அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
One mf wrote that Spain killed the Portuguese World Cup dream.
I ask when did Portugal have a dream, and that dream of winning the World Cup?
#fifaworldcup
என்ன நண்பா @LoyolaMani ?
கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லாம, என்ன என்னமோ எழுதி வச்சு இருக்க?
விமர்சனத்துக்கும், குற்றச்சாட்டுக்கும் விளக்கமோ, மறுப்போ, தர்க்கமோ வைக்கணும். தொலைக்காட்சி விவாதம் மாதிரியே இங்கயும், வாய்க்கு வந்தத உளறிக் கொட்டக்கூடாது நண்பா!
கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் இரண்டு அரசுத் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக இன்றுகூட செய்தி வந்திருக்கிறது. அதற்கு தவெக அரசைப் பொறுப்பேற்கச் சொல்லவில்லை.
முந்தைய திராவிட அரசுகள் போல அல்லாது, பள்ளிக்கல்வித்துறையைச் சீரமைக்கச் சொல்கிறோம்; அரசுப்பள்ளிகள் மீது கவனமெடுக்கச் சொல்கிறோம்; தரம் உயர்த்தச் செயல்பாடுகளை முன்னெடுக்கச் சொல்கிறோம். அமைச்சர் ராஜ்மோகனோ தனியார் பள்ளிகள் மீதுதான் கரிசனம் காட்டுகிறார். அதனைத்தான் அண்ணன் சீமான் அவர்கள் சுட்டிக்காட்டிக் கண்டித்திருக்கிறார்.
தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கவில்லை என்கிறார் அமைச்சர் ராஜ்மோகன். அதேபோல, தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட தவெக அரசு விடவில்லை என உறுதியளிப்பாரா ராஜ்மோகன்? இன்றளவும் கட்டணக் கொள்ளை நடந்துகொண்டுதானே இருக்கிறது.
இதனைத்தானே அண்ணன் சீமான் அவர்கள் கேட்கிறார்.
//உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? //
// தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? //
அதற்கு உரிய விளக்கத்தை அளிக்காது, முந்தைய திமுக அரசைக் கைகாட்டித் தப்பிக்க முயற்சிக்கிறீர்கள். நாங்கள் அதனை ஏதோ கண்டிக்காதது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள்.
இதோ,முந்தைய திமுக அரசினுடைய பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகச்சீர்கேடுகளைக் கண்டித்து அண்ணன் சீமான் விடுத்த அறிக்கைகளிலிருந்து ஒரு சில...
(https://t.co/r9FCyk8a4s)
(https://t.co/tSb3xCLVZH)
(https://t.co/N0QeX5vjOu)
(https://t.co/eRDxOHbHxG)
(https://t.co/mbuES2wcl6)
(https://t.co/skzoTNfTCy)
போகட்டும்!
அப்புறம் என்ன..? நாங்க திராவிட ஆதரவாளரா? திராவிடத்தை எதிர்க்கணுமா? அடடா.. விஜய் திராவிடத்தை எதிர்க்கிறார் போல! இருக்க இடத்தை மறந்துட்டு same Side Goal போட்றீயே நண்பா?
திமுக ஆட்சியின் அத்தனை அவலங்களையும் எதிர்த்து நாங்கள் போராடியிருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களோடு நாளும் களநாயகனாகப் போராட்டக்களத்தில் நின்று இருக்கிறார் அண்ணன் சீமான். கடலுக்கு நடுவே கருணாநிதியின் பேனா சிலை வைக்கும் முடிவு உட்பட பல மக்கள் விரோதத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தியது அண்ணன் சீமான்தான். திமுக அரசின் கொடுங்கோல் திட்டங்களையும், செயல்பாடுகளையும் எதிர்த்து சமரசமின்றிப் போராடியது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். அவ்வளவு ஏன்? திமுக முன்வைக்கும் 'திராவிடம்' எனும் கற்பிதத்தையும், 'பெரியார்' எனும் பிம்பத்தையும் உடைத்து எறிந்திருக்கிறோம். அதனால், திராவிடத்தையும், திமுகவையும் எதிர்க்க எங்களுக்குப் பாடமெடுக்கிற அதிகபிரசங்கித்தனம் வேண்டாம்.
வேற என்ன.. உதயநிதியை நேரில் சந்திச்சுட்டா நாங்க திமுகவோட உறவுல இருக்கோமா? என்ன அறிவு நண்பா உனக்கு?
அதுசரி! INDIA கூட்டணிக்குள் தொடர்ந்து நீடிக்கவும், செயல்படவும் வேண்டுமென திமுகவைக் கூப்பிடுறாரே உங்க கூட்டணிக் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர் திமுகவோட எந்த உறவுல இருக்காரு? அவரை தவெக அரசு கண்டித்ததா? திமுகவை தோழமைச் சக்தி எனச் சொல்கிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டியனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் என்ன உறவுல திமுகவோட இருக்காங்க? அவங்கள எல்லாம் கண்டிச்சுட்டீங்களா?
வேற என்னது.. அமைச்சர் ராஜ்மோகன் மீது வன்மமா? எழுதணும்ங்குறதுக்காக எதையாவது எழுதாத நண்பா..
கடைசியா என்ன சொன்ன நண்பா.. பதிலடியா? தொலைக்காட்சி விவாதம் பக்கம் தலையவே காட்டுறது இல்லையே ஏன் நண்பா? அங்க வாங்க நண்பா.. யாருக்கு யார் பதிலடி கொடுக்குறான்னு பாப்போம்..
கடைசியா ஒரே கேள்வி நண்பா.. இதுக்கு மட்டுமாவது பதில் சொல்லு..
முந்தைய திமுக, அதிமுக ஆட்சிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கினார்கள் எனும் நந்தகுமாரின் குற்றச்சாட்டை முழுமையாக நாங்கள் ஏற்கிறோம்.
2017ஆம் ஆண்டு முதல் 2021வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். அவர் தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கினாரா? இல்லையா?
"1992 வாச்சாத்தி பெருங்கொடுமை CPIM & CPI"
1992:அதிமுக எதிர்ப்பு.
1996:CPI-திமுக,CPIM-மதிமுக கூட்டணி
2001:அதிமுக கூட்டணி.
2006:திமுக கூட்டணி
2011:அதிமுக கூட்டணி
2016:மக்கள் நல கூட்டணி
2021:திமுக கூட்டணி
ஒலிபிக் போயிருந்தா somersault-கு"Gold medal" ஆவது கிடைச்சிருக்கும்.
@tis_Pops
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வருமான விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகளும், அரசியல் பணிகளும் சிறக்கட்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
ஜப்பான்காரன் ஜப்பான்காரன் தான் ❤️
ஜப்பான் நேற்று உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் மீண்டும் தனது தரத்தை நிரூபித்தது.
அணித்தலைவர் Wataru Endo வெறும் மூன்றே நாட்களுக்கு முன்பு காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறினார்,அதோடு இல்லாமல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வையும் அறிவித்து இருந்தார்.
அவர் இல்லாதது பெரிய பின்னடைவு. இருந்தபோதிலும், உலக கால்பந்தின் வலுவான அணிகளில் ஒன்றான Netherlands அணிக்கு எதிராக 2-2 என்ற கணக்கில் சமநிலை பெற்றது ஜப்பானின் போராட்ட மனப்பான்மையை வெளிப்படுத்தியது.
ஆனால், ஜப்பானிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது வெறும் கால்பந்தல்ல. உலகின் மிகவும் ஒழுக்கமான மற்றும் சுத்தமான சமூகங்களில் ஒன்றாக திகழும் ஜப்பான், தனது பண்பாட்டை உலக அரங்கிலும் வெளிப்படுத்தியது. போட்டி முடிந்த பிறகு, ரசிகர்கள் தாங்கள் அமர்ந்திருந்த பகுதியை சுத்தம் செய்து, எந்தக் குப்பையும் இல்லாதபடி மைதானத்தை விட்டு வெளியேறிய காட்சி அனைவருக்கும் ஒரு பாடம்.
"உன் சிந்தனை போலவே செயல்; உன் செயல் போலவே உன் வளர்ச்சி."
வெற்றி என்பது கோப்பைகளை வெல்வதில் மட்டும் இல்லை; உலகிற்கு ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவதிலும் உள்ளது. ஜப்பான் அதைத்தான் மீண்டும் நிரூபித்துள்ளது. 🇯🇵⚽👏
All I want France to win the World Cup,
But unexpectedly Spain is going to win, France is going to be pushed to the next level, and Argentina or Germany is going to be next.
> Espain
> France
> Argentina or Germany
#fifaworlcup#fifa#AllezLesBleus
வைகாசி "விசாகம்" தமிழ்க்கடவுள் முருகன் பிறந்தநாள் என நம்பப்படுகிறது. இந்நாளில் எங்கள் வீட்டிற்கும் முருகன் வந்திருக்கிறான்.
ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் ❤️👶
Dear Tamil Nadu journalists, there is no rule in this world that says we should not criticize the newly elected government for the first six months. I keep seeing journalists repeating this nonsense everywhere, again and again.
It doesn’t matter if the government is new or old, just do your job. Don’t waste your time worrying about imaginary rules. Every time we see injustice and poor governance, it is our duty to talk about it, and staying silent is wrong. Becasue its people who are getting affected in the end.
And finally, if you still wish to protect the government for some reason, I would advise you to find a better excuse.
வளைகுடா நாடான ஓமன் நாட்டில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான புதிய விடியல் குழுவினைச் சேர்ந்த உறவுகள் வாரந்தோறும், அங்கு வசிக்கும் தமிழ் குழந்தைகளுக்கு, தாய்த்தமிழ் மொழியை கற்பிக்கும் பணியை தொடர்ந்து பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.
பொருளாதார தேடலுக்காக புலம் பெயர்ந்து வாழும் நாட்டில், அங்கு வசிக்கும் தமிழ் மாணவர்கள் எல்லா பள்ளிகளிலும் தமிழை கற்க முடியாத சூழலில், அவர்களுக்கு தாய்மொழியை கற்பிக்க வேண்டும் எனும் உயர்ந்த இலக்கிற்காக பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையிலும், தமிழ் மொழி காக்கும் இவ்வுயரிய பணியைச் செய்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கும், 'புதிய விடியல்' நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன உணர்வோடும், மொழிப் பற்றோடும் தமிழை வளர்த்து வரும் உங்களின் அரும்பணி தொடர என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துகள்!!!