகையில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தம��ழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். @CMOTamilnadu #tnpscgroup2 #TNPSC #TNPSCGroup4
சிலைக்கு 100 கோடிகள், வெளிநாட்டு பந்தயங்களுக்கு பல 100 கோடிகள்,தேவையில்லாத பல ஆணிகளுக்கு பல கோடிகள் மாதமாதம் அறிவிப்பு.ஆனால் இத்தனை வருட #TNPSC நிறுவனத்திற்கு 2 மாதம் முன் 1 கோடி ஒதுக்கி புதியஅறைஅமைக்கப்பட்டாதக செய்தி ..இது அயோக்கியத்தனமி��்லையா?
#WeWantGroup2Results @Udhaystalin